என் மலர்
ஆன்மிகம்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தபோது எடுத்த படம்.
ஊரடங்கில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
திருநள்ளாறு சனீஸ்வரர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ளூர் பக்தர்கள் காலையிலேயே வந்து சாமி தரிசனம் செய்தனர். பஸ் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் வெளியூர் பக்தர்கள் வரவில்லை.
ஊரடங்கு தளர்வால் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. கடை ஊழியர்கள், பொதுமக்கள் என முக்கிய சாலைகளில் வழக்கம்போல் கூட்டத்தை காண முடிந்தது.
திருநள்ளாறு சனீஸ்வரர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ளூர் பக்தர்கள் காலையிலேயே வந்து சாமி தரிசனம் செய்தனர். பஸ் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் வெளியூர் பக்தர்கள் வரவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள், கள், சாரா யக்கடைகள் திறக்கப்பட்டதால், காலை முதல் மாலை வரை தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த மது பிரியர்களின் கூட்டம் இருந்தது. மதுக்கடைகள் திறப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாகவும், இதனால் மீண்டும் மதுக்கடைகள் மூட வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலை தளத்தில் தகவல் பரவியது.
இதனால் முன்கூட்டியே மது வாங்கி இருப்பு வைக்கும் நோக்கில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை அனைத்து மதுக்கடைகளிலும் திடீரென கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story