என் மலர்

  ஆன்மிகம்

  செல்லி அம்மன்
  X
  செல்லி அம்மன்

  முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்லி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்லி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா யாக பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் காப்புகட்டிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
  முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்லி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா யாக பூஜையுடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் செல்லி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும்.

  சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறைவான பக்தர்களை கொண்டு திருவிழா நடைபெற்றது. மேலும் ரூ.2 கோடி மதிப்பிலான ராஜகோபுர திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவிலின் 45-வது பூச்சொரிதல் விழா வருகிற ஜூலை 23-ந் தேதி நடைபெற உள்ளது.

  விழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு கணபதி ஹோமம் யாக பூஜை நடைபெற்றது. ஆடி சிறப்பு பூஜையையொட்டி அம்மனுக்கு சந்தனக்காப்பு, பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் காப்புகட்டிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×