என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கோவில் தந்திரி சங்கர நாராயணன் மற்றும் குருக்கள் பரிகார பூஜை, கோமாதா பூஜை நடத்தினர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மாலை 5 மணியளவில் கோவில் தந்திரி சங்கர நாராயணன் மற்றும் குருக்கள் பரிகார பூஜை, கோமாதா பூஜை நடத்தினர்.
பின்னர் புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி, வாஸ்து பலி, அஸ்தர பூஜை போன்றவை நடத்தி அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அத்தாழ பூஜைகள் நடந்தது. இந்த பூஜைகளில் கோவில் நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடந்து வரும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை அடிவாரம் வரை செல்ல 2 இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருமலை :
திருப்பதிஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலர் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து திருமலையை அடைவார்கள். அலிபிரி நடைபாதையில் தற்போது மேற்கூரை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
அந்தப் பணிகளை விரைந்து முடிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்காக, அலிபிரி நடைபாதை நேற்று முன்தினத்தில் இருந்து மூடப்பட்டது. இது அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் இலவச பஸ்சில் பயணம் செய்து ஸ்ரீவாரிமெட்டு மலையடிவாரத்தை அடைந்து, அங்கிருந்து தினமும் காலை 6 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று திருமலையை அடையலாம், என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லூர்து நகரில் விசாரணை நடத்திய திருச்சபை அதிகாரிகள், அன்னை மரியா காட்சி அளித்தது உண்மை என்று உறுதி செய்தனர். 1907 பிப்ரவரி 11ந்தேதி லூர்து அன்னைக்கு விழா கொண்டாடும் வழக்கம் முதன்முதலாக உருவானது.
அன்னை மரியா, லூர்து நகரில் காட்சி அளித்ததை நினைவுகூரும் வகையில் இந்த திருநாள் பிப்ரவரி 11ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. திருச்சபை விழாக்களின் பட்டியலில் இது ஒரு விருப்ப நினைவாக இடம் பெற்றுள்ளது.
1858 பிப்ரவரி 11 முதல் ஜூலை 16ந்தேதி வரை பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில், பெர்னதெத் சூபிரூஸ் என்ற சிறுமிக்கு மரியன்னை பதினெட்டு முறை காட்சி அளித்தார். இளம் கன்னிப் பெண்ணாக காணப்பட்ட அன்னை மரியா, தமக்காக அங்கு ஓர் ஆலயம் எழுப்ப வேண்டுமென கோரிக்கை விடுத்தார். பிப்ரவரி 25ந்தேதி இரண்டாவது முறையாக தோன்றிய அன்னை, பெர்னதெத்தை கொண்டு ஒரு நீரூற்று தோன்றச் செய்தார்.
மார்ச் 25ந்தேதி மூன்றாம் முறையாக தோன்றிய அன்னை, “நானே அமல உற்பவம்” என்று தம்மை அறிமுகம் செய்தார். அடுத்தடுத்த காட்சிகளில், பாவிகள் மனந்திரும்ப செபமும் தவமும் செய்யுமாறும் அறிவுறுத்திய அவர், பெர்னதெத்தை செபமாலை செபிக்க வைத்தார். அன்னை மரியாவின் காட்சி பற்றி அறிந்த மக்கள், அந்த இடத்தில் பெர்னதெத்தோடு சேர்ந்து செபிக்கத் தொடங்கினர்.
பெர்னதெத் தோண்டிய நீரூற்றில் இருந்து பருகிய பலரது உடல், உள்ள நோய்கள் குணம் அடைந்ததால், பலரும் அங்கு திருப்பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர். லூர்து நகரில் விசாரணை நடத்திய திருச்சபை அதிகாரிகள், அன்னை மரியா காட்சி அளித்தது உண்மை என்று உறுதி செய்தனர். இதையடுத்து 1862ஆம் ஆண்டு திருத்தந்தை 9ம் பியுஸ் இந்த காட்சிக்கு அங்கீகாரம் வழங்கினார். 1907 பிப்ரவரி 11ந்தேதி லூர்து அன்னைக்கு விழா கொண்டாடும் வழக்கம் முதன்முதலாக உருவானது.

நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதியில் உள்ள சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
நாகை பகுதி சிவன் கோவிலில் நேற்று வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதியில் உள்ள சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
தொடர்ந்து சாமிக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பைரவர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதைப்போல கோவில் உள்பிரகாரத்தில் உள்ள காலபைரவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
மேலும் நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் அஷ்ட பைரவர், வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் உள்ள பைரவர் கோவில், உள்ளிட்ட கோவில்களில் உள்ள பைரவருக்கு வழிபாடு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஏராளமான திருக்கோவில்கள் அமைந்திருக்கின்றன. அதிலும் கடற்கரை ஓரம் அமைந்த தலங்கள் மேலும் சிறப்புக்குரியவை. அப்படி கடற்கரையோரம் அமைந்த ஆலயங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

மருந்தீஸ்வரர் கோவில்
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது, இந்த ஆலயம். இந்தக் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இத்தல இறைவனின் பெயர், ‘மருந்தீஸ்வரர்’ என்பதாகும். ‘ஒளசதநாதர்’, ‘பால்வண்ணநாதர்’ என்றும் இறைவனை அழைக்கிறார்கள். அகத்தியருக்கு இத்தல இறைவன், வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்தார். அதோடு அவருக்கு உலகில் தோன்றும் நோய்களுக்கான மருந்துகளைப் பற்றியும், மூலிகைகளின் தன்மை பற்றியும் உபதேசம் செய்தார். இதன் காரணமாகவே இறைவனுக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. அம்பாளின் திருநாமம் ‘திரிபுரசுந்தரி’, ‘சவுந்திரநாயகி’ என்பதாகும்.
செந்திலாண்டவர் கோவில்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில் இதுவாகும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலமாக இது விளங்குகிறது. இங்குதான் சூரபதுமனை எதிர்த்து, முருகப்பெருமான் படை திரட்டி போராடினார் என்கிறது தல வரலாறு. சூரனை வதம் செய்த திருத்தலம் இதுவாகும். இங்கு சுப்பிரமணியர், சண்முகநாதர் என்ற பெயரில் இரண்டு சன்னிதிகளில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். வள்ளிக்கு தனியாக குகை ஒன்றில் சன்னிதி அமைந்திருக்கிறது. முருகப்பெருமானுக்கு கடற்கரையோரம் அமைந்த ஒரே தலம் இது என்று சொல்லப்படுகிறது.
காயாரோகணேஸ்வரர் கோவில்
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இங்குள்ள இறைவன் ‘காயாரோகணேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘நீலாயதாட்சி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப்போலவே, இதுவும் அம்பாளை முன்னிலைப்படுத்தும் திருத்தலமாக இருக்கிறது. புண்டரீகர் என்னும் முனிவர், முக்தி வேண்டி இத்தல இறைவனை நோக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி கொடுத்த இறைவன், முனிவரை ஆரத்தழுவி முக்தியை வழங்கினார். இதன் காரணமாகத்தான், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. இங்கு தல விருட்சமாக மாமரம் உள்ளது. இந்த மரத்தில் உள்ள பழமானது, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இந்த மாமரத்தை கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் இருந்து பார்த்தால், நந்தி வடிவத்தில் காட்சியளிக்கும்.
குமரி அம்மன் கோவில்
மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருப்பதால், இந்தக் கோவில் அதிக சிறப்பைப் பெறுகிறது. கன்னியாகுமரியில் இருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள அம்மன், திருமணம் ஆகாமல் கன்னியாக இருப்பதால், ‘குமரி அம்மன்’ என்று பெயர் பெற்றாள். இந்த திருத்தலமும், ‘கன்னியாகுமரி’ ஆனது. சக்தி பீடத் தலங்களில் இதுவும் ஒன்று. பாணாசுரன் என்ற அரக்கனை அம்பாள் அழித்த தலம் இதுவாகும்.
அஷ்டலட்சுமி கோவில்
சென்னை பெசன்ட் நகரில், எலியட்ஸ் கடற்கரையில் இருக்கிறது, இந்தக் கோவில். இந்த ஆலயமானது, மொத்தம் நான்கு தளங்களால் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி தேவியர்கள் அருள்காட்சி தருகின்றனர். இரண்டாவது தளத்தில், திருமகளுடன் திருமால் திருமணக் கோலத்தில் தரிசனம் தரு கிறார். இந்த திருமணக் கோலத்தை வழிபட்ட பிறகே, பிற தெய்வங்களை வழிபட வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது. மூன்றாவது தளத்தில் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, கஜலட்சுமி ஆகிய தேவியர்கள் வீற்றிருக்கின்றனர். நான்காவது தளத்தில் தனலட்சுமி தாயார் அருள்பாலிக்கிறார்.
சுயம்புலிங்க சுவாமி கோவில்
திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில், உவரி என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரின் கடற்கரை ஓரத்தில்தான், சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் சுயம்புவாக தோன்றியதால், ‘சுயம்புலிங்கம்’ என்று பெயர். அம்பாளின் திருநாமம், ‘பிரம்மசக்தி அம்மன்’ என்பதாகும்.
ராமநாதர் கோவில்
ராமாயணத்தோடு தொடர்புடைய ஆலயமாக இந்தக் கோவில் பார்க்கப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் என்ற ஊரில் கடற்கரையோரமாக இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் சீதாதேவி மணலால் வடித்த சிவலிங்கம், ‘ராம நாதர்’ என்ற பெயரில் உள்ளது. மேலும் ஆஞ்சநேயர், காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கமும், ‘காசி விஸ்வநாதர்’ என்ற பெயரில் இங்கு இருக்கிறது. ராமபிரான், தன்னுடைய மனைவி சீதையோடு இணைந்து இந்த ஆலயத்தில் சிவபெருமானை வழிபாடு செய்திருக்கிறார் என்கிறது தல வரலாறு.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் 15 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 15 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இந்த ஆண்டு திருவிழா நாட்களில் அம்மனுக்கு தினமும் அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை பொதுமக்கள் கோவிலுக்கு வெளியில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மறுபூஜை நடைபெற்றது. இதற்காக சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை கோவிலுக்கு வெளியில் நின்றபடி பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து தரிசனம் செய்தனர். இருப்பினும் கோவிலுக்கு உள்ளே செல்ல முடியாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மகான் ஸ்ரீ ராகவேந்திரருக்கான விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும்.
மகான் ஸ்ரீ ராகவேந்திரருக்கான விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். முதல் வியாழக்கிழமை காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து, தூய ஆடை அணிந்து கொண்டு அவரவர் விருப்பப்படி நெற்றியில் திருநீறு அல்லது சந்தனம், திருநாமம் அணியவேண்டும்.
பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும். நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம்.
பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும்.
மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக் கொண்டு எழுந்து நின்று
பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்
ஸ்ரீ காம தேநுவே
என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.
இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும்.
ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை.
ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில் திரவ பதார்த்தங்கள் அருந்தலாம். இரவில் சிறிதளவு பால் அன்னம் சாப்பிடலாம். இதுபோல் விரதம் கடைப்பிடித்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கும்.

தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவரான ஸ்ரீ பைரவரின் விரதம் இருந்து வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது.
பைரவரைவிரதம் இருந்து வழிபடுவதற்குரிய சிறந்த தினங்கள் மாதந்தோறும் வரும் அஷ்டமி தினங்கள். அந்த வகையில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வைகாசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி சதாசிவாஷ்டமி என அழைக்கப்படுகிறது. அன்று மாலை வேளையில் காலபைரவர் சந்நிதிக்கு சென்று செவ்வரளி மலர் மாலை சாற்றி, சர்க்கரை பொங்கல், கேசரி போன்ற இனிப்பு உணவுகளை நைவேத்தியம் செய்து, தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றிய ஐந்து தீபங்கள் ஏற்றி காலபைரவவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும்.
கொரோனா ஊடங்கு காலத்தில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே எளிய முறையில் வழிபாடு செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது. மேற்கண்ட முறையில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவரை வழிபடுபவர்களுக்கு சீக்கிரத்தில் பணவரவு பன்மடங்கு அதிகரிக்கும். பிறருக்கு கொடுத்த கடன் தொகைகள் வட்டியுடன் உங்களுக்கு வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.
முன்னோர்களின் சொத்துகளை அடைவதில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக தீரும். நீண்ட நாட்களாக உடலையும் மனதையும் வாட்டி வதைத்த நோய்கள் நீங்கும். குழந்தைகளின் கல்வியில் ஏற்படும் மந்த நிலை நீங்கி கல்வி, கலைகளில் சிறப்பார்கள். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

தமிழ்க் கடவுள் முருகன் என்று அனைவராலும் போற்றப்படுபவர், முருகப்பெருமான். அவர் ‘குறிஞ்சி நிலக் கடவுள்’ என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் போற்றப்படுகிறார்.
* முருகப்பெருமானுக்கு ‘விசாகன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் இந்தப் பெயர் வந்ததாக சொல்வார்கள். அதே நேரம் ‘விசாகன்’ என்றால் ‘மயிலில் சஞ்சரிப்பவன்’ என்ற பொருளும் உண்டு.
* சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளாக தோன்றிய முருகப்பெருமான், முதலில் கங்கையால் தாங்கப்பட்டார். இதனால் அவருக்கு ‘காங்கேயன்’ என்று பெயர் வந்தது. சரவணப் பொய்கையில் உருப்பெற்றார். எனவே ‘சரவண பவன்’ ஆனார். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்றும், பார்வதிதேவியால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் ‘கந்தன்’ என்றும் பெயர் கொண்டார்.
* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அதிகாலையில் குளித்து முடித்து தூய்மையுடன், ‘சுப்பிரமண்ய அஷ்டகம்’ ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
* ஆறு முகங்களைக் கொண்ட முருகப்பெருமானுக்கு, பன்னிரு கைகள் உண்டு. வலது பக்கம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வஜ்ஜிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆயுதங்களும், இடதுபுறம் உள்ள ஆறுகரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
* ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். அப்படி குன்று தோறும் அருள்புரிபவர் ஆறுமுகன். அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான குடவரைக் கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் முக்கியமானது கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம் ஆகியவை.
* தமிழ்க் கடவுள் முருகன் என்று அனைவராலும் போற்றப்படுபவர், முருகப்பெருமான். அவர் ‘குறிஞ்சி நிலக் கடவுள்’ என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் போற்றப்படுகிறார்.
* முருகனுக்கு உருவமில்லாத கோவில், விருத்தாசலத்தில் உள்ளது. இத்தல முருகனின் பெயர் ‘கொளஞ்சியப்பர்.’ அருவுருவ நிலை பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள்.
* முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதிலாக படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலை கொண்ட முருகப்பெருமான் கோவில் இருக்கிறது.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் (ஜூன் மாதம்) முழுவதும் நடக்கும் விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில்இந்த மாதம் 4, 12, 19, 26-ந்தேதிகளில் மூலவர்களான சீதா, ராமர் லட்சுமணருக்கு பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அபிஷேகம் நடக்கிறது.
4-ந்தேதி அனுமன் ஜெயந்தி, 10-ந்தேதி சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் அமாவாசை, 13-ந்தேதி புனர்வாசு நட்சத்திரத்தையொட்டி சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம், 24-ந்தேதி அஷ்டோத்திர சத கலசாபிஷேகம், பவுர்ணமி.
மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.

மனிதர்களின் வாழ்வில், அவர்களுக்கான அக எதிரிகளாக காமம், குரோதம், லோபம், மோகம், அகங்காரம், மதஸர்யம் ஆகியவை இருக்கின்றன. இந்த 6 எதிரிகளையும் நம் உள்ளத்தை விட்டு அகற்றிவிட்டால், வாழ்வில் உயர்வு பெறலாம்.
மனிதர்களின் வாழ்வில், அவர்களுக்கான அக எதிரிகளாக காமம், குரோதம், லோபம், மோகம், அகங்காரம், மதஸர்யம் ஆகியவை இருக்கின்றன. இந்த 6 எதிரிகளையும் நம் உள்ளத்தை விட்டு அகற்றிவிட்டால், வாழ்வில் உயர்வு பெறலாம். நீக்கப்பட வேண்டிய இந்த ஆறு விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
காமம்:- இதற்கு ‘ஆவல்’, ‘ஆசை’ என்று பொருள். நியதிக்கு உட்பட்ட ஆசை எப்போதுமே ஆக்கப்பூர்வமானது. அதுவே தர்ம நியதியை கடந்த ஆசை, மனிதர்களுக்கு அழிவையே தரும். பணம், பொருள், பதவி, பெண் போன்றவற்றின் மீது தீராத ஆசை கொள்வது குற்றமாகும். ஆகையால் ஆசையை அடக்க வேண்டும்.
மோகம்:- இதற்கு ‘பற்றுதல்’, ‘மயக்கம்’ என்று பொருள்படும். ஒரு பொருளின் மீது கொண்ட ஆசை, அளவற்ற பற்றுதலாக மாறும். அந்த பொருளின் மீது ஏற்பட்ட மயக்கம், அதை தனதாக்கிக்கொள்ளும் வரை ஓயாது. அதனால் நமக்கு கிடைப்பது துன்பம்தான். ஒரு பொருளின் மீதான மயக்கம், ஒருவனை தீய செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது. எனவே பற்றுதலை கைவிட வேண்டும்.
லோபம்:- இதற்கு ‘பேராசை’ என்று அர்த்தம். தேவைக்கு அதிகமாக ஒன்றின் மேல் ஆசைகொள்வதையே, ‘பேராசை’ என்கிறோம். அதே போல மற்றவர்களுக்கு சொந்தமானதை அடைய நினைப்பதும், பேராசையின் வரிசையிலேயே வரும். வேண்டியது கிடைத்துவிட்டால் அதை வைத்து திருப்தி அடைய வேண்டும். ஆனால் இன்னும் இன்னும் வேண்டும் என்பதாக நினைத்து பேராசை கொள்ளக்கூடாது. அதனால் பேராசையை தவிர்க்க வேண்டும்.
குரோதம்:- இதற்கு ‘கோபம்’, ‘சினம்’ என்று பொருள். நாம் ஆசைப்பட்ட ஒரு பொருளை அடைய வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்போம். அந்த ஆசை நிறைவேறாதபோது அது கோபமாக மாறுகிறது. கோப உணர்வானது நம்முடைய மனதிற்குள் புகுந்துவிட்டால், அது நாம் செய்யும் செயல்களில் சஞ்சலங்களை ஏற்படுத்தும். அதன் காரணமாக சொல்லும், செயலும் பாதிக்கப்படும். கோபத்தால் ஏற்படும் சொல்லும், செயலும் எப்போதும் சரியானதாக இருக்காது. எனவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
அகங்காரம்:- இதனை ‘இறுமாப்பு’, ‘செருக்கு’ என்றும் சொல்வார்கள். ஒருவரிடம் மற்றவர்களைக் காட்டிலும் கல்வி, அறிவு, பணம், அதிகாரம் போன்றவை அதிகமாக இருந்தால், அவரிடம் ஒரு கட்டத்தில் செருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை தவிர்த்தால், அவரை விட இந்த உலகத்தில் உயர்வானவர் எவருமில்லை. அகங்காரம் என்பது மனதிற்குள் புகுந்துவிட்டால், அவனின் அடிப்படை நற்குணங்கள் அனைத்துமே மாயமாகிவிடும். எனவே செருக்கை அகற்ற வேண்டும்.
மதஸர்யம்:- இதனை ‘பொறாமை’ என்பார்கள். தன்னை விட வேறு எவரேனும் கல்வி, பதவி, அறிவு, செல்வம் போன்றவற்றில் உயர்ந்து விட கூடாது என்ற ஓர் எண்ணம் தான் பொறாமை ஆகின்றது. மற்றவர்களின் அறிவாற்றல், திறமைகள், செல்வம் போன்றவற்றைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் அவற்றை எப்படியாவது அழித்துவிட எண்ணம் கொள்வர். இத்தகைய ஓர் எண்ணம் உண்மையில் தன்னைத் தானே அழித்துக் கொள்ள விதைக்கப்பட்ட விதை என்பதை உணர வேண்டும். எனவே பொறாமையை நீக்கிவிடுங்கள்.

திருக்காரவாசல் என்ற திருத்தல இறைவனை அரைக்கீரை தைலத்தால் அபிஷேகம் செய்து, அத்திப்பழம் நைவேத்தியம் செய்து வணங்கினால், கண் உபாதைகள் நீங்கும்.
அத்திப்பழம்
திருவாரூர் அருகே உள்ளது, திருக்காரவாசல் என்ற திருத்தலம். இங்கு கண்ணாயிரநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், நான்முகனான பிரம்மனுக்கு, ஆயிரம் கண்களோடு தரிசனம் தந்தவர் ஆவார். இந்த இறைவனை அரைக்கீரை தைலத்தால் அபிஷேகம் செய்து, அத்திப்பழம் நைவேத்தியம் செய்து வணங்கினால், கண் உபாதைகள் நீங்கும்.
மண்டையப்பம்
நாகர்கோவில் அருகே உள்ள மண்டைக்காட்டில் பகவதி அம்மன் திருக்கோவில் இருக்கிறது. தலைவலியால் பாதிக்கப்படும் பக்தர்கள், இங்கு வந்து பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து ‘மண்டையப்பம்’ என்னும் நைவேத்தியத்தை செய்து அம்மனுக்கு படைத்து வழிபடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தலைவலி நீங்குவதாக நம்பிக்கை.
அவல்
கேரளா மாநிலம் தலைச்சேரி அருகில் திருவெண்காடு என்ற திருத்தலம் இருக்கிறது. இங்கு ராமசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ராமரும், அனுமனும் மட்டுமே அருள்பாலிக்கிறார்கள். ராமனுக்கு எதிரில், அவரை வணங்கிய நிலையில் காட்சி தரும் ஆஞ்சநேயருக்கு அவல் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.