என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே எலவனூரில் பழமையான பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி சோம வார விழா நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே எலவனூரில் பழமையான பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி சோம வார விழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று முன்தினம் காலை வேன் மூலம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பாலதண்டாயுத சாமிக்கு காவிரி நீரை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்து அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கும் சிறப்பு பூஜை நடந்தது.
அதன்பிறகு அங்கிருந்து மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், காமாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது.

மிக மிக வலிமைமிக்கதும் குடும்பத்தில் நிம்மதியையும் ஒற்றுமையையும் தந்தருளும் அற்புதங்கள் கொண்டது என்று ராமாஷ்டகத்தைச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
நம் வாழ்க்கையை உய்யும் பொருட்டு, நம் வாழ்க்கையை செம்மையாக வாழ்தலின் பொருட்டு, நமக்கு வேதவியாசர் அருளியதுதான் ராமாஷ்டகம். மிக மிக வலிமைமிக்கதும் குடும்பத்தில் நிம்மதியையும் ஒற்றுமையையும் தந்தருளும் அற்புதங்கள் கொண்டது என்று ராமாஷ்டகத்தைச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான ராமாஷ்டகத்தைப் படிக்கிறவர்களுக்கும் கேட்கிறவர்களுக்கும் மகா புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
கல்வி, செல்வம், கலை என்பவற்றைத் தரும் அற்புத பாராயணம் இது. அளவற்ற சுகம், சகல ஐஸ்வரியம், மங்காத புகழ், குடும்ப மேன்மை, தம்பதி ஒற்றுமை என தந்தருளும் வீரியம் மிக்க பாராயண வழிபாடு இது.
பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்
அதாவது, அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன் என்று அர்த்தம்.
ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்
ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்
அதாவது அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன் என்று அர்த்தம்.
நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்
அதாவது, ஆன்மாவின் வடிவை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்கலத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமபிரானை வணங்குகிறேன்.
ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்
அதாவது, உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமபிரானை நமஸ்கரிக்கிறேன்.
நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்
சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்
அதாவது, பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை பூஜிக்கிறேன்.
பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்
குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்
அதாவது, சம்சாரம் எனும் சாகரத்தைக் கடக்க உதவும் தோணியைப் போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை வணங்கிப் போற்றுகிறேன்.
மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை
பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்
அதாவது, மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாவாகவும், எங்கும் நிறைந்திருப்பவராகவும் இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமபிரானை பூஜிக்கிறேன்.
சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹ ராமமத்வயம்
அதாவது, நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆச்சார்யனாக எங்களுக்குள்ளே பிரகாசிக்கிறவரும், ஈடுஇணையற்றவருமான ஸ்ரீராமபிரானை வணங்குகிறேன்.
ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம்
வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய
வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்தி
ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம்
ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்
அதாவது, வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தந்தருளக் கூடியதுமான ராமாஷ்டகத்தைப் படிக்கிறவார்களும், கேட்கிறவர்களும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சகல ஐஸ்வரியங்களும் பெறலாம். குடும்பத்தில் நிம்மதி தவழும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள்.

வரும் ஏப்ரல் 13-ந் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி கொண்டாடப்பட உள்ளது. எனவே அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையான இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
திருப்பதி :
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆண்டுக்கு 4 முறை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி, யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெறுவதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் தேவஸ்தானம் இதை செய்து வருகிறது.
அதன்படி வரும் ஏப்ரல் 13-ந் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி கொண்டாடப்பட உள்ளது. எனவே அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையான இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வது நிறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஏழுமலையான் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. 11 மணி வரை இந்த பணிகள் நடந்தது.
இதையடுத்து வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு 12 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் தனித்தனியே விமானங்கள் உண்டு.
மொத்தம் ஏழு விமானங்களும், சிறிய மற்றும் பெரிதாக நான்கு கோபுரங்களும் உள்ளன. கோவிலின் ராஜகோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டதாய் 76 அடி உயரம் கொண்டது. இக்கோவிலில் மொத்தம் ஐந்து தீர்த்த குளங்கள் உள்ளன. கோவிலின் நுழைவுவாயிலின் வலப்புறம் திருமங்கை ஆழ்வார் சன்னதி உள்ளது.
கோவிலின் உள்ளே ஆழ்வார் உடையவர் கூரத்தாழ்வார், மணவாள மாமுனிவர், ஸ்ரீதேசிகன், அனுமார் சேனை முதலியார் தாமோதர பிள்ளையார், பொன்னியம்மன், யோக நரசிம்மர், கருடன் சன்னதிகளும், ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார், திருவேங்கடமுடையான், வேணுகோபாலன், சவுரிராஜன், அரங்கநாதர்,ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆகிய சன்னதிகளும் உள்ளன. மாடக்கோவில் அமைப்பில் உள்ளது. ராஜகோபுர வாசலில் நின்று நோக்கினாலும் கருவறையிலும் உள்ள எம்பெருமாள் ஒரு மலைமேல் எழுந்தருளி இருப்பதாக மணிமாடக் கோவில் என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்த வகையில் தரிசனம் தருவார்.
இந்த கோவிலில் மூலவர் சீனிவாச பெருமாள் வலது பக்கம் தனி நாச்சியார் வஞ்சுளவல்லி தாயார் என்ற திருப்பெயருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். வஞ்சுளசெடியின் அடியில் இவரை மேதாவி முனிவர் கண்டெடுத்தபடியால் வஞ்சுளவல்லி என்ற திருப்பெயரால் இவரை அழைக்கிறார்கள். கருவரை நான்குபுறமும் முப்பத்து முக்கோடி தேவர்களும் புடைப்பு சிற்ப சிலையாக காணப்படுகின்றனர்.
கோவில் மூலஸ்தானத்தின் கீழே மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ளது உள்ளே பக்ஷிராஜன் கருடன். பெரிய திருவடி, அரசு மங்களாலயன் என்றெல்லாம் புனித பெயர் கொண்டு அழைக்கப்படும் கருடன், சாளக்கிராம சிலை வடிவில் வாகன அமைப்பில் நீர் சுரக்கும் நீர் முடியும் நீண்டு வளர்ந்து திருமேனியும் கொண்டு பெருந்தோள் உடனும், மிகவும் வீரத்துடனும், எடுப்புடன் கூடிய தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளார். தம்மை விரும்பித் தொழும் அடியார்கள் வேண்டியன எல்லாம் அருளும் தெய்வமாக விளங்குகிறார். பெருமாளுக்கு நாள்தோறும் திருவாராதனம் கண்டவுடன் அவர் அமுதுபடி செய்ததை இவருக்கும் நித்தம் ஆறு வேளை ஆராதனம் செய்து வருகிறார்கள். இவருக்கு அமுதகலசம் என்ற மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் விருப்பம். அதனால் இவரை மோதகாமோதர் எனவும் அழைப்பதுண்டு. இவரிடம் வேண்டிக் கொள்ளும் விருப்பம் எல்லாம் உடனுக்குடன் நிறைவேறும் அதிசயத்தையும் காணலாம். இவரது சர்வாங்கங்களில் புஷ்ப அங்கி அணிவிப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் சட்டென நிறைவேறுகின்றன. மார்கழி பெரும் திருவிழாவில் நான்காம் திருநாளும் மற்றொன்று பங்குனிப் பெருவிழாவில் நான்காம் திருநாளும் ஆகும்.
வியாழன் மாலையிலும், சனி காலையிலும் கருட பகவான் வழிபாடு மிகவும் சிறப்பு என்பார்கள். இந்த கருடனுக்கு கஸ்தூரி குங்குமப்பூ, புனுகு சட்டம் முதலியவைகளை வாழை சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர், இஷ்ட சித்திகளையும் நிச்சயம் பெறுவர். இவரது நட்சத்திரம் சுவாதி ஆனதால் அன்று கருடனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது. இவரது தரிசனத்தால் எல்லாவிதமான தோஷங்களும் மறையும். ஒரு மண்டலம் எம்பெருமானை சுற்றி வந்து வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும். ஸ்ரீசுதர்சன மனதிற்கு அதிர்ஷ்டான கடவுளானபடியால் எல்லாவிதமான மன நோய்களும் நீங்கும்.
சுகந்தவனம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் முன்பு மேதாவி என்ற மாமுனிவர், வாவிதடஞ்சூழ் மணிமுத்தாற்றின் தென் கரையில் அமர்ந்து தவம் செய்தார் முனிவருக்கு திருமகளே மகளாகவும், சீனிவாசன் மருமகனாக வேண்டும் என்ற ஆசை.. ஒருநாள் முனிவர் மணிமுத்தாறில் நீராடுகையில் மற்றொரு பக்கம் நரசிங்கப்பெருமாளுடன் கூடிய ஒரு சக்கரபாணி சுவாமி அவர் கையில் கிடைத்ததால் முனிவர் வியந்து நின்றார். அப்போது முனிவரே... வியந்து நிற்க வேண்டாம். தங்கள் கை புகுந்த எம்பெருமான் சக்கரபாணி நரசிங்கப் பெருமாளை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் நினைத்த எண்ணம் நிறைவேறும் என்று அசரீரி வாக்கு எழுந்தது. அசரீரியின் சொற்கேட்ட முனிவர் வியந்து தமது எண்ணம் கை கூட விரும்பி மகிழ்ச்சியுடன் இக்கோவிலின் உள்ளே அந்த சக்கரபாணி நரசிம்ம பெருமாளை பிரதிஷ்டை செய்து முறைப்படி வழிபட்டு வந்தார்.
வஞ்சி மரத்தின் அடியில் ஒரு ஒளிப் பிழம்பான அழகி இவளை தவம்செய்து அடைந்தது எனலாம்படியான தெய்வத்திருமகள் ஒருவர் தோழிகளுடன் திருவிளையாடல் புரிந்து கொண்டிருந்தார். முனிவர் அந்த தெய்வங்களை கண்டதும் தனது தவம் பலித்தது என்று மகிழ்ந்தார். அச்சிறுமியின் அருகே சென்று குழந்தாய், நீ யாரம்மா? உன்னைப்பெற்ற பெருந்தவத்தினர் யார்? உனது திருப்பெயர் என்ன? நீ இருக்கும் இடம் யாது? என வினவினார். அதற்கு அந்த குழந்தை முனிவரை நோக்கி, என் தந்தையையும், தாயையும் என் பெயரையும், ஊரையும் பிற ஒன்றையும் யானறியேன். எல்லாம் எனக்கு தாங்களே என்று எண்ணியே இத்தலம் அடைந்தேன். என்னை மகளாக ஏற்று அருள் புரிவீர் என வேண்டி நின்றாள்.
இதனையடுத்து அந்த சிறுமியை ஆசிரமத்திற்கு அழைத்துச்சென்று முனிவர் வளர்த்து வந்தார். வஞ்சி மரத்தடியில் தோன்றிய திருமகளை வஞ்சுளவல்லி என பெயரிட்டு அழைத்து வந்தார். இறைவன் மேதாவி முனிவரை நோக்கி முனிவரே... தங்களது மகளை எனக்கு திருமணம் செய்வித்து மாமனாராக வேண்டும் என்றார். இஷ்டசித்தி ஏற்பட்டதை நினைத்து பெரிதும் மகிழ்ந்தார். எம்பெருமான் தன் நிலையையும் எளிமையையும் எண்ணி எண்ணி மகிழ்ந்து முனிவரும் அப்பெருமானைப் போற்றினார். எந்தாய் அடியேன் நின்பால் சில வரங்கள் பெற வேண்டி நிற்கிறேன். அருள்புரிய வேண்டும்.
அடியேனுக்கு இன்று திருவஞ்சுளவள்ளியுடன் கூடி தரிசனம் தந்தது போல் இத்தலத்தில் இனியும் பின்னர் யாவரும் தேவரீரையும் வஞ்சுளவல்லியையும் ஏக சிம்மாசனத்தில் சேவித்து இம்மை மறுமைப் பயனை பெற அவர்களுக்கும் தரிசனம் தந்தருள வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மை சுதந்திரமும் தருவதுடன் அவர் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தேவரீரை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும். இந்த வரங்களை தந்தருள வேண்டும் என்று வேண்டினார். அதன்படி இறைவன், முனிவர் கேட்ட வரங்களை அருளினார்.
கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்
கோவில் பட்டாச்சாரியார் கோபி கூறுகையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் உடையவர் திருநட்சத்திர விழா, வைகாசியில் வசந்த திருவிழா, ஆடி மாதத்தில் சுதர்சன ஹோமம், பவித்ரோட்சவம், ஆவணி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, ஸ்ரீ வேங்கடமுடையான் லட்சார்ச்சனை, தேசிகர் உற்சவம், ஐப்பசி மாதத்தில் மணவாள மாமுனிகள் உற்சவம், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை சொக்கப்பனை மற்றும் பெருமாள் தாயார் திருவீதி புறப்பாடு.
மார்கழி மாதத்தில் தெப்பத் திருவிழா தை மாதத்தில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம், சுவாதி நட்சத்திர நாளில் கருட பகவானுக்கு லட்சார்ச்சனை, கணு உற்சவம் அன்று தீர்த்தவாரி, மாசி மாதத்தில் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், பங்குனி மாதத்தில் திருத்தேர் திருவிழா, மாதந்தோறும் சுவாதி அன்று சுவாதி தீபம் நிகழ்வு நடைபெறும் என தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை தக்கார் ப.ரமேஷ், செயல் அலுவலர் ஆ. ஜீவானந்தம் மற்றும் ஆலய பணியாளர்கள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.

படைக்கும் தொழிலைச் செய்யும் தன்னைவிட, அனைவரும் தாழ்வானவர்களே என்று நினைத்தார். இதை அறிந்த மகாவிஷ்ணு, பிரம்மனுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தார்.
மும்மூர்த்திகளில் முதன்மையானவராக இருப்பவர் சிவபெருமான். அவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்து தொழில்களை செய்து பரம்பொருளாக ஆட்சி செய்கிறார். பின்னர் மகாவிஷ்ணுவுக்கு காத்தல் தொழில் வழங்கப்பட்டது. விஷ்ணுவின் நாபியில் இருந்து வெளிப்பட்ட பிரம்மனுக்கு படைப்புத் தொழில் வழங்கப்பட்டது. படைக்கும் தொழிலைச் செய்து வந்த பிரம்மதேவன், ஆரம்பத்தில் சாகாவரம் பெற்றிருந்தார்.
சாகாவரம் காரணமாக, அவரது மனதில் ஆணவம் அதிகரித்திருந்தது. தனது பணியையும் கூட அவர் சரியாகச் செய்யவில்லை. படைக்கும் தொழிலைச் செய்யும் தன்னைவிட, அனைவரும் தாழ்வானவர்களே என்று நினைத்தார். இதை அறிந்த மகாவிஷ்ணு, பிரம்மனுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தார்.
மகாவிஷ்ணுவின், வாமன அவதாரம் நிகழ்ந்த போது, அவர் திரிவிக்கிரமனாக உயர்ந்து நின்று, தன் காலால் மூன்று உலகங்களையும் அளந்தார். அந்தக் கோலத்தை காண வேண்டும் என்று உரோமச முனிவருக்கு ஆசை எழுந்தது. இதனை பிரம்மனின் ஆணவத்தை அடக்குவதற்கு பயன்படுத்திக்கொள்ள நினைத்தார், மகாவிஷ்ணு.
தன்னுடைய ஆசை நிறைவேறுவதற்காக, உரோமச முனிவர் தனியொரு இடத்தில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, முனிவரின் விருப்பப்படியே தனது இடது காலை தூக்கி, திரிவிக்கிரம அவதாரத்தை காட்டி அருளினார்.
பின்னர் உரோமச முனிவரிடம், “உரோமசரே.. என் ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள், பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை அடைவீர்கள்” என்று வாழ்த்தினார், மகாவிஷ்ணு. மேலும் “பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெறுவீர்கள். அதன்படி உமது உடலில் இருந்து ஒரு முடி உதிர்ந்தால், பிரம்மனின் ஆயுள்காலத்தில் ஒரு வருடம் முடியும்” என்று கூறினார்.
மகாவிஷ்ணு சூட்சுமமாக, தன்னுடைய ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மதேவனின் ஆணவம் அப்போதே அழிந்து போனது. பல யுகங்களைக் கொண்டது ஒரு கல்ப காலம். அப்படி ஒரு கல்ப காலம் முடியும் நேரத்தில், ஒரு பிரம்மன் மறைந்து, மற்றொரு பிரம்மன் தோன்றுவதாக புராணங்கள் சொல்கின்றன.

பங்குனி மாதத்தில், சமயபுரம் வந்து மாரியம்மனை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது இன்னும் விசேஷமானது என்றும் மும்மடங்கு பலன்களை வழங்கக் கூடியது என்றும் சொல்கிறார்கள்.
சக்தி வழிபாடு என்பதே நம் வாழ்வை வளமாக்குவதற்கும் மேன்மைப்படுத்தி செம்மையுடன் வாழவைப்பதற்கும்தான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். சக்தி இல்லாமல் இந்தப் பிரபஞ்சமே இல்லை. சிவத்துக்கே சக்தியாகத் திகழ்கிறாள் பராசக்தி. அதனால்தான் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி என்று கொண்டாடி வழிபடுகிறோம்.
அப்படியான சக்திதேவியானவள், பலப்பல வடிவங்களில், வெவ்வேறு திருநாமங்களில் ஒவ்வொரு ஊரிலும் குடிகொண்டு அருள்பாலித்து வருகிறாள். அப்படியான தெய்வங்களில், நம்மை ஆட்கொண்டு ஆட்சி செய்பவள்தான் சமயபுரம் மாரியம்மன்.
அகிலத்து மக்கள் அனைவருக்கும் தாயெனத் திகழ்பவள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன். தீராத வியாதிகளையெல்லாம் தீர்த்து வைப்பவள் அன்னை. உடல் நோய்களோடு உள்ளத்து நோய்களையும் தீர்த்து வைக்கும் பரோபகாரி என்றும் பாசக்காரி என்றும் மாரியம்மனைப் போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழ்பவள் காஞ்சி ஸ்ரீகாமாட்சி என்றால், மாரியம்மன்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழ்பவள் சமயபுரத்தாள்.
படித்தவர்-படிக்காதவர், ஜாதி மதம், பணக்காரர் -ஏழை என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி அன்றாடம் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளும் கருணைக்கடலென அற்புதமாகக் காட்சி தருகிறாள் சமயபுர நாயகி.
திருச்சிக்கு அருகில் உள்ளது சமயபுரம். ஒருமுறை இவளின் சந்நிதியில் வந்து நின்று, நம் மனக்குறைகளையெல்லாம் மாரியம்மனிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டால் போதும்... நம் துக்கங்களையெல்லாம் போக்கி அருளுவாள் என்கின்றனர் பக்தர்கள்.
பங்குனி மாதத்தில், சமயபுரம் வந்து மாரியம்மனை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது இன்னும் விசேஷமானது என்றும் மும்மடங்கு பலன்களை வழங்கக் கூடியது என்றும் சொல்கிறார்கள். நம் சங்கடங்களைத் தீர்க்கும் சமயபுரத்தாளின் கோயிலில் பங்குனி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் உத்ஸவம் தொடங்கும். அதையடுத்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஒப்பற்ற விழாவின் எட்டாவது நாளன்று அம்பிகையை, இளநீர் வடிவத்தில் (ஆவாஹனம் செய்து) ஊர்மக்கள் தங்களது வீடுகளில் வழிபாடு செய்வார்கள். பங்குனி மாதம் முழுவதுமே எப்போது வேண்டுமானாலும் நம் வீட்டில் விளக்கேற்றி, அம்மனுக்கு இளநீர் நைவேத்தியம் செய்யலாம். அருகில் உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்று, இளநீர் அபிஷேகம் செய்யலாம்.
மங்கலம் பொங்கும் பங்குனி மாதத்தில், ஏதேனும் ஒருநாளில், திருச்சி சமயபுரத்தாளை கண்ணாரத் தரிசிப்போம். மனதார வழிபடுவோம். முடிந்தால், அவள் மனம் குளிரும்படி, புடவை வாங்கி சார்த்துவோம். செளபாக்கியங்கள் மொத்தமும் தருவாள் தேவி. சங்கடங்களையும் துக்கங்களையும் போக்கி அருளுவாள் மாரி.

தமிழ்நாட்டில் தேவாரம் பாடப்பட்ட திருக்கோவில்கள் மொத்தம் 275 உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சமயக்குரவர்கள் எத்தனை தலங்களில் பாடியிருக்கிறார்கள் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
* சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் - 44
* சம்பந்தரும், திருநாவுக்கரசரும் மட்டும் பாடிய தலங்கள் - 52
* சம்பந்தரும், சுந்தரரும் மட்டும் பாடிய தலங்கள் - 13
* அப்பரும், சுந்தரரும் மட்டும் பாடிய தலங்கள் - 2
* சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் - 111
* அப்பர் மட்டும் பாடிய தலங்கள் - 28
* சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் - 25
* இந்த 275 தலங்களில் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பாடல் அமைந்த திருத்தலங்கள் -25

சுயநலம் இன்றி இறைவனிடம் பக்தி செலுத்தியவர்கள்தான், பின்னாளில் இறைவனின் அருளுக்கு பாத்திரமாகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இடம் பிடித்தவர்தான், தண்டியடிகள்.
8-4-2021 தண்டியடிகள் குரு பூஜை
தன்னலம் இன்றி பணியாற்றிவர்களே, வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்கள். அதே போலத்தான், சுயநலம் இன்றி இறைவனிடம் பக்தி செலுத்தியவர்கள்தான், பின்னாளில் இறைவனின் அருளுக்கு பாத்திரமாகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இடம் பிடித்தவர்தான், தண்டியடிகள். இவர் திருவாரூரில் அவதரித்தவர். பிறப்பிலேயே இருவருக்கு கண் பார்வை கிடையாது. சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டிருந்த தண்டியடிகள், தன்னுடைய அகக்கண் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தார்.
அடியவர்களுக்கும், கோவிலிலும் சிறுசிறு தொண்டு செய்து வாழ்ந்த தண்டியடிகள், தினமும் இறைவனின் ஆலயத்தை வலம் வந்து, ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் வழிபட்டு வந்த திருவாரூர் சிவாலயத்தின் திருக்குளம் மிகவும் சீர்கேடாகக் கிடந்தது. அதற்கு அந்தத் திருக்குளத்தைச் சுற்றிலும் சைவநெறி எதிர்ப்பாளர்கள் சிலர் இருந்ததே காரணமாகும்.
இதுபற்றி அறிந்த தண்டியடிகள், திருக்குளத்தின் நிலையை எண்ணி மனம் கலங்கியதோடு, அந்தக் குளத்தை தூர்வாரி சீர் செய்யவும் முன் வந்தார். குளத்தின் நடுவில் ஒரு கம்பும், குளக் கரையின் மேட்டில் ஒரு கம்பும் நட்டு, இரு கம்பு களையும் இணைக்கும்படி கயிறு ஒன்றை கட்டினார். கயிற்றைப் பிடித்தபடியே குளத்தில் இறங்கி மண்ணை கூடையில் எடுத்து வந்து கரை மேட்டில் கொட்டுவார். இப்படியே கயிறை பிடித்தபடியே சென்று திருக்குளத்தை தூர்வாரும் பணியைச் செய்து கொண்டிருந்தார். அந்த சிவதொண்டு செய்த நேரத்திலும் கூட, அவரது வாய், ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிப்பதை நிறுத்துவது இல்லை.
தண்டியடிகளின் இந்தத் தொண்டால், வெகு விரைவிலேயே குளம் சுத்தமாகி, ஆழம் ஏற்பட்டு, தண்ணீர் பெருகத் தொடங்கியது. இதைக் கண்டு பொறாமை கொண்ட சிலர், தண்டியடிகளிடம் வந்து திருக்குள திருப்பணியை நிறுத்தும்படி கூறினர்.
அதற்கு தண்டியடிகள், “இது சிவபெருமானை நினைத்து, சிவனுக்காகவும், அவனது அடியார்களுக்காகவும் செய்யப்படும் திருப்பணி. அதை நிறுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தார்.
அதற்கு திருக்குளத்தைச் சுற்றி குடியிருந்த சைவ எதிர்ப்பாளர்கள், “உனக்கு கண் இல்லை என்றால், காதும் கேட்கவில்லையா? நாங்கள் சொல்வதை கேட்டு இங்கிருந்து போய்விடு” என்று மிரட்டும் தொனியில் பேசினர்.
“எனக்கு கண்கள் இல்லையே என்று நான் என்றுமே வருந்தியதில்லை. நான் அகக்கண் கொண்டு, ஈசனின் திருவடியை மட்டுமே தரிசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை நான் வணங்கும் சிவபெருமானின் அருட்கடாட்சத்தால், என்னுடைய கண்கள் ஒளி பெற்று, உங்கள் கண்கள் ஒளியை இழந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று வாதிட்டார், தண்டியடிகள்.
“அப்படி ஒன்று நடந்தால், நாங்கள் இந்த ஊரிலேயே இருக்க மாட்டோம்” என்று கூறிய எதிர்ப்பாளர்கள், தண்டியடிகளை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
வருத்தம் கொண்ட தண்டியடிகள், ஈசனின் சன்னிதி முன்பு அமர்ந்து தன்னுடைய நிலையைச் சொல்லி முறையிட்டார். அப்படியே உறங்கியும் போனார். அவரது கனவில் தோன்றிய ஈசன், “மனக்கவலையை விடு. உன்னுடைய சபதம் நாளை நிறைவேறும்” என்று அருளினார்.
அதோடு, அந்தப் பகுதியை ஆண்ட மன்னனின் கனவிலும் தோன்றிய சிவபெருமான், “தண்டி என்னும் அன்பன், எமக்கு குளம் சீர்செய்யும் பணி புரிகிறான். அவனுக்கு சிலர் இடர் செய்கிறார்கள். நீ போய் அதைச் சரிசெய்” என்று உத்தரவிட்டார்.
மன்னன் திடுக்கிட்டு எழுந்தான். இறைவனின் கருணையை எண்ணி மகிழ்ந்தான். அதிகாலையிலேயே தண்டியடிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தான். எதிர்ப்பாளர்களை வரவழைத்து விசாரணை நடத்தினான். அவர்கள், “தண்டி கண் ஒளி பெற்றால், நாங்கள் இந்த ஊரை விட்டே போய் விடுகிறோம்” என்றனர்.
அவர்களின் சபதத்தை ஏற்ற தண்டியடிகள், திருக்குளத்தை நோக்கிச் சென்றார். பின்னர் சிவனின் நாமத்தை உச்சரித்தப்படி திருக்குளத்தில் மூழ்கினார். அவர் எழுந்தபோது, அவரது கண்கள் ஒளி பெற்றிருந்தன. அதே நேரம் எதிர்ப்பாளர்களின் கண்கள் பார்வையை இழந்திருந்தன. தண்டியடி களின் இறை பக்தியை எண்ணி, மன்னன் உள்ளிட்ட அனைவரும் பரவசம் அடைந்தனர்.
எதிர்ப்பாளர்கள் அனைவரும் தங்கள் நிலையை எண்ணி வருந்தியபடி ஊரை விட்டே புறப்பட்டு போய்விட்டனர். அதன்பிறகு பல காலம் இறைவனுக்கு தொண்டு செய்து வந்த தண்டியடிகள் நாயனார், இறுதியில் சிவபதம் அடைந்தார்.

தஞ்சை, திருவாரூர், நாகை அடங்கிய டெல்டா மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தனிச்சிறப்பாக விளங்குகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் “கோவில் பாதி குளம் பாதி” என்ற பழமொழியை தனக்கே உருவாக்கிக் கொண்ட ஊர் மன்னார்குடி ஆகும். மன்னர்கள் இவ்வூரில் குடிகொண்டிருந்ததால் மன்னார்குடி என பெயர்வந்தது என்றும் கூறுவது உண்டு. மன்னார்குடி மதில் அழகு என்பது இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
தஞ்சை, திருவாரூர், நாகை அடங்கிய டெல்டா மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தனிச்சிறப்பாக விளங்குகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் மகாவிஷ்ணு சங்கு, சக்கரம் இல்லாமல் உபய கரங்களுடன் சேவை சாதிப்பது சிறப்பம்சம். இக்கோவில் முதலாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் கட்டப்பட்டது.
பெருமாள் சன்னதியில் குழந்தை வடிவில் சந்தானகிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். சந்தான கிருஷ்ணனை கைகளில் வாங்கி வழிபட்டால் குழந்தைப்பேறு கிட்டும். தீராத நோய்கள் நீங்கும்,வியாபாரம் செழிக்கும். திருமணத்தடை,கடன் தொல்லை நீங்கும் மேலும் உயர்கல்வி மற்றும் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்பது திண்ணம்.
பொதுவாக கோவிலுக்கு வழிபாடு செய்ய செல்லும்போது தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதனால் கர்மவினைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். கோவிலில் எந்த நேரத்தில் தீபம் ஏற்றினால் நல்லது என்பது குறித்து பார்க்கலாம். மாலை நேரத்தில் பகலும் இரவும் சந்திக்கும் நேரத்தில் தீபம் ஏற்றுவது சிறந்த நன்மைகளை கொடுக்கும். சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. சனிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் நெய்தீபம் ஏற்றுவது சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குரிய நாள் என்பதால் பகலில் சூரியன் உள்ளபோது தீபம் ஏற்றுவது மிகுந்த நன்மையை தரும்.

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இரவில் இருந்து தாரை தப்பட்டைகள், வாத்தியங்கள் முழங்க படைக்கலம் எடுத்துச் சென்று மாதேஸ்வரன் மற்றும் சருகுமாரியம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் எளிய முறையில் தொடங்கியது.
தொடர்ந்து 25-ந் தேதி கம்பம் சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30-ந் தேதி அதிகாலை அம்மன் அழைப்பும், பின்னர் தலைமை பூசாரி உள்பட 11 பேர் குண்டத்தில் இறங்கும் நிகழ்வும் நடந்தது. தீ மிதிக்கும் நிகழ்வு முடிவடைந்ததும் குண்டம் தகரங்கள் வைத்து மறைக்கப்பட்டது.
கடந்த 2-ந் தேதி கோவில் சார்பில் தங்க ரதம் கோவிலை சுற்றி வலம் வந்தது. நேற்று காலை மறு பூஜை நடந்தது. இரவு கோவிலில் இருந்து தாரை தப்பட்டைகள், வாத்தியங்கள் முழங்க படைக்கலம் எடுத்துச் சென்று மாதேஸ்வரன் மற்றும் சருகுமாரியம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
மறுபூஜையையொட்டி சிறப்பு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

உலகில் மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, மரணித்து அடக்கம் செய்யப்பட்டு, மூன்று நாட்கள் கடந்தபின் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றால், அவர் இறைமகன் இயேசு மட்டுமே.
உலகில் மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, மரணித்து அடக்கம் செய்யப்பட்டு, மூன்று நாட்கள் கடந்தபின் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றால், அவர் இறைமகன் இயேசு மட்டுமே. தன் சாவை எப்படி அவர் முன்னறிவித்தாரோ அதேபோல் “நான் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்” என்பதையும் முன்னறிவித்தார். ஆம்..! இறைமகன் இயேசுவின் முன்னால் மரணம் மண்டியிட்டது. “சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது, இயேசு உயிர்த்தார், அல்லேலூயா” என்னும் வெற்றிப் பாடல் நம் உள்ளங்களில் இந்த ஈஸ்டர் திருநாளில் ஒலிக்கின்றது. ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் காட்டும் உட்பொருள் பற்றி நம்மில் எத்தனை பேர் முழுமையாக அறிந்திருக்கிறோம். அதைப் பகிரும் முன் நம் ஆண்டவராகிய இயேசு உயிர்ப்பு குறித்து நற்செய்தியாளர் யோவான் எழுதிய நூலிலிருந்து அந்த நிகழ்வை வாசிப்போம்.
வாரத்தின் முதல்நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.
அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை (யோவான் 20: 1-9).
வாரத்தின் முதல் நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை. யூதர்களுக்கு ஓய்வுநாள் சனிக்கிழமை. ஓய்வுநாள் முடிந்தவுடன் விடியற்காலையிலேயே, மரியா மக்தலேனா கல்லறைக்குச்செல்கிறாள். இயேசுவின் உடலைக்காணவில்லை என்றவுடன், அவள் திரும்பிவந்து பேதுருவிடமும், யோவானிடமும் சொல்கிறாள். யோவான் அங்கே, துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டதாகவும், அத்துண்டு மற்றத்துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச்சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பார்க்கிறோம். விவிலியத்திலே இதற்குப் பொருள் இருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில், தலைவர் வீட்டிலே சாப்பிடும்போது, கைதுடைப்பதற்கான துணி மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும். அவர் சாப்பிட்டவுடன் கைத்துணியைத் துடைத்தால், அதை மீண்டும் மடித்து வைத்துவிட்டுச்சென்றுவிடுவார்.
ஒருவேளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, யாராவது வந்தால், அந்தத்துணியை அப்படியே மடிக்காமல், சுருட்டிப் போட்டுவிட்டுச்சென்றுவிடுவார். இதனுடைய பொருள், அவர் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார் என்பதே. இதைத்தான் திருத்தூதர்பணி நூல் அதிகாரம் 1, வசனம் 11-ல் பார்க்கிறோம்..
“கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லாவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்”. ஆக, இயேசு மீண்டும் வருவார் என்கிற செய்தி விவிலியம் வழியாக நமக்குத் தரப்படுகிறது.
‘கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார்’ என்பது கிறித்தவ விசுவாசத்தின் மறைபொருள். தளர்ந்து போயிருக்கிற, துன்பங்களால் வாழ்வே வெறுத்துப் போயிருக்கிற ஒவ்வொருவருக்கும் இது மிகப்பெரிய நற்செய்தி. கிறிஸ்து மீண்டும் வருவார் என்கிற செய்தியே மனித வாழ்வுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. இயேசுவின் உயிர்ப்பிலேதான் மீட்பின் வரலாறு நிறைவடைகிறது.

இத்தகைய குண நலன் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக நம் அனைவருக்கும் நல்வாழ்க்கையை தந்தருள அந்த ஏக இறைவனை வேண்டுவோம். ஆமின்.
நம்மை நோக்கி யாராவது ஒருவர் “நீங்கள் வலிமையானவரா?” என்ற கேள்வியைக் கேட்டால் நமக்கு எப்படி இருக்கும்?
வலிமை என்றால் உடல் வலிமையா?, அல்லது மன வலிமையா?
உடல் வலிமை என்றால் உறுதியான உடல் அமைப்பு கொண்டவர், தன்னை வலிமையானவர் என்று கருதலாம். மன வலிமை என்றால், மன உறுதி கொண்டவர் தன்னை வலிமையானவர் என்று குறிப்பிடலாம்.
ஆனால், இஸ்லாம் பார்வையில் இந்த கேள்விக்கு பதில் என்ன தெரியுமா?
இது தொடர்பாக நபி மொழிகளும், திருக்குர்ஆனும் என்ன சொல்கின்றன என்பது குறித்து இங்கு நாம் பார்க்கலாம்.
இந்த உலகிலும், மறு உலகிலும் வலிமை மிக்கவர் யார் என்றால் அது ஏக இறைவன் அல்லாஹ் ஒருவன் தான். இதையே திருக்குர்ஆன் (42:19) குறிப்பிடும்போது: “அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்”.
நம்மைப்படைத்த இறைவன் நமக்கு உணவளிக்கின்றான். நம்மை பராமரித்து, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றான். அவனுக்கு இணை எதுவும் கிடையாது. அவன் அனைவரையும்விட பலம் மிக்கவன். அந்த வலிமை மிகுந்த இறைவன் முன்பு நாம் மிகவும் பலவீனமானவர்கள். அவனுடைய அருள் இன்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது.
இருந்தாலும், மனிதர்களில் வலிமைமிக்கவர் யார் என்பதையும் அந்த ஏக இறைவன் சுட்டிக்காட்டுகின்றான். இதற்கு முதல் தேவை- நாம் பயபக்தி உள்ளவர்களாக இருக்கவேண்டும். வல்லமை மிக்க இறைவன் மீதும், அவனது சக்தி மீதும் நாம் நம்பிக்கையும், அச்சமும் கொள்ள வேண்டும். வறுமை-செல்வம் என எந்த நிலையில் இருந்தாலும் இறைவனின் பாதையில் செலவு செய்ய வேண்டும். கோபத்தை அடக்கிக்கொள்ள வேண்டும். நம்மைச்சார்ந்தவர்கள் ஏதேனும் பிழை செய்தால் அதை பொறுத்துக்கொண்டு மன்னிக்கும் மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கின்றான்.
இதையே திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:
“(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (திருக்குர்ஆன் 3:134)
“என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்). (திருக்குர்ஆன் 11:52).
நபி (ஸல்) அவர்களும் வலிமை பற்றி குறிப்பிடும் போது, இவ்வாறு கூறினார்கள்: “வலிமை என்பது தாக்குவதைக் கொண்டல்ல. வலிமையானவர் யாரெனில் கோபம் ஏற்படும் சமயத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்துபவரே”. (நூல்: புகாரி)
அதேநேரத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஏதேனும் அச்சுறுத்தல், ஆபத்து வந்தால் அதற்காக கோபத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. கோபம் என்பது சுய நலனுக்காக அல்லாமல் மார்க்கத்திற்காக வெளிப்படலாம்.
நாம் வலிமையானவர்களாக இருக்க வேண்டும்? எதில் தெரியுமா?
ஏக இறைவனின் கொள்கைகளை பின்பற்றுவதில், இறையச்சம் கொள்வதில், இறைவன் வகுத்த கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றுவதில் வலிமையுடன் இருக்க வேண்டும்.
அறியாமல் செய்யும் பிறரின் தவறுகளையும், பிழைகளையும் பொறுத்துக்கொண்டு மன்னிக்கும் மன வலிமையுடன் திகழ வேண்டும்.
தேவை உள்ளவர்களுக்கு கொடுத்து உதவும் வல்லமை மிக்க மனவலிமையுடன் வாழ வேண்டும். உற்றார்களையும், உறவினர்களையும், மற்றவர்களையும் அரவணைத்து அன்பு செலுத்தும் மனவலிமை உள்ளவர்களாக வாழ வேண்டும்.
இத்தகைய குண நலன் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக நம் அனைவருக்கும் நல்வாழ்க்கையை தந்தருள அந்த ஏக இறைவனை வேண்டுவோம். ஆமின்.
பேராசிரியர். அ முகம்மது அப்துல் காதர், சென்னை.