search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருவூர் சித்தருக்கு சுவாமி காட்சி கொடுத்த போது எடுத்தபடம்
    X
    கருவூர் சித்தருக்கு சுவாமி காட்சி கொடுத்த போது எடுத்தபடம்

    நெல்லையப்பர் கோவிலில் சுவாமி நெல்லையப்பர், கருவூர் சித்தருக்கு இன்று காட்சியளித்தார்

    தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையிலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின் படி விழா கோவிலுக்குள் நடைபெற்றது.
    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவில் ஆவணிமூலத் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    நெல்லையப்பர் கோவில் வாசலில் நின்று நெல்லையப்பா, நெல்லையப்பா என கருவூர் சித்தர் அழைப்பதும், அதற்கு நெல்லையப்பர் செவிசாய்க்காததால் கோபமடைந்த சித்தர் எருக்கும் குருக்கும் முளைக்க கடக என சாபம் கொடுத்துவிட்டு சென்றார்.

    ஆவணி மூலத்திருநாளின் 11-வது நாளான இன்று கருவூர் சித்தரை சமாதானப்படுத்தி அழைத்துவர சந்திரசேகரர் பவானி அம்மன் பல்லக்கில் நெல்லையப்பர் கோயிலுக்குள் பெரிய பிரகாரத்தில் மேல கோபுர வாசலில் வைத்து கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் விழா நடைபெற்றது. மேலும் அடிக்கு ஆயிரம் பொன் கொடுப்பதாக கூறி கருவூர் சித்தரைநெல்லைக்கு அழைத்து வரும் நிகழ்வும் நடைபெற்றது. காட்சி கொடுக்கும் போது இத்திருவிளையாடலை ஓதுவாமூர்த்திகள் பாடினர்.

    தற்போது நிலவிவரும் கொரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையிலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின் படி விழா கோவிலுக்குள் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×