என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசுவை உணவாக உட்கொள்ளும் அனைவரும் அவரது போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலமே அவர் உயிருள்ள உணவு என்பதை உணர முடியும்.
இயேசு பல ஊர்களை சுற்றி வந்து பல புதுமைகளை செய்து கொண்டிருந்தார். பல நூறு மக்களுக்கு அற்புதம் செய்து உணவளித்தார். அவர் செய்த சில அற்புதங்களைக் கண்டு மக்கள் அவரை, ஓர் உணவுத் தொழிற்சாலையாகக் கருதிக்கொண்டார்கள். அவரிடம் திரும்பத் திரும்ப அதையே எதிர்பார்த்தனர். அப்படிப்பட்ட சூழ் நிலையில் இயேசுவின் பதில் அவர்களைத் தெளிவடையச் செய்தது.
யோவான் எழுதிய நற்செய்தி அதிகாரம் 6-ல் 30 முதல் 35 இறைவசனங்களை வாசித்துப் பாருங்கள். இயேசு, கொல்லப் படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது மக்களில் சிலர் அவரிடம் வந்து, “ஐயா நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் அருள் அடையாளம் காட்டுகிறீர். எகிப்திலிருந்து மீட்டுவரப்பட்ட எங்கள் முன்னோர்கள் பாலை நிலத்தில் தங்கியிருந்தபோது ‘மன்னா’ என்ற உணவை உண்டார்களே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளப்பட்டது’ என மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா” என்று கேட்டனர்.
அதற்கு இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவை அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார்.
உடனே அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.
இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இருக்காது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இருக்காது” என்றார்.
இயேசுவை அன்றாடம் அணுகிச் சென்ற மக்கள் தங்களுக்கு அவர் வழியே உணவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அதற்குக் காரணம் தண்ணீருக்குக் கூட வழியில்லாத பாலை நிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கடவுளிடமிருந்து ‘மன்னா’என்னும் உணவைப் பெற்றுக் கொடுத்தார். அதுபோலவே மக்களின் வாழ்வுக்கு நெறிகாட்டும் வகையில் ‘தோரா’ என்னும் திருச்சட்டத்தை வழங்கினார்.
இதைத் தங்கள் ஆன்மிக வரலாற்றின் மூலம் அறிந்து வாழ்ந்த மக்கள், இயேசுவும் அதே உணவைப் பெற்றுத்தருவார் என நினைக்கிறார்கள். இயேசுவால் செய்ய முடியாத அதிசய செயல் ஏதாவது உண்டா எனத் தங்களின் எதிர்பார்ப்புக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். அதிசயமான விதத்தில் ஐயாயிரம் மக்களுக்கு இயேசு உணவு வழங்கிய நிகழ்வும் அவர்கள் இப்படி எதிர்பார்க்கக் காரணமாக அமைகிறது.
ஆனால், இயேசு மன்னாவைவிடச் சிறந்த ஓர் உணவை அவர்களுக்கு வழங்குகிறார். அது மன்னாவைப் போல் சில காலம் மட்டுமே தரப்பட்ட உணவு அல்ல. என்றும் ஜீவித்திருக்கும் உயிருள்ள உணவு. பாடுகள் வழியாக இயேசுவே மக்களுக்கு உணவாகத் தம்மைக் கையளிக்கிறார். இந்த உணவை உண்போர் பசியால் வாட மாட்டார்கள். அவர்களுடைய தாகமும் தணியும்.
முழுமையான நிறைவைத் தருகின்ற உணவை நாம் தேடினால் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும். நம் வாழ்க்கையின் தாகம் தணிய வேண்டும் என விரும்பினால் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவ்வாறு இயேசு இறை நம்பிக்கையின் உயர்வை உணர்த்துகிறார். இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு நமக்காகத் தம்மையே அர்ப்பணித்ததால் நமக்கு உணவாக மாறினார். இயேசுவை நம் வாழ்வின் ஊற்றாக ஏற்றால் அவரே நமக்கு வாழ்வு வழங்குவார்.
இயேசுவை உணவாக உட்கொள்ளும் அனைவரும் அவரது போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலமே அவர் உயிருள்ள உணவு என்பதை உணர முடியும். இயேசுவைத் தம் வாழ்வுக்கு முன்மாதிரியாகக் கொண்டு, அவருடைய கட்டளைகளை ஏற்று நடக்கும் அனைவருக்கும் நிலைவாழ்வு உண்டு. நிலைவாழ்வு நாமாகவே உழைத்துப் பெறுகின்ற பேறு அல்ல, மாறாகக் கடவுளே தன் மகனின் வழியாக நமக்கு வழங்குகின்ற அன்புக் கொடை. இதுவே கடவுளின் ஏற்பாடு.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதனையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.
நேற்று வழக்கமான பூஜைகளுடன் 25 கலச பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு நடை சாத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். இதை ஒரு எளிய ஸ்லோகத்தின் மூலம் சரி செய்யலாம்.
சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். அப்படி செய்து முடித்தாலும் அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பதில்லை. இவ்வாறு காரியத்தடங்கல் ஏற்படுவதற்கு முற்பிறவியில் செய்த பாவங்களே காரணம். இவர்களை "யோகக்கட்டைகள்' என்று கேலி செய்வார்கள்.
முற்பிறவியில் நல்வினைப்பயன் இருக்குமானால், இப்பிறவியில் செய்யும் எல்லாச் செயல்களும் வெற்றியைத் தரும். அதுவே எதிர்மறையான செயல்களை சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்களின் முன்னோரோ செய்திருந்தால், தடங்கல் ஏற்பட்டு விடும். இதை ஒரு எளிய ஸ்லோகத்தின் மூலம் சரி செய்யலாம். ராமாயணத்தை இந்தியில் "ராமசரிதமானஸ்' துளசிதாசர் எழுதியுள்ளார். அதில் பாலகாண்டத்தில் வரும்,
"பந்தௌ நாம ராம் ரகுபர் கோ!
ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!!
பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ!
அகுண அனூபம் குண நிதான் ஸோ!!
என்ற ஸ்லோகம் இந்த தடங்கலை சீர்செய்யும்.
இதைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லலாம்.
""ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாமே அந்நாமத்தில் அடங்கி உள்ளன. ராமநாமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன. வேதத்தின் உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராமநாமத்தை போற்றுகின்றேன்''
இந்த ஸ்லோகத்தைச் சொல்ல எவ்வித விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரம் காலமும் இல்லை. தினம் 3 முறை தொடர்ந்து ஜெபித்து வருவோருக்கு முன்வினைப் பாவம் நீங்கி அனுகூலம் உண்டாகும்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடைபெற்றுவரும் வசந்த உற்சவத்தின் 6-ம் நாளில் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் வசந்த உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கோவிலின் உள்ளேயே பக்தர்கள் இன்றி விழா நடந்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் வசந்த உற்சவத்தின் 6-ம் நாளான நேற்று உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இறைவனை, ‘என்னுடையவன், உன்னுடையவன்’ என்று பிரித்துப் பார்க்கும் சூழல் இந்த கலிகாலத்தில் நிகழவேச் செய்கிறது. ஆனால் இது ஆதிகாலத்தில் சிவகணங்களுக்கு இடையிலும் கூட இருந்திருக்கிறது. அந்தக் கதையை பற்றி அறிந்துகொள்வோம்.
இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். அவன் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் சரிசமமாக நினைத்து வழிநடத்துபவன். ஆனால் அப்படிட்ட இறைவனை, ‘என்னுடையவன், உன்னுடையவன்’ என்று பிரித்துப் பார்க்கும் சூழல் இந்த கலிகாலத்தில் நிகழவேச் செய்கிறது. ஆனால் இது ஆதிகாலத்தில் சிவகணங்களுக்கு இடையிலும் கூட இருந்திருக்கிறது. அந்தக் கதையை பற்றி அறிந்துகொள்வோம்.
சிவபெருமானின் கணங்களில் மாலியவான், புஷ்பதத்தன் ஆகியோரும் இருந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே, சிவ பக்தியில் யார் உயர்ந்தவர் என்ற போட்டி எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவர்கள் இருவருக்கும் இடையே, கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் இருவருமே ஒருவருக்கு ஒருவர் சாபமிட்டுக் கொண்டனர். அதன்படி புஷ்பதத்தன், மாலியவானை சிலந்தியாகும்படியும், மாலியவான் புஷ்பதத்தனை யானையாக மாறும்படியும் சபித்துக்கொண்டனர்.
அதன்படி இருவரும் சோழநாட்டில் காவிரிக் கரையில் உள்ள திருவானைக்காவல் என்னும் புண்ணிய தலத்தில், சிலந்தியாகவும், யானையாகவும் பிறப்பெடுத்தனர். கரையின் ஓரமிருந்த நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கம் ஒன்று இருந்தது. யானையாக இருந்த புஷ்பதத்தன் தனது முற்பிறவியின் பலனால் சிவபக்தியில் சிறந்திருந்தான். யானை தினமும் தும்பிக்கையில் நீரை நிரப்பி மலரை கொணர்ந்து சிவலிங்கத்துக்கு நீர் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. சிலந்தியாக இருந்த மாலியவான் லிங்கம் மீது காய்ந்த இலைகள் விழாமல் இருக்க லிங்கத்தைச் சுற்றி வலைகளைப் பின்னியது. யானை பூஜை செய்ய வரும்போது லிங்கத்தின் மீது சிலந்தி பின்னியிருக்கும் வலையை களைந்து பூஜை செய்வதும், அதன் பிறகு வரும் சிலந்தி தன் வலையை காணா மல் வருந்தி மீண்டும் பின்னுவதும் வழக்கமாயிற்று.
ஒரு நாள் தன் வலையை, சிதைப்பது யார் என்று நினைத்த சிலந்தி, அதை அறிய அங்கே மறைவாக இருந்தது. வழக்கம்போல அங்கே வந்த யானை, சிலந்தியின் வலையைக் களைந்து, சிவ பூஜை செய்தது. இதனால் கோபம் கொண்ட சிலந்தி, யானையின் தும்பிக்கையில் நுழைந்து கடித்தது. இதனால் வலிதாங்காமல், தும்பிக்கையை பலமுறை தரையில் ஓங்கி அடித்தது யானை. முடிவில் யானையும் இறந்து போனது, யானையின் தும்பிக்கையில் நுழைந்த சிலந்தியும் இறந்துவிட்டது. யானை குற்றம் புரியாததால் சிவ கதி அடைந்தது. ஆனால் யானையைக் கொல்ல நினைத்த காரணத்தால், சிலந்தி மனிதனாக பிறவி எடுத்தது. சிலந்தியாக இருந்து சிவ கைங்கரியம் செய்ததால், அரச குலத்தில் பிறந்தது.
சோழ மன்னனான சுபதேவருக்கும், கமலவதிக்கும் வெகு காலமாக குழந்தைப் பேறு இல்லை. சிவனை தொடர்ந்து வழிபட்டு வந்ததன் பயனாக, கமலவதி கர்ப்பவதியானாள். பேறுகால நேரத்தில், ஒரு ஜோதிடர் “இந்தக் குழந்தை இன்னும் சற்று தாமதமாக பிறந்தால், உலகத்தையே ஆள்வான்” என்று சொல்லவே, கமலவதி “இன்னும் கொஞ்ச நேரம் வலி தாங்குவேன்” என்று அரசனிடம் கூறிவிட்டு, தலைகீழாகத் தொங்கினாள். ஜோதிடர் குறிப்பிட்ட நேரம் வந்ததும், அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தையே, சிலந்தியாக இருந்து மனிதப் பிறப்பெடுத்து பின்னாளில், சோழ மன்னர்களில் சிறப்பானவனாக வாழ்ந்த கோட்செங்கட்சோழன்.
இந்த மன்னன் வீரத்திலும், தீரத்திலும் சிறந்தவனாக விளங்கினான். தன்னுடைய முற்பிறவியை அறிந்த காரணத்தால், அவன் எழுப்பிய சிவன் கோவில்கள் அனைத்தையும் மாடக் கோவில்களாக கட்டி எழுப்பினான். அதாவது யானைகள் ஏறி வர முடியாத ஆலயங்களாக கட்டினான். கோச்செங்கட் சோழ நாயனார், தன்னுடைய இறுதி நாட்களில் தில்லையில் தங்கி இறைவனை மூன்று வேளையும் வழிபட்டு இறுதியில் சிவகதி அடைந்தார்.

கவுதம முனிவர் வழிபட்டதாக சொல்லப்படும் இந்த சிவாலயம், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்தல இறைவனை வழிபட்டுதான், பல அரிய வரங்களை வாலி பெற்றதாக சொல்லப்படுகிறது.
மயிலாப்பூரின் காவல் தெய்வமாக கருதப்படுபவள், கோலவிழி அம்மன். இந்த அம்மன் கோவிலின் அருகில்தான், வாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.
இது சப்த சிவாலயங்களில் 5-வது தலம். கவுதம முனிவர் வழிபட்டதாக சொல்லப்படும் இந்த சிவாலயம், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராமாயணத்தில் கிஷ்கிந்தையை ஆட்சி செய்ததாக கூறப்படும் வாலி என்னும் வானர அரசன் வழிபாடு செய்த தலம் இதுவாகும்.
இத்தல இறைவனை வழிபட்டுதான், பல அரிய வரங்களை வாலி பெற்றதாக சொல்லப்படுகிறது. எனவே தான் இத்தல இறைவன் ‘வாலீஸ்வரர்’ ஆனார். நிலத்தின் அடியில் இருந்து வெளிப்பட்ட பஞ்ச லிங்கங்கள் இந்தக் கோவிலின் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது.

முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளில் வழிபட்டால் கிடைக்கும் பலன்களை கீழே பார்க்கலாம்.
முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:-
முதல்படை வீடு - திருவண்ணாமலை :
திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் 'அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே 'அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.
இரண்டாம் படை வீடு - விருத்தாசலம் :
இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.
மூன்றாவது படைவீடு- திருக்கடவூர் :
எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.
நான்காம்படை வீடு - மதுரை :
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித்தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.
ஐந்தாவது படை வீடு - பிள்ளையார்பட்டி :
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.
ஆறாம்படை வீடு - திருநாரையூர் :
திருநாரையூரில் அருள்பாலிக்கிறார் பொள்ளாப் பிள்ளையார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்திய வாழ்க்கை அமைய காமேஸ்வரிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்யலாம்.
‘காம’ எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள். பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.
மந்திரம்:
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.
வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ பிரதமை, அமாவாசை.
வழிபடு பலன்கள்:
குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்

உலக உயிர்கள் அனைத்திற்கும் ஜீவசக்தியை அளிக்கும் வல்லமை கொண்டவர்களாக இத்தல இறைவனும், இறைவியும் திகழ்கிறார்கள்.
மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில் 4-வதாக வழிபட வேண்டிய ஆலயம் இது. இங்குள்ள இறைவன்- விருபாட்சீஸ்வரர், இறைவி- விசாலாட்சி அம்மன். இந்த ஆலயத்தில் அம்மன் சன்னிதி முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
பைரவர், சூரியனார் சன்னிதிகள், அம்பாள் சன்னிதி அருகிலேயே அமைந்துள்ளன. இந்த ஆலயத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்தபோது, அவருக்கு நடராஜர் தரிசனத்தை இறைவனை காட்டியருளி இருக்கிறார்.
உலக உயிர்கள் அனைத்திற்கும் ஜீவசக்தியை அளிக்கும் வல்லமை கொண்டவர்களாக இத்தல இறைவனும், இறைவியும் திகழ்கிறார்கள். இந்தக் கோவிலில் வழிபாடு செய்தால், ஆத்ம பலம் அதிகரிக்கும்.

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் கோவிலில் அம்மை நோய் நீங்க, தரப்படும் சங்கு தீர்த்தம் அருமருந்தாக விளங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
சென்னை மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பில் கடும்பாடி சின்னம்மன் கோவில் உள்ளது.
இந்த அம்மனுக்கு உப்பு வாங்கி செலுத்துவதாக பிரார்த்தித்துக் கொண்டால், சரும நோய்கள் நீங்குமாம்.
மேலும் அம்மை நோய் நீங்க, கருவறையில் தரப்படும் சங்கு தீர்த்தம் அருமருந்தாக விளங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி அன்று நாம் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
வைகாசி மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி ” மோகினி ஏகாதசி” எனப்படுகிறது. திரிஷ்டிமான் என்கிற மன்னன் அரச குலத்தில் பிறந்து அரச போகங்களை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக இருந்தான். அப்படிப்பட்ட மன்னன் திரிஷ்டிமான் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, வைகாசி வளர்பிறை ஏகாதசி விரதமிருந்து வாழ்வின் மாயையாகிய சுக அனுபவித்திலிருந்து மீண்டு பெருமாளின் பூரண அருளை பெற்றான். வாழ்வில் நீங்கள் விரும்பியவற்றை பெற வைகாசி ஏகாதசி விரதம் இருப்பது நல்லது.
இந்த வைகாசி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் ஊறவைத்த தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.
அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபடுவார்கள்.
உடல் சோர்வு நீங்கும். இவ்விரதம் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும் நிலை தீரும். உடலில் ரத்த சோகை ஏற்பட்டு இருப்பவர்களுக்கு அக்குறைபாடு நீங்கும். உங்கள் எதிர்கால வாழ்விற்காக நீங்கள் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் அனைத்தும் பெருமாளின் அருளால் சிறப்பான வெற்றிகளை பெறும்.

புதுவை காந்திவீதி வரதராஜபெருமாள் கோவிலில் தன்வந்திரி ஹோமம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா எனும் கொடிய தொற்று உலகம் முழுவதும் பரவி மனிதர்களை கொன்று குவித்து வருகிறது. புதுவையிலும் கொரோனாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றில் இருந்து மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ வேண்டி புதுவை காந்திவீதி வரதராஜபெருமாள் கோவிலில் தன்வந்திரி ஹோமம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை இந்த ஹோமம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.