என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் சரவண பொய்கை
    X
    திருப்பரங்குன்றம் சரவண பொய்கை

    ஆடி அமாவாசை அன்று திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் தர்ப்பணம் செய்ய தடை

    மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சரவண பொய்கையில் தர்ப்பணம் செய்யும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுகிறது.
    திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) ராமசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சரவண பொய்கையில் தர்ப்பணம் செய்யும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    எனவே ஆடி அமாவாசை தினமாக 8-ந்தேதி அன்று கோவிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கைக் கரையில் தர்ப்பணம் செய்ய வருகை புரிவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×