என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பெருமாள் சயனத்தில் கண்மூடி நித்திரையில் இருக்கிறார். கண்ணை மூடியிருந்தாலும் எல்லாம் அறிபவர் அவர். மனிதர்கள் உறங்கும்போது, கனவு காண்கிறார்கள்.
பெருமாள் சயனத்தில் கண்மூடி நித்திரையில் இருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர், திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபன், திருவட்டாரில் (கன்னியாகுமரி) ஆதிகேசவர் ஆகியோரின் அரிய தரிசனத்தைப் பெறலாம். இந்த நித்திரையை "அறிதுயில்' என்பர்.
கண்ணை மூடியிருந்தாலும் எல்லாம் அறிபவர் அவர். மனிதர்கள் உறங்கும்போது, கனவு காண்கிறார்கள். கனவில் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாம் வருகிறார்கள். அவர்களுடன் கனவு காண்பவர் உரையாடுவார், விளையாடுவார்...இன்னும் அன்றாட வாழ்வில் என்னென்ன செயல்கள் உண்டோ, அத்தனையும் செய்கிறார்.
விழித்துவிட்டால் அத்தனையும் கற்பனை போல கலைந்து விடுகிறது. விஷ்ணுவும், கற்பனா சிருஷ்டியாகவே உலகையும், உயிர்களையும் படைக்கிறார். இதனால் தான் கண்மூடியிருப்பது போல நடிக்கிறார். இதற்கு "யோக நித்திரை' என்றும் யெபர்.
மனிதனின் சாதாரணமான தூக்கம் போல் அல்லாமல், இதை ஒரு தவநிலை என்றும் சொல்லலாம். "அரிதுயில்' என்று சொன்னாலும் தவறல்ல. விஷ்ணுவை "ஹரி' என்கிறோம். இதை தமிழில் "அரி' என்பர். அரியின் தூக்கம் அரிதுயில் ஆகிறது.

ஏழு மலைகளைக் கடந்து அமர்ந்திருக்கும் காரணத்தால், இவரை ‘ஏழுமலையான்’ என்றும் அழைக்கிறார்கள். ஏழுமலையான் அருள்பாலிக்கும் திருப்பதியைப் பற்றி சில அரிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
கலியுகத்தில் பணக்கார தெய்வமாக கருதப்படுபவர், திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி ஆவார். ஏழு மலைகளைக் கடந்து அமர்ந்திருக்கும் காரணத்தால், இவரை ‘ஏழுமலையான்’ என்றும் அழைக்கிறார்கள். ஏழுமலையான் அருள்பாலிக்கும் திருப்பதியைப் பற்றி சில அரிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
* திருப்பதி கோவிலில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில், அபூர்வமான பாறைகள் காணப்படுகிறது. இந்தப் பாறைகள் ‘சிலாதோரணம்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பாறைகள் இங்கு மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்பாறைகளின் வயது, 250 கோடி வருடம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாறைகளும், ஏழுமலையானின் திருமேனியும் ஒரே விதமானவை என்கிறார்கள்.
* பொதுவாக ஒரு சிலை வடிக்கப்படுகிறது என்றால், அந்தச் சிலையில் அதை வடித்ததற்கான சுவடு இல்லாமல் இருக்காது. சிற்பியின் உளிபட்ட இடம் எங்காவது தென்பட்டே தீரும். உலோகச் சிலையாக இருந்தால் கூட, அதை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஆனால் கற்சிலையான ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எந்தவித அடையாளத்தையும் நாம் பார்க்க முடியாது. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும், அது சுரசுரப்பாகவே இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம், மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்கிரகத்தில் வடிக்கப்பட்ட நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் போன்ற அதிக வேலைப்பாடு உள்ளவை கூட பளபளப்பாக இருக்கின்றன.
* திருப்பதி திருக்கோவில் மடப்பள்ளி (சமையல்அறை) மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் அதிக அளவில் தயார் செய்யப்படுகின்றன.
* பெரும் பணக்கார தெய்வமாக இருந்தாலும், ஏழுமலையானுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் வெறும் தயிர் சாதம் தான். அந்த நைவேத்தியத்தையும் மண் சட்டியில் வைத்துதான் படைப்பார்கள். இதற்காக தினமும் ஒரு புதிய மண் சட்டி வாங்கப்படுகிறது. தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்ப்பக்கிரகத்திற்குள் செல்லாது. தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட பாத்திரங்களுக்கும் இந்த கர்ப்பக்கிரகத்திற்குள் அனுமதியில்லை. ஏழுமலையானுக்கு படைக்கப்பட்ட தயிர்சாதமும், அது வைக்கப்பட்ட மண் சட்டியும் ஒரு பக்தனுக்கு கிடைக்கப்பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியம்.
* வெள்ளிக்கிழமைகளில், ஏழுமலையானுக்கு அர்ச்சனை செய்ய வில்வ இலையை பயன்படுத்துகிறார்கள். மார்கழி மாத அர்ச்சனை யிலும் வில்வ இலை இடம் பிடிக்கிறது. சிவராத்திரி அன்று ‘ஷேத்திர பாலிகா’ என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவருக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறும். அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறப்பதாக ஐதீகம். ஏழுமலையானின் தல விருட்சம், புளிய மரம்.
* திருமலை திருப்பதியில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 கல்வெட்டுகள், பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 169 கல்வெட்டுக்கள், சாளுவ வம்ச மன்னர்களின் காலத்தில் உள்ளவை. 229 கல்வெட்டுகள், கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்தவை. 251 கல்வெட்டுக்கள், அச்சுதராயர் காலத்தைச் சேர்ந்தவை. 147 கல்வெட்டுகள், சதாசிவராயர் காலத்தவை. 135 கல்வெட்டு கள், கொண்டை வீடு அரசர் காலத்தவை. இங்குள்ள கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுகள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில்தான் உள்ளன.

கர்வம் தோன்றும்போது கடமையும் பொறுப்புக்களும் மறந்துவிடுகின்றன. இருவருடைய பக்தியும் அளவுகடந்தது, சந்தேகமேயில்லை. ஆனால், இறைவன் ஒருவனே என்பதை உணர மறந்துவிட்டீர்கள்.
அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது.
“இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை.
வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?”
எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும் என்று விரும்பினான்.
பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராமநாமம் ஜபம் செய்துகொண்டிருப்பதை பார்க்கிறான்.
அவரிடம் சென்று, “ஏய்… வானரமே… உன் இராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே… ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்?” என்றான் எகத்தாளமாக.
தியானம் கலைந்த அனுமன், எதிர் நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்துகொள்கிறார்.
அவன் கர்வத்தை ஒடுக்க திருவுள்ளம் கொள்கிறார்.
“சரப்பாலம், என் ஒருவன் பாரத்தையே தாங்காது எனும்போது எப்படி ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும்?”
“ஏன் முடியாது… நீ நின்றால் தாங்கும்படி இந்த நதியின் குறுக்கே நான் ஒரு பாலம் கட்டுகிறேன்.
நீயல்ல… எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் உறுதியாக நிற்கும்” என்கிறான் அர்ஜூனன்.
தனது காண்டீபதின் சக்தி மேல் அபார நம்பிக்கை கொண்டிருந்த அர்ஜூனன், “பந்தயத்தில் நான் தோற்றால், வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறப்பேன்” என்கிறான்.
“நான் தோற்றால், என் ஆயுளுக்கும் உனக்கு அடிமையாக உன் தேர்க்கொடியில் இடம்பெறுவேன்” என்கிறான் அனுமன்.
அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத் துவங்கினான்.
அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து இராமநாமம் ஜெபம் செய்யத் தொடங்கினான்.
அர்ஜூனன் பாலத்தை கட்டி முடித்ததும், அனுமன் அதன் மீது ஏற தனது காலை எடுத்து வைத்தது தான் தாமதம், பாலம் தகர்ந்து சுக்குநூறானது.
அனுமன், ஆனந்தக் கூத்தாட அர்ஜூனன் வெட்கித் தலைகுனிந்தான்.
“பார்த்தாயா என் இராமனின் சக்தியை?” என்கிறான் அனுமன் கடகடவென சிரித்தபடி.
தனது வில் திறமை இப்படிபோயாகிப் போனதே என்ற வருத்தம் அவனுக்கு.
“போரில் வெற்றி பெற பாசுபாதாஸ்திரத்தை தேடி வந்த நான், தேவையின்றி ஆணவத்தால் ஒரு வானரத்திடம் தோற்றுவிட்டேனே…
நான் உயிர் துறந்தால் என் சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள்… கிருஷ்ணா என்னை மன்னிக்கவேண்டும்” என்று கூறியவாறு சொன்னது போலவே வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறக்க எத்தனித்தான்.
அனுமன் தடுத்தபோதும், தனது பந்தயத்திலிருந்து பின்வாங்க அவன் தயாராக இல்லை.
அர்ஜூனன் குதிக்க எத்தனித்தபோது, “என்ன நடக்கிறது இங்கே… என்ன பிரச்சனை?” என்று ஒரு குரல் கேட்டது.
குரல் கேட்ட திசையில், ஒரு அந்தணர் தென்பட்டார்.
இருவரும் அவரை வணங்கி, நடந்ததை கூறினார்.
“பந்தயம் என்றால் சாட்சி என்ற ஒன்று வேண்டும்.
சாட்சியின்றி நீங்கள் பந்தயத்தில் ஈடுபட்டதால் அது செல்லாது.
மற்றொருமுறை நீ பாலம் கட்டு…
மற்றொருமுறை இந்த வானரம் அதை உடைத்து நொறுக்கட்டும்…
பிறகு முடிவு செய்துகொள்ளலாம் யார் பலசாலி என்று” அந்தணர் கூற இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
இரண்டாவது முறை கட்டுவதால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்று கருதிய அர்ஜூனணன் கிருஷ்ணனரை நினைத்துக்கொண்டு “கிருஷ்ண, கிருஷ்ண” என்று சொல்லியபடி பாலம் கட்டினான்.
தன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு. இருப்பினும் முதல்முறை பாலத்தை உடைத்திருந்தபடியால், கர்வம் தலைக்கு ஏறியிருந்தது.
இம்முறை இராம நாம ஜெபம் செய்யவில்லை.
அர்ஜூனன் பாலம் கட்டியவுடன் அதில் ஏறுகிறார்… நிற்கிறார்… ஓடுகிறார்… ஆடுகிறார்… பாலம் ஒன்றும் ஆகவில்லை.
“பார்த்தாயா எங்கள் கண்ணனின் சக்தியை ? நீயே சொல் யார் இப்போது பெரியவர்? எங்கள் கண்ணன் தானே?”
அர்ஜூனனின் கேள்வியால் அனுமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
அங்கே சாட்சியாக நின்றுகொண்டிருந்த அந்தணரை நோக்கி வந்து “யார் நீங்கள்?” என்று கேட்கிறார்.
அந்தணரின் உருவம் மறைந்து அங்கு சங்கு சக்ரதாரியாக பரந்தாமன் காட்சியளிக்கிறார்.
இருவரும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றனர்.
“நீங்கள் இருவருமே தோற்கவில்லை.
ஜெயித்தது கடவுள் பக்தியும் நாம ஸ்மரணையும் தான்.
அர்ஜூனன் முதல் தடவை பாலம் கட்டும்போது, தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்கிற அகந்தையில் என்னை மறந்து பாலம் கட்டினான்.
அனுமன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று இராம நாமத்தை ஜபித்தான். இராம நாமம் தோற்காது.
எனவே முதல் முறை அனுமன் வென்றான்.
இரண்டாம் முறை, அகந்தை ஒழிந்த அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான்.
அனுமன், தன் பலத்தாலே தான் வென்றோம் என்று கருதி இராமநாமத்தை மறந்தான்.
எனவே இரண்டாம் முறை அர்ஜூனன் வென்றான்.
எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே தவிர நீங்கள் அல்ல!!” என்றார்.
கர்வம் தோன்றும்போது கடமையும் பொறுப்புக்களும் மறந்துவிடுகின்றன.
எனவே தான் சும்மா இருந்த அனுமனை சீண்டி பந்தயத்தில் இறங்கினான் அர்ஜூனன்.
“உங்கள் இருவருடைய பக்தியும் அளவுகடந்தது, சந்தேகமேயில்லை.
ஆனால், இறைவன் ஒருவனே என்பதை உணர மறந்துவிட்டீர்கள்.
அதை உணர்த்தவே இந்த சிறிய நாடகம்.
மேலும் அர்ஜூனா, இந்த வானரன் வேறு யாருமல்ல, சிரஞ்சீவி அனுமனே!”
உடனே அனுமன் தனது சுய உருவைக் காட்டுகிறார்.
அர்ஜூனன், அவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்கிறான்.
அனுமனை நோக்கி திரும்பிய கிருஷ்ணர், “ஆஞ்சநேயா, பாரதப்போரில் அர்ஜூனனுக்கு உன் உதவி தேவை.
நீ போர் முடியும்வரை அவன் தேர் கொடியில் இருந்து காக்கவேண்டும்.
அதன் பொருட்டே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன்.
நீ இருக்கும்வரை அந்த இடத்தில எந்த மந்திர தந்திரங்களும் வேலை செய்யாது!”
“அப்படியே ஆகட்டும் பிரபோ!” என்று அவரிடம் மறுபடியும் ஆசிபெற்றான் அனுமன்.
இன்றும் பாரதப் போர் சம்பந்தப்பட்ட படங்களில் அர்ஜூனனின் தேரில் அனுமனின் உருவம் இருப்பதை பார்க்கலாம்.
அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன் இடம் பெற்ற கதை இது தான்.

நாம் தினமும் குளிக்கும்போது , நம் உடலில் வந்து அமர்வதற்கு மகாலக்ஷ்மியும் அவரது அக்கா மூதேவியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வாசலில் காத்துகொண்டு நிற்பார்களாம்.
ஒருவரை நாம் திட்டும் போது, மூதேவியே என்கிறோம். எதிர்மறை சக்திக்கு உதாரணமாக மூதேவியை நாம் குறிப்பிட்டாலும், தென்னிந்தியாவில் ஒரு காலத்தில்,மூதேவி என்று அழைக்கப்படும் மூத்த தேவி வழிபாட்டுக்கு உரியவளாக இருந்திருக்கிறாள்.
பத்ம புராணத்தின் படி, தேவர்களும் ,அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது, அதனிலிருந்து வெளிபட்ட ஆலகால விஷத்திலிருந்து பிறந்தவளே மூத்த தேவி என்றும் அதன்பிறகு வெளிபட்ட அமிர்தத்திலிருந்து பிறந்தவள் ஸ்ரீதேவியாகிய லக்ஷ்மி என்றும் தெரிகிறது. ஸ்ரீ தேவியாகிய லக்ஷ்மிக்கு முன் தோன்றியவள் என்பதால், இவள் மூத்த தேவி என்றழைக்கப்படுகிறாள். இது தான் பின் நாளில் மூதேவி என்று மாறிவிட்டது என்கிறார்கள். அவளுடைய தோற்றத்தைப் பொறுத்த வரையில், ஆகம நூல்களின் படி மூத்த தேவி,அகோரமான மற்றும் அலட்சணமான தோற்றத்தை உடையவள் என்றும், காக்கை கொடியினை ஏந்தியவள் என்றும் கூறப்படுகின்றாள்.
எங்கெல்லாம் துர்வாடை, அழுக்குத்துணிகள்,துன்பம்,புலம்பல்,அலங்கோலமாக ஆடுதல், எதிர்மறையான எண்ணங்கள், அடிக்கடி கொட்டாவி விடுதல், தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இருக்கிறதோ,இவை அனைத்துமே மூதேவிக்குப் பிடித்த இடங்களாகும். நமது வீட்டில் மூதேவி தங்காமல் இருப்பதற்கு, தீபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, பட்டு ஆடைகள், தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
குளிக்கும்போதும் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள். குளிக்கும் போது,எடுத்தவுடன் தலைக்கு நீரை ஊற்றிக்கொள்ளக்கூடாது. முதலில் பாதத்தில் ஊற்றி பிறகு உடலில் விட்டுக்கொண்டு கடைசியாகத்தான் தலையில் நீரை விட்டுக்கொள்ள வேண்டும். குளித்து முடித்ததும், துடைத்துக்கொள்ளும்போது முதலில் தலையை துவட்டக்கூடாது. பின்பக்க முதுகைத்தான் துடைக்கவேண்டும்
ஏனென்றால், நாம் தினமும் குளிக்கும்போது , நம் உடலில் வந்து அமர்வதற்கு மகாலக்ஷ்மியும் அவரது அக்கா மூதேவியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வாசலில் காத்துகொண்டு நிற்பார்களாம்.நாம் குளித்து முடித்தவுடன் யார் முதலில் வந்து அமர்வது என்று அவர்களுக்குள் ஒரு போட்டி.முடிவில் அக்காதான் முதலில் சென்று உட்காரவேண்டும் என்கிற நியதிப்படி,நாம் குளித்து முடித்தவுடன், தலையை முதலில் துவட்டிக் கொண்டால், அங்கு மூதேவி வந்து அமர்ந்தால், நம் புத்தி வேலை செய்யாது. ஆகவே, முதலில் முதுகை துடைக்கவேண்டும். அப்போது தான் மூதேவி முதுகில் அமர்வாள்.அடுத்தது நம் முகத்தில் மகாலட்சுமி வந்து அமரும் போது, நாம் முகம் தெளிவாகவும்,சென்ற இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்பும் கிடைக்கும். முதலில் முகத்தை துடைத்துகொண்டால் மூதேவி வந்து அமர்ந்து நம்மை மற்றவர் வெறுப்புக்கு ஆளாக்கி விடும்.

சிவபார்வதி திருமணத்தலமாதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.
இந்த கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கம் மரணமடைந்தவர்களுக்காக இங்கு தினமும் பிசாசு மோட்சம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம் ஆகும்.
திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் துளுவ நாட்டில் உள்ள தலமாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை. இராவணன் எடுக்க முயலும் போது அந்த சிவலிங்கம் பசுவின் காது போல குழைந்ததால் கோகர்ணம் என்ற பெயர் பெற்றது.
சிவபார்வதி திருமணத்தலமாதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.
இராவணன் எடுக்க கடும் முயற்சி செய்ததால் லிங்கத் திருமேனி பசுவின் காது போல் வளைந்து நீண்டது. அதனால் இத்தலம் 'கோகர்ணம்' என்று அழைக்கப்படுகிறது. கோ - பசு, கர்ணம் - காது. அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் பாணம் இல்லாமல் துவாரம் மட்டும் உள்ளது. அந்த துவாரத்தில் நீர் பால் போன்ற அபிஷேக பொருட்களால் நாமே அபிஷேகம் செய்யலாம். மலரிட்டு வணங்கலாம். கைவைத்து தொட்டு வழிபடலாம். மூலவர் சன்னதிக்கு பின்புறம் அம்பாள் சன்னதி உள்ளது.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஆத்ம லிங்க பூஜை நடைபெறுகிறது. தற்போது குழியாக இருக்கும் இடத்தில் உள்ள பீடத்தை அகற்றி லிங்கத்தை வெளியில் எடுத்து பூஜை செய்கின்றனர்.
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.
இத்திருக்கோயில் கோகர்ணம் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ரயில் மூலம் குண்டக்கல் வழியாக ஹூப்ளி வரை சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் செல்லக்கூடிய தலம். மங்களூரிலிருந்தும் பேருந்துகள் உள்ளன
முகவரி : அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோவில்,
திருக்கோகர்ணம்-576 234. உத்தர் கன்னடா மாவட்டம்,
கர்நாடகா மாநிலம். Ph:08386 - 256 167, 257 167

அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம்.
மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தில் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று.பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல்,மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் இருந்து வந்ததுள்ளது..ஆனால் தற்பொழுது மாக்கோலம் இடும் பழக்கம் குறைந்து கொண்டு வருவது வருந்தத்தக்க விஷயமாகும்.
இன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கைகளை அம்பாளிடம் முறையிடுகின்றன. அம்பாளும் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு சகல செல்வங்களையும் தந்து அருள்பாவிக்கிறாள். நோய்கள் தீர மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செய்வர்.
ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலனைத் தரும். இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.
உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே. வெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை.மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள். அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம்.
ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார். அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம்.
நம்மையே விளக்காகவும், மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ
வழிபாடு இது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1 முறையாவது செய்ய வேண்டும்.
பெரும்பாலான வீடுகளில் ஆடி,தை வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போடுவதும் உண்டு. கோவில்களில் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

பாண்டங்களில் மண் இருக்கிறது ஆயினும் மண்ணைக் காண முடியாது, பாண்டமாய்த்தான் தெரியும். மனிதர்களில் கடவுள் இருக்கிறான், ஆனால் கடவுளாய்த் தெரிவதில்லை.
இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில் தருகிறார் திருமூலர்.
ஒரே மண்ணிலிருந்து பல பாண்டங்கள் செய்தாற் போன்று கடவுள் எனும் ஒரே மூலம் பல மனிதப் பிறவிகளாய்ப் பிறக்கின்றன. பாண்டங்கள் உடைந்தால் மீண்டும் மண்ணாகிப் பூமியில் இரண்டறக் கலப்பது போல மனிதர்களின் உடல்களும் கலக்கின்றன. (Law of Conservation of Mass) உயிர்கள் இறைவனுடன் கலக்கின்றன.(Law of Conservation of Energy) எங்கிருந்து வந்தனவோ அங்கேயே திரும்பப் போகும் பாண்டங்கள் போலவேதான் நாமும்.
பாண்டங்களில் மண் இருக்கிறது ஆயினும் மண்ணைக் காண முடியாது, பாண்டமாய்த்தான் தெரியும். மனிதர்களில் கடவுள் இருக்கிறான், ஆனால் கடவுளாய்த் தெரிவதில்லை.
கண்ணானது யாவற்றையும் பார்க்கிறது என்றாலும் அது என்றுமே தன்னைப் பார்த்ததில்லை. பார்க்கவும் இயலாது. எல்லோருக்குள்ளும் கடவுள் இருக்கிறான் எனினும் யாருமே தத்தமக்குள் இருக்கும் கடவுளைக் காண இயலாது. கண் இருப்பதை உணர முடிந்தது போல் உணர வேண்டுமானால் செய்யலாம்.
இப்படிக் கடவுள் இருந்தவாறு தன்னை மறைப்பது அவனது நான்கு தொழில்களில் ஒன்றாகும். (படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல்)
இவ்வளவு செய்திகளையும் தன்னில் அடக்கிய அந்த அருமையான திருமந்திரப் பாடல் இதோ:
மண்ஒன்று தான்பல நற்கலம் ஆயிடும்
உண்ணின்ற யோனிகள் எல்லாம் ஒருவனே
கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின் றானே

ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்ய முடியும். ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும்.
ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹா சாம்ராஜ்யம்.
இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு.
ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.
சௌந்தர்யலஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கர பகவத்பாதாள் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸுவர்லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல் லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார்.
ஸ்ரீ மகாதேவியின் பாததூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிகொண்டு இருக்கிறார்.
ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை கையிலெடுத்து “த்ரியம்பக” மந்திரத்தினால் பஸ்ம பொடியாக்கி தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக்கொண்டார்.
பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.
தேவி சிவனை அன்பால் நோக்கியபோது வல்லபை, ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீ கணபதி தோன்றினார். ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள் .
ஸ்ரீ சக்கரம் அமைந்திருக்கும் அறையின் வலப்புறம் மகாகாளியும், இடதுபுறம் மகா பைரவரும் துவார சக்திகளாக அன்னைக்கு காவல் புரிகின்றனர்.
நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர். இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ரமஹாமேரு.
ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும்.
குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ஸ்ரீ சக்கர வழிபாடு ஒரு வரப்பிரசாதம். ஸ்ரீ சக்கரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், பிரசன்னமாகும்.
ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்பது தனி சிறப்பு.

வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.
சுவாமி : மகரநெடுங்குழைக்காதன்.
அம்பாள் : குழைக்காதநாச்சியார்.
தீர்த்தம் : சுக்கிரவுகரணி, சங்கு தீர்த்தம், கூடுபுனல் தீர்த்தம்.
தல வரலாறு : ஸ்ரீமத் நாராயணன் திருமாலை விடுத்து பூமிதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல, தான் அழகு இல்லாத காரணத்தால் ஸ்ரீமந் நாராயணனே தன்னை வெறுக்கின்றார். அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும் நிறமும் வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின் மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க, கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டார். எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நாராயணன் என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன் வடிவான காதில் அணியும் ஓர் அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் பிரத்யட்சமாக குண்டலங்களை திருமாலுக்கு அளித்து மகிழ்ந்தார்.
தேவர்கள் பூ மாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்தால் ஸ்ரீபோரை (லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது. இன்று பெருமாள் மகர குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார். இதனால் பொருளின் திருநாமம் மகர நெடுங்குழைகாதன் (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்) வருணன், அசுரர்களிடம் போரிட்டு தன் பாசம் என்னும் ஆயுதத்தை இழந்து இத்தலம் வந்து தவம் செய்து திரும்பப் பெற்றதால் இத்தலத்தில் மழை வேண்டி (வருண பகவானை) பிராத்திக்கும் பிராத்தனைகள் இன்று வரை பொய்ப்பதில்லை. சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார்.
விதர்ப்ப நாட்டு மன்னன் இங்கு வந்து வழிபட்டதால் நாட்டின் 12 வருட பஞ்சம் நீங்கி நாடு செழித்ததாக வரலாறு கூறுகிறது. பிரம்மனும் ஈசானய ருத்தரருக்கும் முன்பாக குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதம் வீற்றிருந்த பரமபத திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.
வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழாவிளையாட்டு ஒலியும் அறாத்திருப்பேரையில் சேர்வன் நானே. என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதையே காட்டுவதாக கூறப்படுகின்றது. நம்மாழ்வார் காலத்திற்கும் முன்னே அமையப் பெற்றது. இக்கோவில் பின் பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் கொடி மரமும், மண்டபமும், பின் வெளி மண்டபம், தேரும் செய்யப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சுந்தரபாண்டியனுக்கு குழந்தை பேறு பெற வேண்டி அவனால் சோழ நாட்டில் இருந்து இவ்வூருக்கு அழைத்து வரப்பட்டு தினசரி பெருமாளை பூஜை செய்வதற்காக குடியமர்த்தி பொன்னும் பொருளும் கொடுக்கப்பட்ட ஜெய்முனி சாமவேத தலவகார நூற்றெண்மர் வழி வந்த அவ்வூர் அந்தணர்கள் பெருமாளை தங்களுள் ஒருவராகவே கருதி கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.
சுந்தர பாண்டியனுக்காக 108 நபர் இருந்தனர். பெருமாளே காணாமல் போன நபர் வடிவில் அரசன் முன் தோன்றினார் எனவும் அதனால் பெருமாள் எங்களில் ஒருவர் எனவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இங்கு பங்குனி ப்ரமோஸ்தலத்தின் 5ம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில் பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு ஏழுகின்ற சமயத்தில் பெருமாளை சேவிக்கும் நாத்திகனும் ஆத்திகனும் ஆவான்.
வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அப்பேற்பட்ட காட்சி அது. ஸ்ரீ ரங்கநாதனின் அழகை முகில்வண்ணன் (அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் பின்வரும் பாடலில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று ஸ்ரீமகர நெடுங் குழைக்காதனை பாடியுள்ளார். “கூடுபுனல் துறையும் (தாமிரபரணி கரை) குழைக்காதனை திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்பது இவ்வூரில் வழக்கில் உள்ள ஒரு கூற்று.
நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.
கோவில் முகவரி : அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில்,
தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்.

அகிலத்தை காக்கும் அன்னையின் அதி அற்புதம் வாய்ந்த முக்கியமான 10 வித தோற்றங்களும் பெயர்களும், அவர்களின் செயல்களின் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
1. மாதங்கி:
என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.
2. புவனேஸ்வரி:
மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தர வதனமும் நிறைந்தவள்.
3. பகுளாமுகி:
பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.
4. திரிபுரசுந்தரி:
பதினாறு வயது கன்னிகையின் உருவை கொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம் என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்கியவள் . சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.
5. தாரா:
நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹா சக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.
6. கமலாத்மிகா:
தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும் , செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.
7. காளி:
கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.
8. சின்னமஸ்தா:
தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்துவரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் - பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.
9. தூமாவதி:
கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிறஆடையும், நகைகள் இல்லாத விரிந்ததலையும் கொண்டவள். கையில் புகைகக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.
10. திரிபுர பைரவி:
பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.
தசமஹா வித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது.
அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் நிறைவாக 100 கிலோ மலர்களால் சாமிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.
கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் நிறைவாக 100 கிலோ மலர்களால் சாமிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் பிரகார புறப்பாடு நடந்தது.
கடந்த 3-ந் தேதி இரவு விடையாற்றி உற்சவம் நடந்தது. இதில் சிறப்பு யாகமும், புஷ்பாஞ்சலியும் நடந்தது. உற்சவர் பெருமாள் உபய நாச்சியார் மற்றும் செண்பகவல்லி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர்.
அப்போது சம்பங்கி, ரோஜா, அரளி போன்ற பலவகை நறுமண மலர்களால் சாமிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. விழா ஏற்பாடுகளை ஜெகநாத பெருமாள் கைங்கர்ய சபையினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

கிறிஸ்தவ வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த அடிப்படை ஒழுங்குகளாக இவை அமைந்துள்ளன. தமிழ் மரபில், ‘திருச்சபை கட்டளைகள்’ என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன.
திருச்சபை ஒழுங்குகள் (Precepts of the church) என்பது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதற்காக திருச்சபை வழங்கியுள்ள ஐந்து விதிமுறைகள் ஆகும். கிறிஸ்தவ வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த அடிப்படை ஒழுங்குகளாக இவை அமைந்துள்ளன. தமிழ் மரபில், ‘திருச்சபை கட்டளைகள்’ என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன.
கிறிஸ்தவ அறநெறி
கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்வில் நம்பி, கடைபிடிக்க வேண்டிய விசுவாசத்தை போதிப்பது திருச்சபையின் கடமையாக உள்ளது. நம்பிக்கையாளர்களின் அறநெறி வாழ்வு, ஓர் ஆன்மிக வழிபாட்டுச் செயலாக மாற திருச்சபை உழைக்கிறது. ஆண்டவர் இயேசுவின் வாழ்வை ஒத்ததாக கிறிஸ்தவர்களின் வாழ்வு இருக்கும்போது, உண்மை கடவுள் மீதான விசுவாசத்திற்கு மற்றவர்களையும் ஈர்த்து திருச்சபையைக் கட்டியெழுப்ப முடியும். ஆகவே, செப உணர்வு, அருளடையாள வாழ்வு, அறநெறி அர்ப்பணம், இறையன்பு மற்றும் பிறரன்பில் வளர்ச்சி ஆகியவற்றில் தவிர்க்க முடியாத குறைந்தபட்ச உறுதிநிலையை வழங்க திருச்சபை ஐந்து ஒழுங்குகளை வகுத்து தந்துள்ளது.
ஐந்து ஒழுங்குகள்
திருச்சபை வழங்கியுள்ள ஒழுங்குகள் பின்வருமாறு: (1) ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் திருப்பலியில் பங்கேற்பதுடன், இந்நாட்களின் புனிதத்தைப் பாதிக்கும் வேலைகளையும் செயல்களையும் தவிர்க்க வேண்டும். (2) ஆண்டுக்கு ஒரு முறையாவது, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவு அருளடையாளம் பெற வேண்டும். (3) உயிர்ப்புக் காலத்திலாவது நற்கருணை உட்கொள்ள வேண்டும். (4) திருச்சபை குறித்துள்ள நாட்களில் இறைச்சியைத் தவிர்க்கவும், நோன்பு கடைபிடிக்கவும் வேண்டும். (5) ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு, திருச்சபையின் பொருள்சார் தேவைகளில் உதவி செய்ய வேண்டும்.
சில தெளிவுகள்
‘கடன் திருநாள்’ என்பது, கத்தோலிக்கர்கள் கட்டாயமாக திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க கடமையுள்ள புனித நாளாகும். ஆண்டவரது உயிர்ப்பின் கொண்டாட்டமாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகள் அனைத்தும் கடன் திருநாட்களாக உள்ளன. கடவுளின் தாய் மரியா (ஜனவரி 1), ஆண்டவரின் திருக்காட்சி (ஜனவரி 6), மரியாவின் கணவர் யோசேப்பு (மார்ச் 19), ஆண்டவரின் விண்ணேற்றம் (மே/ஜூன்), கிறிஸ்துவின் திருவுடல் திருரத்தம் (மே/ஜூன்), திருத்தூதர்கள் பேதுரு, பவுல் (ஜூன் 29), மரியாவின் விண்ணேற்பு (ஆகஸ்ட் 15), அனைத்து புனிதர்கள் (நவம்பர் 1), மரியாவின் அமல உற்பவம் (டிசம்பர் 8), கிறிஸ்து பிறப்பு (டிசம்பர் 25) ஆகிய பெருவிழாக்கள் மற்ற கடன் திருநாட்கள் ஆகும்.
உயிர்ப்புக் காலத்தில் நற்கருணை உட்கொள்ளும் முன்பாக, ஒப்புரவு அருளடையாளம் பெறுவது அவசியம். சாம்பல் புதன், புனித வெள்ளி ஆகிய நோன்பு நாட்களில் ஒரு வேளை முழு உணவைத் தவிர்த்து, மற்ற வேளைகளில் குறைந்த அளவு உணவு உட்கொள்ள வேண்டும். தூய உணவு நாட்களான சாம்பல் புதன் மற்றும் தவக்கால வெள்ளிக்கிழமைகளில் இறைச்சியை உணவில் சேர்க்கக்கூடாது. திருச்சபையின் பொதுவான ஐந்து ஒழுங்குகளுடன், “குறைந்த வயதிலும், தடையுள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்” என்ற ஒழுங்கையும் கடைபிடிக்க தமிழக ஆயர்கள் அறிவுறுத்துகிறார்கள்.