என் மலர்

  ஆன்மிகம்

  ராஜகோபாலசாமி கோவில் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்
  X
  ராஜகோபாலசாமி கோவில் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்

  ராஜகோபாலசாமி கோவில் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை, திருவாரூர், நாகை அடங்கிய டெல்டா மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தனிச்சிறப்பாக விளங்குகிறது.
  திருவாரூர் மாவட்டத்தில் “கோவில் பாதி குளம் பாதி” என்ற பழமொழியை தனக்கே உருவாக்கிக் கொண்ட ஊர் மன்னார்குடி ஆகும். மன்னர்கள் இவ்வூரில் குடிகொண்டிருந்ததால் மன்னார்குடி என பெயர்வந்தது என்றும் கூறுவது உண்டு. மன்னார்குடி மதில் அழகு என்பது இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

  தஞ்சை, திருவாரூர், நாகை அடங்கிய டெல்டா மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தனிச்சிறப்பாக விளங்குகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் மகாவிஷ்ணு சங்கு, சக்கரம் இல்லாமல் உபய கரங்களுடன் சேவை சாதிப்பது சிறப்பம்சம். இக்கோவில் முதலாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் கட்டப்பட்டது.

  பெருமாள் சன்னதியில் குழந்தை வடிவில் சந்தானகிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். சந்தான கிருஷ்ணனை கைகளில் வாங்கி வழிபட்டால் குழந்தைப்பேறு கிட்டும். தீராத நோய்கள் நீங்கும்,வியாபாரம் செழிக்கும். திருமணத்தடை,கடன் தொல்லை நீங்கும் மேலும் உயர்கல்வி மற்றும் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்பது திண்ணம்.

  பொதுவாக கோவிலுக்கு வழிபாடு செய்ய செல்லும்போது தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதனால் கர்மவினைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். கோவிலில் எந்த நேரத்தில் தீபம் ஏற்றினால் நல்லது என்பது குறித்து பார்க்கலாம். மாலை நேரத்தில் பகலும் இரவும் சந்திக்கும் நேரத்தில் தீபம் ஏற்றுவது சிறந்த நன்மைகளை கொடுக்கும். சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. சனிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் நெய்தீபம் ஏற்றுவது சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குரிய நாள் என்பதால் பகலில் சூரியன் உள்ளபோது தீபம் ஏற்றுவது மிகுந்த நன்மையை தரும்.
  Next Story
  ×