என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பரமத்திவேலூர் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையின் போது அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.
பரமத்திவேலூர் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாத கிருத்திகையை யொட்டியும், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலும் முருகபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையின் போது அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.
இதேபோல் பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் சுப்பிரமணியர், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், நன்செய் இடையார் திருவேலிசுவரர் கோவில் முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், அருணகிரிமலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வேலூர் சக்திநகர் முருகன், பேட்டை பகவதியம்மன் கோவில் முருகன் உள்ளிட்ட கோவில்களிலும் வைகாசி மாத கிருத்திகையை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

மனித மாண்பு மற்றும் அன்புறவை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவர் மற்றவரை எப்படி நோக்குவது, அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இது வழிகாட்டுகிறது.
“பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே” (You Shall Not Covet Your Neighbour’s Wife) என்பது இஸ்ரயேலருக்கு மோசே வழியாக கடவுள் வழங்கிய கட்டளைகளில் ஒன்பதாம் கட்டளை ஆகும். நமது உள்ளார்ந்த உணர்வுகள் கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும். மற்றவருக்கு மணமானவர் மீது இச்சை கொள்வதை இக்கட்டளைத் தடை செய்கிறது.
விவிலியத்தில்
விடுதலைப்பயணம், இணைச்சட்டம் ஆகிய நூல்களில் காணப்படும் 9ஆம் கட்டளையின் வார்த்தைகள் பின்வருமாறு:
விடுதலைப்பயணம் 20:17
பிறர் மனைவியைக் கவர்ந்திட விரும்பாதே.
இணைச்சட்டம் 5:21
பிறர் மனைவியைக் காமுறாதே!
இதயத் தூய்மை
மட்டற்ற சிற்றின்ப வேட்கையை, ஒருவர் எண்ணத்திலும் விருப்பத்திலும் வெற்றிகொள்ள வேண்டுமென ஒன்பதாம் கட்டளை வலியுறுத்துகிறது. இதயத்தை தூய்மைப்படுத்தவும், தன்னடக்கம் என்ற புண்ணியத்தை கடைபிடிக்கவும், சிற்றின்ப வேட்கைக்கு எதிரான போராட்டம் இன்றியமையாததாகிறது. கடவுளின் அருள், கற்பு என்ற புண்ணியம், நோக்கத்தின் தூய்மை, பார்வையின் தூய்மை, கற்பனை மற்றும் உணர்வுகளின் ஒழுக்கம், செபம் ஆகியவற்றின் வழியாக திருமுழுக்கு பெற்ற ஒருவர் இதயத் தூய்மையை அடைய முடியும். கற்பின் உணர்திறனை வெளிப்படுத்தும் தன்னடக்கம், இதயத் தூய்மைக்குத் தேவையானதாக உள்ளது.
தீமையை நாடும் முறையற்ற சிற்றின்ப வேட்கையில் ஆர்வத்தை தூண்டும் அனைத்தையும் தவிர்க்க இதயத் தூய்மை உதவுகிறது. மனித மாண்பு மற்றும் அன்புறவை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவர் மற்றவரை எப்படி நோக்குவது, அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இது வழிகாட்டுகிறது.
எதிரான பாவங்கள்
விபசாரம், புறநிலைப் பாலுறவு, பரத்தைமை, வன்புணர்வு, பலதார மணம் உள்ளிட்ட கற்பு நெறிக்கு எதிரான செயல்களில் ஈடுபடத் தூண்டும் எண்ணங்கள் மற்றும் ஆசைகளே ஒன்பதாம் கட்டளைக்கு எதிரான பாவங்கள் ஆகும்.

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வாக வழிபாட்டுதலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வாக வழிபாட்டுதலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
சிவனின் பெயர் : மகாபலேஸ்வரர்,
பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
அம்மனின் பெயர் : கவுரி
தல விருட்சம் : வன்னி மரம்
கோவில் சிறப்பு :
திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
வரலாற்றுச் சுருக்கம்
கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்[மேற்கோள் தேவை]. இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது. சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது.
இத்தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத்தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம்.
இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும்.
கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும். அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருக்கிறது.
இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் சிற்பம் கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்[மேற்கோள் தேவை].
திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலை என்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் துறைமுகமாகவும வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும் இன்றும் அழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் காணலாம். அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன
ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் மாதோட்டத்தின் கண்ணிறங்கி அன்று இரவினை அங்கேயே கழித்ததாகவும் வரலாறுண்டு.
பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் கோயில் சோழமன்னர்களால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.[2]
வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.
ராகு, கேது தோஷம் நீங்கவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
கோவில் திறக்கும் : காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோவில் மாதோட்ட நகரம்,
மன்னார் மாவட்டம். இலங்கை.

நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில், முருகப்பெருமானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.
நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில், வைகாசி மாத கார்த்திகை பூஜை நடந்தது. இதில் முருகப்பெருமானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக, சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகை பூஜை நடந்தது.

விரதங்கள் என்பது ஆன்மீக நம்பிக்கை மட்டுமின்றி அறிவியல் ஆரோக்கியமும் அடங்கியுள்ள ஒன்று. அதற்காகத்தான் அக்காலம் முதல் விரதங்களை கடைபிடித்துள்ளனர்.
விரதங்கள் என்பது ஆன்மீக நம்பிக்கை மட்டுமின்றி அறிவியல் ஆரோக்கியமும் அடங்கியுள்ள ஒன்று. அதற்காகத்தான் அக்காலம் முதல் விரதங்களை கடைபிடித்துள்ளனர். அறிவியல் தகவல்களை வேறு ஒரு பதிவினில் காண்போம். இப்பொழுது இந்த பதிவில் விரத வழிபாடுகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நம் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் விலகி மனஅமைதி ஏற்படும். விநாயக சதுர்த்தி விரதம் இருந்தால் கவலை தீர்ந்து பூரண அருள் கிட்டும். சிரவண விரதம் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பெருகி, ஆனந்தம், சந்தோசம் உண்டாகும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் வறுமை நீங்கி, செல்வவளம் கிட்டும். சஷ்டி விரதம் முருகனுக்கு இருந்தால் மனதில் எண்ணிய காரியம் அனைத்தும் இனிதே நிறைவேறும். கெளரி நோன்பு இருந்தால் குறையாத செல்வம், நீண்ட ஆயுள், நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும்.
வரலக்ஷ்மி விரதம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி ஒற்றுமை நிலைத்து இருக்கும். பிரதோஷ விரதம் இருப்பதால் மன அமைதி ,நீண்ட ஆயுள்,செல்வவளம் கிடைக்கும். மகா சிவராத்திரியில் சிவனை நினைத்து விரதம் இருந்தால், அய்யனின் அருளும், அனைத்து நன்மைகளும் கிடைக்கும். வைகாசி விசாகம் விரதத்தினால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும்.
நவராத்திரி விரதம் இருந்தால் மன நலம், நீண்ட ஆயுள், குன்றாத செல்வம் கிடைக்கும். முப்பெரும் தேவியரின் அருள் நம் இல்லத்தில் நிலைத்து இருக்கும். பெளர்ணமி விரதம் இருந்தால் அனைத்து கஷ்டங்களும் விலகி,சுகமான வாழ்வு அமையும். கார்த்திகை விரதம் இருப்பதால் எல்லாவித நன்மைகளும் கிடைப்பதுடன், முருகனின் பரிபூரண ஆசி கிட்டும்.
கோகுலாஷ்டமி விரதத்தினால் மனநிம்மதி, நல் ஆயுள், கண்ணனின் அருளும் கிடைக்கும். விரதம் இருக்க முடியாதவர்கள் உள்ளன்புடன் ஒரு பூ, கற்கண்டு, பேரீச்சம் பழம், பழம் ஏதாவது ஒன்றை வைத்து, எந்த கடவுளை நினைத்து வணங்கினாலும், நம்முடைய குரலுக்கு செவி சாய்த்து, நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மை எல்லையில்லா ஆனந்ததிற்கு அழைத்து செல்வர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவில். இக்கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் கடந்த 2-ந் தேதி தொடங்கி வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்த 2-ந்தேதி முதல் 6-ந் தேதி வரை வெளிக்கோடை திருநாள் நடைபெற்றது. நேற்று முதல் 11-ந்தேதி வரை உள்கோடை திருநாள் நடைபெறுகிறது. உள்கோடை நாட்களில் வீணை ஏகாந்த சேவை நடைபெறும். உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார்.
அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின், மாலை 6.15 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 6.30 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

இந்த கோவில் மிகவும் பழமையானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.
சிவனின் பெயர் : புண்ணியகோடியப்பர்
அம்மனின் பெயர் : அபிராமி
தல விருட்சம் : கஸ்தூரி அரளி
கோவில் திறக்கும் : காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
இந்த கோவில் 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது. இது 270 வது தேவாரத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக சம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275வது தலமானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வேண்டிகொள்கிறார்கள்.
முகவரி : அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில்,
திருவிடைவாசல் - 613 702, அத்திக்கடை வழி,
குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்
Ph: 04366-232 853,94433 32853, 99431 52999

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சந்தனத்தால் அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது,
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவிலில் உள்ள அதிகார நந்தி, சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் எதிரிலுள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில், பால், பன்னீர், இளநீர், எலுமிச்சை, தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது,
இதைத்தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மன், மூன்றாம் பிரகாரம் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சிவனருள் பெற்ற அதிபத்த நாயனாருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் ‘கடல்நாகை’ எனும் நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை ஈசனுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் ஈசனுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார்.
ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது. மனமகிழ்வுடன் அதையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார். வறுமையில் தவித்த அந்தக் குடும்பம் அன்று பசியால் வாடியது. இருப்பினும் சிவனுக்கு செய்த பணியை நினைத்து அதிபத்தர் திருப்தியடைந்தார்.
மறுநாள் அதிபத்தரின் வலையில் தங்க மீன் கிடைத்தது. அந்த மீனையும் ஈசனுக்கே அர்ப்பணம் செய்தார். வறுமையிலும் கூட விலைஉயர்ந்த தங்க மீனை இறைவனுக்கு தியாகம் செய்த தொண்டை எண்ணி மகிழ்ந்த ஈசன், அதிபத்தருக்கு காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார்.
இந்த நிகழ்வு நடந்தது ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளில் ஆகும். நாகப்பட்டினம் நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் ஆலயத்தில் அதிபத்தருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. அதிபத்தருக்கு ஈசன் அருள் செய்த நிகழ்வை, ஆவணி ஆயில்ய நாளில் திருக்கோவில் அருகில் உள்ள கடலில், படகு மற்றும் மீன் வலையுடன் சென்று நடத்திக் காண்பிக்கிறார்கள்.
ஆவணி ஆயில்ய நாளின் மாலை நேரத்தில், ஆலயத்தில் இருந்து நீலாயதாட்சி அம்மனுடன் காயாரோகணேஸ்வர சுவாமி புறப்படுகிறார். அவரோடு நாகை புதிய கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான அடியவர்களும் வருவார்கள். அப்போது அதிபத்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து கடலுக்குள் எடுத்துச் சென்று, அதிபத்தர் தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வினை நடத்திக் காண்பிக்கிறார்கள்.
பொதுவாக கோவிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால் கோவில் நடையை அடைத்து விடுவார்கள். பரிகார பூஜைகள் செய்தபின்னர் தான் நடையை திறப்பார்கள். ஆனால் இந்த தலத்தில் மட்டும் நடை திறந்தே இருக்கும். சிவனருள் பெற்ற அதிபத்த நாயனாருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.
இறந்தவரின் உடலை ஆலயத்திற்கு முன்பாக வைத்து விடுவார்கள். அப்போது சிவாச்சாரியார், கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவர் உடலுக்கு அணிவித்து, தீர்த்தம் கொடுப்பார். அதன்பிறகே இறுதிச் சடங்கிற்காக தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் இறந்தவரின் ஆன்மா, சிவபதம் அடைவதாக நம்பப்படுகிறது.
காசியைப் போல இத்தலத்திலும் முக்தி மண்டபம் உள்ளது. இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபடுவதால் இறப்பிற்கு பின் முக்தி நிச்சயம். வாழும்போது பக்தியுடன் வாழ்ந்தால், நம் வாழ்க்கைக்குப் பிறகு சிவபதம் நிச்சயம். இறந்தவர்களின் ஆன்மா முக்தி பெற, இத்தல ஈசனுக்கு ‘மோட்ச தீபம்’ ஏற்றியும் வழிபடலாம்.
நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், ‘கடல் நாகைக் காரோணம்’ என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் ‘காயாரோகணேஸ்வரர்’. அன்னையின் திருநாமம் ‘நீலாயதாட்சி’ என்னும் ‘கருந்தடங்கண்ணி’. ‘காயம்’ என்றால் ‘உடம்பு’ என்று பொருள்படும். ‘ஆரோகணம்’ என்பதற்கு ‘உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளல்’ என்று அர்த்தம். இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணர்’ என்றும், இத்தலத்திற்கு ‘காயாரோகணம்’ என்றும் பெயர் வந்தது.
மனித உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்தார் புண்டரீக மகரிஷி. அவரது தவத்தை மெச்சி, அவரது உடலை தன்னுள் ஆரோகணம் செய்து முக்தி கொடுத்தார் ஈசன். இங்கு மூலவர் காயாரோகணேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நெற்றிப் பட்டத்துடன் கூடிய பெரிய சிவலிங்கமாக கிழக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர், அகத்தியர், வசிஷ்டர், கவுதமர், காசிபர், புலத்தியர், ஆங்கிரசர் முதலிய சப்த ரிஷிகளுக்கும், சிவபெருமான் மூல சிவலிங்கத்தில் இருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்த பெரும் புண்ணிய தலம் இதுவாகும். இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாக இவ்வாலயம் திகழ்கிறது. மூலவருக்கு அருகில் தியாகராஜர் சுந்தர விடங்கராய் உள்ள சன்னிதியும் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் உள்ளன. அஷ்ட நாகங்களில் ஒன்றான ஆதிசேஷன் மகா சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. நாக தோஷங்கள் அகல, இத்தல ஈசன் வழிபாடு நமக்குத் துணை நிற்கும்.
சம்பந்தர், அப்பர், சுந்தரரின் பாடல் பெற்ற தலம் இதுவாகும். சுந்தரருக்கு இத்தல ஈசன் நவமணிகள், முத்துமாலை, பட்டு முதலியன வழங்கியுள்ளார்.
இத்தல ஈசன் அகத்தியருக்கு தனது திருமணக் காட்சியை இங்கும் காட்டி அருளியுள்ளார். கோவிலின் உள்ளே சென்றதும் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க ‘நாகாபரணப் பிள்ளையார்’ உள்ளார். இவருக்கு பின்னால் சுதை வடிவில் பெரிய நந்தி இருக்கிறது. நந்திக்கு தென்புறம் முக்தி மண்டபம் உள்ளது. ஆலயப் பிரகாரத்தில் வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், பஞ்சமுக லிங்கம், ஆத்ம லிங்கம், மாவடிப் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், பழனி ஆண்டவர், இடும்பன், சூரியன், கஜலட்சுமி, அறுபத்து மூவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் சன்னிதிகள் இருக்கின்றன.
இத்தல அம்பாள் நீலாயதாட்சியின் கண்கள் கருநீலத்தில் அழகானது. நான்கு திருக்கரங்களுடன் நின்றத் திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறார். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமளா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகளால் அலங்கரிக்கப்பட்ட வள் இந்த அன்னை. இங்குள்ள நீலாயதாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மனைப் போலவே கன்னியாக காட்சித் தருகிறாள்.
இரட்டை நோக்கு நந்தி :
அம்பாள் இங்கு கன்னியாக இருப்பதால், ஈசன் நந்தியை அவளுக்குப் பாதுகாப்பாக அனுப்பினார். ஆனால் நந்தி, ‘தான் அனுதினமும் ஈசனையும் தரிசிக்க வேண்டும்’ எனக் கேட்டார். உடனே ஈசன், அம்பாள் சன்னிதியில் இருந்து கொண்டே தம்மை வழிபடும்படி கூறினார். இதனால் அம்பாள் எதிரில் உள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னிதியைப் பார்த்த படி உள்ளது. நந்தி தனது இடது கண்ணால் ஈசனையும், வலது கண்ணால் அம்பாளையும் பார்த்தபடி இருப்பது இவ்வாலயத்தின் சிறப்பம்சம். இதனை ‘இரட்டை நோக்கு நந்தி’ என்கிறார்கள். இந்த நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து, ஈசன், அம்பிகை, நந்தி என முறைப்படி தேன் அபிஷேகம் செய்து, 5 நெய் தீபங்கள், 5 சந்தனாதி தைல தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.
வழிபாட்டு பலன் :
இவ்வாலயத்தில் உள்ள அகோர வீரபத்திரரை, பவுர்ணமி நாளில் வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வறுமை அகலும். இத்தல வெண்ணெய்பிரான், காசி விஸ்வநாதர், அருணாசலேஸ்வரர் சன்னிதிகள் இரட்டிப்பு பலன்களை அளிக்கவல்லவை. இங்குள்ள பைரவரை வெள்ளி மற்றும் அஷ்டமி நாட்களில் முந்திரி மாலை அணிவித்து வில்வ அர்ச்சனை செய்து, நறுமண மலர்மாலை சூட்டி 9 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் அகலும். இங்குள்ள சனீஸ்வரர், தசரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்கிறார்கள். இவரை 9 நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் சகல விதமான சனி தோஷங்களும், சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரதோஷத்தில் பெருமாள் :
சிவன் கோவில்களில் பிரதோஷத்தின் போது ஈசனும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார்கள். ஆனால் இத்தலத்தில் மோகினி வடிவில் பெருமாளும் அவர்களுடன் புறப்படுகிறார். இவரை பிரதோஷத்தின் போது மட்டுமே தரிசிக்க இயலும். மற்ற நாட்களில் பெருமாள், காயாரோகணேஸ்வரர் சன்னிதியிலேயே இருக்கிறார். பிரதோஷத்தின்போது மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகும் சிவதலம் இது ஒன்றேயாகும்.
நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

திருப்பத்தூர் சிவகாமி சமேத திருத்தளிநாதர் கோவிலில் நந்திப்பெருமானுக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருப்பத்தூர் சிவகாமி சமேத திருத்தளிநாதர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5.40 மணி அளவில் திருத்தளிநாதருக்கும், நந்திப்பெருமானுக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதித்து உள்ளது..
இதனால் பக்தர்கள் யாரும் பங்கேற்காமல் சிவாச்சாரியார்கள் மட்டும் பிரதோஷ பூஜையை செய்தனர்.
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக, அனுமனை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெறலாம்.
பஞ்ச முக ஆஞ்சநேயரை தியானிப்பதன் மூலம் நம் வாழ்வில் நினைத்த காரியம் யாவும் வெற்றியாகும்.
அசாத்ய சாதக ஸ்வாமிந் அ
சாத்யம் தவகிம்வத
ராம தூத க்ருபாசிந்தோ மத் கார்யம் சாதய ப்ரபோ
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக, அனுமனை மனதில் நினைத்து இந்த ஸ்லோகத்தை 27 முறை ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெறலாம்.