என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வெட்டவெளியில் நிறுத்தப்பட்டு இருந்த கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேருக்கு மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் சாரங்கபாணி கோவில்அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இந்தகோவில் போற்றப்படுகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாக கருதப்படும் பெருமையுடைய இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

    கும்பகோணத்தில் உள்ள வைணவ கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும். இந்த கோவிலுக்காக பெரிய தேர், சிறிய தேர் என 2 தேர்கள் உள்ளன. இதில் பெரிய தேருக்கு சித்திரை மாதமும், சிறிய தேருக்கு தை மாதமும் தேரோட்டம் நடைபெறும். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று பெரிய தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதை யொட்டி கடந்த மார்ச் 29-ந் தேதி முதல் தேர் பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டது. பின்னர் தேரின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடைபெற இருந்த தேரோட்டம் நிறுத்தப்பட்டு இந்த ஆண்டு நடைபெறுவது குறித்து பக்தர்கள் மிகுந்த மகழ்ச்சியில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்ததால் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் ரத்தானது. இதனால் தேர் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

    தேரோட்டம் நடக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மழையில் நனையாமலும்,, வெயிலில் காயாமலும் பாதுகாக்கும் வகையில் தனியார் வங்கி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கூரை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.தேரோட்டத்திற்காக கடந்த மார்ச் மாதம் மேற்கூரை பிரிக்கப்பட்டு 2 மாதங்களாக தேர் வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் தேரில் உள்ள மரச்சிற்பங்கள் வீணாவதைக்கண்டு பக்தர்கள் மிகவும் வேதனையடைந்தனர். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உடனே முன்பிருந்ததைபோல மீண்டும் மேற்கூரை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி ‘தினத்தந்தி’யில் வெளியானது.

    இதனையடுத்து தற்போது கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேருக்கு மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கோவில் நிர்வாகத்திற்கும் இது தொடர்பாக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
    படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்கள். இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீதத்தாத்ரேயர் அவதாரம்.
    கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக அவதரித்ததே ஸ்ரீதத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்கள். இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம்.

    மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார்.

    கற்பின் மேன்மை அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. விருப்பம். குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளுக்குக் குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் சொன்னார்கள்.

    எப்படியும் இதில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி யாசகம் கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான் அதை ஏற்போம்’’ என்றனர். அதைக் கேட்டு, அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதை எனும் குணத்தின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு.

    கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, ‘‘நான், என் கணவருக்குச் செய்யும் பணிவிடை சத்தியம் எனில், இந்த் துறவிகள் குழந்தைகளாகட்டும்’’ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளானார்கள். தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.

    தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்றார் அத்திரி மகரிஷி.

    உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி மறைந்தனர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்திரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறார்!

    தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் குரு மூர்த்தி என்றாலே அது தத்தரைக் குறிக்கிறது. பிரயாகையில் இவருக்கு கோயில் அமைந்துள்ளது.

    கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்கின்றனர் பக்தர்கள்! இவரை முறையாக உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும். மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை!
    சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை என்றும் சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை அல்ல என்றும் சொல்லப்பட்டு உள்ளது. எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது என்பதை அறிந்துகொள்வோம்.
    மலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.

    ஆனால், இப்படி நாம் அர்ப்பணிக்கும் மலர்களில்கூட சில நியதிகள் உள்ளன. சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை என்றும் சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை அல்ல என்றும் சொல்லப்பட்டு உள்ளது. காலம்காலமாக நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது என்பதை அறிந்துகொள்வோம்.

    விநாயகர்: பொதுவாக விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் சதுர்த்தியில் மட்டும் விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யும் வழக்கம் உண்டு.

    விஷ்ணு: விஷ்ணுவுக்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது.

    சிவன்: சிவபெருமானை தாழம்பூவினால் அர்ச்சிக்கக் கூடாது. ஆனால் சிவராத்திரி தினத்தில் சிவனாருக்கு தாழம்பூவும் அணிவிப்பது உண்டு.

    அம்பிகை: அம்பிகையை அறுகம்புல்லினால் அர்ச்சிக்கக் கூடாது.

    லட்சுமி: லட்சுமிக்குத் தும்பைப் பூவினால் அர்ச்சனை செய்யக்கூடாது.

    துர்கை: துர்கைக்கு அறுகம்புல்லால் அர்ச்சிக்கக் கூடாது.

    சூரியன்: சூரியனுக்கு வில்வத்தால் அர்ச்சிக்கக் கூடாது.

    சரஸ்வதி: சரஸ்வதிக்கு பவள புஷ்பத்தால் அர்ச்சிக்கக் கூடாது.

    பைரவர்: பைரவருக்கு மல்லிகையால் அர்ச்சிக்கக் கூடாது.
    உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோவில்களுக்கும் தலைமை பீடம், சமயபுரம் தான். சமயபுரம் மாரியம்மனின் சிறப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    மார்க்கண்டேயரை எமனிடமிருந்து காப்பாற்ற, ஈசன் கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை அழித்தார். இதனால் உலகில் பிறப்பு- இறப்பு நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. எமதர்மனின் சபையில் நோய்களின் அதிபதியாக இருந்த மாயாசூரன் என்பவன், பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான். அவனோடு அவனது சகோதரர்களும் சேர்ந்து மக்களை வாட்டி வதைத்தனர்.

    இதனைக்கண்ட ஈசன் பார்வதி தேவியைப் பார்க்க, பார்வதி தேவி தன் அம்சமாக மாரியம்மனை தோற்றுவித்து, மாயாசூரனை வதம் செய்ய அனுப்பிவைத்தாள். மாரியம்மன் மாயாசூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்கள் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றினாள்.

    பின்னர் ஈசனின் அருளுடன் தனது சகோதரர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘வைஷ்ணவி’ என்ற பெயரில் அமர்ந்தாள். பின்னர் இப்போதுள்ள சமயபுரத்தில் வந்தமர்ந்து மாரியம்மனாக அருள்பாலிக்கிறார்.

    உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோவில்களுக்கும் தலைமை பீடம், சமயபுரம் தான். இன்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து சீர்வரிசைகள் வருகின்றன. அதுபோல மாசியில் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது, சமயபுரத்தில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூவே பயன்படுத்தப்படுகிறது.

    அதுபோல சித்திரை தேரோட்டத்தின் போது சமயபுரம் மாரியம்மனுக்கான சீர்வரிசைகள், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இருந்து வருகிறதாம். சமயபுரத்தாளின் பேரழகு ததும்பும் அந்த செந்தூர முகத்தை கண்டாலே நம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

    ஆலயக் கருவறையில் சமயபுரம் மாரியம்மனின் வலது திருப்பாதம், மாயாசூரனின் தலைமீது பதிந்துள்ளதைக் காணலாம். மாரியம்மன் தனது எட்டுக் கரங்களில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் மாயாசூரனின் தலைமீது பதித்துள்ளாள்.

    இங்கு இரண்டு தீர்த்த குளங்கள் உண்டு. ஒன்று பெருவளை வாய்க்கால் தீர்த்தம், மற்றொன்று மாரி தீர்த்தம். இத்தல அம்மன் சிவரூபமாக அறியப்படுவதால், விபூதியே பிரசாதமாக தரப்படுகிறது. வேப்ப மரம்தான் இங்கு தல விருட்சம். உற்சவர் அம்மனின் திருநாமம் ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்பதாகும். கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் இத்தலத்தை காவல் புரிகிறார். இந்த கோவிலில் மூன்று விநாயகர்கள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக ஒரே கருவறையில் அருள்பாலிக்கின்றனர். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும்.

    இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று தேரோட்டம் நடைபெறும். அப்போது அடியவர்கள் அலகு குத்தி, மொட்டையடித்து, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து, அங்க பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்தில் இருந்து திருவானைக்காவல் வழியாக 15 கி.மீ. தொலைவில் சமயபுரம் அமைந்துள்ளது.
    வெற்றிலையை 12 ராசிகளுக்கேற்ப பயன்படுத்தி நம் துன்பங்களிிலிருந்து விடுபடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?..இதோ தெரிந்து அதன்படி செய்து துன்பங்களில் இருந்து விடுபடலாமே.
    வெற்றிலையை சுபகாரியங்களுக்கும் , நாம் உணவிற்குபின் போட்டு்க் கொள்வதற்கும்..மருந்துகளுக்கு மட்டுமே நாம்பயன்படுத்துவது அனைவருக்கும் தெரிந்தது.  ஆனால் நமது ராசிகளுக்கேற்ப அதனை பயன்படுத்தி நம் துன்பங்களிிலிருந்து விடுபடலாம் என்பது தெரியுமா..இதோ தெரிந்து அதன்படி செய்துதுன்பங்களில் இருந்து விடுபடலாமே.

    மேஷம்:
    வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துனபங்கள் அகலும்.

    ரிஷபம்:
    வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

    மிதுனம்:
    வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

    கடகம்:
    வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்

    சிம்மம்:
    வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.

    கன்னி:
    வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

    துலாம்:
    வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

    விருச்சிகம்:
    வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.

    தனுசு:
    வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
    மகரம்:
    வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

    கும்பம்:
    வெற்றிலையில் நெய் வைத்து சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

    மீனம்:
    வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.
    இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுகிறார்கள். இதனால் தான் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்லும் வழக்கம் வந்தது.
    ஆலயம் என்பதை படுத்திருக்கும் ஒரு மனிதனின் உடலாக எண்ணிக் கொள்ளவேண்டும். மனிதனின் தலை, கழுத்து, மார்பு, தொப்புள், கால்கள், பாதங்கள் இப்படியாக கோயிலின் கர்ப்பக்கிரகம் முதல் ராஜகோபுரம் வரை உள்ளன.

    கருவறை விமானம் தலை, அர்த்தமண்டபம் கழுத்து, மகாமண்டபம் மார்பு, இங்கு தான் இதயதுடிப்பு இருப்பது போல நடராஜர் நடனமாடும் சந்நிதி அமைக்கப்படும். தொப்புள் கொடிமரம். ராஜகோபுரம் பாதங்கள். இப்படி இறைத்திருமேனியாக இருக்கும் கோயிலில் கருவறையின் மேலே விமானம் உள்ளது. "மானம்' என்றால் "அளவு',"வி' என்றால் "கடந்தது'. "அளவு கடந்த தெய்வீக சக்தி கொண்டது விமானம்.

    கோபுரம் என்பதை"கோ+புரம்' என்று பிரிக்க வேண்டும். "கோ' என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்'. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுகிறார்கள். இதனால் தான் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்லும் வழக்கம் வந்தது.
    பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
    * சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோயில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

    * திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

    * ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன்-திருமால் கோயில் இதுமட்டும்தான்.

    * திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவரும் வேதநாராயணன் என்று பெயர்.

    * காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019ம் ஆண்டு கிடைக்கும்.

    * திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.

    * கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழுதலைகள் இருப்பது வித்தியாசமானது.

    * திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாக்கு சன்னதி இல்லை.

    * பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

    * காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

    * கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

    ‍* மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.

    * காஞ்சி உலகளந்தபெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.
    இந்த உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், விரதம் என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில் விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல்.
    ‘விரதம்’ என்பதற்கு ‘உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல்’ என்று பொருள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், விரதம் என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில் விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். இந்து சமயத்தில் உள்ள சில விரதங்களை பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.

    பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திர நாளும், பவுர்ணமியும் இணையும் நாளே ‘பங்குனி உத்திரம்.’ இந்த நாளில் சிவபெருமானின் திருமண வடிவமாக கருதப்படும் கல்யாண சுந்தரமூர்த்தியை வழிபட வேண்டும்.

    விரதமுறை:- பகல் முழுவதும் இறைவனை நினைத்தும் விரதம் இருந்து, இரவில் சாப்பிடலாம்.

    பலன்:- நல்ல வாழ்க்கைத்துணை அமைவதற்கு, இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
    பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள். மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள்.
    1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

    2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

    3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

    4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

    5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

    6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

    7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மைஉள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

    8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

    9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

    10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

    11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

    12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

    மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்,
    திருப்பதியில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இன்று நடந்த ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப் படாமல் ஏகாந்தமாக நடந்தது.
    திருப்பதி மலையில் தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் உறுதியாக கூறிவரும் நிலையில், இன்று திருப்பதியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    தேவஸ்தான பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இன்று ஆஞ்சநேயரின் அவதாரத் திருநாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மலையில் ஆஞ்சநேயரின் அவதாரத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருப்பதி மலையில் தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என்று கடந்த ராம நவமி அன்று தேவஸ்தான சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா திருப்பதியில் மிகவும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்று தொடங்கி 8-ந் தேதி வரை 5 நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இன்று காலை ஆஞ்சநேயர் அவதரித்த குகையில் பால ஆஞ்சநேயர், ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனா தேவி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் பேடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.

    மேலும் திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வழியில் இருக்கும் 7-வது மைல் ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அதை தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் உள்ள நாத நீராஞ்சனம் மண்டபத்தில் ஆஞ்சநேயர் தொடர்பான பல்வேறு கருத்தரங்குகள் நடந்தது.

    இந்த கருத்தரங்கு 5 நாட்கள் நடக்கிறது.

    இன்று நடந்த ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப் படாமல் ஏகாந்தமாக நடந்தது.
    வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 6.15க்குள்ளும்,மதியம் 1 மணி முதல் 1.15க்குள்ளும், இரவு 8 மணி முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.
    நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும் போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு,அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர், உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.

    வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 6.15க்குள்ளும்,மதியம் 1 மணி முதல் 1.15க்குள்ளும், இரவு 8 மணி முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும். இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,செல்வச் செழிப்பு அதிகரிக்கும். கல் உப்புதான் மகாலட்சுமியின் அம்சமாகும்.

    எந்த வீட்டினுள் நுழைந்ததும், துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ, நறுமணம் கமழுகிறதோ,அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.

    எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்றதோ,வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி விடப்படுகிறதோ, பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ, அங்கெல்லாம் செல்வம் குவியும்.

    எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள் பேசப்படாமலிருக்குமோ, எங்கெல்லாம் விட்டுக்கொடுத்தலும், இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

    ஒரு வீட்டில் ருத்ராட்சம் இருந்தாலே அங்கே பேய் பிசாசு,பில்லி சூனியம் வேலை செய்யாது.

    யார் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று அம்மனின் அருட் பிரசாதமான எலுமிச்சை பழம் அல்லது மஞ்சள் காப்பு அல்லது குங்குமம் அல்லது இவை அனைத்தும் வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் நிரம்புமோ அங்கே நிம்மதியும்,செல்வச் செழிப்பும் நிரம்பிக் கொண்டே இருக்கும்.
    பணப்பிரச்சனை, வீட்டில் பிரச்சனை, எதிரிகளால் தொல்லை போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அனுமன் கவசத்தை படித்து வந்தால் வழி பிறக்கும்.
    ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
    ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

    ஆஞ்சநேயம் அஞ்சனா புத்ரம்
    ராம நாம ரஸானுபம் ராமதூதம்
    லங்க தகனம் ராவண கர்வபங்கம்
    வாக் சாதுர்யம் வானர ச்ரேஷ்டம்
    வீர ப்ராதம் வினாயகரம்
    வாயுஸீனும் வாதாத்மஜம்
    ஆயுர் ஆரோக்ய ஸமன்விதம்
    ஆத்மானந்த ராமரஹிதம்
    மாருதிம் மனஸா ஸ்மராமி

    அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற.
    நெஞ்சினில் வரும் பலம்
    வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால்
    வல்வினை தீரும் நிஜம்

    சீரஞ்சீவி அனுமன் என் சிரசினை காக்க
    ஸ்ரீ ராம பக்தன் என் சீர் சடை காக்க
    நெறி மேவி நின்றவன் என் நெற்றியை காக்க
    புவியினில் நீண்டவன் என் புருவங்கள் காக்க
    இமயத்தில் நிற்பவன் என் இமைகளைக் காக்க
    சமயத்தில் வந்தெனை சடுதியாய் காக்க
    வீரத்தின் வீரன் என் விழிகளை காக்க
    வீசிடும் காற்றோன் என் விழி மூடி காக்க
    நாரணப் பிரியன் என் நாசியை காக்க
    காரணப் பொருளே என் காலமே காக்க
    முழுஞானம் கொண்டவன் என் மூக்கினை காக்க
    முன்நின்ற வானரன் என் வாயினை காக்க
    வெற்றிலை பிரியன் என் வெற்றியை காக்க
    பற்றியே வந்தெனை பற்றுடன் காக்க
    பல் நலம் கொண்டவன் என் பற்களைக் காக்க
    நல் மனம் கொண்டவன் என் நாவினைக் காக்க
    நாடியே வந்தவன் என் நாடியை காக்க
    தேடியே வந்தென்னை தேவனே காக்க
    கரிமலை கடந்தவன் என் கன்னங்கள் காக்க
    கடுகதியில் வந்தென் கழுத்தினை காக்க
    கையிலையின் வாசன் என் கைகால்கள் காக்க
    கதிரொளியாய் வந்து கருணையாய்க் காக்க
    நல்லன செய்பவன் என் நகங்களைக் காக்க
    அல்லனதீர்ப்பவன் என் அகம் தனை காக்க
    நெடு மேனியானவன் என் நெஞ்சினைக் காக்க
    சுடுமேனி யாய் வந்த சூட்சுமம் காக்க
    இடுக்கண் கழைபன் என் இடுப்பினை காக்க
    இரு கண்ணின் மணிகளை இருட்டிலும் காக்க
    தோழமை கொண்டவன் என் தோழ்களை காக்க
    தோன்றிய புகழவன் என் தோலினைக் காக்க
    குரங்கினத் தவைவன் என் குறியினைக் காக்க
    குருவாகி வந்து என் குருதியை காக்க
    திசையெலாம் திரிந்தவன் என் தசையினை காக்க
    விசையெனப் பாய்ந்து என் செவிகளை காக்க
    நடுவாகி நின்று என் முதுகினை காக்க
    நவின்றிடும் தேவன் என் நரம்புகள் காக்க
    ஒன்பது வாசலை ஓப்பிலா காக்க
    புண்படா வண்ணமே புவனமே காக்க
    இளமையும் முதுமையும் இனியவா காக்க
    இரவிலும் பகலிலும் என்றும் நீ காக்க
    உலகத்தின் நாயகன் என் உயிரினைக் காக்க
    கலகத்தில் இருந்தென்னை கதி தந்து காக்க
    நிலையற்ற வாழ்வினில் நிமலனார் காக்க
    சிலையற் இருந்தென்னை சீலனார் காக்க
    இராமனின் பக்தன் என் இதயத்தை காக்க
    சுக்ரீவன் தோழன் என் சுவாசத்தை காக்க
    உடல் உள்ளம் என்றுமே உறுதியாய் காக்க
    கடல்தாண்டி வந்தவன் என் குடல்களைக் காக்க
    வளமிக்க வாழ்வினை வளத்துடன் காக்க
    வாழையடி வாழையாய் வாழ்திடக் காக்க
    எம்மை எந்நாளும் உன் நிழலினில் காக்க
    இம்மையிலும் மறுமையிலும் ஈடிலா காக்க
    நோய் நொடிகள் வாராமல் நொடியினில் காக்க
    தாய் மடியில் தவழ்ந்தயென் மேனியை காக்க
    நவகோளின் தோசங்கள் நீக்கி நீ காக்க
    தவக்கோலம் கொண்டவன் தரணியை காக்க
    தீராத நோய்களைத் தீர்த்து நீ காக்க
    வாராத செல்வங்கள் வந்திடக் காக்க
    ஈரேழு புவனத்து உறவுகள் காக்க
    பாராளும் மன்னர்கள் நட்புகொள் காக்க
    பஞ்சபூதங்கள் எனை பகைக்காது காக்க
    வஞ்சங்கள் இல்லாது மனம் தனை காக்க
    பில்லி பேய் சூன்யங்கள் அணுகாது காக்க
    பிள்ளை என்றன்பாய் பிரியமாய் காக்க
    அரக்கர்கள் பூதங்கள் அண்டாமல் காக்க
    இரக்கமறு மாந்தர்கள் பகை இன்றி காக்க
    சிறை சென்று வாடாமல் சீருடன் காக்க
    மறையெலாம் போற்றும் உன் பொன்னடிகள் காக்க
    இல்லாமை நீக்கி எனை இறைவா நீ காக்க
    நில்லாத பசி எனை அண்டாது காக்க
    கடன் தொல்லை தீர்த்தெனை கருணையே காக்க
    கலியுகக் கொடுமைகள் கழிந்திடக் காக்க
    செய்தொழில் கருமங்கள் செய்வதை காக்க
    மெய் வருந்தாமல் எனை மேன்மையாய்க் காக்க
    புலத்திலும் நிலத்திலும் புகழனார் காக்க
    தலத்திலே வந்து உன் தனையனை காக்க
    கொடுவிச யந்துக்கள் கொட்டாது காக்க
    கொடுமைகொள் நுண்ணுயிர் வாட்டாது காக்க
    வானமும் வையமும் வளம் பெறக் காக்க
    தானமும் தர்மமும் தழைத்திடக் காக்க
    நல்லோர்கள் உறவுகள் நலிவின்றி காக்க
    வல்லோரும் எனை கண்டு வணங்கிட காக்க
    கனவிலும் நனவிலும் கருத்துடன் காக்க உன்
    நினைவுகள் நீங்காது நிலைபெறக் காக்க
    மானத்தில் பங்கங்கள் நேராது காக்க
    ஊனத்தில் துவண்டிங்கு வாடாது காக்க
    நீள் ஆயுள் நிறைசெல்வம் தந்தெனை காக்க
    வால் கொண்ட மணியினால் வந்தென்னை காக்க
    மரணத்தின் வாசலில் மாருதி காக்க
    சரணத்தை தந்தெனை மரணத்தில் காக்க
    பிறவிப் பிணியதை தீர்த்து நீ காக்க
    பிறவாமை தந்தெனை பிரியாமல் காக்க
    முனிவரும் தேவரும் எனக் அருள் செய்ய
    பனிதரும் திங்களின் மூலனே காக்க
    இனிவருங் காலங்கள் இனித்திட காக்க
    பிணிவருந்தாமல் என் துணிவினை காக்க
    பார்க்க நீ பார்க்க பாவங்கள் போக்க
    தீர்க்க நீ தீர்க்க தீ வினைகள் தீர்க்க
    வார்க்க நீ வார்க்க உன் அருளினை வார்க்க
    காக்க நீ காக்க உன்கதி தந்து காக்க
    ஆஞ்சநேயனே காக்க வாயுதேவனே காக்க
    வீர அனுமனே காக்க ராம பக்தனே காக்க
    ஸ்ரீ ராம பக்தனே காக்க காக்க.
    ×