என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் இந்த ஆண்டு மாங்கனித் திருவிழாவை கோவில் வளாகத்திலேயே எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால்
இறைவனின் (பரமசிவன்) திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். இவரது வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்காலில் 5 நாட்கள் மாங்கனித் திருவிழா நடப்பது வழக்கம். இந்த மாங்கனித் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்தநிலையில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த ஆண்டு மாங்கனித் திருவிழாவை கோவில் வளாகத்திலேயே எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 21-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் விழா தொடங்குகிறது. 22-ந் தேதி காலை திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 23-ந் தேதி மாலை பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், 24-ந் தேதி பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடும், மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சியும், 25-ந் தேதி காரைக்கால் அம்மையாருக்கு, இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. மாறாக கோவில் உபயதாரர்கள், அறங்காவல் குழுவினர், முக்கியஸ்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

தன் முகத்துடன், ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோர் முகங்களையும் கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்தார்.
நாம் ஒரு இராவணன் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் இரண்டு இராவணன்கள் உண்டு. இருவரும் நண்பர்கள். இரண்டாம் இராவணனுக்கு மஹிராவணன் என்று பெயர். இராமனோடு போர் புரிந்த இராவணன், தன் ஆயுதங்களை இழந்து நின்றான்.
கருணா மூர்த்தியான இராமன், இன்று போய் நாளை வா என்றார். அவன் திருந்துவான் என்றே இராமர் நினைத்தார். ஆனால், அவன் பாதாளலோகம் சென்றான்.அங்கு தன் நண்பனான மஹிராவணனின் உதவியை நாடினான். இதை அறிந்த ஆஞ்சநேயர், மஹிராவணனோடு போர் செய்ய பாதாள லோகம் சென்றார்.
அப்போது கடுமையான யாகம் ஒன்று ராம லஷ்மணர்களை அழிப்பதற்காக மஹிராவணன் செய்துகொண்டிருந்தான். அதை தடுக்க விஸ்வரூபம் எடுத்தார் ஆஞ்சநேயர். தன் முகத்துடன், ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோர் முகங்களையும் கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்தார்.
பயங்கரமான போர் மூண்டது. கொடியவன் மஹிராவணன் மாண்டான். மஹிராவணனை அழிக்க எடுத்த விஸ்வரூப தரிசனம் தான்பஞ்சமுக ஆஞ்சநேயர் வடிவம். கும்பகோணத்திலும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலைமகள், அலைமகள், கலைமகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வணங்குகின்றனர். இதில் துர்க்கை வீரத்தை அளிப்பவளாகவும், திருமகள் செல்வத்தை அருள்பவளாகவும், சரஸ்வதி கல்வியை அருள்பவளாகவும் விளங்குகின்றனர்.
நவராத்திரியில் ஸ்ரீதேவியை துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேராகிய முக்தியையும் நல்குவாள்.
நவராத்திரி பிரதமை திதி தினத்தன்று தான் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.
நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லஷ்மி, துர்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரத்தின் நோக்கமாகும்.
இந்த நாட்களில் கொண்டை கடலை, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்தியங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதிப்பது சிறப்பும் மேன்மையையும் தரும். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை நவராத்திரி பண்டிகைக்கு உரிய சிறப்புகளாகும்.
சக்தி வடிவங்களை மூன்றாகப் பிரித்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என முப்பெரும் தேவியராக வழிபடுவது நம் வழக்கம். மலைமகள், அலைமகள், கலைமகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வணங்குகின்றனர். இதில் துர்க்கை வீரத்தை அளிப்பவளாகவும், திருமகள் செல்வத்தை அருள்பவளாகவும், சரஸ்வதி கல்வியை அருள்பவளாகவும் விளங்குகின்றனர். தேவியை வணங்க நவராத்திரியே ஏற்ற காலமாகக் கருதப்படுகிறது.

குரு சித்தானந்தர் தவமிருந்து பக்தர்களுக்கு அருள்வழங்கி இறைவனுடன் ஐக்கியமான தலம் புதுச்சேரி கருவடிக் குப்பத்தில் உள்ளது. அதன்பெயர் குரு சித்தானந்த சுவாமிகள் தேவஸ்தானம்.
சித்தர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். அவர்களின் சக்தி மனிதர்களுக்கு கிடைத்தால் நோய்நொடிகள் அகலும், நாம் நினைத்த காரியங்கள் எல்லாம் ஈடேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த வகையில் குரு சித்தானந்தர் தவமிருந்து பக்தர்களுக்கு அருள்வழங்கி இறைவனுடன் ஐக்கியமான தலம் புதுச்சேரி கருவடிக் குப்பத்தில் உள்ளது. அதன்பெயர் குரு சித்தானந்த சுவாமிகள் தேவஸ்தானம். மேற்கிலும், கிழக்கிலும் இரண்டு ராஜகோபுரங்களைக்கொண்டு சிறப்பாக காட்சியளிக்கிறது. அக்கோபுரங்களில் குரு சித்தானந்த சுவாமிகளின் திருவுருவம் சிலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் மூல முதற்கடவுளான விநாயகர் அருள்பாலிக்கிறார். சற்று திரும்பினால் குரு சித்தானந்த சுவாமிகளின் கருவறை ஒட்டி குரு தட்சணாமூர்த்தி சன்னதி உள்ளது.
குரு பார்வை கோடி நன்மை என்பதற்கேற்ப சுவாமியை தரிசிக்கும்போது நம் சிந்தை மகிழ்கிறது. வலம் வந்து சுற்றிவரும்போது ஐயப்பன் சன்னதி தென்படுகிறது. அருகே சப்தகன்னிகள் சிறுகல் வடிவில் அருள்பாலிக்கிறார்கள். அவர்களின் பின்னால் அரசு, வேம்பு மரங்கள் அமைந்திருப்பது சிறப்பானது. வலதுபுறத்தில் சித்தானந்த சுவாமிகளின் தியான திருமேனிக்கு மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எண்ணற்ற சித்தர்கள் ஜீவசமாதியாகி உள்ளனர். அவர்களை தரிசிக்க இயலாதவர்கள் இங்கு ஒருங்கே தரிசித்து அவர்களின் ஆசிகளை பெறுவது பெரும் பாக்கியமாகும். இவர்களை தரிசித்து வெளியே வரும்போது வளாகத்தில் உள்ள அரசு, வேம்பு மரத்தின் அடியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் ஆனந்தன் அல்லது ஆனந்தி என்று பெயரிட்டு மகிழ்கிறார்கள். சித்தானந்த சுவாமிகளின் சன்னதி எதிரே நந்தி தேவர் உள்ளார். பிரதோஷ நாட்களில் நந்தி தேவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடத்தப்படுகிறது. நந்தி தேவரின் பின்னால் கொடிமரம் உள்ளது. கோயிலின் உள்ளே தியான மண்டபமும் உள்ளது. அதன் எதிரே திருக்குளம் உள்ளது. இதன் நடுவில் சித்தானந்த சுவாமிகள் சுதை வடிவம் தியான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் தூண்களில் அழகிய சுதை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு சென்று வருவதால் நம் உடலுக்கும், மனதிற்கும் இணையற்ற ஆற்றல் கிடைக்கிறது.
இக்கோயிலில் மகாகவி பாரதி வந்து பாடல் பாடியுள்ளார். இதனால் பாரதிக்கும் இங்கு ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சிவராத்திரி விழாவும் பிரசித்தி பெற்றது. ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. மேலும் சித்தானந்தசுவாமிகளின் ஜீவன் முக்தி அடைந்த தினமான வைகாசி 15ம்தேதி குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு தட்சணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. சித்தானந்தரை வழிபட்டால் சீர்மிகு வாழ்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கருவடிக்குப்பத்தில் குரு சித்தானந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. 24 மணிநேரமும் பேருந்து வசதி உள்ளது.

திருவொற்றியூர் சிவா-விஷ்ணு கோவிலில் மிளகு, சீரகம், லவங்க பட்டை உள்ளிட்ட மூலிகை மற்றும் தானிய வகைகள் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து குறைந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோவில் பகுதியில் உள்ள 21 அடி உயர வெள்ளை நிற லிங்கத்தில் அமைந்துள்ள கருப்பசாமி முத்தப்பர், சிவா-விஷ்ணுவாக காட்சி அளிக்கிறார்.
இந்தநிலையில் தற்போது உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் விடுபட வேண்டி சிவா-விஷ்ணு கோவிலில் மிளகு, சீரகம், லவங்க பட்டை உள்ளிட்ட மூலிகை மற்றும் தானிய வகைகள் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள் கொண்டு சிவா-விஷ்ணுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து குறைந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சிவா-விஷ்ணு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வெகு விரைவில் கொரோனா நோய் தொற்று நீங்கி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என வேண்டுதல் வைத்து இந்த சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.

“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.” (மத்தேயு 18:1-4)
விண்ணரசில் நுழைவதற்கு தாழ்ச்சி மிகவும் அவசியமானது என்று இயேசுகிறிஸ்து போதித்தார். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர் என்றும் அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.
விண்ணரசில் பெரியவர்
இயேசுவும் அவரது சீடர்களும் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார். (மாற்கு 9:33-35)
சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.” (மத்தேயு 18:1-4)
"சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்."
“ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.” (லூக்கா 14:8-11)
“மறைநூல் அறிஞரும் பரிசேயரும் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ‘ரபி’ (போதகர்) என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.
ஆனால் நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் இயேசுகிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.” (மத்தேயு 23:3-12)

காரமடையில் பிரசித்திபெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் திருவீதி உலா வந்தார்.
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்திபெற்ற அரங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத ஏகாதசியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் திருவீதி உலா வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், மற்றும் கோவில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா பரவல் எதிரொலி காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி அளவில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது.
சென்னை
சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி அளவில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியை http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARARTEMPLE என்ற YouTube channel- லில், பக்தர்கள் நேரலை ஒளிபரப்பு மூலம் காணலாம். குறிப்பாக நந்தி அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் உள் புறப்பாடும் பக்தர்களின் கோரிக்கையின் படி ஒளிபரப்பப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு தரிசித்து கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் திருவருள் பெறலாம்.
அதேபோல், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சாமி அருள் பெறலாம்.
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சிகள் https://youtu.be/r-g-M6sG9LYஎன்ற யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. பக்தர்கள் இதனை கண்டுகளித்து பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் அருளை பெறலாம்.

ருத்ராம்சம் உடைய ஆஞ்சநேயர், ஐந்து முகம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயராகவும் விளங்குகின்றார். அப்படி ஐந்து முகங்களோடு அவர் விளங்கும் பொழுது, அவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று பெயர்.
நமது சமய மரபில் ஐந்து என்கிற எண் விசேஷமானது. பஞ்சபூதங்கள், பஞ்சாட்சர நாமம், பஞ்ச வேள்விகள், பஞ்ச இந்திரியங்கள் என்று பல சிறப்புகள் ஐந்து என்கிற எண்ணுக்கு உண்டு. இராமாயணத்தில் மகாவிஷ்ணு இராமனாக அவதரித்தார். அவருடைய பரிவாரங்கள் பற்பல வடிவங்களில் பூலோகத்தில் அவதரித்தனர். ருத்ரனின் அம்சமாக ஆஞ்சநேயர் அவதரித்தார்.
ருத்ரன் அழிக்கும் சக்தி படைத்தவர். கெட்ட சக்திகளை அழிக்கும் வல்லமை ருத்ராம்சத்திற்கு உண்டு. இராமாயணத்தில் இராவணன் அழிந்ததற்கும், இந்திரஜித் அழிந்ததற்கும், இராமனும் இலட்சுமணனும் மருந்து மலையால் போர்க் களத்தில் காப்பாற்றப்பட்டதிலும் ஆஞ்சநேயரின் பங்கு மகத்தானது. அடுத்து ராம நாமத்தில் திளைத்தவர் ருத்ர அம்சமான ஆஞ்சநேயர்.இது அப்படியே பரமசிவன் பார்வதியிடம் “ராம நாமம் மூன்று முறை சொன்னால் சஹஸ்ர நாமத்திற்கு சமம்” என்று சொல்வதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ருத்ராம்சம் உடைய ஆஞ்சநேயர், ஐந்து முகம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயராகவும் விளங்குகின்றார். அப்படி ஐந்து முகங்களோடு அவர் விளங்கும் பொழுது, அவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று பெயர்.
கிழக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி முகமானது, நமது பாவத்தின் கறைகளைப் போக்கும்., தெற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீநரசிம்மர் சுவாமி முகமானது, நமது எதிரிகளை நாசமாக்கும். மேற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீ கருட சுவாமி முகமானது, தீய சக்திகள் மற்றும் கொடிய விஷக்கடியினால் நமது உடலில் சேரும்விஷத்தையும் முறிக்கும்.வடக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீலஷ்மி வராக சுவாமி முகமானது, நமக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளித்து கிரக தோஷங்களை நீக்கும்.மேல் நோக்கியுள்ள ஸ்ரீஹயக்ரீவ சுவாமி முகமானது, நமக்கு ஞானத்தையும், காரிய வெற்றியினையும், புத்ர பாக்கியதையும் வித்தைகளையும் அளிக்கும்.மந்த்ராலய மகானான ஸ்ரீராகவேந்த்ர தீர்த்தரின் உபாசனை தெய்வம் பஞ்சமுக ஆஞ்சநேயர்.
அவர், பஞ்சமுக ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என்றழைக்கப்படுகிறது. அங்கு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. பஞ்சமுக ஆஞ்ச நேயர் வடிவங்கள் நம் நாட்டில் பல ஊர்களிலும் உண்டு. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் புதுச்சேரி அருகே பஞ்சவடி என்கிற ஊரில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தமாக உண்டு. சென்னைக்கு அருகில் திருவள்ளூரில், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் உண்டு. ஐந்து முகங்கள் தவிர பத்து முகங்களைக் கொண்ட தசமுக ஆஞ்சநேயரும் உண்டு.

பிரசித்திப்பெற்ற இளந்துறை முனீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜையை ஒட்டி பேசும் முனீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முனீஸ்வரர் அருள்பாலித்தார்.
கும்பகோணம் அருகே உள்ள இளந்துறை கீர்த்திமான் ஆற்றங்கரையோரம் அரசமரத்தடியில் பேசும் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மாங்குடி, குடமங்கலம், விட்டலூர், இளந்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வருகிறது. மண்டல பூஜையை ஒட்டி பேசும் முனீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முனீஸ்வரர் அருள்பாலித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

நிம்மதியற்ற குடும்பங்களில் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும். காலையில் நீராடிய பின் மூன்று முறையும் இரவில் உறங்கப் போகுமுன் ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மைகள் தரும்.
உலக மக்களின் நன்மை கருதி மரீசி மகரிஷி நமக்கு அளித்துள்ள அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ண ஸ்லோகம். நிம்மதியற்ற குடும்பங்களில் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும். காலையில் நீராடிய பின் மூன்று முறையும் இரவில் உறங்கப் போகுமுன் ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மைகள் தரும். முக்கியமாய் திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்வை தரும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
இஷீசாபம் வேணுவாத்தியம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே
பொருள்:
தாமரை இதழ் போன்ற கண்களும் பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும் அழகிய வில் போல் வளைந்த திருமேனியும் அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமாகத் திகழ்பவரும் சரிபாதி புருஷாகார சரீரரும் சரிபாதி பெண்மையான சரீரமும் வலது நான்கு இடது நான்கு கைகளில் - சங்கு, சக்கரம், அங்குசம், கரும்புவில், புஷ்பபாணம், தாமரை மலர், இரண்டு கைகளில் வேணுவாத்தியம் (புல்லாங்குழல்) வாசித்தபடி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவிதமான மனோகரமான புஷ்பங்களைத் தரித்தவரும் இன்னல்படும் மக்களை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தரவல்லவருமான மோஹனரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும் ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிக்கிறேன்.

அனைத்து ஆலயங்களிலும் மூல விக்கிரகம் கல்லால் அமைந்திருக்கும் அல்லவா? ஆனால், மூகாம்பிகை அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது.
மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.
அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும், உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும் இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.
அனைத்து ஆலயங்களிலும் மூல விக்கிரகம் கல்லால் அமைந்திருக்கும் அல்லவா? ஆனால், மூகாம்பிகை அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது.
அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் இருந்த அம்மன் திருவுருவத்தை விஷ்வகர்மாக்களிடம் விளக்கி அவ்வாறே பஞ்சலோகத்தில் செய்யச் சொன்னார். அந்த ஐம்பொன் விக்கிரகமே இன்றும் ஆலயத்தில் அலங்கார தேவதையாக உள்ளது.
மூகாம்பிகை அம்மனின் விக்கிரகத்திற்கு பக்தர்கள் புடவை சார்த்துதல் உண்டு. ஆனால், இந்த புடவை சாத்தும் போது தூய பட்டினாலான புடவையை மட்டுமே அம்பாளுக்கு கட்டுவார்கள். ஏனைய புடவையை அம்பாளின் மீது போர்த்தி விடுவார்கள்.
அம்பாளுக்கு துளசி மற்றும் பிச்சிப்பூவால் ஆன மாலையையும் அணிவிக்கிறார்கள். தமிழகத்தில் தேன்பூ என்று வழங்கப்படும் சிகப்பு நிறத்தில் கொத்து கொத்தாக உள்ள இந்த காட்டு மலர்களினால் ஆன ஆரத்தை விசேஷமானது என்று அணிவிக்கிறார்கள்.
அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் சுயம்பு லிங்கத்திற்கே பிரதானமாக செய்யப்படுகிறது. மேலும் தங்க ரேகையை அனைவரும் எல்லா நேரங்களிலும் பார்க்காதபடி தங்க கவசம் கொண்டும் மூடப்பட்டுள்ளது.
மகாபூஜை செய்பவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தங்க ரேகைக்குரிய பூஜைகள் செய்பவர்களுக்கு உச்சி நேரத்தில் லிங்கத்தின் தங்கக்கோட்டை சூரிய ஒளியை கண்ணாடி மூலம் கர்ப்பக்கிரகத்தில் பிரதிபலித்து தங்க ரேகையை காட்டுவது வழக்கமாகும்.

மூகாம்பிகை தேவிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமை ஆலயத்தில் உள்ள 1008 தீபங்கள் கொண்ட மரவிளக்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் கருவறை முழுவதும் தீபங்கள் ஏற்றப்படும்.