என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கோவிந்தராஜசாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேக விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனா்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் 3 நாள் நடந்தது. நிறைவு நாளான நேற்று அதிகாலை கோவிலில் சுப்ரபாத சேவை நடந்தது. காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கோவில் விமான பிராகாரத்தில் உற்சவர்கள் ஊர்வலம் நடந்தது.

    அதன்பிறகு சத கலசா ஹோமம், மகாசாந்தி ஹோமம், மதியம் 12 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமியை திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டு வந்து மஞ்சள், சந்தனம், குங்கமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் தங்கக் கவச பிரதிஷ்டை, அக்‌ஷத ரோஹனம், பிரம்ம கோஷம், ஆஸ்தானம், கவச சமர்ப்பணம், மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனா்.

    ஜேஷ்டாபிஷேக நிகழ்ச்சிகளில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி ராஜேந்திரடு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனனம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும்.
    தேர்வு பயம் என்பது யாருக்குத்தான் இல்லை? நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படபடப்பு தேவையற்றது. பாடத்தை உருவேற்றி, மனதுக்குள் மனனப்படுத்திக் கொண்டு, எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளப் பழகுங்கள். குறிப்பாக, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இதை தினமும் கூட சொல்லலாம்.

    பாஷ்யாதி ஸர்வஸாஸ்த்ரானி ஏசான்யே நியமாஹா: ததா
    அட்சரானயச ஸர்வானி துவந்து தேவி நமோஸ்துதே.

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனனம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும். பீரோ லாக்கரில் இருந்து சாவி போட்டு எடுக்கிற பொருள் போல, படித்து உள்வாங்கிய விஷயங்களை, சட்டென்று எடுத்து தேர்வுத்தாளில் இறக்குவதற்கான சாவிதான் இந்த ஸ்லோகம்! ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள்; தேர்வில் வெற்றி நிச்சயம்!
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 3 நாட்கள் நடக்கிறது. ஆண்டு முழுவதும் கோவிலில் பல்வேறு உற்சவங்கள் நடக்கிறது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

    பவித்ரோற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், கபிலேஸ்வரசாமி, காமாட்சி தாயார், சண்டிகேஸ்வரசாமிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், விபூதி, இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களுடன் ஸ்நாபன திருமஞ்சனம், மாலை கலச பூஜை, ஹோமம், பவித்ரா பிரதிஷ்டை ஆகியவை நடந்தது.

    பவித்ரோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரெட்டிசேகர், சீனிவாசநாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    மதுரை அழகர்கோவில் ஆடிப்பெருந்திருவிழாவின் 5-ம் நாளான நேற்று மோகினி திருக்கோலத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று அழைக்கப்படும் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும்.

    ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிப் பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

    கொரோனா பரவல் காரணமாக ஆடி பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள்  அழகர் கோவில்  உள் பிரகாரத்தில் பக்தர்களின்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    11 நாட்கள் நடைபெறும் ஆடி பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கொடியேற்றம் 16-ம்தேதி நடந்தது. கொரோனா பரவல் காரணமாக காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அழகர் கோவிலில் நடைபெற்றுவரும் ஆடிபெரு திருவிழாவின் 4-ம் நாளான 19-ம் தேதி கருட வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆடிப்பெருந்திருவிழாவின் 5-ம் நாளான நேற்று மோகினி திருக்கோலத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமியை வழிபாடு செய்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவின் 10-ம் நாளான நேற்று கனக தண்டியல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாவாகும்.

    இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல் நாளில் உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழாவுக்கு காப்பு கட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை, கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது.

    விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    2-ம் நாளான 13-ம் தேதி அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    3-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் 7-ம் நாளான நேற்று பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் 8-ம் நாளான 19-ம்தேதி தங்கக்குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    9-ம் நாளான 20-ம் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    10-ம் நாளான நேற்று கனக தண்டியல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும். சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிககப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் புண்ணிய தலமாக கொடுமுடி திருத்தலம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயமாக இது விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம். அதுபோல இங்கு மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால், இது ‘கொடுமுடி’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை ‘மகுடேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது.

    இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிககப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். குழந்தைப் பேறு கிடைக்கவும் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். நாக தோஷம் இருப்பவர்கள், வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    இந்தக் கோவிலில் வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரமும், குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    ஈரோட்டில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கொடுமுடி உள்ளது. கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையம் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் வருகை தருவார்கள்.
    திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    16-வது மாதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மாதத்துக்கான பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.38 மணிக்கு தொடங்கி மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.51 மணிக்கு நிறைவடைகிறது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பவுர்ணமிகிரிவலம் நாட்களான நாளை, நாளை மறுநாள் மலைச் சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம்.

    தமிழக அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி திருவிழா கொண்டாடப்படும் என கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயமாகும். இந்த ஆலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 4-ந்தேதி நிறைவு பெறுவது வழக்கம்.

    கொரோனாநோய் தொற்றை அடுத்து அரசு பொது முடக்கம் அறிவித்திருப்பதை அடுத்து திருவிழா கொண்டாட்டங்கள் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து வருகிற 27-ந்தேதி காலை 5.15 மணிக்கு அருட்தந்தை ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு புனித கொடியேற்றம் நடைபெறுகிறது.

    மாதா சொரூபம் பொறிக்கப்பட்ட புனித கொடியை அருட் தந்தையர்கள் ஜெபம் செய்து அர்ச்சித்த பின்னர் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், மாலை மறையுரையும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 2-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை பரிசுத்த அதிசய பனிமாதா காட்சி கொடுத்த மலையில் அருட் தந்தை விஜயன் தலைமையில் திரியாத்திரை திருப்பலி நடைபெறுகிறது.

    மாலை 6.30 மணிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. 3-ந்தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குருவானவர் பிரிட்டோ அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

    இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணைப் பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 4-ந்தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு அருட்தந்தை ஜார்ஜ் அந்தோணி தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குருவானவர் ரவிபாலன் தலைமையில் மாலை ஆராதனை நடைபெறுகிறது.

    இரவு 10.30 மணிக்கு மலையாளத்திருப்பலியும் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்காரத் தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 5-ந்தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டுத்திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    7-ந்தேதி முதல் சனி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை ஜார்ஜ் அந்தோணி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம்12 நாட்கள் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெறும்.
    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம்12 நாட்கள் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    வழக்கமாக 11 -ம் திருநாள் அன்று நடைபெறும் “ஆடித்தபசு  காட்சி” மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு  ஆடித்தபசு  திருவிழா கடந்த 13-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கொடியேற்றம் மற்றும் முக்கிய விழாக்களில் பங்கேற்க மண்டக படிதாரர்கள் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி தினமும் காலை, இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.

    கொடியேற்றம் தொடங்கியது முதல் வருகிற 24-ந் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஆடித்தபசு திருவிழாவின் 9-வது நாளான இன்று வழக்கமாக தேரோட்டம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை. மாறாக அம்பாள் கோவில் உள்பிரகாரத்தில் வீதிஉலா வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து.

    அதன்படி இன்று காலை அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் கோமதி அம்பாள் கோவில் உள்பிரகாரங்களில் மட்டும் வீதி உலா வந்தார்.

    இதில் கோவில் மண்டக படிதாரர்கள் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    நாளை (வியாழக்கிழமை) 10-வது நாள் திருவிழாவில் கோமதி அம்பாள் கையில் மண்சட்டியில் முளைப்பாரி எடுத்து வெள்ளி சப்பரத்தில் உள்பிரகாரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மண்டகப்படிதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் அடையாள அட்டை வழங்கி உள்ளது. அவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

    பிரசித்தி பெற்ற  ஆடித்தபசு காட்சி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.
    நம்முடைய உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த உபவாசத்தை தேர்வுசெய்து அனுஷ்டிக்கலாம். எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.
    1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
     
    2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    3. பசுவின்பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.
     
    6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    8. மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
    9. மூன்று நாட்கள் தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    10. மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    18. ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப்  பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    19. ஒருநாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    21. ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    22. ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
     
    24. இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.
     
    25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறு நாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
     
    26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
     
    20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு  பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக்  குறைப்பது என உபவாசம் இருத்தல்.
     
    27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.
    தஞ்சை பெரியகோவிலில் உள்ள மகா நந்திக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு நடக்கும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். பால், வில்வம், மஞ்சள், சந்தனம், தயிர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், கொரோனா 2-வது அலை எதிரொலியாக, கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கோவில் மூடப்பட்டது. இருப்பினும், கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம் போல நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில் கடந்த 5-ந்தேதி முதல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதோஷமான நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம் போன்ற மங்கல பொருள்களை கொண்டு அபிஷேகம் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரதோஷத்தை காண வந்திருந்த பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி 12 முறை பிரதோஷ வழிபாடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஆடி மாத பூஜையையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் முதல் நாள் மட்டும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 4 நாட்கள் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ஆடி மாத பூஜைக்காக  சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.

    மறுநாள் முதல் வழக்கமான பூஜைகளுடன், நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. ஆடி மாத பூஜையின் நிறைவு நாளான நேற்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் பிரசித்தி பெற்ற கலச பூஜை

    நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    5 நாட்களாக நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டது. ஆடி மாத பூஜையையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் முதல் நாள் மட்டும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 4 நாட்கள் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்காக சபரிமலை  ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 15-ந் தேதி மீண்டும் திறக்கப்படும். 16-ந் தேதி புத்தரிசி பூஜை நடைபெறும். 23-ந் தேதி ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    ×