search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது
    X
    பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது

    பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது

    பழனி மாரியம்மன் கோவில் சன்னதியில் முகூர்த்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதையடுத்து முகூர்த்தக்காலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    பழனி கிழக்கு ரதவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் மாரியம்மன் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு 7.45 மணிக்கு மாரியம்மன் கோவில் சன்னதியில் முகூர்த்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியை காண கோவில் நுழைவு வாயில் பகுதியில் மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் கோவில் நுழைவு வாயில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதையடுத்து முகூர்த்தக்காலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார் பாடி மற்றும் அலுவலர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி வருகிற 16-ந்தேதி திருக்கம்பம் சாட்டுதலும், அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றமும், கம்பத்தில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே 2, 3-ந்தேதிகளில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×