search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பால் சுனை கண்ட சிவபெருமான்
    X
    பால் சுனை கண்ட சிவபெருமான்

    பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

    திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஆடி பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    மேலும் லிங்க வடிவமான சிவபெருமானுக்கு முக வடிவ தோற்றமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் நெற்றியில் விபூதி பட்டையானது வெள்ளியில் பொருத்தப்பட்டது. மேலும் கண்கள், புருவங்கள், மூக்கு, மீசை வெள்ளியிலேயே சாத்துப்படி செய்யப்பட்டு மகா தீப, தூப ஆராதனை நடந்தது.

    பக்தர்கள் திரளாக கூடியிருந்து பய பக்தியுடன் சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×