என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த ஆண்டை போலவே வைகாசி விசாக திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) உள்திருவிழாவாக நடக்கிறது. இதில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக மகா பாலாபிஷேகம் நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் :

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் 8 நாட்கள் வசந்த உற்சவமாகவும், ஒரு நாள் விசாக விழாவாகவும், மற்றொரு நாள் மொட்டையராசு உற்சவமாகவும் நடைபெறும். கடந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கோவில்கள் மூடப்பட்டன.

    அதனால் வரலாற்றிலேயே முதல்முறையாக இருப்பிடத்தைவிட்டு இடம்பெறாத நிலையில் (சண்முகர் சன்னதியில் இருந்து விசாக கொடுமண்டபத்திற்கு) சண்முகர் சன்னதியிலேயே வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை உள்திருவிழாவாக நடத்த வேண்டும். வைகாசி விசாக தினத்தன்று சண்முகபெருமானுக்கு பாலாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி கடந்த 11-ந்தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது.

    இதை தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையரும், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தக்காருமான செல்லத்துரை உத்தரவின்பேரின் கோவில் நிர்வாகத்தின் கீழ் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணியளவில் சண்முகர் சன்னதியில் வைகாசி விசாகத்தையொட்டி சண்முகப்பெருமானுக்கு மகா பாலாபிஷேகம் நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    மே மாதம் 25-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    25-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * வைகாசி விசாகம்
     * சந்திராஷ்டமம் - அசுபதி

    26-ம் தேதி புதன் கிழமை :
     
    * பௌர்ணமி
    * புத்த பூர்ணிமா
    * சந்திராஷ்டமம் - பரணி
     
    27-ம் தேதி வியாழக்கிழமை :

    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம்- பரணி, கார்த்திகை

    28-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * சுபமுகூர்த்தம்
    * சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி

    29-ம் தேதி சனிக்கிழமை :

    * அக்னி நட்சத்திரம் முடிவு
    * சங்கடஹர சதுர்த்தி
    * சிறிய நகசு
    * சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்

    30-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * திருத்துவ ஞாயிறு
    * கரிநாள்
    * சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை

    31-ம் தேதி திங்கள் கிழமை  :

    * திருவோண விரதம்
    * கரிநாள்
    * பஞ்சமி திதி
    * சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்

    கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெறுகிறது.
    வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.

    முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைகாசி விசாக திருவிழா நடைபெறுமா என்று பக்தர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே இன்று(செவ்வாய்க்கிழமை) அனைத்து முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக நடைபெறுகிறது.

    மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பூஜைகளில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார்.

    தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.

    ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.
    முருகப்பெருமானுக்கு செய்யும் அபிஷேகங்களில் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒவ்வொருவிதமான பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.





    வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாகக் கருதப்படுகின்றது. அன்றைய தினம் முருகப்பெருமானை உள்ளத்தில் நினைத்து வழிபட்டால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும்.

    கந்தப்பெருமானின் சேவடியைப் போற்றி வணங்குவோருக்கு செல்வ நலம் அத்தனையும் கிடைக்கும். அள்ளிக் கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக இருப்பதால் வரங்கள் அதிகம் கிடைக்கும். கூப்பிட்டதும் மற்றும் கும்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் அவரிடம் இருக்கின்றது. அவருக்குரிய திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும்.

    விசாகத் திருநாளன்று இல்லத்து பூஜையறையில் குத்து விளக்கேற்றி வைத்து அலங்கார மேடையில் விநாயகப் பெருமான் படம் வைத்து அருகில் அவரது தாய், தந்தையரான உமாமகேஸ்வரர் படத்தையும் வைத்து நடுநாயகமாக முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் கூடிய படத்தையும் வைத்துப் பாடல்கள் பாடி வழிபாடு செய்யலாம்.

    அப்படிப்பட்ட திருநாள் வைகாசி மாதம் 11-ந் தேதி (25.5.2021) செவ்வாய்க்கிழமை அன்று வருகின்றது. அன்றைய தினம் முழுமையாக முருகப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

    முருகப்பெருமானுக்கு செய்யும் அபிஷேகங்களில் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒவ்வொருவிதமான பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.

    பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து பார்த்தால் ஆரோக்கியம் சீராகும்.

    பச்சரிசி மாவால் அபிஷேகம் செய்து பார்த்தால் கடன்கள் தீரும். சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும். மாம்பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும்.

    திருநீறால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கெட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிட்டும். அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் சரும நோய்கள் அனைத்தும் தீர்ந்து போகும். பன்னீரால் அபிஷேகம் செய்தால் பார்போற்றும் வாழ்வு அமையும். தேன் அபிஷேகம் செய்தால் குரல் வளம் சிறப்பாக அமையும்.

    வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க இயலும். பகை விலகும். பாசம் பெருகும். தொகை கிடைக்கும். தொல்லைகள் அகலும். அன்றைய தினம் இயன்றவரை அன்னதான கைங்கர்யம் செய்யலாம். குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவைகளையும் தானம் செய்யலாம். விசாகத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றி கிடைக்கும். குமரனை வழிபட்டால் குறைகள் தீரும்.

    ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
    அபிராமி அந்தாதியை தொடர்ந்து 48 நாட்கள், அதிகாலையிலும், இரவிலும் பாடி வந்தால், திருக்கடையூர் அபிராமியின் அருள் கிடைக்கும். துன்பமான வாழ்வு மாறி இன்பம் பெருகும்.
    ‘தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா

    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா

    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவருக்கே

    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!’

    ‘இந்த உலகில் வாழ, ஒருவருக்கு கண்டிப்பாக கல்வி, செல்வம், நெஞ்சில் வஞ்சமில்லாத அன்பர்களின் கூட்டுறவு, எந்த ஒரு சூழ்நிலையிலும் சோர்வடையாத மனம் போன்றவை வேண்டும். இவற்றையெல்லாம் தருவது, மலர் சூடிய கூந்தலைக் கொண்ட திருக்கடையூர் அபிராமி அன்னையின் அருள் ததும்பும் விழியோரப் பார்வைதான்’ என்கிறார், மேற்கண்ட அபிராமி அந்தாதி பாடலைப் பாடிய, அபிராமி பட்டர்.

    இத்தகையை சிறப்பு மிக்க அபிராமி அந்தாதி தொகுப்பு தோன்றியது, ஒரு தை அமாவாசை நன்னாளில். அந்த தொகுப்பு தோன்றிய விதத்தையும், அதைப் பாடிய அபிராமிபட்டரையும் பற்றி இந்தக் கதையின் வாயிலாக அறிந்துகொள்வோம்.

    திருக்கடையூரில் வீற்றிருக்கும் அன்னை அபிராமி மீது, அளவற்ற பக்தி கொண்டிருந்தவர் சுப்பிரமணிய பட்டர். இவர் ஆலயத்தில் பஞ்சாங்கம் படித்து சொல்பவராகப் பணியாற்றி வந்தார். தினமும் பஞ்சாங்கம் படித்தபின்பு, அன்னை அபிராமியின் சன்னிதி எதிரிலேயே அமர்ந்து, அம்பாளை நினைத்து தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அப்படி தியானத்தில் இருக்கும்போது, அவரைச் சுற்றி எது நடந்தாலும் அவருக்குத் தெரியாது. கோவிலுக்கு வரும் அனைத்துப் பெண்களையுமே அபிராமியின் அம்சமாகவே எண்ணி வழிபடுவார்.

    தஞ்சையை ஆட்சி புரிந்து வந்த மராட்டிய மன்னர் சரபோஜி, ஒரு தை அமாவாசை நாளில் பூம்புகார் சென்று கடலில் நீராடி, திருக்கடையூர் ஆலயம் வந்தார். மன்னனைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் வரவேற்று வணங்கி நிற்க, சுப்பிரமணிய பட்டர் மட்டும், அபிராமி சன்னிதியில் அன்னையை நினைத்து தியானத்தில் மூழ்கியிருந்தார்.

    “அவர் யார்?” என்று கோவில் அர்ச்சகர்களிடம் மன்னர் விசாரித்தார்.

    அவர்களோ, “அரசே! இவர் ஒரு பித்தர். எப்போதும் இப்படித்தான் அபிராமியின் சன்னிதியில் கண்களை மூடி நெடுநேரம் தியானத்தில் இருப்பார். இங்கு ஆலயத்தில் தினமும் பஞ்சாங்கம் படிப்பவர் இவர்” என்றுக் கூறினர்.

    உடனே தியானத்தில் அமர்ந்திருந்த சுப்ரமணிய பட்டரின் அருகில் சென்ற மன்னர், “சுப்பிரமணியம்.. இன்று என்ன திதி?” என்றுக் கேட்டார். மன்னர் கேட்ட சமயத்தில் சுப்பிரமணியம், முழுநிலவு போன்ற ஒளி பொருந்திய அபிராமி அம்மனின் திருமுக தரிசனத்தை நினைத்து உருகியபடி இருந்தார். எனவே “பவுர்ணமி” என்றுக் கூறிவிட்டார்.

    மன்னனுக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘இன்று அமாவாசையிலும் புனிதத்துவம் பெற்ற தை அமாவாசை. அதை மாற்றி கூறுகிறாரே’ என்று மனம் கொந்தளித்தவர், “இன்று இரவு பூரணச் சந்திரன் வானில் உதிக்காவிட்டால், உமக்கு மரண தண்டனை” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    அபிராமி அம்மனை நினைத்து தியானத்தில் இருந்த சுப்பிரமணிய பட்டர், மன்னர் சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகே தன் இயல்பு நிலைக்குத் திரும்பினார். அவரிடம் கோவில் அர்ச்சகர்கள் நடந்ததைக் கூறினர். மேலும் சுப்பிரமணியத்திடம், “அமாவாசையில் முழு நிலவு எப்படித் தோன்றும்?” என்றும் கேட்டனர்.

    அதற்கு சுப்பிரமணிய பட்டர், “என்னை அந்த நிலையில் இருந்து அமாவாசையை, பவுர்ணமி என்று சொல்ல வைத்தவள் அன்னை அபிராமி. எனவே அவளே இதற்கும் நிச்சயம் பதில் சொல்வாள்” என்றார்.

    அமாவாசையில் முழுநிலவு தோன்றாது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே மன்னனின் கட்டளைப்படி, சுப்பிரமணிய பட்டருக்கு மரண தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி ஆலயத்தின் வெளியில் குழி தோண்டி அக்னிக் குண்டம் வளர்க்கப்பட்டது. அதற்கு மேல் நூறு கயிறுகளுடன் கூடிய உறி ஒன்றைக் கட்டித் தொங்க விட்டார்கள். அதற்கு ‘அரிகண்டம்’ என்று பெயர். தண்டனைக்குட்பட்டவர் நூறு பாடல்கள் பாட வேண்டும். ஒரு பாடலுக்கு ஒரு கயிறு என, அவர்கள் பாடப்பாட கயிறு ஒவ்வொன்றாக அறுக்கப்பட்டு வரும். நூறாவது பாடலுக்குள் அவர்களுக்கு இறையருள் கிடைக்காவிட்டால், நூறாவது கயிறும் அறுக்கப்பட்டு உறியில் இருப்பவர் அப்படியே அக்னிக் குண்டத்தில் விழுந்து உயிர் துறப்பார்.

    மாலைநேரம் வந்தது. அந்த உறியில் சுப்பிரமணிய பட்டரை ஏற்றினர். அக்னிக் குண்டத்தில் தீ மூட்டப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. சுப்பிரமணிய பட்டர், அபிராமி அம்மனின் கருவறை நோக்கி வணங்கிவிட்டு சுற்றியிருந்த பக்தர்களுக்கும், மன்னனுக்கும் வணக்கம் தெரிவித்தார். பின்னர் ‘தாரமர் கொன்றையும்...’ எனத் தொடங்கும் விநாயகர் துதியைப் பாடி விட்டு, அபிராமியைப் போற்றி பாடல்களைப் பாடினார். அதுவே அபிராமி அந்தாதியானது. ஒவ்வொரு பாடல் நிறைவிலும் ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டது. 78 பாடல்கள் முடிந்துவிட்டன. 78 கயிறுகளும் அறுக்கப்பட்டு விட்டன. 79-வது பாடலாக ‘விழிக்கே அருளுண்டு...’ என்று பாடத் தொடங்கினார், சுப்பிரமணிய பட்டர். அந்தப் பாடலைத் தொடங்கியதுமே, அவருக்கு காட்சி கொடுத்த அபிராமி அன்னை, தன்னுடைய காதில் அணிந்திருந்த தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினாள். அது முழு மதியாக மாறி வானில் ஒளி வீசியது.

    இப்படி அன்னையிடம் வேண்டிய பக்தனுக்காக, அமாவாசை நாளில் வானில் முழு நிலவு தோன்றியது. மன்னன் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும் அன்னை அபிராமியின் அருள் திறத்தையும், சுப்பிரமணிய பட்டரின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். மன்னன், சுப்பிரமணியத்தின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டி, ‘அபிராமி பட்டர்’ என்னும் திருப்பெயரை அவருக்குச் சூட்டினார்.

    அப்போது வானில் அசரீரி எழுந்தது. “அன்பனே! நீ மன்னனிடம் கூறியச் சொல்லை மெய்ப்பித்து விட்டோம். தொடங்கிய அந்தாதியைத் தொடர்ந்து பாடி முடிப்பாயாக” என்றது அபிராமி அன்னையின் அமுதக் குரல். அன்னையின் சொல்படி தொடர்ந்து 100 பாடல்கள் பாடி, நூற்பயனாக

    ‘ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்

    பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்

    காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்புவில்லும்

    சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு

    ஒரு தீங்கும் இல்லையே’

    என்ற பாடலுடன் அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார் அபிராமி பட்டர்.

    தன்னுடைய பக்தியால் அன்னையை அற்புதம் நிகழ்த்தச் செய்த அபிராமி பட்டருக்கு, சரபோஜி மன்னர் பெரும் மானியம் வழங்கிச் சிறப்பித்தார். அதற்குச் சான்றாக விளங்கும் ‘உரிமை செப்புப் பட்டயம்’ ஒன்று அபிராமி பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.

    ஆண்டு தோறும் தை அமாவாசை நாளில், அபிராமி பட்டரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு, திருக்கடையூர் திருத்தலத்தில் நடத்திக் காண்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை நேரில் தரிசிப்பவர்கள் கனிவான வாழ்க்கையைப் பெறுவார்கள். மேலும் அபிராமி அந்தாதியை தொடர்ந்து 48 நாட்கள், அதிகாலையிலும், இரவிலும் பாடி வந்தால், திருக்கடையூர் அபிராமியின் அருள் கிடைக்கும். துன்பமான வாழ்வு மாறி இன்பம் பெருகும்.

    அமைவிடம்

    சீர்காழியில் இருந்தும், மயிலாடுதுறையில் இருந்தும் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் திருக்கடையூர் திருத்தலம் அமைந்துள்ளது.
    கொரோனா பரவல் காரணமாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
    கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைகாசி விசாக திருவிழா நடைபெறுமா என்று பக்தர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடக்கிறது.

    தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பூஜைகளில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில் யானை வாகனத்தில் கோவிந்தராஜசாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. 7நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கோவிந்தராஜசாமி வீதி உலாவந்தார்.

    இரண்டாவது நாளில் காலையில் கல்யாண மண்டபத்தில் திருமஞ்சம் நடைபெற்றது. மாலையில் ஹம்சவ வாகனத்தில் வீதி உலா நடந்தது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் நேற்று யானை வாகனத்தில் கோவிந்தராஜசாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
    ஆந்திராவில், சித்தூர் அருகில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரைத் தரிசித்து மனமாற வழிபட்டால், அரிய பெரும் பேறுகளை நிச்சயம் அடையலாம் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை!
    ஒவ்வொரு கோயிலுக்கும் பொதுவாக ஒரு அதிசயம் இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நமது நம்பிக்கை. 500 ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த இந்த ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் எழில்மிகு அழகோடு உள்ளது. இங்கு, அதிசய ஸ்ரீவரசித்தி விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் இங்குள்ளது. இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த ஒரு உத்தரணி தண்ணீரைப் பெற்றுக்கொள்ளத்தான் அங்கே கூட்டம் அலை மோதுகிறது. அதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தோன்றியதே அந்தக் கிணற்றில்தான்! இன்றும் அந்த கிணற்றின் மேல்தான் அவர் காட்சி தருகிறார். அது மட்டுமல்ல, விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக்கொண்டேயிருக்கிறது. நம் ஊர் பிள்ளையார்கள்போல் இவருக்குப் பெரிய அலங்காரம் எதுவும் கிடையாது. நீளத் தும்பிக்கை, பெரிய காது, சிறிய கண்கள் என்றெல்லாமும் கிடையாது. கிணற்றில் எப்படித் தானாக, சுயம்புவாகத் தோன்றினாரோ, அதேபோல, எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே காட்சியளிக்கிறார். பக்தர்கள் இவரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள். காரணம், காணிப்பாக்கம் விநாயகர், `நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்குக் கெட்டவர்’.

    யாராவது, ஏதாவது விஷயத்தில் பொய் சொன்னால், அவரைத் தரதரவென இங்கே இழுத்து வந்து விடுகிறார்கள். விநாயகர் முன் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். `காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்று கூறினால், அதனை சத்தியப் பிரமாணமாக இன்றும் ஆந்திர கிராமப் பஞ்சாயத்துகளில் ஏற்றுக்கொள்கிறார்கள்.

    காரணம், இந்த விநாயகர் முன் யாராவது பொய் சொன்னால் 90 நாட்களுக்குள்ளேயே பொய் சொன்னவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பதால்தான்!உண்மை மட்டுமல்ல, ஊனமுற்றவர்களையும் இந்த விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதில் இவருக்கு தீராத இஷ்டம். இவர் முதலில் காட்சி தந்ததே ஊனமுற்ற மூன்று சகோதரர்களுக்குத்தான். ஊர்ப் பெயர் தோன்றியதும் அதனால்தான்!

    விநாயகர் தோன்றிய கதைஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விஹார புரி என்ற ஊரில், ஏழை விவசாயிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்களிடம் 'காணி’ நிலமே இருந்தது. அது மட்டுமல்ல, மூவருமே ஊனமுற்றவர்கள். ஒருவருக்கு வாய் பேச இயலாது. அடுத்தவருக்குக் காது கேட்காது. மூன்றாமவருக்குக் கண் தெரியாது!

    தங்கள் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், மூவரும் ஒற்றுமையுடன் விவசாயம் செய்து பிழைத்து வந்தார்கள். கோடைக் காலத்தில் அவர்கள் நிலத்தில் இருந்த கிணற்றில் நீர் வற்றியதால், அதனை ஆழப்படுத்த முனைந்தார்கள். மண்வெட்டியுடன் கிணற்றில் இறங்கினான், வாய் பேச முடியாதவன். பூமியைத் தோண்டும்போது ஒரு பாறையின் மீது மண்வெட்டி பட்டு, ஓசை எழுந்தது. அது மட்டுமல்ல, வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குபுகுபுவென ரத்தம் பீரிட்டது. அதைக் கண்டதும், இதுவரை வாய் பேசாதிருந்தவன், 'ஐயோ ரத்தம்’ என்று அலறினான்! அவன் அலறியது, மேலே நின்றிருந்த, காது கேட்காதவனுக்குக் கேட்டது! எட்டிப் பார்த்த கண் தெரியாதவன், 'என்ன ஒரே சிவப்பாக இருக்கிறதே’ என்று வியந்து பார்த்தான்!

    அப்புறம் என்ன? மூவரின் குறைகளும் திடீரென தீர்ந்ததைக் கண்ட கிராம மக்கள் அதிசயித்தனர். கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்தனர். பாறை உருவில் அங்கே வரசித்தி விநாயகர் காட்சியளிப்பது கண்டு பரவசப்பட்டனர். பயபக்தி யுடன் வணங்கினர். இன்றைக்கும் மண்வெட்டியால் ஏற்பட்ட தழும்பு விநாயகர் சிரசில் இருக்கிறது.காணி நிலத்தில் தோன்றியதாலும், பக்தர்கள், தேங்காய் உடைத்தபோது பரவிய இளநீர், ஒரு காணிப் பரப்பளவு பரவியதால் 'காணிப்பாக்கம்’ என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். மிகவும் சிறியதாக இருந்த கோயிலை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன், பெரிதாகக் கட்டித் திருப்பணி செய்தான். 1336-ல் விஜயநகர மன்னர்களும் இங்கே சிறப்பு வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.

    கோயிலின் அருகே ஒரு நதி உள்ளது. முன்னொரு காலத்தில், அரசனுக்குச் சொந்தமான மாந்தோட்டம் ஒன்று இங்கே இருந்தது. அதிலிருந்த கனிகளை விகிதா என்ற ஒருவன் பறித்துச் சாப்பிட்டான். அதனால் வெகுண்ட அரசன், விகிதாவின் இரு கைகளையும் வெட்டிவிட்டான். அறியாமல் செய்த பிழைக்கு, இவ்வளவு பெரிய தண்டனையா? என்று துடித்த விகிதா, அந்த நதியில் நீராடி, காணிப்பாக்கம் விநாயகரை நோக்கி “பாகு தா (கை தா)” என்று வேண்டினான். அவனுக்குக் கையும் கிடைத்தது, நதிக்கு 'பாகுதா’ என்ற பெயரும் ஏற்பட்டது.

    அலங்காரமில்லாத வெண்மை நிற ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால், அலங்காரமில்லாமல், சுயம்புவாகக் காட்சி தரும் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரைக் காணலாம். அவரைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். அது தண்ணீர் மட்டுமல்ல, அவரது அளவிட முடியாத கருணையும்தான்.

    அருகில் வேறு இரண்டு கோயில்களும் உள்ளன. ஒன்று, மணிகண்டேஸ்வரர் ஆலயம். இங்கிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச் செல்வதாக ஒரு நம்பிக்கை. மற்றது வரதராஜ சுவாமி ஆலயம்.இன்னும் நம்மை அதிசயிக்க வைக்கும் நிகழ்வாக காணிப்பாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறார்.
    வில்லியனூர் அருகே உள்ள திருக்காமீசுவரர் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    வில்லியனூரில் பழமை வாய்ந்த கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வரும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கோவில்கள் மூடப்பட்டுள்ளது. ஆனால் கோவிலின் உள்ளேயே பக்தர்கள் இன்றி விழாக்கள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டுக்கான வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் கொரோனா பரவலை தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    உறவுகளில் விரிசல் இல்லாத புது வாழ்வு மலர்ந்தால் உலகமும், உறவும் சீர்பெறும். எல்லா பிரச்சினைக்கும் ஒட்டுமொத்தமாய் தீர்வு கிடைத்து விடும்.
    உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அது- ஒட்டி வாழுகின்ற உறவுகளை காரணங்கள் இன்றி வெட்டி வாழ்கின்ற நிலைதான்.

    உறவுகளின் மேம்பாடுகள் சரியாக புரியப்படாமல் போனதால் தான் கூட்டுக் குடும்ப தத்துவங்கள் சிதைந்து போயின. முதியோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்து விட்டன. உறவின் உன்னதங்கள் புரியப்படாமல் மனித வாழ்க்கை உருண்டு கொண்டிருக்கின்றது.

    மாற்று மதத்தவர்களிடம் மாமன் மச்சான் உறவு கொண்டாடிய கிராமிய பண்புகள் முகங்கள் திருப்பி மாற்றுப் பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கின்றன. இந்த மன மாச்சரியங்கள் மனிதகுலம் முன்னேறுவதற்கு தடைக்கற்களாக மட்டுமல்லாமல், பகை உணர்ச்சிகளை கொழுந்து விட்டு எரியச் செய்யும் கிரியா ஊக்கிகளாய் கூட செயல்படுகின்றன.

    அல்லாஹ் தன் அருள்மறையில் “அவர்கள் (நல்லடியார்கள்) எத்தகையோரென்றால், அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்” (திருக்குர்ஆன் 13:21) என்று நல்லடியார்களின் குணாதிசயங்களை படம்பிடித்துக் காட்டுகின்றான்.

    ஒரு தாய் வயிற்றில் பிறந்த தொப்புள்கொடி உறவுகளில், திருமண பந்தங்களால் இடையில் வந்து ஒட்டிக்கொண்ட உறவுகளில், நட்பால் மலர்ந்த உறவுகளில், நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் ஆணித்தரமாக விளக்கி கூறியுள்ளது.

    ‘யார் உறவை வெட்டி வாழ்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தின் வாடையை கூட நுகர முடியாது. மூன்று நாட்களுக்கு மேல் ஒருவருடன் பேசாமல் இருப்பதே மகா பெரிய பாவம்’ என்று மிக கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

    பிரச்சினையற்ற வாழ்க்கை எந்த மனிதனுக்கும் அமைவதில்லை என்பது இயற்கையின் நியதி. அந்த பிரச்சினைகளில் பெரும்பகுதி உறவுகளால் ஏற்படுகிறது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் அதனை அலசி ஆராய்ந்தால் அதன் காரணம் மிக அற்பமாக இருக்கும். புரிந்து கொள்வது வேறு, புரிந்து கொள்ள மறுப்பது வேறு. இந்த இரண்டு நிலைகளின் இடையே விளைவது தான் உறவுகளில் விரிசல்கள்.

    பெற்றோர்களே, பிள்ளைகளை அரவணைத்துச் செல்லுங்கள். பிள்ளைகளே, பெற்றோர்களை மதித்துப் பாருங்கள். உறவுகளின் உன்னதங்களை நினைத்துப் பாருங்கள், வேற்றுமை விலகி மனம் லேசாவதை உணர்வீர்கள். உடைந்த பாத்திரம் வேண்டுமென்றால் ஒட்டாமல் போகலாம், ஆனால் எந்த நிலையிலும் மீண்டும் மீண்டும் உறவுகள் மட்டும் ஒட்டிக்கொள்ளும்.

    அல்லாஹ் கூறுகிறான், ‘உறவுகளை எந்த நிலையிலும் சேர்ந்து வாழ்கின்றவரே என்னுடைய நல்லடியார்’. அண்ணல் எம்பெருமானார் அவர்களும் தன் வாழ்வில் பல கட்டங்களில் இதை உறுதியாக வலியுறுத்தியுள்ளார்கள்.

    “இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்த தன் அடியார்களுக்கு இதைப் பற்றிதான் அல்லாஹ் நற்செய்தி சொல்கிறான். (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்: ‘நான் இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், உறவினர்கள் மீது அன்பு காட்டுவதைக் கண்டிப்பாக நான் விரும்புகின்றேன். ஒருவர் ஏதேனும் நன்மை செய்வாராகில் நாம் அவருக்காக அந்நன்மையுடன் இன்னும் பல நன்மைகளை அதிகமாக்கிக் கொடுப்போம். திண்ணமாக, அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவனாகவும் மதிப்பவனாகவும் இருக்கின்றான்” (திருக்குர்ஆன் 42:23) என்று கூறி அல்லாஹ் நபிகள் மூலம் நமக்கு உறவுகளின் நேசத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கின்றான்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருப்பது மனித உறவில் இயல்பு. இதை ஏற்றுக்கொண்டு அவர்களையும் அரவணைத்து, அவர்கள் மனம் கோணாமல் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமைகளை, கவுரவங்களை, கண்ணியங்களை கொடுக்கும் போது அவர்களை நாம் மதிக்கிறோம் என்ற மனப்பாங்கில் அவர்கள் மனமும் குளிர்ந்து விடும், வேற்றுமையும் மறந்து விடும்.

    அப்படிப்பட்ட உறவுகளோடு இணைந்து வாழும் போதுதான் உறவுகளின் உன்னதத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நம் மனதிலும் அன்பும், பண்பும், பணிவும், பாசமும், நேசமும் வந்து குடியேறும்.

    உறவுகளை உன்னதமாய் மதிக்கின்ற சிறந்த வாழ்வை நாமும் வாழ முடியும் என்று உறுதியோடு முயற்சிப்போம். உறவுகளில் விரிசல் இல்லாத புது வாழ்வு மலர்ந்தால் உலகமும், உறவும் சீர்பெறும். எல்லா பிரச்சினைக்கும் ஒட்டுமொத்தமாய் தீர்வு கிடைத்து விடும்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக உற்சவம் நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை ஊஞ்சல் உற்சவம், சுவாமி பிரகார புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    வருகிற 26-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
    சகட தோஷம் சர்க்கரை நோய் போன்றது வந்து விட்டால் போகாது. வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுவது போல சகட தோஷத்திற்கு தினசரி பரிகாரம் செய்ய வேண்டும்.
    சகட தோஷம் கொண்டு பிறந்தவன் மந்திரியாக ஆனால் கூட பத்து நாளில் பதவியை பறிகொடுத்து விடுவான் என்று சொல்வார்கள். விறகு வெட்டி கஷ்டப்படுகிறானே என்று ஒரு தொழிலாளிக்கு சந்தன காட்டையே எழுதி வைத்தானாம் அரசன். ஆனால் அந்த தொழிலாளி சந்தன காட்டின் மகத்துவத்தை அறியாமல் சந்தன மரத்தை வெட்டி கட்டைகளை எரித்து கரித்துண்டுகளை விற்று பிழைப்பு நடத்தினானாம். இப்படிப்பட்ட அப்பாவிகளை கூட சகட தோஷத்தின் சகபாடிகள் என்று கூறலாம்.

    ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் குரு நின்ற ராசிக்கு ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இராசிகளில் சந்திரன் இருந்தாலும் அந்த ஜாதகத்தை சகட தோஷ ஜாதகம் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தோம் என்றால் பலவிதத்திலும் அவர்கள் சோதனை மிகுந்தவர்களாகவே இருப்பதை காணலாம்.

    சகட தோஷம் சர்க்கரை நோய் போன்றது வந்து விட்டால் போகாது. வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுவது போல சகட தோஷத்திற்கு தினசரி பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பூரண விடுதலை உண்டு. தினசரி பரிகாரம் என்றவுடன் அதை செய்ய முடியுமா? முடியாதா? என்று கவலைப்படவேண்டாம். மிக சுலபமாக செய்து விடலாம்.

    ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினசரி காலையில் நூற்றி எட்டுமுறை சொல்லி வாருங்கள். அமாவாசை தோறும் பசுவிற்கு பச்சரிசி தவிடு, மற்றும் அகத்திக்கீரை கொடுத்து வாருங்கள். சகட தோஷம் உங்களை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்ளும். துன்பத்தை விலக்கி இன்பமாக வாழலாம்.
    ×