என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஆடி மாதம் கொண்டாடப்படும் விழாக்கள் ஆடி கார்த்திகை, ஆடிப்பூரம், சுந்தரர் குருபூசை, ஆடி பரணி ஆகிய விழாக்களை உள் திருவிழாவாக கொண்டாட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் சமீபகாலமாக ரத்து செய்யப்பட்டு வந்தது. சில கோயில்களில் பக்தர்கள் இல்லாமல் உள் திருவிழாவாக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பொறுத்தவரை ஊரடங்கு காரணமாக திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வந்தது.

    ஆடி மாதம் கொண்டாடப்படும் விழாக்கள் ஆடி கார்த்திகை, ஆடிப்பூரம், சுந்தரர் குருபூசை, ஆடி பரணி ஆகிய விழாக்களை உள் திருவிழாவாக கொண்டாட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    அதே சமயத்தில் பக்தர்கள் அதிகம் கூடும் விழாக்களான 1008 திருவிளக்கு பூஜை ஆகியவற்றை கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இந்த நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை கருடசேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) நடப்பது வழக்கம்.

    அதன்படி நேற்று இரவு பவுர்ணமி கருட சேவை நடந்தது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 16-ந்தேதியில் இருந்து நேற்று வரை 9 நாட்கள் கோடி மல்லி பூக்கள், கனகாம்பரம் பூக்கள் ஆகியவற்றால் மகா புஷ்ப யாகம் நடந்தது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 16-ந்தேதியில் இருந்து நேற்று வரை 9 நாட்கள் கோடி மல்லி பூக்கள், கனகாம்பரம் பூக்கள் ஆகியவற்றால் மகா புஷ்ப யாகம் நடந்தது. நிறைவுநாளான நேற்று அதிகாலை கோவில் சுப்ரபாத சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை நடந்தது.

    அதைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்துக்கு உற்சவர் பத்மாவதி தாயாரை கொண்டு வந்தனர். அங்கு தாயாருக்கு நித்யாஹவனம், மகாபிரயாஷ்சிதா ஹோமம், மகா பூர்ணாஹூதி, கும்ப பிரதிஷ்டை ஆகியவை நடந்தது.

    பின்னர் பத்மாவதி தாயாருக்கும், சுதர்சன சக்கரதாழ்வாருக்கும் மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர், தேன் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத பிரதான அர்ச்சகர்கள் உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியை நடத்தினர்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், மகா புஷ்ப யாகத்தால் கொரோனா தொற்று பரவல் குறைந்து, உலக மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள், என்றார்.
    கொரோனா விதிகளை பின்பற்றி திருவிழா நடைபெற வேண்டும் என்பதால் பொதுமக்கள் தனித்தனியாக சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
    தூத்துக்குடி :

    உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி வரை நடக்கும்.

    ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இன்று காலை 4 மணிக்கு ஜெபமாலை நடந்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு திருப்பலியும், 7 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கினார். பின்னர் கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு கொடிமரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரார்த்தனைக்கு பிறகு ஆயர் கொடியேற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அனைத்து நிகழ்ச்சிகளும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு 3-ம் திருப்பலி நடைபெற்றது.

    பகல் 12 மணிக்கு பனிமயமாதாவுக்கு பொன் மகுடத்தை அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மதியம் 3 மணி மற்றும் இரவு 7 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆகஸ்ட் மாதம்ட 4-ந்தேதி இரவு பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. மறுநாள் மாலை 5 மணிக்கு பாளை மறை மாவட்ட பி‌ஷப் அந்தோணி சாமி தலைமையில் 8-ம் திருப்பலி நடக்கிறது.

    கொரோனா விதிகளை பின்பற்றி திருவிழா நடைபெற வேண்டும் என்பதால் பொதுமக்கள் தனித்தனியாக சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கொடி பவனி, நற்கருணை பவனி, சப்பர பவனி ரத்து செய்யப்பட்டு உள்ளது. விழா நாட்களில் வழக்கமாக பேராலயத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சி நடத்தவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய திருத்தல பணியாளர்கள், பங்குதந்தை குமார் ராஜா, உதவி பங்கு தந்தை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டது.
    மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆடி பவுர்ணமியான நேற்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி கருப்பணசாமி கோவிலின் திருக்கதவுகள் மங்கள இசையுடன் மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டன. ராஜகோபுரத்தின் உள்ளே இருந்த பதினெட்டு படிகளிலும் பூக்கள், எலுமிச்சம் பழம், தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அப்போது 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டது. சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டன.

    இதைதொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது ஆகம விதிப்படி திருக்கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படி நடந்தது. மலர் மாலைகளால் திருக்கதவுகள் அலங்கரிக்கப்பட்டன. கதவின் இருபுறமும் குதிரையில் கருப்பணசாமி இருப்பதுபோல் மலர்களால் அலங்கரி்க்கப்பட்டு இருந்தது. ஆனால் பக்தர்கள் யாரும் இதை காண அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமிக்கும், ஆடி அமாவாசைக்கும் மட்டுமே இந்த அழகர்கோவிலில் 18-ம்படி கதவுகள் திறக்கப்பட்டு மூடப்படுவது பாரம்பரியமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
    பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று பக்தர்கள் பலர் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்பக்கம் உள்ள மலையை சுற்றி தனித்தனியாக கிரிவலம் சென்றனர்.
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். கோவில் பின்பக்கம் உள்ள மலையைச் சுற்றி பவுர்ணமி உள்பட விசேஷ நாட்களில் பக்தா்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

    பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று பக்தர்கள் பலர் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்பக்கம் உள்ள மலையை சுற்றி தனித்தனியாக கிரிவலம் சென்றனர்.

    பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசன கவுண்ட்டர்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    இந்த நாளில் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் புத்திரப் பேறுக்காக காத்திருக்கும் தம்பதியர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை
    ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, சுக்ரனுக்குரிய பூரம் நட்சத்திரம் வரும் நாள்தான் ‘ஆடிப்பூரம்’ என்று அழைக்கப்படுகின்றது. அந்த நாள் இந்த ஆண்டு வருகிற 11-8-2021 (புதன்கிழமை) அன்று வருகிறது. ஆடிப்பூர நாளில் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் புத்திரப் பேறுக்காக காத்திருக்கும் தம்பதியர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    சில ஆலயங்களில் முளைகட்டிய பயிரை தயாரித்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்வார்கள். ஆடிப் பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாகவே, பச்சைப் பயிரைத் தண்ணீரில் நனைய வைப்பர். அது ஆடிப்பூரத்தன்று நன்கு முளைக்கட்டிவிடும். அதை அம்பிகைக்கு நைவேத்தியமாகப் படைத்துவிட்டு, குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு கொடுப்பர். நம்பிக்கையோடு அதைச் சாப்பிட்டால் வாரிசு பிறக்கும். நம் இல்லத்திலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
    சிவபெருமான் தனது உடலில் பாதியை பார்வதி தேவிக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக நின்ற திருத்தலம் ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில்’ ஆகும்.
    திருநீறு, ருத்ராட்சம், ‘நமசிவாய’ மந்திரம் போன்றவை, சிவச் சின்னங்களாக போற்றப்படுகின்றன.

    சிவபெருமான் யோகியாக இருந்து அருள்பாலிக்கும் கோலத்தை ‘தட்சிணாமூர்த்தி’ என்கிறார்கள்.

    எமதர்மனை வதம் செய்து, காலசம்ஹார மூர்த்தியாக அருளும் ஈசனை, திருக்கடையூரில் தரிசிக்கலாம்.

    திருஞானசம்பந்தருக்காக, நந்தியை விலகி இருக்கும்படி சிவன் உத்தரவிட்ட தலம், பட்டீஸ்வரம்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில், ‘முக்திவாசல்’ என்று போற்றப்படுகிறது. இது நவக்கிரகங்களில் புதன் தலமாகவும் திகழ்கிறது.

    பார்வதி தேவி, மயில் வடிவில் இருந்து சிவபெருமானை பூஜித்த தலம், சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவில் ஆகும்.

    தட்சிணாமூர்த்தி தனது வலது கை பெருவிரலையும், ஆட்காட்டி விரலையும் இணைத்து, மற்ற மூன்று விரல்களையும் நிமிர்த்தி வைத்திருக்கும் முத்திரைக்கு, ‘சின் முத்திரை’ என்று பெயர்.

    ஊழ்வினையின் பயனாக வேடுவ குலத்தில் பிறந்த பார்வதியை, சிவபெருமான் வேடனாக வந்து மணந்த திருத்தலம், ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் ஆகும்.

    சிவபெருமானின் நடனத்தை காணும் பேறுபெற்ற பெண் அடியார், காரைக்கால் அம்மையார்.

     அன்னாபிஷேகம்

    சிவலிங்கத் திருமேனியை, அன்னத்தைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபடும் அன்னாபிஷேகம், ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் நடைபெறும்.

    யானைகள் ஏற முடியாதபடி அமைக்கப்பட்ட ஆலயங்களை, ‘மாடக்கோவில்’ என்று அழைப்பார்கள். இப்படி ஈசனுக்காக பல மாடக் கோவில்களை கட்டியவர், கோச்செங்கட் சோழன்.

    நடனம் புரியும் நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் என்ற அசுரன், ஆணவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறான்.

    திருமூலர் பாடிய திருமந்திரம், 3 ஆயிரம் பாடல்களால் ஆனது. இது 10-வது திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படும் திருமூலர், ஆண்டொன்றுக்கு இறைவன் மீது ஒரு பாடலைப் பாடியதாகச் சொல்வார்கள்.

    சிவபெருமான் தனது உடலில் பாதியை, பார்வதி தேவிக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக நின்ற திருத்தலம் ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில்’ ஆகும்.

    கயிலாயத்தில் தேவலோக பெண்களுடன் காதல் வயப்பட்டதன் காரணமாக, பூலோகத்தில் மனிதப் பிறவி எடுத்தவர் ‘சுந்தரமூர்த்தி சுவாமிகள்.’

    கயிலையில் சிவபெருமானின் பக்கத்தில் பார்வதி தேவியும் இணைந்து அமர்ந்திருந்ததால், வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்து தரிசனம் செய்தவர் ‘பிருங்கி’ முனிவர்.

    சிறுவனாக இருந்த திருஞானசம்பந்தர், சிவ தல யாத்திரை மேற்கொண்டு வந்தார். செல்லும் ஆலயங்களில் எல்லாம் சிவபெருமானைப் பற்றி தேவாரம் பாடினார். பாடல்கள் பாடும் போது தன்னுடைய கைகளைக் கொண்டு தாளம் இடுவார். இதனால் அவரது பிஞ்சு கைகள் காயம் அடைந்தன. இதையடுத்து சீர்காழிக்கு அருகில் உள்ள திருக்கோலக்கா என்ற திருத்தலத்தில், திருஞானசம்பந்தருக்கு பொன்னால் செய்யப்பட்ட தாளத்தை சிவபெருமான் வழங்கினார்.
    அனுமனை வழிபட்டால், சனி பகவானின் அனுக்கிரகமும் நமக்கு கிடைக்கும். சனிக்கிழமையில் அனுமனை வழிபாடு செய்து வந்தால், சனியின் கடுமையான பார்வையில் இருந்து கொஞ்சம் விலக்கு கிடைக்கும்.
    ராமாயண இதிகாசத்தில் வரும் அனுமன் அதிக சிறப்புகளை கொண்டவர். மனிதனாக பிறந்து, மனிதனாக வாழ்ந்த ராமபிரானின் முதன்மை பக்தனாகவும், தூதனாகவும் இருந்து சிறப்பு பெற்றவர் அனுமன். நம் நாட்டில் பெருமாளுக்கு நிகராக, ஆஞ்சநேயருக்கும் ஏராளமான கோவில்கள் அமையப்பெற்றுள்ளன.

    ராமபிரான்

    இன்றைய பரபரப்பான உலகத்தில், இறை வழிபாடு செய்வதற்குக்கூட பலருக்கும் நேரமில்லை. இறைவனின் அருளைப் பெறுவதற்கு ஆடம்பரமாக பூஜை செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அந்த வகையில் ஆஞ்சநேயரின் அருளைப் பெறுவது மிகவும் சுலபமான காரியம். சாதாரணமாக ‘ஸ்ரீராம் ஸ்ரீராம்’ என்று கூறினாலே, அனுமனின் அருளைப் பெற்றுவிட முடியும். ஏனெனில் ராமபிரானைவிடவும், அவரது ‘ராம’ நாமத்திற்கு சக்தி அதிகம் என்று நம்பியவர், ஆஞ்சநேயர்.

    எங்கெல்லாம் ராம நாமம் சொல்லப்படுகிறதோ, அங்கெல்லாம் அந்த நாமத்தைக் கேட்பதற்காக அனுமன் விரைந்து வருவதாக புராணங்கள் சொல்கின்றன. ஆஞ்சநேயரை வழிபட்டால், அவரின் அருளை மட்டுமல்லாது, ராமபிரானின் அருளையும், சிவபெருமானின் அருளையும் கூட சேர்த்தே பெற முடியும். ஏனெனில் தன்னுடைய பக்தனின் பக்தர்கள், ராமனுக்கும் பக்தர்கள்தான். அதே போல் ராமாயணத்தில் அனுமன், சிவபெருமானின் அம்சமாக தோன்றியவர் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால் ஆஞ்சநேயரை வணங்கினால், ஈசனின் அருளையும் பெற்றுவிடலாம்.

    அதோடு அனுமனை வழிபட்டால், சனி பகவானின் அனுக்கிரகமும் நமக்கு கிடைக்கும். சனி பகவானால் பிடிக்க முடியாதவர்களாக விநாயகப்பெருமானும், ஆஞ்சநேயரும் மட்டுமே இருப்பதாக புராணக் கதைகள் கூறுகின்றன. எனவே சனிக்கிழமையில் அனுமனை வழிபாடு செய்து வந்தால், சனியின் கடுமையான பார்வையில் இருந்தும் கொஞ்சம் விலக்கு கிடைக்கும்.

    ஆலயத்திற்குச் சென்று வழிபட முடியாதவர்கள், இல்லத்திலேயே அனுமனின் படத்தை வைத்து, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்யலாம். அதன் மூலம் நம்முடைய துன்பங்களும், வெண்ணெயைப் போலவே கரைந்து போகும். ஏதாவது இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலோ, அல்லது ஏதாவது ஒரு விஷயத்தில் வெற்றி தேவை என்று கருதினாலோ, ஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாக தொடுத்து சூட்டி வணங்குங்கள். அந்த காரியம் மிக விரைவிலேயே சுமுகமாக நிறைவேறிவிடும். சனிக்கிழமைதோறும் அனுமன் கவசம் படித்து வந்தால், எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

    அனுமனுக்கு பிடித்தமான நைவேத்தியமாக வெண்ணெய், வடை உள்ளது. அதே போல் திராட்சைப் பழமும் அவருக்கு பிடித்த நைவேத்தியம் ஆகும். காரிய வெற்றிக்கு திராட்சைப் பழத்தை படைத்து வழிபடலாம். அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலை சாத்தி, ஸ்ரீராமஜெயம் எழுதி அதை காகித மாலையாக அணிவித்து வந்தால், வேண்டிய வரம் கிடைக்கும். திருமணத்தடை நீங்க வேண்டுமானால், வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட வேண்டும்.

    எந்த நைவேத்தியத்தையும், எந்த மாலையையும் சூட்டி வழிபட முடியாதவர்கள், ஏதொன்றும் செய்யத் தேவையில்லை. ‘ஸ்ரீராம் ஜெய்ராம், ஜெய ஜெய ராம்’ என்ற வாக்கியத்தை உச்சரித்து வந்தாலே, உங்கள் வாழ்க்கை இன்பமானதாக மாறும்.
    ஆடி பவுர்ணமி தினத்தில் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் சிறப்பான பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
    தமிழ் மாதங்களில் பற்பல சிறப்புகளை கொண்ட ஒரு அற்புத மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த ஆடி மாதத்தில் தான் பெண் தெய்வங்களுக்கான வழிபாடுகள் பூஜைகள், போன்றவை மிகச் சிறப்பாக செய்யப்படுகின்றன. தெய்வங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இந்த ஆடி மாதத்தில் திருமணம், புது வீடு புகுதல் போன்ற சுபகாரியங்கள் செய்வது தவிர்க்கப்படுகிறது. அத்தகைய ஆடி மாதத்தில் வருகின்ற ஒரு மிக அற்புதமான தினம் தான் ஆடிப்பவுர்ணமி தினம். மிக சிறப்பான தினமான ஆடி பவுர்ணமி தினத்தில் அம்மன் வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் மிக அற்புதமான மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி.

    ஆடி மாத பவுர்ணமி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உணவேதும் அருந்தாமல், வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் அருகிலுள்ள அம்மன் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்மன் அல்லது அம்பாள் தெய்வங்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது.

    பல வகையான வாசம் மிக்க பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அருகம்புல்லாலும் அம்மனுக்கு அர்ச்சனை மிகவும் சிறப்பானதாகும். மேலும் ஆடி பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லதாக இருக்கின்றது.

    அம்மன்

    மேற்படி பூஜையை முடித்த பின்பு நைவேத்தியப் பிரசாதத்தையும், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். அம்மனை மேற்கூறிய வழியில் வழிபடுபவர்களுக்கு மிகுதியான புண்ணிய பலன்கள் ஏற்படும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும்.

    வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அறவே நீங்கி லாபங்கள் பெருகும். நோய்நொடிகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விபத்துக்கள், துர்மரணங்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இந்த ஆடி பவுர்ணமி தினத்தில் வேதம் அறிந்த பிராமணர்களுக்கு புது வஸ்திரம் மற்றும் உங்களால் முடிந்த தொகையை தட்சணையாக தானம் தருவது உங்களின் அத்தனை விதமான தோஷங்களை போக்குகின்ற ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
    சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் அந்தந்த மண்டகப்படியில் சுவாமி-அம்பாளுக்கு பூஜைகள் நடத்தாமல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில் உள்பிரகாரத்திலேயே சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் அந்தந்த மண்டகபடிதாரர்கள் மட்டும் 50 பேர் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    விழாவின் சிகர நாளான ஆடித்தபசு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. வழக்கமாக தெற்கு ரத வீதியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெறும் ஆடித்தபசு காட்சி, தற்போது கோவிலுக்குள்ளேயே எளிமையாக நடத்தப்படுகிறது.

    மாலை 6 மணியளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் இரவு 8 மணியளவில் யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்கசுவாமியாக அம்பாளுக்கு காட்சி கொடுக்கிறார்.

    இதில் இரு மண்டகபடி சமுதாயத்தைச் சேர்ந்த 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    விழாவையொட்டி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலிவரதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ஸ்ரீவாரி பாதத்துக்கு திருமஞ்சனம், அலங்காரம், சிறப்புப்பூஜைகள் செய்து, குடை பிரதிஷ்டை செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
    திருமலையில் உள்ள 7 மலைகளில் மிக உயரமான மலை நாராயணகிரி மலை. திருமகளை தேடி வந்த சீனிவாசபெருமாள் நாராயணகிரி மலை சிகரத்தில் பாதம் பதித்த முதல் இடம் இதுவாகும். அங்கு, ஆடி மாதத்தில் காற்று அதிவேகமாக வீசும். அங்கு, குடையை பிரதிஷ்டை செய்ததும் அதிவேகமாக வீசும் ஆடி காற்று சற்று வேகத்தைக் குறைத்து சாந்தமாக வீசத் தொடங்கும்.

    மேற்கண்ட நிகழ்வை நினைவுக்கூறும் வகையில் திருமலை அருகே நாராயணகிரி மலையில் நேற்று சத்ர ஸ்தாபனோற்சவம் (குடை பிரதிஷ்டை விழா) நடந்தது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-வது மணி ஒலித்ததும் அர்ச்சகர்களும், ஊழியர்களும் பிரசாதம், மலர்கள், தங்கக் கிணற்றில் இருந்து புனிதநீா், பிரத்யேக குடை ஆகியவற்றை மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலின் நான்கு மாடவீதிகள் வழியாக நாராயணகிரி மலை சிகரத்தில் உள்ள ஸ்ரீவாரி பாதத்துக்கு எடுத்துச்சென்றனர்.

    அங்கு, ஸ்ரீவாரி பாதத்துக்கு திருமஞ்சனம், அலங்காரம், சிறப்புப்பூஜைகள் செய்து, குடை பிரதிஷ்டை செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அந்த நேரத்தில் வேதப் பண்டிதர்கள் வேதப் பாராயண சாத்துமுறை நடத்தினர். அங்கிருந்த பக்தர்களுக்கு நைவேத்திய பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து திருமலையை அடைந்தனர்.
    ×