என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நாரதர் பூஜித்த தலமாதலால் நாரதர்பூண்டி என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி நார்த்தம்பூண்டி என்றானது. முருகன், நாரதர் இருவருக்கும் தோஷ நிவர்த்தி கொடுத்த தலம் என்பது இதன் சிறப்பாகும்.
    கோவிலின் சிறப்புகள்:

    இத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் அம்மன் வழைபந்தல் என்னும் இடத்தில் சிவனின் சரிபாதி வேண்டி சிவலிங்கம் செய்து வழிபட எண்ணினாள். மண்ணால் ஆன சிவலிங்கம் செய்ய தண்ணீர் தேவைப்பட்டது. எனவே முருகனை வரவழைத்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்யும்படி சொன்னாள். முருகன் தனது வேலாயுதத்தை மேல் திசைநோக்கி வீசினார்.

    அங்கிருந்த மலைகுன்றுகளை பிளந்த வேல் செந்நீரை கொண்டு வந்தது.  அப்போது வேல் பட்டு மலையில் தவம் செய்துகொண்டிருந்த ஏழு முனிவர்கள் மாண்டனர். ஏழு பேரை கொன்ற பாவம் முருகனை பிடித்தது. இந்த பாவம் தீர அம்பாளின் அறிவுரைப்படி முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் ஏழு கோவில்களையும், தென்கரையில் ஏழு கோவில்களையும் ஏற்படுத்தினார்.

    காஞ்சிபுரம், கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகியவை வடகரையில் உள்ள சப்த கரை கண்டங்கள் என அழைக்கப்பட்டன. தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு, நார்த்தம்பூண்டி, தென்பன்றிப்பட்டு, பழங்கோவில், கரப்பூண்டி, மண்டகுளத்தூர் ஆகியவை தென்கரையில் உள்ள சப்த கைலாயங்கள் எனப்பட்டன. சப்த கைலாயங்களில் மூன்றாவதாக திகழ்வது நாரதர் பூஜித்த நார்த்தம் பூண்டி சிவன் கோவிலாகும். கந்தபுராண வரலாற்றில் இந்த தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. தட்சன் தனது மூன்று பிள்ளைகளை தனக்கு சமமாக ஆக்க விரும்பினார்.

    ஆனால் நாரதர் அவர்களுக்கு சிவபோதனை செய்து அவர்களை நல்வழிப்படுத்தினார். தனது பிள்ளைகளை தன் வழிக்கு வரவிடாமல் தடுத்த நாரதருக்கு, உடல் நிலை கெட தட்சன் சாபம் கொடுத்தான். நாரதர் அந்த சாப நிவர்த்திக்காக நார்த்தம் பூண்டியிலுள்ள கயிலாசநாதரை பூஜித்து 12 ஆண்டு காலம் தவமிருந்தார். இறைவன் பஞ்சமூர்த்திகளோடு ரிஷபவாகனத்தில் நாரதருக்கு காட்சி தந்து சாபத்தை நீக்கினார்.

    பின்பு நாரதர் முருகப்பெருமானை வணங்கி சப்தமுனிவர்களின் தலைமைப் பதவியை அடைந்தார். நாரதர் பூஜித்த தலமாதலால் நாரதர்பூண்டி என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி நார்த்தம்பூண்டி என்றானது. முருகன், நாரதர் இருவருக்கும் தோஷ நிவர்த்தி கொடுத்த தலம் என்பது இதன் சிறப்பாகும்.

    பலன்கள்:

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை வேண்டி பயனடையலாம் என்பது நம்பிக்கை.

    போக்குவரத்து:

    போளூரிலிருந்து 19 KM தொலைவில் இக்கோவில் உள்ளது. போளூர் திருவண்ணாமலை சாலையில் உள்ள நாயுடுமங்களம் கூட்டுரோடு சென்று அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்று கோவிலை அடையலாம். போளூரிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.

    கோவில் திறந்திருக்கும் நேரம்:

    காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

    கோவில் முகவரி:

    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்,
    நார்த்தம்பூண்டி,
    திருவண்ணாமலை மாவட்டம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால் கோவில் உள்வளாகத்திலேயே பக்தர்களை அனுமதிக்காமல் திருவிழா, உள்பூஜைகளை நடத்திக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பால், தயிர், சந்தனம், பன்னீர் போன்ற 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த அபிஷேக பூஜையில் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    தாமே விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு என்றும், தம்மிடம் இருந்தே வாழ்வு தரும் தண்ணீர் கிடைக்கும் என்றும் இயேசு கூறுகிறார்.
    விண்ணகத் தந்தையைப் போன்றே தாமும் வாழ்வின் ஊற்றாய் இருப்பதாக இயேசு கிறிஸ்து போதித்தார். தாமே விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு என்றும், தம்மிடம் இருந்தே வாழ்வு தரும் தண்ணீர் கிடைக்கும் என்றும் இயேசு கூறுகிறார்.

    வாழ்வின் தண்ணீர்

    சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார். அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ?” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இந்த தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலை வாழ்வு அளிக்கும்” என்றார். (யோவான் 4:9-14)

    "மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள்."

    வாழ்வு தரும் உணவு

    “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள்.” (யோவான் 6:35-40,53)

    வாழ்வின் ஊற்று

    “தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழ வைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை. என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.” (யோவான் 5:21-26) “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.” (யோவான் 14:6)
    க்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோவிலில் அடுத்த வாரம் தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறையின் மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது.

    இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    தற்காலிக கூரை அமைக்கும் பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறும் என கூறப்படுகிறது. இதையடுத்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோவிலில் அடுத்த வாரம் தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    இதற்கான அனுமதியை இந்து அறநிலையத்துறை ஆணையர் அளித்துள்ளதாக கோவில் வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், தேவ பிரசன்னம் பார்ப்பதற்கான நாள் குறிக்கப்படவில்லை. அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் பார்ப்பதற்கு நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

    அதன்படி தேவ பிரசன்னம் பார்ப்பதற்காக 9 கேரளா தந்திரிகளை கோவில் நிர்வாகம் அழைத்துள்ளது. இந்த 9 பேர்களின் பெயரை சீட்டில் எழுதி அம்மன் சன்னதியில் குலுக்கி போட்டு அதில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். குலுக்கல் முறையில் தேர்வாகும் தந்திரியே தேவ பிரசன்னம் பார்ப்பார். தேவ பிரசன்னம் பார்த்து எடுக்கும் முடிவின் அடிப்படையில் பரிகார பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தீ விபத்து ஏற்பட்ட
    ண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்படவுள்ளதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    சந்திரன் முழுவதுமாக மறைந்து விடும் தினமான அமாவாசை தினம், பல ஆன்மீக செயல்களை செய்வதற்கு ஏற்ற தினமாக இருக்கிறது. இந்த வைகாசி அமாவாசை தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    வைகாசி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

    தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் வைகாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும்.

    வைகாசி மாதம் இறை வழிபாடு, விரதங்கள் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த வைகாசி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் நிம்மதியற்ற நிலை நீங்கும். சுபிட்சங்கள் பெருகும். திருமணத்தடை, புத்திர பாக்கியமின்மை போன்ற குறைபாடுகள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி நல்ல லாபங்கள் ஏற்படும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலை உண்டாகும். கடன், வறுமை நிலை போன்றவை ஏற்படாமல் காக்கும்.
    ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் வரத்து அடியோடு சரிந்து விட்டது.
    ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட மூம்மத ஆலயங்களும் உள்ளன. இதனால் ஆன்மிக சுற்றுலா தலம் என்று அழைக்கப்படுகிறது. மும்மதத்தினர் இங்கு வந்து வழிபட்டு செல்வதால் எப்போதும் நாகை மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். தற்போது ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் ஆலயங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

    ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் (மயிலாடுதுறை மாவட்டம் உள்பட) கோடியக்கரை வன உயிரின சரணாலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், நவக்கிரக கோவில்களான கீழப்பெரும்பள்ளம், வைத்தீஸ்வரன் கோவில், திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களும் இங்கு தான் உள்ளது.

    ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வேளாங்கண்ணி பேராலய திருவிழா, நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா, சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற விழாக்களில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் நாகை மாவட்டத்திற்கு வருகை தருவார்கள்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் வரத்து அடியோடு சரிந்து விட்டது.
    கமுதி சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சின்னம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைக்க அனுமதி வழங்கப்படாததால், அவரவர் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    கமுதி சின்னம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில், பக்தர்கள் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    கமுதி சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சின்னம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிறது. தற்போது ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

    உறவின்முறை நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைக்க அனுமதி வழங்கப்படாததால், அவரவர் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    ஜாதக ரீதியான தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய கோவிலுக்கு செல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விஷயங்களை கடைபிடிக்க வில்லையென்றால் பரிகாரங்கள் கண்டிப்பாக பலன் அளிக்காது.
    ஆலய நுழை வாசலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரை தெளிக்க வேண்டாம்.

    முதல் நாள் இரவே பரிகார தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

    குடும்பத்தோடு செல்வது நல்லது. அதற்காக வாரக்கணக்கில் தாமதப்படுத்துவது கூடாது

    யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று  சொல்லி வாங்காதீர்.

    போகும்போதோ வரும் போதோ குலதெய்வத்தை வழிபடலாம்.

    தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த  பரிகார பூஜையும் பலன் தராது.

    பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்ய வேண்டும்

    ஆலயம் வர இயலாதவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள் மிகுந்த விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலித்தமாகும்.

    முக்கிய பரிகார பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை யாரிடமும்  சொல்லாமல் இருப்பது நல்லது.

    பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஓரையில் செய்யுங்கள்

    பூஜைக்கு பிறந்த நட்சத்திரம் , ஜென்ம நட்சத்திரம் அல்லது அமாவாசை, பவுர்ணமி, சித்திரை 1 போன்றவை உகந்தவை

    பரிகாரம் செய்ய செல்வதற்கு முன் 1 நாளும், பின்னர் 1 நாளும் இறந்தவர், தீட்டு வீட்டிற்கு செல்லாதீர்கள்

    காலையில் அணிந்த உடையில் மாலையில் பரிகாரத்திற்கு அணியாதீர்கள்

    ராகு கால பூஜையை தவிர மற்ற பரிகார பூஜைகளை காலை 7 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.

    பூஜை சாமான்களை கையில் , பிளாஸ்டிக் கவரில் கொடுக்காமல், பித்தளை, எவர்சில்வர் தாம்பாளம், கூடை ஆகியவற்றில் வைத்து கொடுங்கள்.
    நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிங்காரவேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் வைகாசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.. சிறப்பு வழிபாட்டில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நடந்தது.தொடர்ந்து சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்ட கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் கண் திறந்து வைக்கப்பட்டது.
    குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நடந்தது. விழாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு அலங்கரிக்கப்பட்ட கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டபின் கோவில் வளாகத்தை சுற்றி வந்தது. தொடர்ந்து சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்ட கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் கண் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சி குறைந்த அளவு பக்தர்களை கொண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றியும் சுமார் அரைமணி நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் தலைமையில் தாசில்தார் வத்சலா, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் பாபு, சீனிவாசன் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில் பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
    நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
    பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
    நித்யாய சுத்தாய திகம்பராய

    தஸ்மை நகாராய நம:சிவாய

    மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
    நந்தீச்வர ப்ரமத நாத மகேஸ்வராய
    மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
    தஸ்மை மகாராய நம:சிவாய

    சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த
    ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய
    ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
    தஸ்மை சிகாராய நம:சிவாய

    வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
    முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
    சந்த்ரார்க்க வைச்வாநர லோச்சனாய
    தஸ்மை வகாராய நம:சிவாய

    யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
    பினாக ஹஸ்தாய சனாதனாய
    திவ்யாய தேவாய திகம்பராய
    தஸ்மை யகாராய நம:சிவாய

    பஞ்சாஷரமிதம் புண்யம்ய: படேச் சிவசன்னிதௌ
    சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

    பொதுப்பொருள்: ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில் பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
    திருநள்ளாறு சனீஸ்வரர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ளூர் பக்தர்கள் காலையிலேயே வந்து சாமி தரிசனம் செய்தனர். பஸ் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் வெளியூர் பக்தர்கள் வரவில்லை.
    ஊரடங்கு தளர்வால் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. கடை ஊழியர்கள், பொதுமக்கள் என முக்கிய சாலைகளில் வழக்கம்போல் கூட்டத்தை காண முடிந்தது.

    திருநள்ளாறு சனீஸ்வரர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ளூர் பக்தர்கள் காலையிலேயே வந்து சாமி தரிசனம் செய்தனர். பஸ் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் வெளியூர் பக்தர்கள் வரவில்லை.

    நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள், கள், சாரா யக்கடைகள் திறக்கப்பட்டதால், காலை முதல் மாலை வரை தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த மது பிரியர்களின் கூட்டம் இருந்தது. மதுக்கடைகள் திறப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாகவும், இதனால் மீண்டும் மதுக்கடைகள் மூட வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலை தளத்தில் தகவல் பரவியது.

    இதனால் முன்கூட்டியே மது வாங்கி இருப்பு வைக்கும் நோக்கில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை அனைத்து மதுக்கடைகளிலும் திடீரென கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×