என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    விநாயக பெருமானின் அறுபடை வீடுகள் அதில் இருந்து மாறுபட்டு நமது வாழ்வுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் தரும் வகையில் அமைந்துள்ளன.
    முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருக்கின்றன. முருகன் அறுபடை வீடுகள் அவரது அவதாரத்தின் நிகழ்வுகளையும், அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களையும் சொல்வதுபோல அமைந்துள்ளது. ஆனால் விநாயக பெருமானின் அறுபடை வீடுகள் அதில் இருந்து மாறுபட்டு நமது வாழ்வுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் தரும் வகையில் அமைந்துள்ளன.

    விநாயகர் வீற்றிருக்கும் எத்தனையோ ஆயிரக்கணக்கான தலங்களில் ஆறே ஆறு தலங்கள் மிகவும் தனித்துவம் கொண்டது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆறு தலங்கள் தான் விநாயகரின் அறுபடை வீடுகளாக உள்ளன.

    திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடையூர், மதுரை, பிள்ளையார்பட்டி, திருநாரையூர் ஆகிய 6 தலங்கள்தான் விநாயகரின் அறுபடை வீடுகளாக உள்ளன.


    திருவண்ணாமலை தலத்தில் ராஜகோபுரத்தில் உள்ள செல்வ கணபதி விநாயகரின் முதல் படை வீடாக கருதப்படுகிறது. இவரை வழிபட்டால் அல்லல்கள் அனைத்தும் கரைந்தோடி விடும் என்பது ஐதீகமாகும்.

    விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஆழத்து பிள்ளையார் 2-வது படை வீடாக உள்ளார். காசிக்கு சமமான இந்த தலத்தில் விநாயகரை வழிபட்டால் நம் வாழ்வுக்கு தேவையான அனைத்து செல்வங்களும் கிடைக்கும். திருக்கடையூர் அன்னை அபிராமி ஆலயத்தில் அமிர்தகடேஸ்வரர் சன்னதி அருகே கள்ளவாரண பிள்ளையார் சன்னதி உள்ளது. இவர்தான் 3-வது படை வீடாக கருதப்படுகிறார். இவரை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் சித்தி விநாயகர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவர் அறுபடை வீடுகளில் 4-வதாக இருக்கிறார். இவரை வழிபட்டால் நாம் வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும் என்பது ஐதீகமாகும்.

    புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி தலம் 5-வது படை வீடாக திகழ்கிறது. அங்குள்ள தீட்சா கணபதி படை வீடுகளில் ஒருவராக உள்ளார். அவரை வழிபட ஞானம் கிடைக்கும். முக்கிய விஷயங்களில் எப்படி முடிவு எடுப்பது என்ற திணறல் ஏற்பட்டால் இவரை வழிபட்டாலோ அல்லது நினைத்து கொண்டாலோ நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.

    இறுதியாக விநாயகரின் அறுபடை வீடுகளில் 6-வதாக திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லா பிள்ளையார் உள்ளார்.தேவார திருப்பதிகங்களை இந்த உலகுக்கு திருப்பி தந்தவர் என்ற மகிமை இவருக்கு உண்டு. இவரை வழிபட்டால் முக்தி தேடி வரும்.

    ஆக விநாயகரின் அறுபடை வீடுகளை தரிசனம் செய்வதன் மூலம் அனைத்து நலன்களையும் நாம் பெற முடியும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அறுபடை வீடுகளுக்கு சென்று வரவேண்டும் என்ற ஆன்மீக சுற்றுப்பயணத் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது நிச்சயம் உங்கள் ஆத்ம பலத்துக்கு உதவி புரியும்.
    திருச்செங்கோடு மலை மீது உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கேதார கவுரி விரதத்தை கேதார கவுரி அம்மன் கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
    திருச்செங்கோடு மலை மீது உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கேதார கவுரி விரதத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

    இதையொட்டி கேதார கவுரி அம்மன் கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதையொட்டி அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    குருவார வியாழக்கிழமையில், குரு பிரம்மாவையும் குரு பிரகஸ்பதியையும் குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள். குரு பிரம்மாவை வியாழக்கிழமைகளில் வணங்கி வழிபடுவது ரொம்பவே மகத்துவம் மிக்கது.
    குருவார வியாழக்கிழமையில், குரு பிரம்மாவையும் குரு பிரகஸ்பதியையும் குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள். குரு பிரம்மா குருவிஷ்ணு என்று சொல்கிறது ஸ்லோகம். எனவே குரு பிரம்மாவை வியாழக்கிழமைகளில் வணங்கி வழிபடுவது ரொம்பவே மகத்துவம் மிக்கது. நம்மைப் படைத்த கடவுளான பிரம்மாவை, பிரம்ம காயத்ரி சொல்லி வழிபடுங்கள். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் அமர்ந்து பிரம்மாவை நினைத்து தியானிப்பதும் பல மடங்கு பலன்களை வாரி வழங்கும் சக்தி மிக்கது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

    குரு ஸ்லோகம் :

    குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

    குரு மந்திரம் :

    தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
    குரும் காஞ்சன ஸந்நிபம்
    புத்தி பூதம் திரிலோகேஸம்
    தம் நமமி பிருகஸ்பதிம்

    குரு பகவான் காயத்ரி :

    வருஷபத் வஜாய வித்மஹே
    க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
    தந்நோ குரு ப்ரசோதயாத்
    பெரியவர்களால் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணத்தில் ஜாதகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதில் எந்தெந்த ராசி எதனுடன் இணைய கூடாது என்பதை இந்த பதிவில் காணலாம்.
    பொதுவாக இந்த காலத்தில் காதல் திருமணங்கள் தான் அதிகரித்து வருகின்றனர். பார்த்த உடனே காதல், பார்க்காமல் காதல், இன்டெர்நெட் காதல் என உலகம் எங்கேயோ போய்க்கொண்டுள்ளது. திருமணம் செய்ய போவதற்கு முன் ஜாதகம் பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

    ஆனால் காதலிக்கும் போது இரு மனமும் ஒத்து போவதால் ஜாதகம் பார்ப்பது அவசியம் இல்லை என சில ஜாதக வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஆனால் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பது மிக முக்கியம். மேலும் ஒரு குறிப்பிட்ட ராசியுடன் சில இணைய கூடாது. அது எந்தெந்த ராசிகள் என்று காணலாம்.

    திருமணத்தில் இணையக்கூடாத ராசிகள்

    சிம்மம் – கன்னி
    மீனம் – சிம்மம்
    மேஷம் – விருச்சகம்
    ரிஷபம் – கும்பம்
    சிம்மம் – ரிஷபம்
    மிதுனம் – கடகம்
    தனுசு – மகரம்
    கன்னி – மிதுனம்
    மிதுனம் – விருச்சகம்
    கும்பம் – கடகம்
    துலாம் – மீனம்
    மேஷம் – கடகம்
    தலைவரின் விருப்பத்தை அறிந்தும், அதன்படி செயல்படாத முதன்மை பணியாளரை கொடுமையாக தண்டித்து, நம்பிக்கை துரோகிகள் இடத்தில் நிறுத்தப்படுவர்.
    கீழ் இருக்கும் உவமையை யூதேயாவில் மக்களிடத்திலும், ஒலிவ மலையில் சீடரிடத்திலும் இயேசு கூறுகிறார்.

    “உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும், மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாகஇருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

    எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.”

    அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார். அதற்கு இயேசு கூறியது, “தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்க தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?, தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியை செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர், அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும், மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில், அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து, அவனைக் கொடுமையாகத் தண்டித்து, நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.

    தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும், அவர் விருப்பப்படி செயல் படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்’’ என்றார்.

    இயேசுவின் இரண்டாம் வருகையை இந்த உவமை விளக்குகிறது. இயேசுவின் இரண்டாம் வருகை முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இறை மக்கள் அதில் நாட்டம் கொண்டவர்களாய் நடந்து கொள்ளவில்லை என்பதையும், அப்படி நடந்து கொள்ளாதவர்களுக்கு எத்தகைய தீர்ப்பு வழங்கப்படும் என்பதையும் விளக்குகிறது. தகுந்த தயாரிப்புடன், இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்ப்பவர்களுக்கு இறுதிநாள் தீர்ப்பில் கரிசனமும், உரிய மரியாதையும் கிடைக்கும். அதுவே, தயாரிப்பின்றி இருப்பவர்களுக்கு வாதைகளும், அவஸ்தைகளுமே மிஞ்சும். அதேபோல, இயேசுவின் இரண்டாம் வருகை, யாரும் எதிர்பார்க்காத நேரத்திலே நிகழும் என உவமை வழியாக விளக்குகிறார்.

    தலைவரின் விருப்பத்தை அறிந்தும், அதன்படி செயல்படாத முதன்மை பணியாளரை கொடுமையாக தண்டித்து, நம்பிக்கை துரோகிகள் இடத்தில் நிறுத்தப்படுவர், என்பதன் வாயிலாக மக்களை நல்வழிப்படுத்தக்கூடிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு வலுவான எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது.
    மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் ஆவணி கொடை விழாவை முன்னிட்டு அம்மன் வீதியில் உலா வரும் காட்சி நடைபெற்றது. அதன்பின் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.
    மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் ஆவணி கொடை விழா கடந்த 13-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு வில்லிசை நடைபெற்றது காலை 8 மணிக்கு நேர்த்திக்கடன் செலுத்த உள்ளவர்கள் வீடுகளுக்குச் சென்று கோவிலுக்கு மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டனர். காலை 11 மணிக்கு பால்குடம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் வந்து சேர்ந்தது.

    இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்து சேர்த்தனர் பின்னர் கற்பூர தீப ஆராதனை நடைபெற்றது இரவு 11 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 12 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை நடைபெற்றது.

    அதன் பின்னர் அம்மன் வீதியில் உலா வரும் காட்சி நடைபெற்றது. பக்தர்கள் அவரவர் வீட்டு முன் அம்மனை வழிபட்டு தேங்காய் பழம் உடைத்து மாலை சாத்தினர். அதன்பின் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. நேற்று காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கலிட்டனர்.

    ஒரு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் பொங்கலிட்டு பானையை எடுத்து சென்றனர். விழா நாட்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
    சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி கோவிலில் வெங்கடேசபெருமாள், தாயார் சிலைகளுக்கு முன்பு உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.
    சென்னை :

    உத்தரபிரதேசம் மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பாக நாடு முழுவதும் உள்ள 1 கோடி வீடுகள் மற்றும் கோவில்களில் ராமச்சந்திர மூர்த்தி, சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமன் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்த இந்து தர்ம ரக்சன சமிதி ஏற்பாடு செய்து உள்ளது.

    அதன்படி முதலாவது பூஜை, சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கீழ் செயல்படும் வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வெங்கடேசபெருமாள், தாயார் சிலைகளுக்கு முன்பு உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி தலைமையில் பூஜைகள் நடந்தது. அவற்றுடன் 16 நதிகளின் புண்ணிய தீர்த்தங்கள், புனித மண் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.

    பின்னர் உற்சவர் சிலைகள் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. சிறப்பு பூஜையில் சமிதி செயலாளர் ஹரிஹரன், கமிட்டி உறுப்பினர்கள் பி.வி.ஆர்.கிருஷ்ணாராவ், கார்த்திகேயன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 1 கோடி வீடு, கோவில்களில் பூஜை முடிந்ததும் இந்த உற்சவர் சிலைகள் அயோத்தி ராமர் கோவிலில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
    திருமண வாழ்க்கை கூட வேண்டும் என்று எதிர்பார்த்து இருப்போர் திருமணஞ்சேரி வழிபாடு செய்தல் வேண்டும். நிச்சயம் சிறப்பான திருமண வாழ்க்கை வெகு விரைவில் கூடும்.
    திருமணத் தடை உள்ள பலரும் பல வகையான விரதங்களையும், பலவகையான கோயில்களுக்குச் சென்று வருவதையும், திருமணம் கைகூட பரிகாரங்கள் செய்வதையும் பார்த்திருக்கிறோம். நிச்சயம் திருமண வயது வந்தோருக்கு இது பெரும் பிரச்சினையாக இருக்கும்.

    ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் விரதமானது திருமணம் முடிவாகாமல் தாமதம் ஆகி வரும் இளைஞர்களுக்கானது. அதாவது குரு பகவானின் ஆசி கிடைத்தால் நிச்சயம் திருமண வரம் கைகூடும் என்பது ஐதீகம்.

    அதாவது  குரு பகவானுக்கு உகந்த நாளான  வியாழக் கிழமை அன்று அரைப் பொழுது அல்லது முழுப் பொழுது விரதமும் இருக்கலாம். மேலும் கோயிலுக்குச் சென்று நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

    வீட்டிலும் குரு பகவானுக்கு படையலிட்டு, நம்முடைய விரதத்தினை முடித்துக் கொள்ளுதல் வேண்டும். மேலும் ஒவ்வொரு வாரமும் என திருமண வரம் கூடும்வரை வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபடல் வேண்டும்.

    மேலும் திருமண வாழ்க்கை கூட வேண்டும் என்று எதிர்பார்த்து இருப்போர் திருமணஞ்சேரி வழிபாடு செய்தல் வேண்டும். நிச்சயம் சிறப்பான திருமண வாழ்க்கை வெகு விரைவில் கூடும்.

    மேலும் குரு பகவானின் சிறப்புமிக்க தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நிச்சயம் திருமணம் கைகூடும்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பவித்ரோற்சவ விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோற்சவ வி்ழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முன்னதாக 17-ந் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. பவித்ரோற்சவத்தின் முதல்நாளான 18-ந் தேதி பவித்ரா பிரதிஷ்டை நடக்கிறது.

    19-ந் தேதி பவித்ரா சமர்ப்பணமும், 20-ந் தேதி மகா பூர்ணாஹூதியும் நடைபெறுகிறது. 20-ந் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை கோவில் வளாகத்தில் ஸ்நபன திருமஞ்சனம் மற்றும் சக்கரஸ்ஞானம் நடைபெறும்.

    கடைசி நாளில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை, கோவில் வளாகத்தில் ஸ்நபநத்திருமஞ்சனம் மற்றும் சக்கரஸ்நானம் நடைபெறும்.

    இதனை முன்னிட்டு நேற்று கோவிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை கோவில் வளாகங்கள், சுவர், கூரை, பூஜை பொருட்கள் அனைத்தும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவில் முழுவதும் சூர்ணம், சுகந்த திரவிய பொருட்கள் கலந்த புனித தெளிக்கப்பட்டது. இதன் காரணமாக, கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி கஸ்துரிபாய், உதவி அதிகாரி பிரபாகரரெட்டி, அர்ச்சகர்கள் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையிலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின் படி விழா கோவிலுக்குள் நடைபெற்றது.
    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவில் ஆவணிமூலத் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    நெல்லையப்பர் கோவில் வாசலில் நின்று நெல்லையப்பா, நெல்லையப்பா என கருவூர் சித்தர் அழைப்பதும், அதற்கு நெல்லையப்பர் செவிசாய்க்காததால் கோபமடைந்த சித்தர் எருக்கும் குருக்கும் முளைக்க கடக என சாபம் கொடுத்துவிட்டு சென்றார்.

    ஆவணி மூலத்திருநாளின் 11-வது நாளான இன்று கருவூர் சித்தரை சமாதானப்படுத்தி அழைத்துவர சந்திரசேகரர் பவானி அம்மன் பல்லக்கில் நெல்லையப்பர் கோயிலுக்குள் பெரிய பிரகாரத்தில் மேல கோபுர வாசலில் வைத்து கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் விழா நடைபெற்றது. மேலும் அடிக்கு ஆயிரம் பொன் கொடுப்பதாக கூறி கருவூர் சித்தரைநெல்லைக்கு அழைத்து வரும் நிகழ்வும் நடைபெற்றது. காட்சி கொடுக்கும் போது இத்திருவிளையாடலை ஓதுவாமூர்த்திகள் பாடினர்.

    தற்போது நிலவிவரும் கொரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையிலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின் படி விழா கோவிலுக்குள் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
    ஸ்ரீஇராமரை நம் குறிக்கோள் நாயகராகக் கொண்டால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலைக்கு உயரலாம் என்பது திண்ணம்!
    ஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே |
    ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே ||

    என்ற ஸ்லோகம் விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் கூறி பெருமாளை வழிபட்ட பலன் ராமநாமத்தைக் கூறுவதாலேயே சித்திக்கும் என்பதை உணர்த்துகிறது.
    காணிப்பாக்கம் கோவில் பிரம்மோற்சவ விழாவில் சின்ன சேஷ வாகனத்திலும், தங்க பெரிய சேஷ வாகனத்திலும் விநாயகர் நான்கு மாடவீதிகளில் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று காலை ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் சின்ன சேஷ வாகனத்தையும், தங்க சேஷ வாகனத்தையும் பூஜை செய்து தொடங்கி வைத்தனர். காலையில் சின்ன சேஷ வாகனத்திலும், இரவில் தங்க பெரிய சேஷ வாகனத்திலும் விநாயகர் நான்கு மாடவீதிகளில் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவத்தின் 6-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை சிலுக்க வாகனத்திலும் (கிளி வாகனம்), இரவு ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    ×