என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேன்கனிக்கோட்டையில் மாரியம்மன் கோவில் திருவிழா
    X
    தேன்கனிக்கோட்டையில் மாரியம்மன் கோவில் திருவிழா

    தேன்கனிக்கோட்டையில் மாரியம்மன் கோவில் திருவிழா

    தேன்கனிக்கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாவிளக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா எளிமையாக நடைபெற்றது.
    தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாவிளக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா எளிமையாக நடைபெற்றது.

    இதையொட்டி பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் மாவிளக்கு எடுத்து தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    தொடர்ந்து கோழி பலியிட்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவில் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×