என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நேற்று பக்தர்கள் இன்றி, வைகாசி மாத சோமவார பிரதோஷம் நடைபெற்றது. வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சாமி - அம்பாள் எழுந்தருளினர்.
    கொரோனா தொற்றால் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளது. ஆனால் தினமும்  6 கால பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பிரதோஷம் என்பதால் இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உட்புறமாக தாழிடப்பட்டு நந்தியம்பெருமாள் மூலவர், பிரதோஷ நாயகருக்கு மட்டும் அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    பக்தர்கள் இல்லாமல் நடந்த பிரதோஷ வழிபாட்டில் கோவில் பணியாளர்கள் மட்டும் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர்.

    இதில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சாமி - அம்பாள் எழுந்தருளினர்.

    திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு பால் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு விசேஷ பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா நடைபெறும். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுசாமி தரிசனம் செய்து வந்தனர்.

    தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மலைக்கு பின்புறம் திறந்தவெளியில் உள்ள பால்சுனைகண்ட சிவபெருமான் கோவிலில் நேற்று வழக்கம்போல பிரதோஷம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறறது.

    அதில் சிவபெருமானுக்கு பால் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு விசேஷ பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மேலும் சிவபெருமானுக்கு மகா தீப, தூப, ஆராதனை நடைபெற்றது.
    “இறைவன் உங்கள் தோற்றத்தையோ, உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
    இஸ்லாம் தனது அனைத்து வழிபாடுகளையும் இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கின்றது. இறையச்சமற்ற வழிபாடுகள், சுவரில் வீசிய பந்து போன்று ஏற்கப்படாமல் சென்ற வேகத்தில் திரும்பிவிடுவதைப் ‌பல்வேறு கோணங்களில் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் எச்சரிக்கை மணியாக ஒலிக்கின்றன. இறையச்சம் இல்லா வாழ்க்கை சீரான பாதையில் கடக்காது.

    ‘‘இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு எவ்வாறு பயந்து வாழ வேண்டுமோ, அவ்வாறு பயந்து வாழுங்கள். மேலும், நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணிக்க வேண்டாம்”. (திருக்குர்ஆன் 3:102)

    இறையச்சம் என்பது உள்ளம் சார்ந்த ஒன்று. உள்ளத்தில் இதன் தாக்கம் அதிகமானால், வெளிப்புற செயல்பாடுகள் செவ்வனே அமைந்துவிடுகிறன. இல்லையேல், வெளிப்புறம் வெறுமையாகக்‌ காணப்படும்.

    ‘முக அழகையோ, ஆடை அலங்காரங்களையோ இறைவன் பார்க்க விருப்பம் கொள்வதில்லை. உள்ளத்தில் எழும் நல்லெண்ணங்கள், இறைவனின் பொருத்தத்தைக் கருதி செய்கின்ற இறையச்ச உணர்வு இவற்றையே காண்கிறான். இதை, அடிப்படையாகக் கொண்டு நன்மைகளை ஏட்டில் பதிவு செய்கிறான்’, என்கின்றன நபி மொழிகள்.

    “இறைவன் உங்கள் தோற்றத்தையோ, உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    “அல்லாஹ்விடத்தில் உங்களில் கண்ணியமிக்கவர் உங்களில் மிகுந்த இறையச்சமுடையவர்களாகும்”. (திருக்குர்ஆன் 49:13)

    இதே பொருளினைக் கொண்டிருக்கும் ஒரு நபி மொழியும் சான்றாக அமைந்துள்ளது.

    “(நபி (ஸல்) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வை) அதிகம் அஞ்சுபவர் தான்’ என்று பதிலளித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி).

    இறையச்சத்துடன் தன் வாழ்க்கை முறைகளைக் கொண்டு சென்றால், இம்மை மற்றும் மறுமையில் வெற்றிக்கான வழிகளைத் திறந்து விடுகின்றான். வாழ்வின் அடிப்படைத் தேவைகள் முதல் அனைத்து தேவைகளையும் இறைவன் பொறுப்பெடுத்து செய்து முடிக் கின்றான்.

    “எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 65:2-3)

    இறைநம்பிக்கையின் திறவுகோல் இறையச்சம். நம் வாழ்க்கை முழுவதும் இறையச்சத்தை பேணி இறைவனின் பொருத்தம் பெறுவோம்.

    ஏ.எச்.யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், பழம், விபூதி, பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கால் அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள போஜிஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், பழம், விபூதி, பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜை நடந்தது. இதேபோல் மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    திருச்சி நம்பர்-1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கால் அபிஷேகம் நடந்தது. துறையூரை அருகே நல்லியம்பாளையம் கிராமத்தில் உள்ள சிவன்கோவிலில் நந்தி பகவானுக்கு பால், பழம், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையார் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    ஜூன் மாதம் 8-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    8-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * கார்த்திகை விரதம்
    * மாத சிவராத்திரி
     * சந்திராஷ்டமம் - சுவாதி

    9-ம் தேதி புதன் கிழமை :
     
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - விசாகம்
     
    10-ம் தேதி வியாழக்கிழமை :

    * சர்வ அமாவாசை
    * சந்திராஷ்டமம்- விசாகம், அனுஷம்

    11-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * சித்தயோகம்
    * கௌரி விரதம்
    * சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை

    12-ம் தேதி சனிக்கிழமை :

    * கருட தரிசனம் நன்று
    *  சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்

    13-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * சுபமுகூர்த்தநாள்
    * சூரிய வழிபாடு நன்று
    * சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்

    14-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சதுர்த்தி விரதம்
    * கதளி கௌரி விரதம்
    * சுபமுகூர்த்தநாள்
    * சந்திராஷ்டமம் -  பூராடம், உத்திராடம்
    கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் மகா நந்திக்கு மஞ்சள், பால் போன்ற பல விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரிய கோவிலை மூட தொல்லியல் துறை உத்தரவிட்டது. ஆனால் கோவிலில் வழக்கமாக நடைபெறும் நான்கு கால பூஜைகள் நடந்தன.

    பிரதோஷ தினத்தன்று பெரியகோவில் மகாநந்திக்கு திரவியப்பொடி, பால், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கோவில் மூடப்பட்டதால் நேற்று பக்தர்கள் இன்றி பிரதோஷம் நடந்தது.

    பின்னர் மகாநந்திக்கு திரவியப்பொடி, பால், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலர்களில் பலர், உலகைப் படைத்த கடவுளாகிய யகோவாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தார்கள்.
    சாலமோனின் மறைவுக்குப் பின், இஸ்ரவேல் இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டது, ஒன்று வடக்கு ராஜ்ஜியம், மற்றொன்று தெற்கு ராஜ்ஜியம். பெரும்பான்மையான இஸ்ரவேலர்கள் கற்பனைக் கடவுளர்களை வழிபட்டனர். எருசலேம் தேவாலயத்தை எல்லாவிதத்திலும் களங்கப்படுத்தினர். தீர்க்கதரிசிகளை அனுப்பி கடவுள் இஸ்ரவேலர்களை எச்சரித்துத் திருத்த முயன்றார். ஆனால், கடவுளின் தூதுவர்களாகிய அவர்களது வார்த்தைகளைக் கேட்க இஸ்ரவேலர்கள் தயாராக இல்லை. கோபம் கொண்ட கடவுள் அசீரியரின் படையெடுப்பை அனுமதித்தார்.

    இதனால் போரில் சரணடைந்த இஸ்ரவேலர்களை பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சாரின் படையினர் கைது செய்யப்பட்டு பாபிலோனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் அடுத்துவந்த சில ஆண்டுகளில் நேபுகாத்நேசாரால் எருசலேம் நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. எருசலேம் நகரின் கோட்டைச்சுவர்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. அதன் வாசல் கதவுகள் எரிக்கப்பட்டு சாம்பலாய்ப் போயின. பாதுகாப்பு அரண் ஏதுமில்லாத நிலையில் அதன் பின்னர் இஸ்ரவேல் தேசமே யாருமின்றி வெறிச்சோடிக்கிடந்தது.

    பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலர்களில் பலர், உலகைப் படைத்த கடவுளாகிய யகோவாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களைக் கடவுள் கைவிடவில்லை. சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு தாம் முன்பு இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த அந்தத் தேசத்துக்கு அவர்களை மீண்டும் கொண்டுவரப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்தார்.

    பாபிலோன் சிறையில் இருந்தபோது கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்த இஸ்ரவேலர்கள் பல சோதனைகளை எதிர்கொண்டார்கள். பாபிலோன் அரசன் நேபுகாத்நேசார் உத்தரவின்படி சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூவர் நெருப்புச் சூளைக்குள் வீசப்பட்டார்கள், ஆனால் கடவுள் அவர்களை உயிருடன் வெளியே அழைத்து வந்தார். அதன் பின்னர் பெர்சியர்கள் பாபிலோனைக் கைப்பற்றினார்கள். அப்போது மற்றொரு விசுவாசியான தானியேல் சிங்கங்களின் கூண்டுக்குள் வீசப்பட்டார். ஆனால், சிங்கங்கள் அவரை உண்ணவரும் முன் கடவுள் அவற்றின் வாயைக் கட்டிப்போட்டு அவரையும் பாதுகாத்தார்.

    இறுதியில் இஸ்ரவேலர்களின் கடவுள் சக்தி வாய்ந்தவராக இருப்பதை அறிந்து பெர்சிய அரசனாகிய கோரேஸு இஸ்ரவேலர்களை விடுதலை செய்தார். பாபிலோனுக்குக் கைதிகளாக இழுத்துச்செல்லப்பட்டுப் பெரும் துன்பங்களை அனுபவித்தாலும் கடவுள் தங்களைக் கைவிட மாட்டார் என்று நம்பிய இஸ்ரவேலர்கள் சுமார் 70 ஆண்டுகள் பாபிலோன் சிறையிலிருந்து விடுதலை கிடைத்த பின் தங்கள் சொந்த தேசமாகிய இஸ்ரவேலுக்கு நெகேமியாவின் தலைமையில் திரும்பி வந்தார்கள். எருசலேமுக்குத் திரும்பிவந்த கையோடு, அழிந்து கிடந்த தங்களின் நகரின் நிலைகண்டு வருந்தி அழுதனர். முதல்வேலையாகத் தங்களைக் காத்து ரட்சித்த பரலோகத் தந்தையாகிய யகோவாவின் ஆலயத்தை மீண்டும் கட்டத் தொடங்கினார்கள். ஆலயம் எழுப்புவதை எதிரிகள் பலமுறை தடை செய்தபோதும் சுமார் 22 ஆண்டுகள் முயன்று அந்தப் பேராலயத்தைக் கட்டி முடித்தார்கள்.

    பேராலயத்தைக் கட்டி முடித்த பின் தங்கள் நகரத்தின் மதில்களைக் கட்டத் தொடங்கினார்கள். இதைக் கண்ட இஸ்ரவேலர்களின் எதிரிகள், “விரைந்துசென்று இஸ்ரவேலர்களைக் கொன்றொழித்து அவர்கள் தங்கள் நகரத்தின் மதில்களைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்துவோம்” என்று புறப்பட்டார்கள். இதை உளவறிந்த நெகேமியா, நகரத்தைப் புனரமைக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு ஈட்டிகளையும் கொடுத்து, நம்பிக்கை தந்தார்.

    இதனால் இஸ்ரவேல் மக்கள் துணிவுடன் எதிரிகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருந்தார்கள். அல்லும் பகலும் ஆயுதங்களைத் தயாராக வைத்துக்கொண்டு, நகரின் மதில்களைக் கட்டியெழுப்புவதில் முழு மூச்சாக ஈடுபட்டனர். அதனால் 52 நாட்களுக்குள் எருசலேமின் மதில்கள் கட்டி முடிக்கப்பட்டன. இப்போது கடவுளுக்கு நன்றி சொல்லி மக்கள் அனைவரும் கோட்டைக் கொத்தளம் அமையப்பெற்ற பாதுகாப்பான நகரத்துக்குள் பயமின்றி வாழத் தொடங்கினர். நெகேமியாவும் குருவாகிய எஸ்றாவும் கடவுளுடைய திருச்சட்டத்தை இஸ்ரவேல் மக்களுக்குக் கற்பித்தார்கள்.

    மக்களும் பாவத்தை அறிக்கையிட்டு திருச்சட்டத்தின்படி வாழ உறுதி பூண்டார்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல, திருச்சட்டத்தைக் கற்பித்து வந்த குருக்கள், மக்களை ஒடுக்கும் அதிகார பீடமாக மாறினார்கள். அந்நியர்களை அவர்கள் அனுமதித்தார்கள். அந்நியனாகிய பெர்சிய அரசன் மீண்டும் இஸ்ரவேலை ஆளத் தொடங்கினான். இஸ்ரவேலர்கள் அவனுக்கு சேவை செய்து வாழ வேண்டிய நிலை உருவானது. அந்தத் தருணத்தில் “ஒரு புதிய அரசரை அனுப்புவேன், அவர் உங்களுக்கு சமாதானத்தையும் மீட்பையும் கொண்டுவருவார்” என்று தீர்க்கதரிசியின் வழியாக வாக்குக்கொடுத்தார் கடவுள். அவருக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கினர். அவரே ரட்சகரான இயேசு.
    சேரன்மாதேவி மாவடி தெரு கன்னடியன் கால்வாய் கரையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் மண்டல பூஜையாக தொடர்ந்து 48 நாட்கள் தினமும் மாலை சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது.
    சேரன்மாதேவி மாவடி தெரு கன்னடியன் கால்வாய் கரையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கடந்த மார்ச் மாதம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி மண்டல பூஜையாக தொடர்ந்து 48 நாட்கள் தினமும் மாலை சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது.

    மண்டல பூஜையின் நிறைவு நாளான நேற்று காலை சிறப்பு ஹோமங்களும், சிறப்பு அபிஷேக அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
    வைகாசி மாதம் என்பது முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய ஒரு மாதம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இம்மாதத்தில் வருகின்ற வைகாசி கிருத்திகை தினம் முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய மிகவும் சிறப்பான ஒரு தினமாகும்.
    முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய மிக சிறந்த மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும்.

    முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் ய்வீட்டில் முருகன் படத்திற்கு நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.

    வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு செவ்வரளி, சிவப்பு ரோஜா போன்ற மலர்களை சமர்ப்பித்து தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

    மேற்கண்ட முறையில் முருகனை வைகாசி மாத கிருத்திகை தினத்தில் வழிபட்டு முடித்ததும், அருகிலுள்ள முருகன் கோயிலுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு. மேலும் கோயிலுக்கு வெளியே இருக்கும் யாசகர்களுக்கும், வசதியற்ற ஏழை மக்களுக்கும் தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் உங்களுக்கு ஏற்படுகின்றது.
    எந்தவொரு இடத்திலும் நமது பயத்தை வெளிக்காட்டாமல் செயல்பட்டால் எல்லா இடத்திலும் வெற்றியடையலாம் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் ஞானி ஒருவரின் குடிசை இருந்தது. அந்த குடிசையின் அருகில் ஒரு துவாரத்தில் சின்ன சுண்டெலி ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது. அந்தக் காட்டில் பூனையின் நடமாட்டம் அதிகம் இருந்ததால் சுண்டெலி மிகவும் பயத்துடன் வாழ்ந்து வந்தது.

    ஒரு நாள் ஒரு பூனையின் பிடியிலிருந்து தப்பிய சுண்டெலி முனிவரிடம் சென்றது. சுண்டெலியை பார்த்து ஞானி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த சுண்டெலி பூனையை கண்டால் எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால் உங்களுக்கு புண்ணியமா போகும் என்று மிகுந்த கவலையுடன் கூறியது.

    ஞானியும் எலி கேட்டபடியே எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் பூனையாக மாறிய எலி ஞானி முன் வந்து நின்றது. பூனையை கண்ட ஞானி இப்போது என்னப் பிரச்சனை என்று கேட்டார்.

    அதற்கு அந்தப் பூனை என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது. உடனே பூனையை நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது.

    இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து மீண்டும் ஞானி முன் வந்து நின்ற புலி இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுங்கள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.

    சில நாட்கள் கழித்து வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். அதைக்கேட்ட ஞானி சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருப்பதுதான் சரி என்று கூறி சுண்டெலியாகவே மாற்றி விட்டார் அந்த ஞானி.

    தத்துவம் :

    எந்தவொரு இடத்திலும் நமது பயத்தை வெளிக்காட்டாமல் செயல்பட்டால் எல்லா இடத்திலும் வெற்றியடையலாம். பயமானது உங்களின் வெற்றிக்கு தடைக்கல்லாக மட்டுமே இருக்கும். எனவே பயத்தை விட்டுவிட்டு செயல்பட்டால் நீங்களும் வாழ்க்கையில் வெற்றியடையலாம்.
    சிவபெருமானை தினமும் வழிபட்டு வந்தாலே போதும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பார்கள். அப்படியிருக்க, சிவராத்திரி விரதமிருந்து வழிபட்டால், சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ அதை சிவராத்திரி என்கிறோம். இதை மாத சிவராத்திரி என்பர். மாசிமாதம் வரும் சிவராத்திரி மஹாசிவராத்திரி என்று மகிமை மிக்கதாக போற்றப்படுகிறது.
     
    தேய்பிறை சதுர்த்தசி திதியும் சிரவண நட்சத்திரமும் வியாபிக்கும் இரவு சிவராத்திரியாக ஆகமங்கள் தெரிவிக்கின்றன. சிவனை மகாசிவன்  என்று அழைப்பது இல்லை. அதே சமயம் சிவராத்திரியை 'மகா' எனும் அடைமொழியுடன் அழைக்கிறோம். இதில் இருந்தே இந்த இரவின்  மகிமையை அறியலாம். அதே போல், ஈசனை சதாசிவன் என்று சொல்கிறோம். வேறு எந்த தெய்வத்தையும் 'சதா' சேர்த்துச் சொல்வதில்லை. 'சதா' என்றால் 'எங்கும் எப்போதும்' என்று அர்த்தம். எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் ஈசன்.
     
    அமரகோசம் என்ற சம்ஸ்கிருத நூலில் சிவம் என்றால் மங்கலம், சுபம் என்று அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு பெற்ற  சிவனுக்கு உகந்த ராத்திரியே சிவராத்திரி! மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் சிவராத்திரி அன்று சிவன் கோயில்கள் முழுநேரமும்  திறந்திருக்கும். விடிய விடிய சிவனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும். அன்று மாலையில் துவங்கி, இரவு முழுவதும் விடிய விடிய பாராயணம்,  பஜனை, பூஜை, அபிஷேகம் என சிவாலயங்களில் அமர்க்களப்படும்.
    சூரிய வழிபாட்டை தொடர்ந்து 108 நாட்கள் செய்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். தை மாதம் ரத சப்தமி நாளில் இந்த விரதத்தை தொடங்கலாம் பலன் அதிகம் கிடைக்கும்.
    சூரிய நமஸ்காரம் ஒவ்வொரு ஞாயிற்று கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் சூரிய ஹோரையில் வீட்டு மாடியில், மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியிலும் ஒரு விளக்கு போட்டு சூரியனை நோக்கி சாஷ்டங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

    விளக்கு போடும் பொது கூடவே நைவேத்தியமாக கல்கண்டு, மற்றும் ஏதாவது ஒரு இனிப்பை நைவேத்தியமாக வைக்க வேண்டும். அப்போது சூரிய காயத்ரி அல்லது சூரியனுக்குரிய ஸ்லோகம் அல்லது ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் சொல்லலாம்.

    இதனை தொடர்ந்து 108 நாட்கள் செய்தால் அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும். தை மாதம் ரத சப்தமி நாளில் இந்த விரதத்தை தொடங்கலாம் இதனால் பலன் அதிகம் கிடைக்கும்.

    ×