என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.” (லூக்கா 13:24-28)
பலரும் செய்ய விரும்பாத ஒரு சில செயல்கள் மட்டுமே நிலை வாழ்வு பெற உதவும் என்று இயேசு கிறிஸ்து போதித்தார். அகன்ற வாயிலாக உலகம் காட்டும் பல செயல்கள் அழிவுக்கே இட்டுச் செல்லும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.
வாழ்வுக்கு உரியோர்
“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்.” (யோவான் 8:12) “தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.” (யோவான் 12:25)
"வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே."
இடுக்கமான வாயில்
“இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.” (மத்தேயு 7:13-14)
வருந்தி முயலுங்கள்
“இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.” (லூக்கா 13:24-28)

குறவலூர் உக்கிரநரசிம்மர் கோவிலில் நரசிம்மருக்கு பால், பன்னீர், இளநீர் தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
திருவெண்காடு அருகே பஞ்சநரசிம்மர் கோவில்கள் உள்ளன. அதாவது மங்கைமடத்தில் வீரநரசிம்மர், குறவலூர் உக்கிரநரசிம்மர், திருநகரியில் யோக மற்றும் இரணிய நரசிம்மர்கள் மற்றும் திருவாளியில் லட்சுமி நரசிம்மர் என ஐந்து நரசிம்மர் ஆகும்.
நேற்று வைகாசி மாத அமாவாசையையொட்டி குறவலூர் உக்கிரநரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி நரசிம்மருக்கு பால், பன்னீர், இளநீர் தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் இன்றி இந்த வழிபாடு நடந்தது.

இந்த ஸ்லோகத்தை செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை தினங்களில் படித்து காளிகாம்பாளை வழிபட செய்வினை பாதிப்புகள், திருஷ்டி தோஷங்கள், எதிரிகளின் தொல்லை நோய் மற்றும் கடன் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
காக்கும் தெய்வமான ஸ்ரீ காளிகாம்பாள் தேவியை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை தினங்களில் படித்து காளிகாம்பாளை வழிபட செய்வினை பாதிப்புகள், திருஷ்டி தோஷங்கள், எதிரிகளின் தொல்லை நோய் மற்றும் கடன் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். அதோடு கஷ்டங்கள் அனைத்தும் ஒழிந்து அஷ்டமாசித்திகள் கைகூடும்.
முழு முதற் கடவுளே மூஷிக வாகனனே
முக்கண்ணன் புதல்வனே மோதகப்ரியனே
பார்வதி மைந்தனே பாலனின் சோதரனே
பார்புகழ் நாயகனே பாடினேன் உனையே’
காட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும்
காளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன்
கருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட
காத்தருள்வாயே கற்பக கணபதியே
அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்
ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே
இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே
ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே
உலகம் உய்யவே உலகில் உதித்தவளே
ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே
எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே
ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே
ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே
ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே
ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்
அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
அல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே
கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே
கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே
காளிகாம்பாள் எனும் காமாட்சித்தாயே
கமடேஸ்வரருடன் காட்சி தருபவளே
பாரதிபாடிய பரமகல்யாணியே
வீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே
வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
பன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்
மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே
சென்னைப்பதியில் சீருடன் அமர்ந்து
சென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே
எங்கும் நிறைந்திருந்து எமபயம்நீக்கிடுவாய்
எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்
குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்காத்திடுவாய்
சங்காபிஷேகத்தில் மகிழ்ந்து சந்ததியைக்காத்திடுவாய்
சத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்
வித்தைகள் கற்போர்க்கு விளக்கம் தந்திடுவாய்
கரும்பேந்திய கையினளே கண்ணினைக்காத்திடுவாய்
விரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்
நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய்
பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்
மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்
நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்
நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்
வம்பு பேசுவோரையும் வரமளித்துக்காத்திடுவாய்
கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்
பாமாலை சூட்டுவோர்க்கு பூமாலை சூட்டிடுவாய்
காமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்
ஆடிவருவோர்க்கு ஆறுதல் தந்திடுவாய்
தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்
வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்
நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
பாடி வருவோரின் பாரத்தை போக்கிடுவாய்
கூடிவருவோர்க்குக் குலவிலக்க்காயய்த்திகழ்ந்திடுவாய்
காளிகாம்பாள் கவசம் ஒதுவோர்க்கேல்லாம்
கஷ்டங்கள் ஒழியுமே கவலைகள் தீருமே
அஷ்டமா சித்தியும் அடைந்திடச்செய்யுமே
நஷ்டம் என்பதே எதிலும் வாராமல்
இஷ்டமுடன் இனிமையாய் வாழ்ந்திடச்செய்யுமே
போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
போற்றி போற்றி கற்பகவல்லியே போற்றி போற்றி
போற்றி அங்கயற்கண்ணியே போற்றி போற்றி
போற்றி மூகாம்பிகை அன்னையே போற்றி
ஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி
ஓம் நற்பவி நற்பவி நற்பவி ஓம்

கடற்கரைக்கு செல்லக்கூடாது என்று அறிவித்திருந்த போதிலும் கொரோனாவால் இறந்தவர்களின் அஸ்தியை இனியும் வீடுகளில் வைத்திருக்கக்கூடாது என்று கருதி அஸ்தியுடன் சேதுக்கரை கடற்கரைக்கு வந்து குவிந்தனர்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி அதனால் பலர் பலியாகி வருகின்றனர். இதன்காரணமாக அரசு தளர்வுகளுடனும், தளர்வுகள் இல்லாமலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது இருந்ததை விட இந்த ஆண்டு 2-வது பரவலின்போது ஏராளமானோர் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். தெருக்களிலும், ஊர்களிலும் அக்கம்பக்கத்திலும் யார் இறந்தாலும் கொரோனாதான் காரணமாக இருந்தது.
அந்த அளவிற்கு கொரோனா தொற்றால் பலர் பலியாகி உள்ளனர். இவ்வாறு பலியானவர்களுக்கு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமே இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு மின் மயானத்தில் எரியூட்டி சாம்பல் மட்டும் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டு வந்தது. இறுதி சடங்கினை கூட செய்ய முடியாமல் தவித்து வந்த குடும்பத்தினர் இறந்தவர்களுக்கு முறையான காரியங்களை கடற்கரையில் செய்ய முடியாமல் வேதனை அடைந்து வந்தனர்.
ஊரடங்கு காரணமாக கடற்கரை பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக இறந்தவர்களுக்கு உரிய காலத்திற்குள் அதற்குரிய காரியங்களை செய்ய முடியாமல் அதனால் குடும்பத்திற்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று கடும் சோகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் அரசு சற்று தளர்வுகளுடன் ஊரடங்கினை அறிவித்துள்ளதால் நேற்று அமாவாசை தினத்தில் சேதுக்கரை கடற்கரையில் காலையிலேயே மக்கள் திரண்டு வந்தனர்.
கடற்கரைக்கு செல்லக்கூடாது என்று அறிவித்திருந்த போதிலும் கொரோனாவால் இறந்தவர்களின் அஸ்தியை இனியும் வீடுகளில் வைத்திருக்கக்கூடாது என்று கருதி அஸ்தியுடன் சேதுக்கரை கடற்கரைக்கு வந்து குவிந்தனர்.
அங்கு தங்கள் குடும்பத்தில் கொரோனாவால் இறந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி உரிய காரியங்களை செய்தனர். கொரோனாவால் இறந்தவர்கள் தவிர கடந்த 2 மாதங்களாக தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் முன்னோர்களின் நினைவாக கடற்கரைக்கு வந்து தர்ப்பணம் கொடுத்து தங்களின் கடமையை நிறைவேற்றினர். தடையை மீறி இவ்வாறு வந்தவர்களுக்கு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அபராதம் விதித்த போதும் அதனை பற்றி கவலைப்படாமல் தங்களின் கடமையை செய்வதில் உறுதியாக வந்திருப்பதை காண முடிந்தது.

அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார்.
ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார் அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்
அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார்.அகஸ்தியர் அதை கேட்டு அனைவரும் ஆச்சிரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள் மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணின் பெருமையை என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய் சரி நானே கூறுகிறேன்
சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அறிய வரங்கள் தரவேண்டும் என நிபந்தனை வைத்தான்
அவை
1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும்
2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும்
3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும்
என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான்
அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர் இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க,ராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும்( பெண்ணையும்) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன் ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார்
அகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார் லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபையோர் முன் விளக்கமுடியுமா லக்ஷ்மணர்?
அண்ணா நினைவு இருக்கலாம் ரிஷிமுக பர்வதத்தில் மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன் அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது.
அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் நித்ராதேவி யிடம் ஒரு வரம் கேட்டேன் அம்மா என் அண்ணன் ராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன் அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வனவாசத்தின் போது
மூன்றாவது நம் குருநாதராகிய விஸ்வாமித்திரர் நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் பலா அதிபலா என்னும் மிகவும் சக்திவாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார் அந்த பலா அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக்கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார்
லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார் ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும் என்பது எம் கருத்து..!
ஸ்ரீ ராமஜெயம் சொல்வது எவ்வளவு புண்ணியமோ அப்படியே,
ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம் சொல்வது புண்ணியமே..!

கருடனை வணங்கினால் விஷ்ணு பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனை எந்தெந்த கிழமைகளில் வழிபட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாம் பார்ப்போம்.
கருடனை வணங்கினால் விஷ்ணு பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
கருடனை ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.
திங்கட்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும்.
செவ்வாய் கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.
புதன் கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும்.
வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்த பாவங்கள் கூட உங்களுக்கு வினையாக வந்து நிற்கும். நீங்கள் சில சுலபமான பரிகாரங்களை செய்து உங்கள் பாவங்களில் இருந்து விமோசனம் பெறலாம் என்கிறது ஐதீகம்.
நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது என்று எந்நேரமும் யோசிப்பவரா நீங்கள் ? எதை செய்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையே? எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது நம் கைகளில் நிற்கவில்லையே என்று ஏங்குபவரா நீங்கள்? அதற்கு எல்லாம் முக்கிய காரணம் உங்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்கள் தான் என்கிறது புராணம். தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்த பாவங்கள் கூட உங்களுக்கு வினையாக வந்து நிற்கும். இதுபோன்ற சூழலில் சிக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் சில சுலபமான பரிகாரங்களை செய்து உங்கள் பாவங்களில் இருந்து விமோசனம் பெறலாம் என்கிறது ஐதீகம்.
முக்கியமாக பசியோடு இருப்பவர்கள், வறுமையில் வாடுபவர்களுக்கு தேடி சென்று உணவளியுங்கள். , மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்களுக்கு நீங்கள் தரும் உணவு உங்களின் பாவம் கணக்கை குறைத்துவிடும். வீட்டில் மிச்சமான உணவை தருவதைவிட நீங்கள் விருப்பப்பட்டு சமைத்து, அதை இல்லாதோருக்கு தரும்போது உங்களின் கர்மா நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
ஏழு ஜென்ம பாவத்தை போக்க 3 வழிகள்!
அதேபோல் அரிதிலும் அரிதாக ஏதேனும் இறந்து கிடக்கும் பாம்பை நீங்கள் காண முற்பட்டால் அதை குழி தோண்டி புதைத்து அதன் மேல் சிறிது பாலை ஊற்றி இறுதி சடங்கு செய்து விடுங்கள். இது அரிதிலும் அரிதாக நடக்கும் விஷயம் தான், இருந்தாலும் இதுபோன்ற செயல் உங்கள் கண்களில் பட்டால் அதை செய்வது நல்லது . அதேசமயம் அந்தப் பாம்பு இறந்து விட்டதா என்று பரிசோதித்துவிட்டு பிறகு இதை நீங்கள் செய்யலாம்.
முக்கியமாக பசியோடு இருப்பவர்கள், வறுமையில் வாடுபவர்களுக்கு தேடி சென்று உணவளியுங்கள். , மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்களுக்கு நீங்கள் தரும் உணவு உங்களின் பாவம் கணக்கை குறைத்துவிடும். வீட்டில் மிச்சமான உணவை தருவதைவிட நீங்கள் விருப்பப்பட்டு சமைத்து, அதை இல்லாதோருக்கு தரும்போது உங்களின் கர்மா நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் புறாக்களுக்கு உணவளிக்க மறக்காதீர்கள் . கோதுமை அல்லது ஏதேனும் தானிய வகையை நீங்கள் புறாக்களுக்கு கொடுப்பதன் மூலம் உங்களின் பூர்வ ஜென்ம சாபம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல் அரிதிலும் அரிதாக ஏதேனும் இறந்து கிடக்கும் பாம்பை நீங்கள் காண முற்பட்டால் அதை குழி தோண்டி புதைத்து அதன் மேல் சிறிது பாலை ஊற்றி இறுதி சடங்கு செய்து விடுங்கள். இது அரிதிலும் அரிதாக நடக்கும் விஷயம் தான், இருந்தாலும் இதுபோன்ற செயல் உங்கள் கண்களில் பட்டால் அதை செய்வது நல்லது . அதேசமயம் அந்தப் பாம்பு இறந்து விட்டதா என்று பரிசோதித்துவிட்டு பிறகு இதை நீங்கள் செய்யலாம்.
நாடு முழுவது பல மாநிலங்களில் பகுதிநேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருப்பதிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு வருகின்றனர். நாடு முழுவது பல மாநிலங்களில் பகுதிநேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருப்பதிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தேவஸ்தானம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தரிசனம் செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கி உள்ளது.
இந்த வாய்ப்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலால் தேவஸ்தானம் கோவிலில் உற்சவங்களை பக்தர்களின்றி தனிமையில் நடத்தி வருகிறது. அதன்படி பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவமும் தனிமையில் நடைபெற உள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி தேவஸ்தானம் 5 நாட்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்துவது வழக்கம்.
அதன்படி இம்மாதம் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
கொரோனா பரவலால் தேவஸ்தானம் கோவிலில் உற்சவங்களை பக்தர்களின்றி தனிமையில் நடத்தி வருகிறது. அதன்படி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவமும் தனிமையில் நடைபெற உள்ளது.

ஆஞ்சநேயர் பிறந்த இடமென தேவஸ்தானம் புராண ஆதாரத்துடன் நிரூபித்த இப்பகுதியில் தேவஸ்தானம் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
திருப்பதி சேஷாசல மலைத் தொடரில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் உள்ள ஆகாச கங்கை பகுதியில் அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்றதாக புராணங்கள் மூலம் தேவஸ்தானம் நிரூபித்துள்ளது.
அதனால் அங்கு அஞ்சனாதேவி சமேத பால ஆஞ்சநேய சாமி கோவிலை ஏற்படுத்தி தேவஸ்தானம் ஜூன் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அனுமன் ஜெயந்தி உற்சவத்தை நடத்தியது.
தினசரி இங்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகளுடன் பாராயணங்களும், கதா காலட்சேபமும் நடந்து வந்தது.
இந்நிலையில் ஆஞ்சநேயர் பிறந்த இடமென தேவஸ்தானம் புராண ஆதாரத்துடன் நிரூபித்த இப்பகுதியில் தேவஸ்தானம் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இங்கு வந்து பாலஆஞ்சநேயரை வணங்கி செல்வர் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியுள்ளார்.

நமது விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம். எடுத்த காரியம் வெற்றியாகும். பகைவர்கள் விலகுவர்.
பொதுவாக பல இடங்களில் ஆஞ்சநேயர் இடது கையால் சஞ்சீவி மலையையும், வலது கையால் கதையையும் தாங்கியபடி இடுப்பில் சிவந்த ஆடையை உடுத்திக்கொண்டும், மார்பில் மணிமாலையை அணிந்தபடியும், இதயத்தில் ஸ்ரீராமரின் சரணங்களையும், வாக்கில் ஸ்ரீராம நாமத்தையும் தரித்துக் கொண்டு, பக்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் தோற்றத்தில் காணப்படுகிறார். நமது விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம்.
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்
‘ஓம் ஆஞ்சநேயா வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் பிரசோதயாத்’
நாம் ஆஞ்சநேயரை அறிந்து கொள்வோம். வாயுவின் புத்திரனான அவர் மீது தியானம் செய்வோம். அனுமன் என்னும் பெயர் கொண்ட அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.
இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால், தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். எடுத்த காரியம் வெற்றியாகும். பகைவர்கள் விலகுவர். கவலைகள் அகலும். நாவன்மை பிறக்கும். குறிப்பாக மூச்சு பிரச்சினைகள் நீங்கி மன தைரியம் பிறக்கும்.

கொரோனா ஊரடங்கால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக்கடல் மாத அமாவாசையான இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
தென்னகத்து காசி என்றழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்த கடற்கரையில் மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், தர்ப்பணம் செய்த பின்னர் ராமநாதசுவாமியை தரிசித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வந்ததை அடுத்து தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தளர்வுகளற்ற பொது முடக்கம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், வைகாசி அமாவாசை நாளான இன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஒருசில வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி பூட்டிக்கிடக்கும் ராமநாதசுவாமி திருக்கோயில் நுழைவு வாயில் முன்பாக நின்று வழிபட்டு சென்றனர்.