என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஆந்திராவில் ஒருசில பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
திருமலை
கொரோனா தொற்று பரவல் 2-வது அலையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கடந்த மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் 5 ஆயிரம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன.
நேற்று காலை 11 மணியளவில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் 3 ஆயிரமாக உயர்த்தி 8 ஆயிரம் டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறால் சர்வர் இயங்கவில்லை பழுதானது. பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டது.
திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட்பப்பிரிவு அதிகாரிகள் சர்வர் கோளாறை உடனடியாக சரி செய்தனர். இதையடுத்து பக்தர்கள் ரூ.300 டிக்கெட்டுகளை அரை மணி நேரத்தில் முன்பதிவு செய்தனர்.

தேன்கனிக்கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாவிளக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா எளிமையாக நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாவிளக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா எளிமையாக நடைபெற்றது.
இதையொட்டி பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் மாவிளக்கு எடுத்து தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து கோழி பலியிட்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவில் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இனிய கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும்.
வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில் தான் இருக்கிறது. அதுப்போல ஒரு பெண்ணின் பலம் அவளின் கணவனை பொருத்துதான் இருக்கிறது. இனிய கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும்.
ஆண்டுதோறும் கோடைகால பவுர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும். சாவித்திரியை வழிபடும் நாள் இது. வட நாட்டு பெண்கள் விரதம் இருந்து ஆலமரப்பூக்களை சாப்பிடுவார்கள்.ஆண்டுதோறும் கோடைகாலத்தில் பவுர்ணமி அன்று பெண்கள் வழிபாடு நடத்தும் சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும்.
பெண்களுக்கு மாங்கல்ய பலம் அருளும் விரதம் இது. கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் சிறக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, வழிபடுவதால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்; மனதுக்கினிய கணவர் வாய்ப்பார்.

அனைத்து உயிர்களையும், படைத்து, காத்து அருளும் பொறுப்பை மும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் செய்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனைப் பற்றி இங்கே பார்ப்போம்.
இந்த பிரபஞ்சம், பரம்பொருள் எனப்படும் இறைவனால் உருவாக்கப்பட்டது. இதில் உள்ள அனைத்து உயிர்களையும், படைத்து, காத்து அருளும் பொறுப்பை மும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் செய்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனைப் பற்றி இங்கே பார்ப்போம்.
தொழில்
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களில், படைப்புத் தொழிலை செய்து வருபவர், பிரம்மதேவன். உலக உயிர்களை சிருஷ்டிப்பவர் இவர்.
பிறப்பு
ஒவ்வொரு பிரளய காலத்திலும், இந்த பிரபஞ்சம் அழிந்து, உலகம் புதியதாக உருவாகும். அப்போது பிரம்மனும் புதியதாக பிறப்பதாக சொல்லப்படுகிறது. அவர் மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் (தொப்புள்) தோன்றியதாக புராணம் சொல்கிறது.
மனைவி
பிரம்மன், வாக்குக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதியை மணம் செய்துள்ளார். விஷ்ணு, மகாலட்சுமியை தன்னுடைய மார்பில் வைத்திருப்பது போல, சரஸ்வதியை பிரம்மதேவன் தன்னுடைய நாக்கில் வைத்திருக்கிறார்.
பிள்ளைகள்
படைப்புத் தொழிலில் தனக்கு உதவிகரமாக இருப்பதற்காக, சனகர், சனத்குமாரர், சனத்சுஜாதர், சனந்தர் ஆகியோரை படைத்தார். ஆனால் அவர்கள் தவம் இருப்பதையே மேன்மையாக கருதினர். இதனால் வசிஷ்டர், புலகர், புலஸ்தியர், பிருகு, தட்ச பிரஜாபதி, ஆங்கிரஸ், மரீசி, அத்ரி, நாரதர் ஆகியோரை தன்னுடைய பிள்ளைகளாக பிறக்கச் செய்தார்.
வேறு பெயர்கள்
பிரம்மனுக்கு ‘நான்முகன், அயன், கஞ்சன், விரிஞ்சி’ எனப் பல பெயர்கள் உண்டு.
தனிச் சன்னிதி
* ராஜஸ்தான் அஜ்மீர் பகுதியில் கோவில் உள்ளது.
* தமிழ்நாட்டில் திருகண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் மனைவியுடன் தனிச் சன்னிதியில் உள்ளார்.
* திருச்சி அடுத்த திக்கரம்பனூரில் உள்ள எத்தமர் கோவிலிலும் மனைவியுடன் காணப்படுகிறார்.
* ஈரோடு அருகே உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் வன்னி மரத்தடியில் பிரம்மன் அருள்கிறார்.
* திருநெல்வேலி மாவட்டம் பிரம்மதேசத்தில் கயிலாசநாதர் கோவிலிலும் பிரம்மனுக்கு சன்னிதி இருக்கிறது.
* திருச்சி அடுத்த திருப்பட்டூரில் தனிச் சன்னிதி உள்ளது. பிரம்மனுக்கான மிகப்பெரிய சிலை இங்கு உள்ளது.

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
தலைஞாயிறு ஒன்றியம் பனங்காடி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவோண நட்சத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
முன்னதாக சீர்வரிசை எடுத்து வரப்பட்டு, சாமிக்கு மாலை மாற்றும் நிகழ்வு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்களாக இருப்பது கூடுதல் சிறப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. அப்படிப்பட்ட சில ஆலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.
மன நோய் அகல..
சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்து வழிபட்ட சிவலிங்கம் இருக்கும் திருத்தலம், திருவிடைமருதூர். இத்தல இறைவன் மகாலிங்கம் என்று அைழக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு, மன நோய் அகலும். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டால் அதற்கான தீர்வு கிடைக்கும். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, இத் திருத்தலம்.
புற்றுநோய் தீர
கும்பகோணம் அருகே உள்ளது திருந்துதேவன்குடி. இங்கு கற்கடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது இந்திரனால் வழிபடப்பட்ட ஆலயம் ஆகும். இத்தல இறைவியின் திருநாமம் ‘அருமருந்து அம்மை’ என்பதாகும். இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான நிவாரணி. அதிலும் குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக இது கருதப்படுகிறது.
கடன் தொல்லை நீங்க..
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது, திருச்சேறை. இங்கு ‘ரிண விமோச்சனர்’ என்ற நாமத்துடன் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால், அனைத்து விதமான கடன் தொல்லைகளும் நீங்கிவிடும். இறைவனை வழிபடுவதோடு, இத்தல மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைர வரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.
வழக்குகளில் இருந்து விடுபட..
திருபுவனத்தில் உள்ள சரபேஸ்வரரை வணங்கி வருவது சிறப்பான ஒன்று. இவர் அனைத்து சங்கடங்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டவர். இந்த இறைவன், சூலினி- பிரத்தியங்கரா என தன் இரண்டு தேவியர்களுடன் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். சரபரை 11 விளக்கேற்றி, 11 முறை சுற்றி வந்து, தொடர்ச்சியாக 11 வாரங்கள் வழிபாடு செய்தால் வழக்குகள் சாதகமாகும். சுகமான வாழ்வு அமையும்.
பிரிந்த தம்பதியர் ஒன்று சேர..
கும்பகோணத்தை அடுத்துள்ளது ஸ்ரீவாஞ்சியம். காசிக்கு சென்றால் பாவமும் வளரும், புண்ணியமும் வளரும். ஆனால் இந்த ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும். அவ்வளவு சிறப்புக்குரியது இந்தத் திருத்தலம். இந்த ஆலயத்தில் ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரு கிறார்கள். ஏழரைச்சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனிகளுக்கான பரிகாரத் தலமாகவும் இது திகழ்கிறது. இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்யதால் நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு- கேதுவை வழிபட்டு வந்தால், கால சர்ப்ப தோஷம் நீங்கும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும் என்கிறார்கள். இத்தல தீர்த்தமான குப்த கங்கையில் நீராடி, இறைவனையும், இறைவியையும், மகாலட்சுமியையும் வணங்கி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள் என்பது ஐதீகம்.

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவானது, கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகி்ற ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உதவி கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறும்போது, ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் பேரில் விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும், என்றார்.
ஆலோசனை கூட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா, அம்பை துைண போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், தாசில்தார் வெற்றிச்செல்வி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையர் காஞ்சனா, சுகாதார மேற்பார்வையாளர் கணேசன், வனச்சரகர்கள் பரத், சரவணக்குமார், அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் வெங்கடேஷ், ஜெகன்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி சிலையில் படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த பொதுமக்கள் மெய் சிலிர்த்து அந்தப் பாம்பை வழிபட்டனர்.
ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் குடியிருப்புக்கு மத்தியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் இந்த கோவிலுக்குள் 5 அடி நீள நாகபாம்பு ஒன்று வந்தது. அந்த பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி சிலையில் படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த பொதுமக்கள் மெய் சிலிர்த்து அந்தப் பாம்பை வழிபட்டனர்.
மேலும் பூசாரி வந்து பூஜை செய்து கற்பூரம் ஏற்றி காட்டினார். இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. சிறிது நேரத்தில் அந்த கோவில் முன்பு ஏராளமான மக்கள் கூடிவிட்டனர்.
இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் சம்பவ இடத்துக்கு வந்து அம்மன் சிலை மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டார். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார். இதனால் சிறிது நேரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

தேவியைப் போற்றிச் சொல்கிற இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் சொல்லுங்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று, இனிதே வாழலாம்!
தேவியைப் போற்றிச் சொல்கிற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் சொல்லுங்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று, இனிதே வாழலாம்!
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதி கே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலி, மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீா் நடக்கிறது.
தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தத்து கொடியை ஆலயத்தை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
பின்பு நற்கருணை ஆசீருடன் கொடியை பங்குதந்தை ஜெரால்ட் ரவி அர்ச்சித்து தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அருட்தந்தை ரினோ மறையுரை வழங்கினார். இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலி, மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீா் நடக்கிறது. 8-ம் திருவிழாவான வருகிற 3-ந் தேதி காலையில் வடக்கன்குளம் மறை மாவட்ட முதன்மை குரு ஜான்பிரிட்டோ தலைமையில் திருயாத்திரை திருப்பலி, மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
9-ந் திருவிழாவான 4-ந் தேதி காலையில் திருப்பலியும் திருயாத்திரையும் நடக்கிறது. மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் ஜெபமாலையும், மன்றாட்டு மாலையும் நடக்கின்றது. தொடர்ந்து மலையாள திருப்பலியும் நடக்கிறது. 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.
10-ம் திருவிழாவான 5-ந் தேதி பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்கு தந்தை ஜார்ஜ் அந்தோணி, தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்துவருகின்றனர்.

முருகப்பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் உள்ள வித்தக விநாயகருக்கு பக்தர்கள் அருகம்புல், மல்லிகை, ரோஜா, சம்மங்கி மாலைகளை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.
மதுரை அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி அங்குள்ள வித்தக விநாயகருக்கு பக்தர்கள் அருகம்புல், மல்லிகை, ரோஜா, சம்மங்கி மாலைகளை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.
அருகில் உள்ள மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஆதிவேல் சன்னதியிலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். தீபாராதனைகள், பூஜைகளும் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் அரசு வழிகாட்டுதலின்படி கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சங்கடஹர சதுர்த்தியையொட்டி நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், நீலா மேலவீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமண் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
வேதாரண்யம் கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர் கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவில் விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யேஸ்வரர் கோவில் வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.