என் மலர்
ஆன்மிகம்

திருப்பதி
திருப்பதியைப் பற்றி சில அரிய விஷயங்கள்
ஏழு மலைகளைக் கடந்து அமர்ந்திருக்கும் காரணத்தால், இவரை ‘ஏழுமலையான்’ என்றும் அழைக்கிறார்கள். ஏழுமலையான் அருள்பாலிக்கும் திருப்பதியைப் பற்றி சில அரிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
கலியுகத்தில் பணக்கார தெய்வமாக கருதப்படுபவர், திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி ஆவார். ஏழு மலைகளைக் கடந்து அமர்ந்திருக்கும் காரணத்தால், இவரை ‘ஏழுமலையான்’ என்றும் அழைக்கிறார்கள். ஏழுமலையான் அருள்பாலிக்கும் திருப்பதியைப் பற்றி சில அரிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
* திருப்பதி கோவிலில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில், அபூர்வமான பாறைகள் காணப்படுகிறது. இந்தப் பாறைகள் ‘சிலாதோரணம்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பாறைகள் இங்கு மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்பாறைகளின் வயது, 250 கோடி வருடம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாறைகளும், ஏழுமலையானின் திருமேனியும் ஒரே விதமானவை என்கிறார்கள்.
* பொதுவாக ஒரு சிலை வடிக்கப்படுகிறது என்றால், அந்தச் சிலையில் அதை வடித்ததற்கான சுவடு இல்லாமல் இருக்காது. சிற்பியின் உளிபட்ட இடம் எங்காவது தென்பட்டே தீரும். உலோகச் சிலையாக இருந்தால் கூட, அதை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஆனால் கற்சிலையான ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எந்தவித அடையாளத்தையும் நாம் பார்க்க முடியாது. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும், அது சுரசுரப்பாகவே இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம், மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்கிரகத்தில் வடிக்கப்பட்ட நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் போன்ற அதிக வேலைப்பாடு உள்ளவை கூட பளபளப்பாக இருக்கின்றன.
* திருப்பதி திருக்கோவில் மடப்பள்ளி (சமையல்அறை) மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் அதிக அளவில் தயார் செய்யப்படுகின்றன.
* பெரும் பணக்கார தெய்வமாக இருந்தாலும், ஏழுமலையானுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் வெறும் தயிர் சாதம் தான். அந்த நைவேத்தியத்தையும் மண் சட்டியில் வைத்துதான் படைப்பார்கள். இதற்காக தினமும் ஒரு புதிய மண் சட்டி வாங்கப்படுகிறது. தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்ப்பக்கிரகத்திற்குள் செல்லாது. தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட பாத்திரங்களுக்கும் இந்த கர்ப்பக்கிரகத்திற்குள் அனுமதியில்லை. ஏழுமலையானுக்கு படைக்கப்பட்ட தயிர்சாதமும், அது வைக்கப்பட்ட மண் சட்டியும் ஒரு பக்தனுக்கு கிடைக்கப்பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியம்.
* வெள்ளிக்கிழமைகளில், ஏழுமலையானுக்கு அர்ச்சனை செய்ய வில்வ இலையை பயன்படுத்துகிறார்கள். மார்கழி மாத அர்ச்சனை யிலும் வில்வ இலை இடம் பிடிக்கிறது. சிவராத்திரி அன்று ‘ஷேத்திர பாலிகா’ என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவருக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறும். அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறப்பதாக ஐதீகம். ஏழுமலையானின் தல விருட்சம், புளிய மரம்.
* திருமலை திருப்பதியில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 கல்வெட்டுகள், பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 169 கல்வெட்டுக்கள், சாளுவ வம்ச மன்னர்களின் காலத்தில் உள்ளவை. 229 கல்வெட்டுகள், கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்தவை. 251 கல்வெட்டுக்கள், அச்சுதராயர் காலத்தைச் சேர்ந்தவை. 147 கல்வெட்டுகள், சதாசிவராயர் காலத்தவை. 135 கல்வெட்டு கள், கொண்டை வீடு அரசர் காலத்தவை. இங்குள்ள கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுகள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில்தான் உள்ளன.

Next Story