என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஆடி பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் லிங்க வடிவமான சிவபெருமானுக்கு முக வடிவ தோற்றமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் நெற்றியில் விபூதி பட்டையானது வெள்ளியில் பொருத்தப்பட்டது. மேலும் கண்கள், புருவங்கள், மூக்கு, மீசை வெள்ளியிலேயே சாத்துப்படி செய்யப்பட்டு மகா தீப, தூப ஆராதனை நடந்தது.
பக்தர்கள் திரளாக கூடியிருந்து பய பக்தியுடன் சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

மாதேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி காசி லிங்கேஸ்வரருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் மாதேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. பிரதோஷத்தையொட்டி காசி லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மாதேஸ்வரர், நந்தி எம்பெருமான், காசி லிங்கேஸ்வரருக்கு திருமஞ்சனம், மஞ்சள் தூள், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், இளநீர், சந்தனம், திருநீறு உட்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சதீஷ்குமார் சிறப்பு பூஜைகளை செய்தார். இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்து கொண்டும் கலந்து கொண்டனர். மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தலைமை அர்ச்சகர் துரைசாமி உதவி அர்ச்சகர் ரஞ்சித் குமார் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரக்க குல தலைவனான “ஹிரண்யகசிபுவை” வதம் செய்த மஹாவிஷ்ணுவின் அவதாரம் “நரசிம்ம அவதாரம்”. அப்படிப்பட்ட நரசிம்மரின் ஒரு அதிசயமான கோவிலைப் பற்றி இங்கு காண்போம்.
நம்பினோர் கெடுவதில்லை” என்பது நான்கு வேதங்களின் வாக்காகும். நன்மைக்கும் தீமைக்கும் ஆன போராட்ட காலங்களில் நல்லவர்களுக்கு தெய்வமே என்றும் துணையாக இருந்து வந்திருக்கிறது. அப்படி தனது நித்திய ஸ்வரூபத்தை உணர்ந்த தனது பக்தனான “பிரகலாதன்” கூறிய “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்ற சத்திய வாக்கை நிரூபிக்க, அத்தூணை பிளந்து கொண்டு வெளிய வந்து, அரக்க குல தலைவனான “ஹிரண்யகசிபுவை” வதம் செய்த மஹாவிஷ்ணுவின் அவதாரம் “நரசிம்மஹ அவதாரம்”. அப்படிப்பட்ட நரசிம்மரின் ஒரு அதிசயமான கோவிலைப் பற்றி இங்கு காண்போம்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடா நகருக்கு சற்று தொலைவில் இருக்கும் “மங்களகிரி” என்ற சிறிய மலைப் பகுதியில் அமைந்துள்ளது இந்த “பானக்காலு நரசிம்மஹ ஸ்வாமி” கோவில். இந்த கோவில் மிகவும் பழமையானதாகும். விஜயநகர பேரரசு மன்னர்கள் அதிலும் குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர் இக்கோவிலுக்கு வருகை புரிந்ததையும், இக்கோவிலுக்கு அவர் செய்த திருப்பணிகளைப் பற்றியும் இக்கோவிலில் உள்ள கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன.
இக்கோவிலுக்கு 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வங்காள துறவியான “சைதன்ய மஹாபிரபுவும்” வருகை தந்துள்ளார். அப்படி அவர் வருகை புரிந்த போது அவர் பாத சுவடுகள் படிந்த ஓரிடத்தை இன்றும் பூஜிக்கின்றனர். இக்கோவிலின் விசேஷமே இக்கோவிலின் தெய்வமான நரசிம்ம ஸ்வாமியின் மூலவர் சிலை, பக்தர்கள் அளிக்கும் வெல்லத்தால் செய்த நீர் பானகத்தை அப்படியே அருந்துவது தான். ஹிரண்யகசிபுவை கொன்ற பின் உக்கிரம் தணியாத நரசிம்மருக்கு, வெல்ல பானகத்தை தந்து தேவர்கள் அவரது உக்கிரத்தை தணித்ததால், அன்றிலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக கூறுகிறார்கள் இந்த கோவில் ஸ்தல வரலாற்றை அறிந்தவர்கள்.
இம்மலையிலேயே சுயம்புவாக அமைந்த நரசிம்ம ஸ்வாமியின் மூலவர் சிலையின் வாயில் வெல்லம், ஏலக்காய் போன்ற பொருட்கள் கலந்த பானகத்தை ஊற்றும் போது ஒரு மனிதன் நீர் அருந்துவது போன்ற சத்தம் ஏற்படுவதை இங்கு வருபவர்கள் அனைவரும் கேட்கமுடிகிறது. அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு பக்தரின் பானகத்தை முழுமையாக அருந்தாமல், மீதி புனைகதை அவர்களுக்கு பிரசாதமாக வெளியே நரசிம்மர் துப்பிவிடும் ஆச்சர்யமும் இங்கு நடப்பதாக கூறப்படுகிறது. இது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு தெய்வீக நிகழ்வாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழாவையொட்டி நேற்று அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாவாகும்.
இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல் நாளில் உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழாவுக்கு காப்பு கட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை, கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது.
விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
2-ம் நாளான 13-ம் தேதி அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
3-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் 7-ம் நாளான நேற்று பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8-ம் நாளான 19-ம்தேதி தங்கக்குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
9-ம் நாளான நேற்று அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும். சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
10-ம் நாளான இன்று கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.

இசை என்பது இசைப்பவர்களுக்கும் அந்த இசையைக் கேட்பவர்களுக்கும் துன்பம் போக்கும் மாமருந்து. ஏனெனில், இசைக்கு மயங்குபவர்கள் மனிதர்கள் மட்டும் அல்ல. இசையைக் கேட்டால், அந்தக் கடவுளே இசைந்து வருவான் என்பார்கள்.
இசையின் மீது விருப்பம் கொள்ளாதவர்கள் எவருமே இல்லை. நம்மில் பலருக்கு இசையை ரசித்துக் கேட்கப் பிடிக்கும். ஒரு சிலருக்கு, அந்த இசையைக் கற்றறிய வேண்டும்; அதில் விற்பன்னராக வேண்டும் என்கிற ஆவல் இருக்கும். இசை என்பது மிகப்பெரிய கலை. ஓவியம் போல, எழுத்து போல, இசை என்பதும் கடவுள் வழங்குகிற வரப்பிரசாதம்!
இசை என்பது இசைப்பவர்களுக்கும் அந்த இசையைக் கேட்பவர்களுக்கும் துன்பம் போக்கும் மாமருந்து. ஏனெனில், இசைக்கு மயங்குபவர்கள் மனிதர்கள் மட்டும் அல்ல. இசையைக் கேட்டால், அந்தக் கடவுளே இசைந்து வருவான் என்பார்கள்.
இசைஞானம் பெற... இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இசையில் வல்லுநர் ஆவீர்கள்!
ஐம்ஸ்ரீ வீணாயை மம ஸங்கீத
வித்யாசம்ப்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா.

நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம்.
நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இதற்காக சுற்றுவட்டார விவசாயிகள் தங்களது நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூக்களை கூடை கூடையாக ஊர்வலமாக எடுத்து வந்து பூச்சொரிதல் நடத்துவார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பூக்களை ஊர்வலமாக எடுத்து வரக்கூடாது என்று இந்துசமய அறநிலையத்துறை கூறியுள்ளது. அதன்பேரில் நேற்று நத்தம் பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட மல்லிகை, ரோஜா, முல்லை, சம்பங்கி, பிச்சி, செவ்வந்தி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை கூடைகளில் கொண்டு வந்து மாரியம்மன் கோவிலில் ஒப்படைத்தனர்.
பின்னர் அம்மனுக்கு வண்ணப்பூக்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் அம்மனை தரிசனம் செய்தனர்.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 2-வது நாளான நேற்று சத கலச ஸ்நாபனம், மகாசாந்தி ஹோமம், ஸ்நபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் சத கலச சொப்னம் மற்றும் மகாசாந்தி ஹோமம் நடந்தது. அதன்பிறகு ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் கோவிந்தராஜ சாமியுடன் கோவிலின் திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு சுவர்ண திருமஞ்சனம், ஸ்னபன திருமஞ்சனம் நிகழ்த்தினர்.
பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் தேங்காய் நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர், சுவாமியின் கவசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கவசம் அணிவிக்கப்பட்டது. மாலையில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் கோவிந்தராஜ சாமியுடன் வீதி உலா வந்தனர்.
2-வது நாளான நேற்று சத கலச ஸ்நாபனம், மகாசாந்தி ஹோமம், ஸ்நபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தது. அதைத் தொடர்ந்து கோவிந்தராஜ சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி உலா வந்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரும் துவாதசி திதியில் தேவர்களை காக்க திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
திருமால் அவதரித்த தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம் ஆகும். கூர்மம் என்றால் ஆமை எனப் பொருள்படும். அத்தகைய ஆமை வடிவம் கொண்டு பல நன்மைகள் ஏற்பட காரணமாக இருந்த கூர்ம அவதாரம் எடுத்த தினம் தான் கூர்ம ஜெயந்தி ஆகும். ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரும் துவாதசி திதியில் தேவர்களை காக்க திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
துர்வாச முனிவரின் சாபத்தால் அனைத்து செல்வத்தையும், பதவியையும் தேவேந்திரன் இழந்தார். தேவேந்திரன் பதவி இழந்ததை அறிந்த அசுரர்கள் தேவர்களுடன் போரிட்டனர். தேவர்கள் அசுரர்களை கொல்ல அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் சிவபெருமானிடம் பெற்ற சஞ்சீவினி மந்திரத்தால் இறந்த அசுரர்களை உயிர் பெறச் செய்தார். இதனால் மிகவும் சோர்ந்த தேவர்கள் விஷ்ணுவை கண்டு இதற்கு ஒரு தீர்வு அளிக்குமாறு வேண்டினார்கள். திருமால் மந்திரமலையை கொண்டு பாற்கடலை கடைய அதில் இருந்து கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மட்டுமே நீங்கள் போரில் வெற்றி பெற இயலும் என்று கூறினார்.
பாற்கடலை கடைய தேவர்களின் பலம் மட்டும் போதுமானதாக இருக்காது என எண்ணி, இந்திரன் அசுரர்களுடன் சமாதானம் பேச சென்று அவர்களை சம்மதிக்க வைத்தார். திருமால் முன்னிலை நின்று மந்திரமலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிராகவும் கொண்டு கடைய பருமன் தாங்காமல் மலையானது புரண்டு விழவும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் இது பயனற்ற செயலாக கருதினர். தேவர்களின் இன்னல்களை போக்கவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் திருமால் மிகப்பெரிய கூர்மமாக (ஆமை வடிவம்) அவதாரம் எடுத்து பாற்கடலில் நுழைந்து மந்திரமலையை தாங்கிக் கொண்டார். அதன் பின் தேவர்களும், அசுரர்களும் மலையை கடைய அதில் இருந்து காமதேனு, கற்பக விருச்சகம், வெண் குதிரை, அப்சர கன்னிகள், ஐரோத வதம், திருமகள் இறுதியாக அமிர்தத்தை ஏந்திய தன்வந்திரியும் வெளிப்பட்டார். தேவர்களும், பூவுலகமும் நன்மை பெற வேண்டும் என எண்ணி கூர்ம மூர்த்தியாக அவதாரம் கொண்டார் திருமால்.
கூர்ம அவதாரம் என்பது யாரையும் அழிப்பதற்காக எடுக்கப்படாமல் அனைவரும் நல்லமுறையில் வாழ வேண்டும் என எடுக்கப்பட்ட மகத்தான அவதாரம் ஆகும். எனவே ஒருவரின் உருவமைப்பு கொண்டு அவரை இகழாமல் அவரிடம் உள்ள உண்மையும், பெருமையையும் உணர்ந்து போற்ற வேண்டும் என்பதை உணர்த்துவதே கூர்ம அவதாரத்தின் நோக்கமாகும்.
இந்நாளில் எல்லா வளங்களையும் அளிக்கும் வல்லமை கொண்ட திருமாலை வணங்கினால் சுபிட்சம் உண்டாகும். மேலும் தாயையும், குடும்பத்தை எவ்விதமான துன்பம் நேராமல் காத்து வரும் தந்தையையும் வணங்கி ஆசி பெறுவது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும்.

முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்லி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா யாக பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் காப்புகட்டிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்லி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா யாக பூஜையுடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் செல்லி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும்.
சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறைவான பக்தர்களை கொண்டு திருவிழா நடைபெற்றது. மேலும் ரூ.2 கோடி மதிப்பிலான ராஜகோபுர திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவிலின் 45-வது பூச்சொரிதல் விழா வருகிற ஜூலை 23-ந் தேதி நடைபெற உள்ளது.
விழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு கணபதி ஹோமம் யாக பூஜை நடைபெற்றது. ஆடி சிறப்பு பூஜையையொட்டி அம்மனுக்கு சந்தனக்காப்பு, பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் காப்புகட்டிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருவிழாவின் 5-ம் நாளான நேற்று சுவாமி வெண்ணெய் தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் தொடர்ந்து 13 நாட்கள் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பக்தர்கள் இன்றி கோவிலில் ஆடி திருவிழா 16-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். அப்போது பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அனுமார் வாகனத்தில் பெருமாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆடி திருவிழாவின் 5-ம் நாளான நேற்று சுவாமி வெண்ணெய் தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 22-ந்தேதியும், முத்துப்பல்லக்கு ஊர்வலம் 26-ந்தேதியும் நடைபெற உள்ளது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோகூர் புனித அந்தோணியார் ஆலய திருவழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கீழ்வேளூர் கோகூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் 10 நாட்கள் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தளங்களில் விழா நடத்த அரசு தடை விதித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோகூர் புனித அந்தோணியார் ஆலய திருவழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பங்கு தந்தை ஜான் பீட்டர் கொடியேற்றினார்.
கொரோனா பரவல் காரணமாக குறைவான பக்தர்களே இதில் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ம் நாள் பெரிய தேர்பவனி நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பெரிய தேர் பவனி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கொடி இறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெரும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா 2-வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பக்தர்கள் வழக்கம்போல் அம்மனை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவினை முன்னிட்டு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்தநிலையில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு ஆடி பெருந்திருவிழா அரசு உத்தரவின்படி ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டும் தமிழக அரசு, திருவிழாக்கள் நடத்த தடைவிதித்துள்ளது. இதையடுத்து திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் சாத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது.
சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பா தலைமை தாங்கினார். சாத்தூர் தாசில்தார் வெங்கடேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா தேவி, இருக்கன்குடி கோவில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வழக்கமாக நடைபெறும் ஆடி பெருந்திருவிழா, கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கோவிலில் தங்குவதற்கோ, கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் கிடா வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. ஆடு கோழிகள் பலியிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தரிசனத்திற்கு வரும் பொதுமக்கள் அரசு வழிகாட்டுதலின்படி முக கவசங்கள் அணிந்து கொண்டு உரிய சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.