என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கிழக்குத் திசையை நோக்கி அல்லது வடக்குத் திசையை நோக்கித் தியானம், பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    இவற்றுக்குச் சாஸ்திரப் பிரமாணங்கள் உண்டு. மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேர் கிழக்குத் திசையை நோக்கித்தான் இருந்தது. அவனுக்கு வெற்றியும் கிடைத்தது. ரிஷிகள் பலர் வடக்குத் திசையை நோக்கித் தவம் இருந்தார்கள் என்று நாம் படித்திருக்கிறோம். இமயமலை வடக்கில் உள்ளது.

    எண்ணற்ற முனிவர்கள் தவம் செய்த இமயமலை இருக்கும் திசையை நோக்கித் தவம் செய்தால், அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்றும் கொள்ளலாம். சூரிய பகவான் நாள்தோறும் கண்கண்ட தெய்வமாகக் கிழக்கில் உதித்து நம்மை தட்டி எழுப்பி, நம்முடைய எல்லாச் செயல்களுக்கும் ஒளி தந்து வழி காட்டுகிறார். ஆதலால் கிழக்குத் திசையை நோக்கிய வழிபாடு சிறந்தது என்று ஆயிற்று. இதற்குச் சாஸ்திரப் பிரமாணமும் உண்டு. நடுப்பகலில் வடக்கும் தியானத்திற்கு உரியது.

    மாலையில் மேற்கும் உரியது. தெற்குத்திக்கில் யமலோகம் என்று சாஸ்திரம் கூறியதால், அது சுப காரியங்களுக்கும், தெய்வ வழி பாட்டுக்கும் உரியதாகக் கொள்ளப்படவில்லை. இந்த நடை முறைகளெல்லாம் சாதாரண மக்களுக்குதான், ஞானிகளுக்கு இல்லை. திசை பற்றிய இந்த நியமம் தெய்வத்திற்கும் இல்லை. மயிலாப்பூரில் கற்பகாம்பாள் தெற்கு நோக்கி இருக்கிறாள். தட்சிணாமூர்த்தி எல்லா இடங்களிலும் தெற்கு நோக்கித்தான் இருக்கிறார். ராமகிருஷ்ணர் வழிபட்ட பவதாரிணியும் தெற்கு நோக்கியே இருக்கிறாள்.
    அனுமன் ராமாயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர். வேகத்தில் தந்தை வாயுவுக்கு சமமான அனுமன், புத்திக்கூர்மை, தைரியம், பராக்கிரமம், சக்தி, தேஜஸ் போன்றவற்றில் ராமனுக்கு நிகரானவர்.
    ராம தூதரான ஆஞ்சநேயருக்கு பல பெயர்கள் உண்டு. வாயுபுத்திரன், கேசரி மைந்தன், மாருதி, அனுமன், சொல்லின் செல்வன், சுந்தரன் என பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார். அனுமன் ராமாயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர். பல சாகசச் செயல்களைச் செய்து காட்டியவர். சீதையைத் தேடி கண்டுபிடிக்க கடலைத் தாண்டியவர். வாலியிடம் இருந்து சுக்ரீவனைக் காத்தவர். ராவணனின் மகன்களைக் கொன்றவர். இலங்காபுரியை தீக்கிரையாக்கியவர்.ராமர் கொடுத்த மோதிரத்தை சீதையிடமும், சீதை கொடுத்த சூடாமணியை ராமனிடமும் கொடுத்து அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை படரச் செய்தவர்.

    வேகத்தில் தந்தை வாயுவுக்கு சமமான அனுமன், புத்திக்கூர்மை, தைரியம், பராக்கிரமம், சக்தி, தேஜஸ் போன்றவற்றில் ராமனுக்கு நிகரானவர். இந்திரஜித் எய்த நாகபாணத்தால், மூர்ச்சையாகி விழுந்த லட்சுமணனைக் காப்பாற்ற, சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து, தனது உள்ளங்கையில் தாங்கியபடி வந்தவர். மகாபாரதப் போரில், அர்ச்சுனனின் தேர் கொடியில் இருந்து, அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர் அனுமன். ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் சீதைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே விஸ்வரூபம் பீமனுக்கு பயத்தைக் கொடுத்தது.

    பொதுவாக பல இடங்களில் ஆஞ்சநேயர் இடது கையால் சஞ்சீவி மலையையும், வலது கையால் கதையையும் தாங்கியபடி இடுப்பில் சிவந்த ஆடையை உடுத்திக்கொண்டும், மார்பில் மணிமாலையை அணிந்தபடியும், இதயத்தில் ஸ்ரீராமரின் சரணங்களையும், வாக்கில் ஸ்ரீராம நாமத்தையும் தரித்துக் கொண்டு, பக்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் தோற்றத்தில் காணப்படுகிறார்.
    ஏழுமலையான் கோவிலில் சஹஸ்ர தீப அலங்கார சேவை முடிந்ததும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தனர்.
    திருப்பதி ஏழுமலையானுக்கு பல்வேறு கைங்கர்யம் செய்தவர் தறிகொண்டா வெங்கமாம்பா. அவர், திருமலைக்கு வந்து முதல் முதலில் பக்தர்களுக்கு அன்னதானத் திட்டத்தை தொடங்கி நடத்தியவர். அவர், திருமலையில் வடக்கு மாடவீதியில் வீடு கட்டி வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவரின் வீடு கல் மண்டபமாக அழைக்கப்படுகிறது. அவரை போற்றும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் தறிகொண்டா ெவங்கமாம்பா ஜெயந்தி விழா, நினைவுநாள் ஆகியவற்றை கடைப்பிடித்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு தறிகொண்டா வெங்கமாம்பாவின் ஜெயந்தி விழா திருமலையில் 5 நாட்கள் நடந்தது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று மாலை ஏழுமலையான் கோவிலில் சஹஸ்ர தீப அலங்கார சேவை முடிந்ததும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தனர்.

    அப்போது தறிகொண்டா வெங்கமாம்பா வசித்த வீட்டின் கல் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு, உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள், ஆஸ்தானம் நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    சிலுவை என்றாலே சாட்டையடி, சுத்தில், ஆணி மற்றும் தொங்கவிடப்படுகின்ற மரம் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும். அதைதான் ஆண்டவர் தன்னுடைய சீடர்களுக்கு நிபந்தனையாய் வைக்கிறார்.
    ஆண்டவர் ஏசு தன்னை பின்பற்ற விரும்புகிறவர்களுக்கு ஒரு நிபந்தனையை வைக்கிறார். சீடராய் வாழ விரும்புகிறவர் தன்னலம் துறக்க வேண்டும், சிலுவையை சுமக்க வேண்டும். அவர் அனைவரையும் நோக்கி, “ என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னை பின்பற்றட்டும்“ (லூக் 9:23) இன்று சிலுவை என்பது நமக்கு மீட்பின் சின்னம், வாழ்வின் பாதை, ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவர் ஏசு கூறியபோது, அது அவமானத்தின் சின்னம். சிலுவை என்று அவர் கூறியவுடன் அவர்கள் எண்ணத்தில் மரண வலிகளுடன் கூடிய சாவு, பொது வெளியில் நிர்வாணமாக்கப்பட்டு நடத்தப்படுதல், மற்றும் அவமானங்களும் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும்.

    யாரும் விரும்பக்கூடிய ஒரு அடையாளம் அல்ல. அவர்களால் நம்மைப்போல் ஒரு ஆன்மிக பார்வையில் சிலுவையை பார்த்திருக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை சிலுவை ரோமானியர்கள் அடிமைப்படுத்திய நாட்டு மக்களை அடக்க பயன்படுத்திய ஒரு அடக்குமுறை கருவி. ஆதிக்க சமூகத்தின் ஆணவத்தை காட்டும் கருவி, ஒரு கொடூரனின் கையில் இருந்த கொடிய ஆயுதம்.

    சிலுவை என்றாலே சாட்டையடி, சுத்தில், ஆணி மற்றும் தொங்கவிடப்படுகின்ற மரம் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும். அதைதான் ஆண்டவர் தன்னுடைய சீடர்களுக்கு நிபந்தனையாய் வைக்கிறார். அது ஒரு பயங்கரமான நிபந்தனை. ஆணவத்தை, கயமையை, அநியாயத்தை, சுயநலத்தை வெளிப்படுத்தும் கருவியாக இருந்த அந்த சிலுவையில் அவற்றை எல்லாம் அறைந்துவிட்டு தாழ்ச்சியுடன் என்னை பின்பற்றுங்கள் என்கிறார்.

    இன்று நம்முடைய வாழ்க்கை நம்முடைய ஆணவம், நம்முடைய தேவைகள், நம்முடைய திட்டம் மற்றும் நம்முடைய விருப்பு வெறுப்புகளை சுற்றியே சுழன்று கொண்டுள்ளது. அவைகளை சிலுவையில் அறையவேண்டும். ஆண்டவர் ஏசுவின் வழியில் உலக மீட்புக்கான சிலுவையை சுமக்க வேண்டும். அங்கு பிறர் அன்பு, மன்னிப்பு, அமைதி மற்றும் தாழ்ச்சி நம்முடன் நடைபோட வேண்டும். அதுதான் ஏசுவின் சீடராய் இருப்பதன் பெருமை.
    திருப்பதி மலையில் தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் உறுதியாக கூறிவரும் நிலையில், இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு 5 நாட்கள் திருப்பதி மலையில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
    திருமலையில் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:

    திருமலையில் உள்ள ஆகாசகங்கையில் அமைந்திருக்கும் குகையில் தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என பல்வேறு புராணங்களின் அடிப்படையில் தேவஸ்தானம் அமைத்த ஆஞ்சநேயரின் பிறப்பிடம் தொடர்பான ஆய்வுக் குழுவினர் உறுதிபட கூறியுள்ளனர்.

    12 புராணங்களில் ஆஞ்சநேயர் திருமலையில் அவதரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்த இடத்தின் பெயரையும் ஆஞ்சநேயர் அவதரித்த இடம் என்று புராணங்களில் கூறப்பட வில்லை. எனவே ஆஞ்சநேயரின் அவதார திருத்தலம் பற்றிய கருத்து வேறுபாடுகளுக்கு இடமே கிடையாது.

    இந்த நிலையில் தேவஸ்தான பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இன்று வெள்ளக்கிழமை ஆஞ்சநேயரின் அவதாரத் திருநாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மலையில் ஆஞ்சநேயரின் அவதாரத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு இன்று தொடங்கி வரும் 8ந் தேதி வரை ஆஞ்சநேயரின் அவதார திருநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இன்று ஆஞ்சநேயர் அவதரித்த குகையில் பால ஆஞ்சநேயர், ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனா தேவி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.அதேபோல் ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் பேடி ஆஞ்சநேயர், திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வழியில் இருக்கும் 7வது மைல் ஆஞ்சநேயர் ஆகிய ஆஞ்சநேயர்களுக்கும் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருக்கும் நாத நீராஞ்சனம் மண்டபத்தில் வரும் 5 நாட்களும் ஆஞ்சநேயர் தொடர்பான பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    சிவபெருமான் உமையவளுக்கு தனது திருமேனியின் இடப்பாகத்தில் இடம் கொடுத்ததால், இத்தலத்தின் கருவறையில் ஈசன் சிவலிங்க வடிவமாக இருந்தாலும், அரூப வடிவில் அன்னை உமையவளும் உடன் இருப்பதாக ஐதீகம்.
    சுவாமி : திருநெடுங்களநாதர்.

    அம்பாள் : மங்களாம்பிகை.

    தீர்த்தம் : அகத்தியர் தீர்த்தம்.

    தலவிருட்சம் : வில்வம் மரம்.

    தல வரலாறு:

    மங்களநாயகி அம்பாள் இத்தல ஈசனின் ஒப்பிலா நாயகி ஆவாள். நான்கு திருக்கரங்களுடன் தெற்கு பார்த்த வண்ணம் நின்ற எழிற்கோலத்தில் அருள் புரிகிறாள். மங்களநாயகி அம்மனை, தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் நெய்தீபம் ஏற்றி, 9 உதிரி எலுமிச்சைப் பழங்களை வைத்து வழிபட்டால் காரியத் தடைகள், உடற்பிணிகள், வறுமை நிலை யாவும் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    சிவபெருமான் உமையவளுக்கு தனது திருமேனியின் இடப்பாகத்தில் இடம் கொடுத்ததால், இத்தலத்தின் கருவறையில் ஈசன் சிவலிங்க வடிவமாக இருந்தாலும், அரூப வடிவில் அன்னை உமையவளும் உடன் இருப்பதாக ஐதீகம். இதனால் கருவறையின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. இவ்வாலய கருவறை இரட்டை விமான அமைப்பு, அப்படியே காசி விஸ்வநாதர் கோவில் இரட்டை விமான அமைப்பை ஒத்துள்ளது. உள்பிரகாரத்தின் தெற்கே சப்த கன்னியரும், ஐயனாரும், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளும் அருள் பாலிக்கிறார்கள். இத்தல ஐயனாரை பங்குனி உத்திர நாளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு கட்டும் யோகம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இங்கு உள்ள யோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி தொடர்ந்து 5 வாரம் வழிபட்டு வந்தால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்று கூறப்படுகிறது.

    தலச்சிறப்பு:

    “இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது” என்று திருமந்திரம் மூலம் தெரிவிக்கிறார் திருமூலர். அதாவது, முற்பிறவியில் புண்ணியங்கள் செய்தவர்கள் இப்பிறவியில் இன்பம் துய்க்கிறார்கள். முற்பிறவியில் பாவச் செயல்கள் செய்தவர்கள் இப்பிறவியில் துன்பத்தில் துவள்கிறார்கள். துன்பத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று எல்லோரும் நினைத்து, அதற்குரிய வழி தெரியாமல், தவறான வழிமுறைகளைப் பின்பற்றித் துன்பமே அடைகிறார்கள். துன்பம் இல்லாமல் இந்த உலகில் அனுதினமும் இன்பமாக வாழ “திருநெடுங்களம்” ஈசன் நமக்கு திருவருள் புரிகிறார்.

    இதனை தனது திருநெடுங்களம் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் திருஞானசம்பந்தர் “இடர்களையாய் நெடுங்களம் மேயவனே” என வரிக்கு வரி உறுதியுடன் கூறி இருப்பதில் இருந்து அறியலாம். இந்த திருக்கோவிலின் வெளிப்புற மதிலை தாண்டினால் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரத்தை தரிசனம் செய்யலாம். அடுத்தாற் போல் கொடிமரம், பலி பீடம் ஆகியவை உள்ளது. இதனை வழிபட்டு வெளிப்பிரகாரத்தை வலம் வரவேண்டும்.

    அப்போது வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னிதியும் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் வடக்கில் அகத்தியர் சன்னிதியும், எதிரே என்றும் வற்றாத அகத்தியர் தீர்த்தமும் இருக்கிறது. அடுத்து மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து உள்சென்றால் கருவறையில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு பார்த்த வண்ணம் திருநெடுங்களநாதர் அருள் பாலிக்கிறார். அகத்தியர் வழிபட்டு பேறு பெற்ற தலம் இதுவாகும். வந்திய சோழ மன்னனுக்கு ஈசன் பேரழகுடன் காட்சி கொடுத்த காரணத்தால், இத்தல இறைவன் “நித்திய சுந்தரேஸ்வரர்” என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல ஈசனை தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் முகப்பொலிவு கூடும். சகல ஜனவசியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

    முகவரி :

    அருள்மிகு திருநெடுங்களநாதர்,
    நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோவில்,
    திருநெடுங்களம்-620015
    திருச்சி மாவட்டம்.
    Ph: 0431-252 0126.
    கொரோனா தொற்று பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
    கொரோனா தொற்று பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதன் ஒரு பகுதியாக இந்த மாதத்தில் (ஜூன்) தினமும் ரூ.300 தரிசன டிக்கெட் வழங்குவது 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

    வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சுபதம் வழியாக செல்லும் சிறப்பு ஒதுக்கீடு தரிசன பக்தர்கள், உற்சவர் சேவை, ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தா்கள் ஆகியவற்றில் தினமும் 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நேற்று முன்தினம் 7 ஆயிரம் பக்தா்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரவு 9 மணியளவில் மூலவருக்கு ஏகாந்த சேவை முடிந்ததும் கோவிலின் நடை சாத்தப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், கொரோனா ஊரடங்கின்போது இரவு 8.30 மணியளவில் ஏகாந்த சேவை நடந்தது குறிப்பிடத்தக்கது.

    மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் செய்யப்படும், விளக்கு நேர்த்திக்கடன் மிகவும் பிரசித்திப்பெற்றது.
    சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருக்கோஷ்டியூர் திருத்தலம். இங்கு சவுமியநாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் 95-வது திருத்தலம் ஆகும்.

    இத்தல இறைவனான சவுமிய நாராயணருடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இருக்கிறார்கள். மேலும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, இந்திரன் ஆகியோரும் உள்ளனர். திருமாமகள் என்ற பெயரில் தாயாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் சந்தான கிருஷ்ணன் என்ற பெயரில் கிருஷ்ணன் வீற்றிருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

    இந்த ஆலயத்தில் செய்யப்படும், விளக்கு நேர்த்திக்கடன் மிகவும் பிரசித்திப்பெற்றது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி, மூலவரின் முன்பாக வைத்து அதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் வைத்து மூடி, வீட்டின் பூஜை அறையில் வைக்கிறார்கள். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், மாசி தெப்ப திருவிழாவின் போது, இந்த விளக்குடன், மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக்கரையில் ஏற்றிவைத்து வழிபடுகின்றனர். அந்த நேரத்தில் புதியதாக வேண்டுதல் செய்ய வரும் பக்தர்கள், இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

    அமைவிடம்

    காரைக்குடியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருப்பத்தூர் என்ற ஊர். இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருக்கோஷ்டியூரை அடையலாம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் தொடங்கியது. வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    நேற்று முதல் வருகிற 6-ந் தேதி வரை வெளிக்கோடை திருநாளும், 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை உள்கோடை திருநாளும் நடைபெறுகிறது. உள்கோடை நாட்களில் வீணை ஏகாந்த சேவை நடைபெறும். மேலும் வருகிற 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை ஸ்ரீரெங்நாச்சியார் வசந்த உற்சவம் நடைபெறும்.

    வெளிக்கோடை உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை அடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 7 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    ரெங்கநாச்சியார் வசந்த உற்சவம் வருகிற 12-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவ நாட்களில் தாயார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
    குரு பகவான் நிறைவான செல்வங்கள், செய்தொழிலில் முன்னேற்றத்தைத் தருபவர் மட்டுமல்லாமல், குழந்தை பாக்கியம் எனும் மகத்தான பலனை தரக் கூடியவர்.
    குரு பகவான் நிறைவான செல்வங்கள், செய்தொழிலில் முன்னேற்றத்தைத் தருபவர் மட்டுமல்லாமல், குழந்தை பாக்கியம் எனும் மகத்தான பலனை தரக் கூடியவர். குழந்தை பாக்கியம் பெற குரு பகவானுக்குரிய மந்திரத்தை வியாழக்கிழமை தோறும் சொல்லி வர கிடைக்கும் என நம்பப்படுகிறது. குரு பகவான் என்பவர் ஆசிரியராக மட்டுமல்லாமல் நம் உடலுக்கு ஏற்படும் பிரச்சனை, நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்புரிகிறார். குரு மந்திரத்தை வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, தானியங்களை கொண்டு வழிபாடு செய்தால் மிக நல்ல பலன்களை தரும்.

    குரு பகவான் காயத்ரி மந்திரம்:

    வருஷபத் வஜாய வித்மஹே
    க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
    தந்நோ குரு ப்ரசோதயாத்

    குரு சுலோகம் :

    குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

    குரு மந்திரம் :

    தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
    குரும் காஞ்சன ஸந்நிபம்
    புத்தி பூதம் திரிலோகேஸம்
    தம் நமமி பிருகஸ்பதிம்
    மண்டைக்காடு கோவிலில் இன்று காலையில் வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான வழிபாடுகள் செய்யப்பட்டது. மதியம், மாலை, இரவும் வழக்கமான பூஜைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    தினமும் வழக்கமான பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று காலையில் பூஜைகள் நடந்தது. பின்னர் சிறிது நேரத்தில் கோவில் கருவறையில் இருந்து புகை மண்டலம் வந்தது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்ததில் கருவறையின் மேற்கூரை சேதமடைந்தது.

    தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளும், மண்டைக்காடு போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விளக்கில் ஏற்றப்பட்ட தீ காற்றின் வேகம் காரணமாக அங்கிருந்த துணியில் பிடித்து தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தீ விபத்தை தொடர்ந்து கோவில் ஊழியர்கள், பேரூராட்சி ஊழியர்கள், பக்தர்கள், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கோவிலை சுத்தம் செய்தனர். இதை தொடர்ந்து பரிகார பூஜைகள் நடந்தது.

    கோவில் தந்திரி சங்கர நாராயணன் மற்றும் குருக்கள் பரிகார பூஜைகளை நடத்தினர். பின்னர் புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி,வாஸ்து பலி, பரிகார பூஜை,அஸ்தர பூஜை ஆகிய பூஜைகள் நடத்தி அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கமான மாலை 6.30 சாயரட்சை தீபாராதனை,இரவு 7.30 மணிக்கு அத்தாழ பூஜைகள் நடந்தது.பரிகார பூஜையில் திருக்கோயில் நிர்வாக அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று காலையிலும் வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டது. 6.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து வழக்கமான வழிபாடுகளும் செய்யப்பட்டது. மதியம், மாலை, இரவும் வழக்கமான பூஜைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அமைச்சர் மனோ தங்கராஜ், நேற்று ஆய்வு நடத்தியபோது மறு சீரமைப்பு பணி விரைவில் தொடங்கப்படும் என்று கூறி இருந்தார்.இந்த நிலையில் தீ விபத்தில் சேதமடைந்த மேற்கூரையை சீரமைப்பது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
    கும்பகோணம் நாதன்கோவில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் பிரகார புறப்பாடு நடந்தது.
    கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மாதம் (மே) 24-ந் தேதி தொடங்கியது.

    இதையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் பிரகார புறப்பாடு நடந்தது. விழாவில் திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம், நெல் அளக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    நேற்று கோவில் உள்பிரகாரத்தில் ரத உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ரதத்தை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
    ×