என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
உலகில் உள்ள அனைத்து பொருட்களின் உள்ளேயும் சூட்சுமமாக இறைவன் இருக்கிறான். இதை பக்தர்களுக்கு உணர்த்துவதற்காகவே, நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார்.
* நரசிம்மருக்கு, ‘சிங்கபிரான்’, ‘அரிமுகத்து அச்சுதன்’, ‘சீயம்’, ‘நரம் கலந்த சிங்கம்’, ‘அரி’, ‘ஆனரி’ ஆகிய பெயர்களும் உண்டு.
* திருமாலின் அவதாரங்களில், நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.
* திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமானவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. அதே நேரம் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.
* இரணியகசிபுவின் ரத்தத்தை குடித்ததால், நரசிம்மருக்கு உக்கிரம் அதிகரித்தது. இந்த உக்கிரத்தால் அவரின் அருகில் செல்லவே அனைவரும் அஞ்சினர். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் சிதைத்தார், நரசிம்மர். இதையடுத்து சிவபெருமான், சரபப்பறவையாக வடிவெடுத்து நரசிம்மரின் சீற்றத்தை தணித்தார்.
* சிவபெருமானை வணங்கிவந்த ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் உடனடியாக அவருக்கு நரசிம்மர் காட்சியளித்தார்.
* நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.
* உலகில் உள்ள அனைத்து பொருட்களின் உள்ளேயும் சூட்சுமமாக இறைவன் இருக்கிறான். இதை பக்தர்களுக்கு உணர்த்துவதற்காகவே, நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார்.
* நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
* நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்றும் பொருள் உண்டு.
* இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை, ஈரேழு உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.
* மகாலட்சுமிக்கு ‘பத்ரா’ என்றும் ஒரு பெயர் உண்டு. லட்சுமியை தன்னுடைய மடி மீது வைத்திருப்பதால் நரசிம்மருக்கு ‘பத்ரன்’ என்று பெயர். ‘பத்ரன்’ என்றால் ‘மங்களமூர்த்தி’ என்று பொருள்.
* ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உபபுராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
* நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

அவமானத்திற்கு பாண்டவர்களை பழி வாங்க காத்துக் கொண்டிருந்தான், ஜெயத்ரதன். அதற்காக குருச்சேத்திரப் போரை பயன்படுத்திக் கொண்டான்.
கவுரவர்களுடனான சூதாட்டத்தில், அனைத்தையும் இழந்து வனவாசத்தை மேற்கொண்டனர் பாண்டவர்கள். அவர்கள் வசித்த வனம், நாட்டில் இருந்து காடு தொடங்கிய 10 மைல் தொலைவில் அமைந்திருந்தது. அங்கு ஒரு குகையில் பாண்டவர்கள் தங்கியிருந்தனர். அன்று பாண்டவர்கள் ஐவரும் உணவு தேடி வனத்திற்குள் சென்றிருந்தனர். திரவுபதி மட்டும் தனியாக இருந்தாள். அப்போது குகையின் முன்பாக ஒரு தேர் வந்துநின்றது. அதில் இறங்கியவன், ஜெயத்ரதன். அவன் சிந்து தேசத்து மன்னன்.
காந்தாரிக்கு 100 ஆண் பிள்ளைகள் பிறந்தனர். அவர்களோடு ஒரே ஒரு பெண் பிள்ளையும் பிறந்தது. அவளுடைய பெயர் துஷ்ஷலா. கவுரவர்களின் அந்த ஒரே தங்கையை மணந்தவன்தான், இந்த ஜெயத்ரதன். வந்தவர்களை ‘வா என்று’ அழைப்பதே பண்பாடு. எனவே ஜெயத்ரதனை, அழைத்து இருக்கை கொடுத்து, உண்பதற்கு பழமும், பருக நீரும் கொடுத்தாள். ஆனாலும் திரவுபதியின் மனதில் ‘இவன் எதற்காக வந்திருக்கிறான்?’ என்ற யோசனை ஓடியது. ‘ஒரு வேளை கவுரவர்களின் செயல் தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று சொல்லி, அனுதாபமும், ஆதரவும் தெரிவிக்க வந்திருப்பானோ’ என்று நினைத்தாள்.
பின் யோசனையை கைவிட்டு, “சற்று பொறுத்திருங்கள். என் கணவர்கள் இப்போது வந்துவிடுவார்கள்” என்றாள்.
“அவர்கள் வராமலேயே போகட்டும். நான் வந்தது உனக்காகத்தான்” என்று கூறிய ஜெயத்ரதனின் கண்கள், காமத்தை வெளிப்படுத்தின.
தன்னுடைய தேரில் இருந்து ஒரு பெட்டியை இறக்கி கீழே வைத்தவன், அதைத் திறந்தான். அதற்குள் நிறைய ஆபரணங்களும், ஆடைகளும், வாசனை திரவியங்களும் இருந்தன. அதைக் காட்டி, “இவையெல்லாம் உனக்குத்தான். நீ என்னுடன் சிந்து தேசம் வந்தால், இன்னும் நிறையத் தருவேன்” என்றான்.
அவன் வந்ததற்கான அர்த்தம் புரிந்த திரவுபதி, “நான் இந்திரபிரஸ்தத்தின் அரசி. பாண்டவர்களின் மனைவி. நீ இப்படி பேசியது என் கணவர்களுக்குத் தெரிந்தால், நீ உயிருடன் இருக்க மாட்டாய்” என்றாள் கோபம் கொப்பளிக்க.
சட்டென்று திரவுபதியின் கூந்தலை இறுகப் பற்றிய ஜெயத்ரதன், “நீ எந்த தேசத்திற்கும் அரசியல்ல. அனைத்தையும் இழந்து போன பிச்சைக்காரி. ஐந்து பேருடன் வாழும் பரத்தை. நீ என்னுடைய அரண்மனையில், என் ஆசை நாயகியாக வசதியாக வாழலாம்” என்று கூறிய படியே, தரதரவென்று இழுத்துச் சென்று தன்னுடைய தேரில் ஏற்றினான்.
இந்த செய்கையை அங்கு தவம் செய்து கொண்டிருந்த சில முனிவர்கள் கண்டு, அர்ச்சுனனிடமும், பீமனிடமும் கூறினர். அவர்கள் தேரை தொடர்ந்து போனார்கள். சற்று நேரத்தில் ஜெயத்ரதன் பிடிபட்டு விட்டான். அவனது தேர் சக்கரங்களை, அர்ச்சுனன் அம்பு வீசி உடைத்தான். பீமன், ஜெயத்ரதன் மீது பாய்ந்து அவனை தாக்கினான். இன்னும் கொஞ்சம் தாக்கினாலும், அவன் இறந்து போயிருப்பான். அதற்குள் யுதிஷ்டிரர் வந்து, “பீமா.. இவன் நம்முடைய ஒரே சகோதரியின் கணவன். இவன் செய்த தவறுக்காக, அவள் விதவையாக வேண்டாம்” என்று கூறி தடுத்துவிட்டார்.
யுதிஷ்டிரர் சொல்வது சரி என்பதாக, மற்ற சகோதரர்களும், திரவுபதியும் உணர்ந்தனர். அவர்களுக்குள் கோபமும், அவனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தாலும், அப்போதைக்கு ஜெயத்ரதனை மன்னித்து விட்டனர். ஆனால் பீமனால், ஜெயத்ரதனை அப்படியே விட முடியவில்லை. அவன், ஜெயத்ரதனின் தலையில் ஐந்து கொத்து முடிகளை மட்டும் விட்டுவிட்டு, மற்ற முடிகளை எல்லாம் பிடுங்கி எறிந்தான். அந்த ஐந்து கொத்து முடிகளும், பாண்டவர்களை ஜெயத்ரதனுக்கு நினைவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே பீமன் அவ்வாறு செய்தான்.
இந்த அவமானத்திற்கு பாண்டவர்களை பழி வாங்க காத்துக் கொண்டிருந்தான், ஜெயத்ரதன். அதற்காக குருச்சேத்திரப் போரை பயன்படுத்திக் கொண்டான். குருச்சேத்திரப் போரின் 13-வது நாளில், சக்கர வியூகத்திற்குள் மாட்டிக்கொண்டான், அர்ச்சுனனின் மகன் அபிமன்யு. அர்ச்சுனன் அந்த சமயத்தில் யுத்தகளத்தின் வேறு திசையில் இருந்ததால், பாண்டவர்களில் மற்ற நால்வரும், அபிமன்யுவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும், தான் பெற்றிருந்த வரத்தின் பயனாக முன்னேற விடாமல் தடுத்துநிறுத்தி விட்டான், ஜெயத்ரதன். இதனால் அபிமன்யு, கவுரவர்களால் கொல்லப்பட்டான்.
இதையறிந்த அர்ச்சுனன், அடுத்த நாள் போரில், சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனை கொல்வதாகவும், அப்படி செய்யாவிட்டால் தீயில் புகுந்து இறப்பதாகவும் சபதம் செய்தான்.
இதை பயன்படுத்தி அர்ச்சுனனை தீப்புக வைக்க துரியோதனன் முடிவு செய்தான். இதற்காக அடுத்த நாள் போரில் ஈடுபடாமல், ஜெயத்ரதனை போர்க்களத்திலேயே ஒளித்து வைத்தான். சூரியன் மறையும் நேரம் நெருங்கிவிட்டது. ஜெயத்ரதனைக் காணாமல் பாண்டவர்கள் கலங்கிப் போயினர். அப்போது கிருஷ்ணர், தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் சூரியனை தற்காலிகமாக மறையச் செய்தார். உண்மையிலேயே சூரியன் மறைந்ததாக நினைத்த ஜெயத்ரதன், வெற்றிக் களிப்புடன் மறைவிடத்தில் இருந்து வெளிப்பட்டான். அவனைக் கண்டதும், கிருஷ்ணர் தன்னுடைய சுதர்சன சக்கரத்தை விலக்கிக்கொண்டார். இப்போது மீண்டும் பகல் பொழுது நீண்டது.
ஜெயத்ரதன் வெளிப்பட்டு விட்டாலும், அவனைக் கொல்வதில் ஒரு சிக்கல் இருந்தது. அவனது தந்தை பெற்ற வரத்தின்படி, ஜெயத்ரதனின் தலையை யார் தரையில் தள்ளினாலும், அவர்களின் தலை சுக்கு நூறாக வெடித்து விடும். இதுபற்றி கிருஷ்ணர், அர்ச்சுனனுக்கு கூறினார். இதையடுத்து அர்ச்சுனன் விட்ட அம்பு ஒன்று, ஜெயத்ரதனின் தலையை கவ்விக் கொண்டு மேலே பறந்தது. அர்ச்சுனன் அடுத்தடுத்து மூன்று அம்புகளை செலுத்தி, அந்தத் தலையை ஊருக்கு வெளியே ஒரு யாக சாலையில் இருந்த ஜெயத்ரதனின் தந்தை மடியில் விழும்படி செய்தான். ‘என்னவோ தன் மடியில் விழுந்துவிட்டதே’ என்ற நினைப்பில், அதை உதறி தரையில் தள்ளினார், ஜெயத்ரதனின் தந்தை. அதனால் அவரது தலை வெடித்து சிதறியது.

பதவிகள் கிடைக்க, உதவிகள் கிடைக்க எதிரிகளை வெல்ல, கடன் சுமை குறைய, தம்பதியர் ஒற்றுமை காண என்று தமிழகம் முழுவதிலும் அதற்குரிய வழிபாட்டு தலங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு விதமான ஆலயங்களுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. உடல்நலம் சீராக வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு பலன் தரும். வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட திருப்புன்கூர் நந்தனாருக்கு நந்தி விலகிய இடம். சினம் தணிவதற்கு திருத்தணிகை.
தந்தை மகன் பிரச்சினை பல இல்லங்களில் ஏற்படும். அவற்றிற்கு புதிய தீர்வு காண முடியாமல் தத்தளிப்பவர்கள் யோக பலம் பெற்ற நாளில் சுவாமிமலை சென்று வழிபட்டு வருவது நல்லது.
இதேபோல பதவிகள் கிடைக்க, உதவிகள் கிடைக்க எதிரிகளை வெல்ல, கடன் சுமை குறைய, தம்பதியர் ஒற்றுமை காண என்று தமிழகம் முழுவதிலும் அதற்குரிய வழிபாட்டு தலங்கள் இருக்கின்றன. நமது சுய ஜாதகப்படி யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

தெய்வானை தோளினில் அமர்ந்த கிளி குமரன்.... குமரன்..... என்று படபடத்து சிறகை விரித்து பறந்தது. கண்கள் திறந்தாள் தெய்வானை. கந்தனின் கருணைவிழிகள் தேவத்தலைவன் இந்திரனின் தெய்வானை என இனம் கண்டு கொண்டது.
தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந்திறங்கினாள். தேன்காடு எனும் மதுவனத்தில் நுழைந்தாள். இந்திரன் மகளாயினும் எளியவளாக மாறினாள். பன்னீர் விருட்சத்தின் கீழ் அமர்ந்தாள். தியானத்திற்குரியவரை மனதில் நிறுத்தினாள். உள்ளம் குழைந்தது. முகத்தில் ஒளி கூடியது.
வெகு விரைவில் தவம் கனியும் என்பதாக பன்னீர் மரம் சிலிர்த்தது. இலைகள் முல்லை அரும்பு மழையாக பொலபொலவென கொட்டியது. தெய்வானை தேவி அழகாக ஓளிர்ந்தாள். காற்றில் மிதக்கும் இலக்கற்ற சிறகுபோல நடந்து தெய்வானை முன்பு நின்றான், கந்தன். தெய்வானை தோளினில் அமர்ந்த கிளி குமரன்.... குமரன்..... என்று படபடத்து சிறகை விரித்து பறந்தது. கண்கள் திறந்தாள் தெய்வானை. கந்தனின் கருணைவிழிகள் தேவத்தலைவன் இந்திரனின் தெய்வானை என இனம் கண்டு கொண்டது.
தெய்வக் காதல் காரணமற்று பொங்கியது. உள்ளத்தினிடையே உரையாடல் இருக்க வார்த்தைகளாக என்ன பேசுவது என கற்சிலையாகி நின்றனர். தெய்வானை கந்தனை நமஸ்கரித்து எழுந்தாள். கைகூப்பியபடியே வானவர் உறையும் தேவலோகம் சென்றாள். தவமிருந்து தெய்வானை கந்தனை தரிசித்த தலமே கந்தன்குடி.
தனிச்சந்நதியில் தெய்வானை தெற்கு நோக்கி நின்றகோலத்தில் கைகளில் கிளியோடு, தவம்முடித்த களை முகமெங்கும் பரவியிருக்க, சாந்தமும், நாணமும் ஒருசேரக் கலந்திருக்க நின்றகோலத்தில் அருள்கிறாள். இத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால், மயிலாடுதுறை - காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை கடந்தால் கந்தன்குடியை காணலாம்.

இந்த மந்திர ஜபத்தினால் ஜன வசியம், ராஜ வசியம், தன வசியம் போன்றவை கிட்டும். சகல செல்வங்களும் பெறலாம். முக்கியமாக ஈசனின் திருவருள் எளிதில் கிட்டும்.
அவ்யாத்கபர்த கலிதேந்து கல: கராத்த
ஸூலாக்ஷஸூத்ரக கமண்டலுடங்கரம்ஸ:
ரக்தாபவர்ணவஸநோருண பங்கஜஸ்த்தோ
நேத்ரத்ரயோல்லஸித வக்த்ரஸரோருஹோ
வ:ஊர்த்வ பட்.
பொதுப் பொருள்:
சண்டிகேஸ்வரர் மந்திரம் இது. அவர் சிவபக்தர். சிவாம்சம் பொருந்தியவர். நந்தியும், சண்டிகேஸ்வரரும் ஈசனருள் பெற்றோரில் அதிமுக்கியமானவர்கள். இவரை தரிசித்தால்தான் சிவதரிசன பலன் கிட்டும்.

தன்னைக் காட்டிலும் உயர்ந்த சிவபக்தி கொண்ட கழற்சிங்கரை நோக்கி, தலை வணங்கினார் செருத்துணை நாயனார். அப்போது சிவபெருமான் இடப வாகனத்தில் உமாதேவியுடன் அங்கு எழுந்தருளினார்.
7-6-2021 கழற்சிங்க நாயனார் குருபூஜை
பல்லவ மன்னர்களின் வழி வந்தவர், கழற்சிங்கர். இவர் சிறந்த சிவ பக்தராகவும் இருந்தார். சிவாலயங்களை தேடித் தேடி தரிசிப்பதில் அவருக்கு அலாதிப் பிரியம். ஒரு நாள் கழற்சிங்கருக்கு, திருவாரூர் பெருமானை தரிசிக்கும் எண்ணம் தோன்றியது. உடனடியாக மனைவியை அழைத்துக்கொண்டு, தன் பரிவாரங்கள் சூழ திருவாரூர் பயணப்பட்டார்.
அங்கு திருவாரூர் ஈசனை வழிபட்டு, அவர் முன்பாக தியானத்தில் அமர்ந்தார். அந்த நேரத்தில் கழற்சிங்கரின் பட்டத்து அரசி கோவிலை வலம் வரத் தொடங்கினாள். ஆலய மணி மண்டபத்தில் அமர்ந்து சிலர் இறைவனின் வழிபாட்டிற்காக மலர்களைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். அந்தப் பணியில் இருந்தவர்களின் முன்பு, மலர்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன. கண்கவர் வண்ணத்தையும், கருத்தைக் கவரும் நறுமணத்தையும் கொண்டிருந்த அந்த மலர்களால் ஈர்க்கப்பட்ட அரசி, அதில் ஒன்றிரண்டை எடுத்து மூக்கின் அருகில் வைத்து நறுமணத்தை நுகர்ந்தார்.
இறைவனுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தவர்களில் செருத்துணை நாயனாரும் ஒருவர். அவர் அரசியின் செயலைக் கண்டு ஆத்திரம் அடைந்தார். ‘இறைவனுக்கு மாலையாக செலுத்த வேண்டிய மலர்களை எடுத்து வாசம் பிடிப்பதா?’ என்று எண்ணியவர், அரசி என்றும் பாராமல் தன் கையில் இருந்த சிறு வாளைக் கொண்டு அவரது மூக்கை வெட்டினார்.
அரசி, வலியால் அலறித் துடித்தார். அவரது கதறல், ஆலயம் முழுவதும் எதிரொலித்தது. சத்தம் கேட்டு தியானத்தில் இருந்து விழித்த கழற்சிங்கர், தன் பணியாட்களை விட்டு, ‘என்ன சத்தம் அது?’ என்று பார்த்து வரும்படி பணித்தார். காவலர்கள் சென்று பார்த்தபோது, அங்கு அரசியார் மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். இதுபற்றி உடனடியாக கழற்சிங்கரிடம் தெரிவித்தனர். அவருக்கு ஆத்திரம் உண்டானது.
‘அரசி என்று தெரிந்தும், அவரின் மூக்கை ஒருவன் வெட்டியிருக்கிறான் என்றால் அவனுக்குத்தான் எத்தனை அகங்காரம்?’ என்று நினைத்தவர், மணிமண்டபத்தை வந்தடைந்தார். அங்கு தன் மனைவியின் அருகில் ருத்ராட்சம் அணிந்து, காவியாடை தரிசித்திருந்த ஒருவர் கையில் சிறிய வாளுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார்.
‘ஒரு சிவ பக்தர், கோபம் கொள்ளும் வகையில் ஏதோ நடந்திருக்கிறது’ என்பதை உணர்ந்த கழற்சிங்கர், “இந்தக் கொடிய செயலைச் செய்தது யார்?” என்று கேட்டார். அதற்கு செருத்துணை நாயனார், “மன்னா! அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்தார். அதன் காரணமாகவே அவரது மூக்கை நான் துண்டிக்கும் நிலை ஏற்பட்டது” என்றார்.
தன் மனைவி செய்த பிழையை அறிந்து கொண்ட மன்னன், செருத்துணை நாயனாரிடம், “ஐயனே! நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை. கையில் எடுக்காமல் மலரை எவ்விதம் முகர்ந்து பார்க்க இயலும். எனவே, முதலில் தவறு செய்த கைக்கு தாங்கள் தண்டனை கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே!” என்று கூறியபடியே, தன்னுடைய உடைவாளை எடுத்து தன் மனைவியின் வலது கரத்தை வெட்டினார்.
தன்னைக் காட்டிலும் உயர்ந்த சிவபக்தி கொண்ட கழற்சிங்கரை நோக்கி, தலை வணங்கினார் செருத்துணை நாயனார். அப்போது சிவபெருமான் இடப வாகனத்தில் உமாதேவியுடன் அங்கு எழுந்தருளினார். பட்டத்து அரசியின் துன்பத்தை நீக்கி அருளினார். மேலும் மன்னனின் சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் மெச்சிய இறைவன், அனைவருக்கும் ஆசி கூறி மறைந்தார்.

இயேசு தன் சீடர்களிடம் திரும்பி, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். கடவுளுடைய அரசாங்கத் துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட, ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம்” என்றார்.
கலிலேயாவில் இருந்து புறப்பட்டு, யோர்தான் நதியைக் கடந்து, யூதேயாவின் எல்லைப் பகுதிகளுக்குப் போய் மக்கள் மத்தியில் போதனை செய்தார் இயேசு. அவரது புகழ் ஏற்கனவே பரவியிருந்ததால் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். தன்னை நாடிவந்த அனைவரையும் அவர் குணமாக்கினார். இயேசுவின் பின்னால் திரளான மக்கள் செல்வதைக் கண்ட யூத மத அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பரிசேயர்கள், மக்களின் முன்பாக இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டே அவரைத் தவறானவர் என நிறுவ முயன்றுவந்தனர்.
ஒரு கிராமத்தில் இயேசு மக்கள் மத்தியில் இருந்தபோது, பரிசேயர்கள் அவரிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் இயேசுவிடம், “தன் மனைவியை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒருவர் விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு, “கடவுள், தொடக்கத்தில் மனிதர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? அதன் காரணமாகவே, மனிதன் தன்னுடைய தாய், தந்தையை விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே உடலாக இருப்பார்கள் என்று இறவைன் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? அதன்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள். அதனால், கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருப்பாராக” என்று கூறினார்.
உடனே அந்தப் பரிசேயர், “அப்படியானால், விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஏன் கூறினார்?” என்று கேட்டு இயேசுவை மடக்கினார்.
அதற்கு இயேசு, “உங்களுடைய இதயம் இறுகிப்போயிருந்த காரணத்தால்தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்ய அவர் அனுமதித்தார். ஆனால், தொடக்கத்திலிருந்து அவ்வாறு இல்லை. நான் உங்களுக்குச் சொல்கிறேன், பாலியல் முறைகேட்டைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன், முறைகேடான உறவுகொள்கிறான்” என்று சொன்னார். இயேசு இப்படிக் கூறியதும் பதில் ஏதும் கூறாமல், அவரைத் தொடர்ந்து சோதிக்க முடியாமல் பரிசேயர்கள் கிளம்பிச் சென்றனர்.
பரிசேயர்கள் நகர்ந்து சென்றதும் சீடர்கள் இயேசுவிடம், “திருமண பந்தம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்று கூறினார்கள்.
அதற்கு இயேசு, “திருமணம் செய்யாமல் இருக்கும் வரம் பெற்றவர்களைத் தவிர வேறு யாராலும் நீங்கள் கூறுவதுபோல் நடக்க முடியாது. சிலர் பிறவிக் குறைபாட்டால் திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்; வேறு சிலர் மனிதர்களால் அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; இன்னும் சிலர் பரலோக அரசாங்கத்துக்காகத் தங்களையே அர்ப்பணித்து, திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்க முடிந்தவர்கள் அப்படி இருக்கட்டும்” என, துறவறம் குறித்துத் தெளிவாக எடுத்துக் கூறினார்.
அப்போது அவ்வூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இயேசுவிடம் ஓடிவந்து, “போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “முடிவில்லாத வாழ்வைப் பெற விரும்பினால், கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடி” என்று அவனிடம் கூறினார்.
“எந்தக் கட்டளைகளை?” என்று அவன் ஆவலுடன் கேட்டான்.
இயேசு அவனிடம், “கொலை செய்யக்கூடாது, மனைவிக்குத் துரோகம் செய்யக்கூடாது, திருடக்கூடாது, பொய்சாட்சி சொல்லக்கூடாது, உன் தாய், தந்தைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும், உன்னை நீ நேசிப்பதுபோல மற்றவர்களையும் நேசி ஆகிய கட்டளைகளை” என்று கூறினார்.
அதற்கு அந்த இளைஞன், “இவை அனைத்தையும் நான் ஏற்கனவே கடைப்பிடித்து வருகிறேன்; என்னிடம் இன்னும் என்ன குறை இருக்கிறது?” என்று இயேசுவை நோக்கி தன் கரங்களைக் குவித்துக் கேட்டான்.
அதற்கு இயேசு, “நீ குறையில்லாதவனாக இருக்க விரும்பினால், போய் உன் சொத்துகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா. அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்” என்று கூறினார். இதைக் கேட்டு அந்த இளைஞன் துக்கத்தோடு திரும்பிப் போனான். ஏனென்றால், அவனிடம் நிறைய சொத்துகள் இருந்தன.

அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 19-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.
அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 19-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக 15-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. 19-ந் தேதி தேதி காலை 10.45 மணி முதல் காலை 11.15 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.
தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் வளாகத்தில் திருச்சி திருவிழா மற்றும் நீதிமன்றம் நடத்தப்படுகின்றன. 22-ந் தேதி மாலை 4 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஸ்ரீவாரி ஆர்ஜிதசேவையும், கல்யாண உற்சவமும் தனிமையில் நடைபெறும். 27-ந் தேதி காலை 8.30 மணி முதல் 10 மணி பிரசன்னா வெங்கடேஸ்வர சாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சாமிகளுக்கு பூஜைகள் நடைபெறும். 10 மணி முதல் காலை 10.15 மணி வரை, கோவில் வளாகத்தில் கங்கையில் தனியாக சக்கர ஸ்னானம் நடக்கிறது. இரவு 7 மணி முதல் 7.30 மணிக்குள் கொடி இறக்கம் நடைபெறும்.

படைத்தவனை மறந்து அல்லது மறுத்து வாழ்வது மனிதன் தன் வாழ்வில் செய்யும் மிகப்பெரிய பிழை ஆகும். இறைவன் கேட்கின்றான்: “மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?” (திருக்குர்ஆன் 82:6)
இஸ்லாம், மனிதர்களுக்கு செய்யும் சேவையை மாபெரும் அறச்செயலாக கருதுகிறது. அது கடமைகளை இரண்டாக பிரிக்கிறது. ஒன்று படைத்த இறைவனுக்கு நன்றிக்கடனாக ஆற்ற வேண்டிய கடமைகள், மற்றொன்று இறைவனின் படைப்புகளுக்கு ஆற்ற வேண்டிய சேவை, ஒத்துழைப்பு மற்றும் உதவிகள்.
தற்போதைய தலைமுறை சந்திக்காத ஓர் அச்சுறுத்தல்தான் கோவிட்-19 என்கின்ற சர்வதேச தொற்று நோய் பரவல். ஒரு வருடத்திற்கு அதிகமாக இந்த நோயின் வீரியம், கவலை, பீதி, மக்களிடையே அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்போராட்டத்தில் மருத்துவர்களின், செவிலியர்களின் கடுமையான பங்களிப்புடன், சமூக சேவகர்கள், பொதுமக்களும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மருத்துவ வசதி வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதும், மனதால் பாதிக்கப்பட்டவர்களை மனநல ஆலோசகர் களுடன் இணைப்பதும் நமது பணிகளில் ஒன்றாகும். வெகுஜன மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்குதல், தடுப்பூசி போட வழிகாட்டுதல் போன்றவை பொறுப்புள்ள மனிதர்களின் கடமையாகும். இவை அனைத்தும் நாம் பாதுகாப்பு எல்லைக்குள் இருந்து அரசு வழிக்காட்டல், ஆதரவுடன் பணிபுரியலாம்.
நபிகள் நாயகம் கூறினார்கள்: “யார் மக்களுக்குக் கருணை காட்டுவதில்லையோ அவருக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை”.
“பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச் சிறந்த தர்மமாகும்”.
பல நெருக்கடிகளுக்குக்கிடையே இந்த தொற்று நோய் பல்வேறு மனதை தொடும் மனிதநேய சம்பவங்களை பதித்து இருக்கிறது. தனது உயிரையே பணயம் வைத்து இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை நிறைவேற்றும் தியாகிகளை அடையாளம் காட்டியிருக்கிறது. நிராசையான இந்த காலத்தில் ஓர் நம்பிக்கை ஒளியை ஜொலிக்க வைத்திருக்கிறது.
இத்தருணத்தில் நோய்க்கு நிவாரணமாக, மனதிற்கு ஆறுதலாக, இன்னொரு முக்கியமான அம்சத்தின் பக்கமும் நாம் கவனம் செலுத்த கடமைப்பட்டிருக்கின்றோம். மருத்துவ உலகம் மிக உச்சத்தில் இருக்கும் காலத்தில் இந்த நோய்க்கிருமி மனிதனுக்கு மிகப்பெரிய சவாலை விட்டிருக்கிறது. மனித இயலாமை மற்றும் பலவீனங்களை சுட்டிக்காட்டும் மிகப்பெரிய பாடத்தை இத்தலைமுறை பயின்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மனித இழப்புகளுக்கும், சோகங்களுக்கும் அருமருந்தாக மனிதன், தன்னைப் படைத்த இறைவனின் பக்கம் திரும்ப வேண்டும். ஆன்மிக பலத்தை பெற முயற்சிக்க வேண்டும்.
படைத்தவனை மறந்து அல்லது மறுத்து வாழ்வது மனிதன் தன் வாழ்வில் செய்யும் மிகப்பெரிய பிழை ஆகும். இறைவன் கேட்கின்றான்: “மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?” (திருக்குர்ஆன் 82:6)
வாருங்கள், படைத்தவனின் பக்கம் திரும்புவோம். நோய் கொடுமையில் இருந்து நம்மை பாதுகாக்க, ஏக இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்.
நசீர் அதாவுல்லாஹ், சென்னை.

சீனிவாசமங்கபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் கடந்த 29-ந் தேதி தொடங்கி நடந்து வந்த வசந்த உற்சவ விழா நிறைவடைந்தது.
சீனிவாசமங்கபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் கடந்த 29-ந் தேதி வசந்த உற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் விழா நடைபெற்றது. 3-வது நாளான நேற்று நிறைவு விழா நடந்தது. காலையில் தோமலசேவா, கொலு, பஞ்சாங்க ஸ்ரவனம் மற்றும் சஹஸ்ரநாம அர்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரை வெங்கடேஸ்வர சாமி, சீதாராம லட்சுமணர், அஞ்சனேயர், ருக்மணி, சத்தியபாமா சமேத கிருஷ்ணர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் கோவில் துணை செயல் அலுவலர் சாந்தி, உதவி செயல் அலுவலர் தனஞ்சயுடு, கண்காணிப்பாளர் செங்கல்வராயலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜூன் மாதம் 1-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
1-ம் தேதி செவ்வாய் கிழமை :
* தேய்பிறை சஷ்டி
* சந்திராஷ்டமம் - பூசம், புனர்பூசம்
2-ம் தேதி புதன் கிழமை :
* தேய்பிறை சப்தமி
* பெரிய நகசு
* சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்
3-ம் தேதி வியாழக்கிழமை :
* தேய்பிறை அஷ்டமி
* சந்திராஷ்டமம்- ஆயில்யம், மகம்
4-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* தேய்பிறை தசமி
* வாஸ்து நாள்
* சுபமுகூர்த்தநாள்
* சந்திராஷ்டமம் - மகம், பூரம்
5-ம் தேதி சனிக்கிழமை :
* சித்தயோகம்
* தத்தாத்திரய ஜெயந்தி
* சந்திராஷ்டமம் - உத்திரம்
6-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சர்வ ஏகாதசி
* சந்திராஷ்டமம் - ஹஸ்தம்
7-ம் தேதி திங்கள் கிழமை :
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் - சித்திரை
* தேய்பிறை சஷ்டி
* சந்திராஷ்டமம் - பூசம், புனர்பூசம்
2-ம் தேதி புதன் கிழமை :
* தேய்பிறை சப்தமி
* பெரிய நகசு
* சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்
3-ம் தேதி வியாழக்கிழமை :
* தேய்பிறை அஷ்டமி
* சந்திராஷ்டமம்- ஆயில்யம், மகம்
4-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* தேய்பிறை தசமி
* வாஸ்து நாள்
* சுபமுகூர்த்தநாள்
* சந்திராஷ்டமம் - மகம், பூரம்
5-ம் தேதி சனிக்கிழமை :
* சித்தயோகம்
* தத்தாத்திரய ஜெயந்தி
* சந்திராஷ்டமம் - உத்திரம்
6-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சர்வ ஏகாதசி
* சந்திராஷ்டமம் - ஹஸ்தம்
7-ம் தேதி திங்கள் கிழமை :
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் - சித்திரை
கேரள மாநிலம், திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமருக்கு தனியாக திருக்கோவில் அமைந்திருகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலம், திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமருக்கு தனியாக திருக்கோவில் அமைந்திருகிறது. அதில் வியப்பொன்றும் இல்லை. ஏனெனில் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளத்தை, உருவாக்கியதே பரசுராமர்தான் என்று புராணங்கள் சொல்கின்றன.
தல வரலாறு
ஜமத்கனி முனிவர் - ரேணுகாதேவி தம்பதியின் 5 மகன்களில், கடைசியாக பிறந்தவர், பரசுராமர். இவர் மகாவிஷ்ணுவின் 6-வது அவதாரம் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவபெருமானிடம் இருந்து ‘பரசு’ என்னும் கோடரியை பெற்றதால், ‘பரசுராமர்’ என்று அழைக்கப்பட்டார்.
ஒரு நாள் ரேணுகாதேவி, தண்ணீர் எடுப்பதற்காக ஆற்றுக்குச் சென்றார். ஆற்றில் தண்ணீர் எடுத்தபோது, வானத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கந்தர்வனின் நிழல், அந்த ஆற்று நீரில் தெரிந்தது. அந்த நிழல் உருவத்தைப் பார்த்து ஒரு கணம் சலனப்பட்டார், ரேணுகாதேவி. இந்தக் காட்சி, ஆசிரமத்தில் தியானத்தில் இருந்த ஜமத்கனி முனிவரின் மனதில் தோன்றி மறைந்தது.
ஜமத்கனி முனிவர், தனது மகன் பரசுராமரை அழைத்து, “உன் தாயின் தலையை துண்டித்து விடு” என்று ஆணையிட்டார். தந்தையின் ஆணையைக் கேட்டப் பரசுராமர், எந்த எதிர் கேள்வியும் கேட்காமல், தாயின் தலையை வெட்டினார்.
தன் ஆணையை எதிர்ப்பின்றி நிறைவேற்றிய மகனுக்கு, ஏதாவது வரம் அளிக்க நினைத்தார், ஜமதக்னி முனிவர். பரசுராமரிடம் “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு பரசுராமர், “தந்தையே, உங்கள் ஆணைப்படி தங்கள் மனைவியைக் கொன்று விட்டேன். ஆனால், தற்போது நான் தாயை இழந்து நிற்கிறேன். ஆகையால் என் தாயை உயிர்ப்பித்து தாருங்கள்” என்று வேண்டினார். ஜமத்கனி முனிவரும், எந்த மறுப்பும் சொல்லாமல், அவரது ஆசையை நிறைவேற்றினார்.
பின்னொரு நாளில் ஜமத்கனி முனிவருடன் பகை கொண்டிருந்த அரசன் ஒருவன், யாருமில்லாத வேளையில் ஆசிரமத்துக்குச் சென்று, கண்களை மூடி தியானத்தில் இருந்த ஜமத்கனி முனிவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்று விட்டான். தாயாரும் உயிர் நீத்தார். இதனை அறிந்த பரசுராமர், அந்த அரசனைத் தேடிச் சென்று கொன்றார். அத்துடன், அரச குலத்தினர் அனைவரையும் தானே அழிப்பதாக சபதம் செய்தார். அதே வேளையில், திருமணம் செய்து கொண்டிருக்கும் அரசர்களை மட்டும் ஒரு வருடம் வரைக் கொல்வதில்லை என்று முடிவு செய்து கொண்டார்.
தான் செய்த சபதத்தின்படி அரச குலத்தைச் சேர்ந்த பலரையும் தேடிச்சென்று சண்டையிட்டு, அவர்களை அழித்துக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது இந்த தொடர் கொலை, அவருக்கு துன்பத்தை தந்தது. அதிலிருந்து விடுபட விரும்பியவர், இனி எவருடனும் போர் செய்வதில்லை என்று முடிவெடுத்து, இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்தினார். தான் செல்லும் இடங்களிலெல்லாம் இறையுருவங்களை நிறுவி, அதற்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்தார்.
அப்படி ஒருநாள், கேரள மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த கரமனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்த ஆற்றில் அவருக்கு சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அந்தச் சிவலிங்கத்தை ஆற்றின் கரைப்பகுதியில் நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். அப்போது அவர், தன் தாயைக் கொன்ற பாவம், பல அரசர்களைக் கொன்ற பாவமெல்லாம் நீங்கியதாக உணர்ந்தார். அந்தக் கோவிலிலேயே தன் தாயின் ஆன்மா உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பிதுர் தர்ப்பணம் செய்தார். அந்தச் சடங்கிற்குப் பின்பு, அவருடைய அம்மாவின் ஆன்மாவுக்கு உயர்வு கிடைத்தது தெரிந்து மகிழ்ந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த மன வருத்தமெல்லாம் மறைந்து போனது.
சிவபெருமானை வழிபட்ட அந்த இடம்தான் திருவல்லம் திருக்கோவிலாக தற்போது மாறியிருக்கிறது. இங்கு பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்ட பீடம் ஒன்று இருக்கிறது. இந்தப் பீடத்தின் அருகில் பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை ஒன்று இருக்கிறது. இங்குள்ள பீடத்திற்கு தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
ஆலய அமைப்பு
கரமனை ஆறு, கிள்ளியாறு, பார்வதிபுத்தனார் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சேருமிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இங்குள்ள சிவபெருமானை பரசுராமரும், விஷ்ணுவின் தோற்றமான வேதவியாசரை விபா கரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் நிறுவினர் என்று இக்கோவிலுக்கான தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் பகவதி, கணபதி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆலயம் தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தில் ‘திருவோணம் ஆறாட்டு’ மற்றும் ‘பரசுராமர் ஜெயந்தி’ எனும் இரு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
அமைவிடம்
கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் நகரில் இருந்து கோவளம் கடற்கரைக்குச் செல்லும் புறவழிச் சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, திருவல்லம் திருத்தலம்.
பெயர்க்காரணம்
திருவல்லம் பரசுராமர் கோவில் விஷ்ணுவின் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் விஷ்ணுவின் உடல் பகுதியாகவும், திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோவில் விஷ்ணுவின் கால் பகுதியாகவும் விளங்குவதாக ஐதீகம். ஒரே நாளில் இம்மூன்று தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்குவது அனைத்து நலன்களையும், வளங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் தலைப் பகுதி தற்போது திருவல்லம் என்றழைக்கப்படும் பகுதி வரை நீண்டிருந்ததாம். எனவே திருவல்லம் என்ற இடத்தை தமிழில் ‘தலை’ என்று பொருள் தரும் மலையாள மொழிச் சொல்லான ‘வல்லம்’ என்ற பெயரில் அழைத்தனர். இறைவனின் தலைப்பகுதி என்பதைத் தெரிவிக்கும் விதமாகத் ‘திருவல்லம்’ என்கின்றனர்.