search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சொரிமுத்து அய்யனார் கோவில்
    X
    சொரிமுத்து அய்யனார் கோவில்

    சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா நடத்த ஆலோசனை

    காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவானது, கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகி்ற ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உதவி கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறும்போது, ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் பேரில் விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும், என்றார்.

    ஆலோசனை கூட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா, அம்பை துைண போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், தாசில்தார் வெற்றிச்செல்வி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையர் காஞ்சனா, சுகாதார மேற்பார்வையாளர் கணேசன், வனச்சரகர்கள் பரத், சரவணக்குமார், அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் வெங்கடேஷ், ஜெகன்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×