என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருப்பதியில் ஏழுமலைகளை குறிக்கும் வகையில் 7 வகையான உயர்ரக பசுக்களை வாங்கி, அதில் இருந்து பெறப்படும் பால், நெய் ஆகியவற்றால் மூலவர் ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்யப்பட உள்ளதாக, தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.
திருமலை :
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகார பிரதிநிதி சபை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான அதிகார பிரதிநிதி சபை தலைவரும் முதன்மைச் செயல் அலுவலருமான கே.எஸ்.ஜவகர்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் புதிதாக ‘நவநீத சேவா’ என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பசுக்கள் அபிவிருத்தி செய்யப்படும். அதிகளவில் பால் பெறப்படும். பசுக்களை பராமரிக்க கால்நடை மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அந்த நிபுணர்கள் மேற்பார்வையில் கோசாலைகள் செயல்படும். அதற்கு ஸ்ரீவெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகமும் உறுதுணையாக இருக்கும்.
திருமலையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். காற்று மாசு இல்லா நகரமாக திருமலை உருவாக்கப்படும். அதற்காக, 35 பேட்டரி கார்கள் வாங்கி இயக்கப்பட உள்ளது. 2021-2022-ம் ஆண்டுக்கான டைரிகள், காலண்டர்கள் விரைவில் அச்சிடப்பட உள்ளன. அதில் 12 சீட் காலண்டர்கள் 15 லட்சமும், டீலக்ஸ் டைரிகள் 8 லட்சமும், சிறிய டைரிகள் 2 லட்சமும் அச்சிடப்படும்.
ஆந்திராவில் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் கீழ் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் கோவில் கட்டும் பணி, கோவில் சீரமைப்புப்பணி ஆகியவற்றை சின்ன ஜீயர் சுவாமிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்வார். அதில் 10 கோவில்களுக்கு மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டம் வாயில்பாடு கோவில் கட்டுமானப் பணிக்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சீதா, ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனையில் கட்டுமானப் பணியை முடிக்க, மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.2 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருமலை, திருப்பதியில் உள்ள கோவில்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ரூ.2 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
திருமலை, திருப்பதி, பலமநேரில் உள்ள கோசாலைகள் மேலும் சீரமைக்கப்படும். அங்கு புதிதாக உயர்ரக டெசி இன பசுக்கள் வளர்க்கப்படும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பிரசாதத்துக்கு 30 கிலோ நெய் தேவைப்படுகிறது. அதற்கு டெசி இன பசுக்கள் 200-ல் இருந்து 300 பசுக்கள் திருமலைக்கு கொண்டு வரப்பட உள்ளன. பக்தர்கள் நெய் காணிக்கையாக வழங்கலாம். அந்த நெய் டெசி இன பசுக்களின் பாலில் இருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.
திருப்பதியில் உள்ள ஏழு மலைகளை குறிக்கும் வகையில் ஏழு வகையான உயர்ரக பசுக்களை வாங்கி, அதில் இருந்து கிடைக்கும் பால், நெய் ஆகியவற்றால் மூலவர் ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்யப்படும். கோசாலை மூலமாக புதிய சேவை, புதுமையான சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். விவசாயிகள் மூலமாக இயற்கை சார்ந்த வேளாண் சாகுபடியில் ஈடுபட்டு, அதன் மூலம் கிடைக்கும் பொருட்களால் சாமிக்கு பாரம்பரிய நைவேத்தியம் செய்யப்படும். தமிழகத்தில் பஞ்ச காவ்ய பொருட்கள் உள்பட 15 வகையான பாரம்பரிய பொருட்களை உற்பத்தி செய்து இன்னும் 4 மாதத்தில் வினியோகிப்போம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யாதவர்களின் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பில்லை. ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை நடத்துவது குறித்து விரைவில் ஆலோசனை நடத்தப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு இதுவரை ரூ.150 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. அதன் மூலம் இரு தெலுங்கு மாநிலங்களில் ஊருக்கு ஒரு கோவில் கட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

பூமிநீளா உடனாய வைகுண்டவாசப் பெருமாள் கோவில் பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பிருந்தே இருந்ததாக வரலாற்று சான்றுகள் சொல்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து 5 மைல் தூரத்தில் உள்ளது, இளங்காடு என்ற சிற்றூர். இங்கு பூமிநீளா உடனாய வைகுண்டவாசப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பிருந்தே இருந்ததாக வரலாற்று சான்றுகள் சொல்கின்றன.
அந்த காலத்தில் இக்கோவில் ஷேத்திர விசேஷமாகத் திகழ்ந்திருக்கிறது. இத்தலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக வழிபாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் வைகுண்டவாசப் பெருமாள், அமர்ந்த கோலத்தில் 7½ அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். அருகில் பூமிநீளா தாயார் இருக்கிறார்கள்.
ஆரம்ப காலத்தில் சமணம், சாக்கியம் மற்றும் சைவ மதங்களை பின்பற்றி, பின்னர் வைணவத்தின் பால் ஈர்க்கப்பட்ட திருமழிசை ஆழ்வார், இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார். அதே போல் அகோபில மடத்தின் 7-வது பட்டம் ஜீயரான மகாதேசிகன், இந்த ஊரில் பிறந்து இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.
செஞ்சி அரசவையின் ராஜகுருவாக விளங்கிய சேஷாத்திரியாச்சாரியார், இங்கு அக்ர ஹாரம் அமைத்து தன் வாரிசுகளை குடியமர்த்தியுள்ளார். அப்போதிருந்த அரசர், வைகுண்டவாசப் பெருமாளின் கோவில் நிர்வாகத்தையும், கோவில் முதல் மரியாதை யையும் சேஷாத்திரியாச்சாரியாரிடம் ஒப்படைத்துள்ளார். இன்றளவும் அந்த பரம்பரையினரே நிர்வாகம் செய்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் இந்த ஊர் அக்ரஹாரத்தில் பெரிய மகான்கள் வாழ்ந்திருக்கின்றனர். அப் போதெல்லாம் இங்கு எந்நேரமும் வேதகோஷங் களும், யாக முழக்கங்களும் கேட்டபடியே இருக்குமாம். இந்த ஊர் அந்த காலத்தில் பிரசித்தி பெற்ற நகரமாகவும் இருந்துள்ளது.
இந்தக் கோவிலில் பார்வேட்டை, தேசிகன் சாற்றுமுறை, நவராத்திரி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத பாராயணம், கிருஷ்ண ஜெயந்தி போன்ற உற்சவங்கள் கோலாகலமாக நடைபெற்று வந்திருக்கின்றன. தற்போது போதிய புனரமைப்பு இல்லாத காரணத்தால், தினசரி தீபாராதனை ஒரு வேளை மட்டும் நடைபெற்று வருகிறது.
இத்தல பெருமாளை வழிபாடு செய்வதன் மூலமாக நினைத்த காரியங்கள் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

கொரோனாவைரஸ் 3-வது அலை சுற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது
இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று.
இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல் நதி ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடிமறைந்துபோன தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. கொரோனா வைரஸ் 3-வது அலை சுற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் அவர்கள் வீடுகளிலேயே தர்ப்பணம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனை போன்றவை வழக்கம்போல் நடக்கிறது. ஆடி அமாவாசை யையொட்டி நாளை மறுநாள் இரவு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்காது.
கன்னியாகுமரி கடற் கரைக்கு பக்தர்கள் புனித நீராட செல்லாத வகையில் அனைத்து பாதைகளும் பேரிகார்டு மூலம் அடைக்கப் பட்டுள்ளது. கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் விசாகப்பட்டினம் கோவிலிலும் வழக்கம் போல் நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டியுள்ள ரிஷிகேஷ் மலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக ஏழுமலையான் கோவில் கட்ட கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஆந்திர மாநில அரசு திருப்பதி தேவஸ்தானத்திற்கு விசாகப்பட்டினம் மலையில் 10 ஏக்கர் நிலத்தை மானிய விலையில் வழங்கியது. இதையடுத்து கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. 10 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலைப் போலவே ரூ.28 கோடி செலவில் பிரமாண்ட அளவில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 கோடி மதிப்பில் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. கடந்த 3 ஆண்டுகளில் கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தால் மேலும் 3 கோடி கூடுதலாக செலவிடப்பட்டு கோவில் கட்டப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவில் முழுவதும் முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
கருவறையில் ஒரு அடி உயரத்தில் பீடமும், 7 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன ஏழுமலையான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் போலவே மலைக்குச் செல்ல ஒரு பாதையும், மலையிலிருந்து கீழே வர ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்வதற்காக தனியாக நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.
இலவச தரிசனத்திலும் பக்தர்கள் செல்லலாம்.சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருப்பதியில் இருந்து கொண்டு செல்லப்படும் லட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் விசாகப்பட்டினம் கோவிலிலும் வழக்கம் போல் நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் 13-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி 9-ந் தேதி அங்குரார்பணத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோவிலில் ஏழுமலையானுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயரும், லட்சுமி தேவி, ஆண்டாள் ஆகியோருக்கு தனித் தனியாக கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏற்கனவே விஜயவாடா, டெல்லி, ராமேஸ்வரம், ஜம்முவில் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. விசாகபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரிஷிகேஷ் மலையிலுள்ள ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமாவாசையில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
தித்திக்கும் மாங்கனிக்கு புகழ்பெற்ற சேலத்தின் மேச்சேரியில் இருக்கிறது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் திருக்கோயில். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் பிரதான வாசல், வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
அன்னையை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும். அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும். மேலும் பாவதோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் மன நோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நீங்க பக்தர்கள் வீபூதி பெற்று செல்கின்றனர். மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
கோயிலில் பூவாக்கு கேட்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கும், திருமணம், நிலம் வாங்குதல் மற்றும் பல்வேறு விசேஷ காரியங்களுக்கும் பூவாக்கு கேட்டு அதன்படி செயல்படுகின்றனர். அமாவாசையில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினம் மிகப்பெரிய புண்ணியஸ்தலமாக இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வரும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பக்கத்து மாநிலங்களில் கொரோனா 3-ம் அலை பரவ தொடங்கி உள்ளது. இதனால் நம் மாநிலத்திலும் பரவக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பொதுமக்களிடையே கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவித்து உள்ளது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி நகரத்தில் பழைய பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இது ஆடி மாதம் என்பதால் கோவில்களில் பொதுவாக கூட்டம் அதிகமாக கூடும். அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினம் மிகப்பெரிய புண்ணியஸ்தலமாக இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வரும். இதனால் ஆடி அமாவாசை நாளான ஆகஸ்டு 8-ந் தேதி மேற்படி கோவில்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அதே போன்று தூத்துக்குடி நகரத்தில் பனிமயமாதா கோவிலிலும் பொதுமக்கள் பங்களிப்பின்றி கடந்த ஜூலை 25-ந் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் குளிப்பதற்கோ, கூடுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆகவே கொரோனா 3-வது அலையை தடுப்பதற்கு அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்..

ஆடி மாதத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும் சாமி தரிசனம் செய்வார்கள்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், பொன்விளைந்தகளத்தூர் குறுவட்டம் நம்பர்-1 மணப்பாக்கம் கிராமத்தில் புகழ் பெற்ற கன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும் சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது கொரோனா தொற்று பரவும் அச்சம் உள்ளதால் ஆடி மாதம் முழுவதும் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சரவண பொய்கையில் தர்ப்பணம் செய்யும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) ராமசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சரவண பொய்கையில் தர்ப்பணம் செய்யும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுகிறது.
எனவே ஆடி அமாவாசை தினமாக 8-ந்தேதி அன்று கோவிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கைக் கரையில் தர்ப்பணம் செய்ய வருகை புரிவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான அனுமதி விரைந்து வழங்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு உள்ள துர்க்கை அம்மன் சன்னதி பிரசித்திப்பெற்றதாகும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து துர்க்கை அம்மனை வழிபடுவார்கள்.
கோவிலில் தேனுபுரீஸ்வரர் சன்னதிக்கு முன்பு பழமை வாய்ந்த கொடிமரம் இருந்து வந்தது. இந்த மரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேதம் அடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த கொடிமரத்தை மாற்றி அமைத்து புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழைய கொடி மரம் அகற்றப்பட்டு, கோவிலின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் அங்கு 47 அடி உயரத்தில் தேக்கினால் ஆன புதிய கொடிமரம் ரூ.1 லட்சம் செலவில் வாங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த மரம் கெட்டியாக இருக்கவும், உடையாமல் இருக்கவும், கரையானில் இருந்து பாதுகாக்கவும் அதன் மேல் இலுப்பை எண்ணெய் பூசப்பட்டு, துணி சுற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்த கொடிமரத்தை நிறுவுவதற்கு சென்னை இந்து சமய அறநிலையத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அனுமதிக்காக கோவில் நிர்வாகத்தினர் காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி கிடைத்துவிட்டால் அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந் தேதி கொடிமரம் அமைக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
எனவே, விரைவில் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் அமைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு பரமஸ்வாமி அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
ஆடிப்பூர உற்சவத்தின் 3-வது நாளான 4-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு திருப்பாற்கடல்நாதன் அலங்காரமும், உற்சவருக்கு கண்ணன் ஆண்டாளின் சிற்றில் சிதைத்தல் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு பரமஸ்வாமி அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியை இணையதளத்தில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இங்குள்ள இறைவனை வேண்டுபவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். அப்படி வேண்டுல் நிறைவேறியவர்கள், சுவாமிக்கும், தாயாருக்கும் புதிய வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில், தென்னிந்தியாவில் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்த ஆலயங்களில் ஒன்று. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்...
ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில் வடிவமைப்பை போன்றே, இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம், பலிபீடத்தை தாண்டி சென்றால் 16 தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது. இதன் நடுவில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார்.
மூலவரான பாண்டுரங்கப் பெருமாள், 12 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சிலை, சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டது. அருகே ரகுமாயீ தாயார் வீற்றிருக்கிறார்.
120 அடி உயர கோபுரமும், அதன் மீது 9½ அடி உயரத்தில் தங்கக் கலசமும், அதன் மேலே சுதர்சன சக்கரமும், கொடியும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்.
இத்தல பாண்டுரங்கப் பெருமாள், ஞாயிற்றுக்கிழமை மதுராபுரி மன்னன் அலங்காரத்திலும், வியாழக்கிழமை பாத தரிசனத்திற்காக எளிய அலங்காரத்திலும், வெள்ளி அன்று வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சனிக்கிழமை கல்யாண வெங்கடாஜலபதி அலங்காரத்திலும் அருள்பாலிக்கிறார்.
மகாமண்டபத்தில் உள்ள கோவிந்தராஜப் பெருமாள், திருப்பதியைப் போல சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவம் கண்டு அருள்கிறார்.
பொதுவாக மூலவர் சன்னிதிக்கு முன்பாக உள்ள துவாரபாலகர்கள், கற்சிலைகளால் செய்யப்பட்டதாக இருக்கும். ஆனால் இங்குள்ள துவாரபாலகர்கள் பஞ்சலோகத்தால் ஆனவர்கள்.
தல விருட்சம் ‘தமால மரம்.’ துவாபர யுகத்தில் இந்த மரத்தின் கீழ் நின்றுதான், கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைத்ததாகவும், அந்த இசைக்கு ராதை உள்ளிட்ட கோபியரும், பசுக்களும் மயங்கியதாகவும் புராணங்கள் சொல்கின்றன.
இங்குள்ள இறைவனை வேண்டுபவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். அப்படி வேண்டுல் நிறைவேறியவர்கள், சுவாமிக்கும், தாயாருக்கும் புதிய வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருத்தலம்.

நாகை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி வரை வாரத்தின் கடைசி 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் சில வழிப்பாட்டு தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொது மக்கள் செல்ல ஏற்கனவே தடை விதித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நிலவிவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை வாரத்தின் கடைசி 3 நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து மத வழிப்பாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அந்தந்த மத ஆகம விதிகளின்படி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறுவதற்கு தடை ஏதுமில்லை.
மேலும் வருகிற 10-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மற்றும் 11-ந் தேதி(புதன்கிழமை) ஆடிப்பூரத்தை முன்னிட்டும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வெளியூரில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. நாகை மாவட்டத்தில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட 31-ந் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.
கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.