என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடந்த போது எடுத்த படம்
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடந்த போது எடுத்த படம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால் கோவில் உள்வளாகத்திலேயே பக்தர்களை அனுமதிக்காமல் திருவிழா, உள்பூஜைகளை நடத்திக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பால், தயிர், சந்தனம், பன்னீர் போன்ற 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த அபிஷேக பூஜையில் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    Next Story
    ×