என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
திருப்பதிஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
தினமும் 300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனாலும் ஊரடங்கு காரணமாக பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது. தற்போது ஆந்திர மாநிலத்தில் பகல்நேர ஊரடங்கு அமலில் இருப்பதாலும், தமிழ்நாடு உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமலில் இருப்பதாலும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த மாதத்திற்கான (ஜூன்) ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

சிவபெருமானின் வடிவமாக காட்சியளிக்கும் சுவர்ண பைரவரை வணங்கி இவருக்குரிய ஸ்லோகத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை
சிவபெருமானின் வடிவமாக காட்சியளிக்கிறார் சுவர்ண பைரவர். இவரை சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. சுவர்ண பைரவரை வணங்கி இவருக்குரிய ஸ்லோகத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை
ஸ்லோகம்:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும் அஜாமல
பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம
தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நம ஹ்ரீம் ஐம்
இந்த ஸ்லோகத்தை தினசரி 27 முறை உச்சரித்து சுவர்ண பைரவரை வணங்கி பூஜித்தால் கடன் பிரச்சனைகள் விலகி செல்வம் பெருகும்!

முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.
அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே ‘சேயாறு’. இது தற்போது ‘செய்யாறு’ என்று அழைக்கப்படுகிறது.
முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.
காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அதே போல் அம்பாளும் செய்யாறின் தென் கரையில் 7 இடங்களில் சிவ பூஜை செய்தால், அதில் அமைந்த ஆலயங்கள் சப்த கயிலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மண்டகொளத்தூர், கரைப்பூண்டி, தென்பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

மிகவும் தொன்மை வாய்ந்த இந்த கயிலாசநாதர் கோவில் பல்லவர்கள், வல்லாள மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்கள், விஜயநகர பேசரரசு, சம்புவராயர்கள் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் நார்த்தாம்பூண்டி உள்ளது. தென்பள்ளிப்பட்டு தலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம்தான். இங்கு கயலாசநாதர் திருக்கோவில் உள்ளது. முருகப்பெருமானை நினைத்து தொடர்ச்சியாக 12 ஆண்டுகள், கிருத்திகை விரதம் இருந்தாராம் நாரத முனிவர். அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார்.
இதனால் இந்த திருத்தலம் ‘நார்த்தாம்பூண்டி’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். மிகவும் தொன்மை வாய்ந்த திருக்கோவிலாக இந்த கயிலாசநாதர் கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் பல்லவர்கள், வல்லாள மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்கள், விஜயநகர பேசரரசு, சம்புவராயர்கள் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள இறைவன்- கயிலாசநாதர், இறைவி- பெரியநாயகி. கோவிலில் உள்ள இலந்தை மரத்தின் அடியில் நாரத முனிவர், ஈசனையும், வள்ளி-தெய்வானை உடனாய முருகரையும் வணங்கும் சிற்பதைக் காணலாம்.

திருப்பதியில் சுந்தரகாண்ட பாராயண மகாயாகம் நடத்தப்பட்டது. 40 வேத பண்டிதர்களை, ஒரு குழுவுக்கு 10 பேர் வீதம் 4 குழுவாக பிரிக்கப்பட்டு அவர்கள் இந்த சுந்தரகாண்ட பாராயண மகாயாகத்தை நடத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும், உலக நன்மைக்காகவும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் 16 மணி நேரம் தொடர்ந்து சுந்தரகாண்ட பாராயண மகாயாகம் நடத்த முடிவுசெய்யப்பட்டிருந்தது.
திருப்பதியில் உள்ள தர்மகிரி எஸ்.வி.வேதவிஜன பீடத்தில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் நடந்த இந்த யாகத்தில் சுந்தரகாண்டத்தின் 2,821 வசனங்களை தொடர்ந்து 16 மணி நேரம் ஓதினர். காலை 6 மணிக்கு தொடங்கிய யாகம் தொடர்ந்து இரவு 10 மணி வரை எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 16 மணி நேரம் நடந்தது.
உலக மக்கள் பார்ப்பதற்கு வசதியாக தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த யாகத்தின்போது ஸ்ரீவாரி கல்யாணம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் இந்த சுந்தரகாண்ட பாராயண மகாயாகம் நடத்தப்பட்டது. 40 வேத பண்டிதர்களை, ஒரு குழுவுக்கு 10 பேர் வீதம் 4 குழுவாக பிரிக்கப்பட்டு அவர்கள் இந்த சுந்தரகாண்ட பாராயண மகாயாகத்தை நடத்தினர்.
திருப்பதியில் உள்ள தர்மகிரி எஸ்.வி.வேதவிஜன பீடத்தில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் நடந்த இந்த யாகத்தில் சுந்தரகாண்டத்தின் 2,821 வசனங்களை தொடர்ந்து 16 மணி நேரம் ஓதினர். காலை 6 மணிக்கு தொடங்கிய யாகம் தொடர்ந்து இரவு 10 மணி வரை எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 16 மணி நேரம் நடந்தது.
உலக மக்கள் பார்ப்பதற்கு வசதியாக தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த யாகத்தின்போது ஸ்ரீவாரி கல்யாணம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
செவ்வாய் பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஒரு நட்சத்திரமாக அவிட்டம் நட்சத்திரம் வருகிறது. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல நன்மைகளை பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
27 நட்சத்திரங்கள் வரிசையில் இருபத்து மூன்றாவதாக வரும் நட்சத்திரம் அவிட்டம் நட்சத்திரம் ஆகும். அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதியாக செவ்வாய் பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக அனந்த சயன பெருமாள் எனப்படும் ரங்கநாதர் இருக்கிறார். செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்டிருப்பதால் இயற்கையிலேயே மிகுந்த தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொண்டவர்களாக அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் பூமி லாபம் மற்றும் செல்வ வளங்களை பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயிலுக்கோ அல்லது திருவனந்தபுரத்தில் இருக்கும் அனந்த பத்மநாப ஸ்வாமி கோயிலுக்கோ சென்று பெருமாளை வழிபடுவதால் வாழ்வில் மங்களங்கள் பெருகும்.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானையும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானையும் வழிபட்டு வர நன்மையான பலன்கள் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக வன்னி மரம் இருக்கிறது. எனவே வன்னி மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று, வன்னி மரத்தையும் அங்குள்ள இறைவனையும் வழிபடுவதால் ஏற்றமிகு பலன்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும்.
செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு அல்லது இளஞ் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து கொள்வது உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும். மாதம் ஒருமுறை சிவன் கோயில்களுக்கு கடலை பருப்பு களை தானம் செய்வது நல்லது. உங்களால் முடிந்த போது வசதி குறைந்த ஒரு நபருக்கு கருப்பு நிறத்திலான புதிய காலணிகளை தானம் செய்யவும். எரும்பு புற்றுகளில் உள்ள எறும்புகளுக்கு சிறிது வெல்லத்தை உணவாக அளிப்பது உங்கள் தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரமாகும்.

"மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்."
மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய இயேசு கிறிஸ்து, தூய ஆவியாரின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதரானார். திரித்துவத்தின் மூன்றாம் ஆளான தூய ஆவியாருடன் தமக்குள்ள தொடர்பு குறித்து இறைமகன் இயேசு என்ன கூறினார் என்பதை இங்கு காண்போம்.
“நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா? என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார். எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.” (மத்தேயு 12:28-32)
"மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்."
“ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்.” (யோவான் 3:5-6) “வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை.” (யோவான் 6:63-64)
“உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.” (யோவான் 14:16-17,26)
“உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.” (யோவான் 16:13-14) இயேசு சீடர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். (யோவான் 20:21-22)
“தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்.” (யோவான் 15:26) “என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள். அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்னதாகவே கவலைப்பட வேண்டாம்; அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில் பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே.” (மாற்கு 13:9-11)

உத்தரபிரதேச மாநிலத்தில் பல நாட்களாக நீடித்த ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த தளர்வுகளின் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பல நாட்களாக நீடித்த ஊரடங்கில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த தளர்வுகளின் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராவணனை வீழ்த்தி விட்டு அயோத்தி திரும்பும் ராமபிரான் அந்த இடத்தை அனுமனுக்கு கொடுத்தார். அதனால் அந்த இடம் அனுமன் கார்ஹி என அழைக்கப்படுகிறது.
இந்த அனுமன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அனுமனை தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ளது அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில்.
தல இறைவன் : சுப்ரமணிய சுவாமி.
தல இறைவி:வள்ளி, தெய்வானை.
தல விருட்சம் : தொரட்டி மரம்.
தல தீர்த்தம் : காசி தீர்த்தம்.
திருவிழாக்கள்: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.
தல வரலாறு:
சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும். மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாகும்.
பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி. மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.
பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.
உத்தரவு பெட்டி :
சிவன்மலை கோவில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். அதன்படி, சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டு, உத்தரவானதும் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
பிரார்த்தனை :
திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது. வக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம். சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார். மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பு+ஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.
தலச் சிறப்பு :
மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே. நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும்.

கும்பம் ராசியினர் வாழ்வில் செல்வ நிலை உயரவும், அதிர்ஷ்டங்களை பெறவும் எந்த தெய்வங்களை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
கும்ப ராசியில் பிறந்தவர்கள் செல்வ வளமிக்க வாழ்க்கை கிடைக்க பெறவும், அனைத்திலும் சிறப்பான முன்னேற்றங்களை அடையவும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வதால் சனி பகவானின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்பட தொடங்கும். மேலும் சனி அம்சம் கொண்ட திருப்பதி வெங்கடாசலபதியையும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ நிலை உயரும். இந்த ராசியினர் அஷ்டமி தினங்களில் பைரவர் மூர்த்தியை விரதம் இருந்து வழிபட்டு வர வேண்டும்.
கும்ப ராசியினர் விரதம் மேற்கொள்ள நினைத்தால் சனி பகவானுக்கு சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது சிறந்த பலன்களை கொடுக்கும். வலது கை மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவது அதிர்ஷ்டத்தை தரும். ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கும், கோயில்களுக்கும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தானம் தருவது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தோஷங்களை போக்கும். பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும். இதனால் நீதி தேவனாகிய சனிபகவானின் அருள் உங்களுக்கு கிட்டும்.

‘தா வரம்’ என்று மனிதன் கேட்டதற்கு, இறைவன் தாவரத்தை வழங்கி உடல்நலத்தை சீராக்கிக் கொள்ள வாய்ப்பளித்தார். ஆதிகாலத்தில் வாழ்ந்த முனிவர்கள் மரப்பொந்துகளில் தவம் இருந்ததாக வரலாறுகள் சொல்கின்றன.
மனிதன் வளமுடன் வாழ இறைவன் தந்த வரங்கள் தான் மரங்களும், தாவரங்களும். ‘தா வரம்’ என்று மனிதன் கேட்டதற்கு, இறைவன் தாவரத்தை வழங்கி உடல்நலத்தை சீராக்கிக் கொள்ள வாய்ப்பளித்தார். ஆதிகாலத்தில் வாழ்ந்த முனிவர்கள் மரப்பொந்துகளில் தவம் இருந்ததாக வரலாறுகள் சொல்கின்றன.
மரத்தின் விதை, வேர், பூ, காய், இலை, பட்டை போன்ற அனைத்தும் மனித உயிர்களைக் காக்கும் சக்தியாக இருப்பதால் மரங்களின் அடியில் தெய்வங்களை வைத்து மனிதர்கள் வழிபடத் தொடங்கினார்கள். அரச மரத்தடியில் விநாயகரையும், வேப்ப மரத்தடியில் அம்பிகையையும் வைத்து மரத்தின் தன்மையை மக்களுக்கு உணரவைத்தனர்.
ஆலும், வேலும் பல்லுக்குறுதி, நாலும், இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்லி வைத்தனர். பிராண வாயுவை வெளியிடும் மரங்களை வளர்ப்பதில் நாம் முனைப்புக் காட்டுவது நல்லது. முடிந்தவரை இல்லங்களில் மரங்களை வளர்ப்போம், மகத்துவம் காண்போம்.

திருக்கோஷ்டியூர் ஆலயத்தில் மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரத்தை எடுப்பதற்கு முன்பாகவே, அந்த திருக்கோலத்தை தேவர்களுக்கு காட்டி அருளியதாக தல வரலாறு சொல்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருக்கோஷ்டியூர் திருத்தலம். இங்கு சவுமியநாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் 95-வது திருத்தலம் ஆகும். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரத்தை எடுப்பதற்கு முன்பாகவே, அந்த திருக்கோலத்தை தேவர்களுக்கு காட்டி அருளியதாக தல வரலாறு சொல்கிறது.
இரண்யாட்சனின் சகோதரன் இரண்யகசிபு. பூமியை கடலுக்கு அடியில் ஒளித்து வைத்த இரண்யாட்சனை, மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அழித்தார். அது முதலே மகாவிஷ்ணுவை எதிரியாக நினைக்கத் தொடங்கினான், இரண்யகசிபு. விஷ்ணுவை அழிப்பதற்காக மாபெரும் சக்தி அவனுக்கு தேவைப்பட்டது. இதனால் பிரம்மதேவரை நோக்கி தவம்புரிந்து, பல வரங்களைப் பெற்றான். அதில் ஒன்றுதான், ‘மனிதர்கள், விலங்குகள், தேவர்கள், ஆயுதங்களால் தனக்கு அழிவு நேரக்கூடாது’ என்ற வரம். அதை பெற்ற பின் ‘தன்னை அழிக்க இந்த உலகத்தில் யாரும் இல்லை’ என்று நினைத்த இரண்யகசிபு, தன்னையே கடவுளாக அனைவரும் வணங்க வேண்டும் என்று, முனிவர்களையும், தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். அவனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி மகாவிஷ்ணுவை வேண்டினர், தேவர்கள்.
இதையடுத்து திருமால், இரண்ய கசிபுவை வதம் செய்வது பற்றி ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனால் தேவர்கள், ‘இரண்யகசிபுவின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்றனர். அதன்படி இத்தலத்தை தேர்வு செய்தார் திருமால். அதற்கு ஒரு காரணம் இருந்தது. இந்தப் பகுதியில் கதம்ப மகரிஷி என்பவர் விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவம் இருந்து வந்தார். அவர் தன்னுடைய தவத்திற்கு எந்த வித தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார். எனவேதான் இந்த இடத்தை திருமால் தேர்வு செய்தார்.
ஆலோசனையின்போது, தான் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்ய கசிபுவை வதம் செய்யப் போவதாக விஷ்ணு தெரிவித்தார். இதையடுத்து ‘அந்த அவதாரத்தை தங்களுக்கு காட்டியருள வேண்டும்’ என்று தேவர்களும், கதம்ப மகரிஷியும் கோரிக்கை வைத்தனர். அதன்படி நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே, இறைவன் இத்தலத்தில் தேவர்களுக்கு தன்னுடைய நரசிம்ம அவதாரத்தை காட்டியருளினார். பின்னர் அவர்களுக்கு நின்ற, நடந்த, இருந்த, கிடந்த என நான்கு கோலங்களையும் காட்டி அருள்புரிந்தார். அந்த நான்கு கோலங்களுடனும் இறைவனை இங்கு நாம் தரிசிக்கலாம்.
ஆலய அமைப்பு
இந்த ஆலயத்தின் விமானம், ‘அஷ்டாங்க விமானம்.’ தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இந்த விமானத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் மூன்று தளங்களாக உள்ளது. விமானத்தின் வடபக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு - கேது இருப்பது விசேஷமாகும். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
இத்தல இறைவனான சவுமிய நாராயணருடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இருக்கிறார்கள். மேலும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, இந்திரன் ஆகியோரும் உள்ளனர். திருமாமகள் என்ற பெயரில் தாயாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் சந்தான கிருஷ்ணன் என்ற பெயரில் கிருஷ்ணன் வீற்றிருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். இத்தல இறைவனை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்து வழிபட்டுள்ளனர்.
இந்த ஆலயத்தில் செய்யப்படும், விளக்கு நேர்த்திக்கடன் மிகவும் பிரசித்திப்பெற்றது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி, மூலவரின் முன்பாக வைத்து அதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் வைத்து மூடி, வீட்டின் பூஜை அறையில் வைக்கிறார்கள். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், மாசி தெப்ப திருவிழாவின் போது, இந்த விளக்குடன், மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக்கரையில் ஏற்றிவைத்து வழிபடுகின்றனர். அந்த நேரத்தில் புதியதாக வேண்டுதல் செய்ய வரும் பக்தர்கள், இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.
அமைவிடம்
காரைக்குடியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருப்பத்தூர் என்ற ஊர். இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருக்கோஷ்டியூரை அடையலாம்.