என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி அலிபிரி நடைபாதை மூடப்பட்டது: ஸ்ரீவாரி மெட்டு வழியாக திருமலைக்கு செல்லலாம்
Byமாலை மலர்3 Jun 2021 11:48 AM IST (Updated: 3 Jun 2021 11:48 AM IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடந்து வரும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை அடிவாரம் வரை செல்ல 2 இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருமலை :
திருப்பதிஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலர் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து திருமலையை அடைவார்கள். அலிபிரி நடைபாதையில் தற்போது மேற்கூரை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
அந்தப் பணிகளை விரைந்து முடிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்காக, அலிபிரி நடைபாதை நேற்று முன்தினத்தில் இருந்து மூடப்பட்டது. இது அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் இலவச பஸ்சில் பயணம் செய்து ஸ்ரீவாரிமெட்டு மலையடிவாரத்தை அடைந்து, அங்கிருந்து தினமும் காலை 6 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று திருமலையை அடையலாம், என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
×