என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருமந்திரம் என்ற சிறப்புமிகு காவியத்தைப் படைக்க திருமூலருக்கு மூவாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகத்தான் அந்த பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து, இன்றும் நமக்கு அறிவுரையை வழங்கும் விதத்தில் இருக்கிறது.
திருமந்திரம் என்ற சிறப்புமிகு காவியத்தைப் படைக்க திருமூலருக்கு மூவாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஓராண்டுக்கு ஒரு பாடல் என்ற ரீதியில்தான் அவர் பாடல்களை எழுதியதாக புராணங்கள் சொல்கின்றன. அதன் காரணமாகத்தான் அந்த பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து, இன்றும் நமக்கு அறிவுரையை வழங்கும் விதத்தில் இருக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க திருமந்திரப் பாடல்களை வாரம் தோறும் பார்த்து வருகிறோம். இன்றும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்..
பாடல்:-
தருவழி ஆகிய தத்துவ ஞானம்
குருவழி யாகும் குணங்களுள் நின்று
கருவழி யாகும் கணக்கை அறுத்துப்
பெருவழி யாக்கும் பேரொளி தானே.
விளக்கம்:- இந்த உலகத்தில் இருந்தும், உலக மாயையில் இருந்தும் விடுதலை பெற்று, வீடுபேறு என்னும் முக்தியை அடைவதற்கான சிவஞானம் கிடைப்பதற்கு, நாம் ஒவ்வொருவருக்கும் குருவின் அருள் தேவை. அந்த குருவருள் கிடைத்ததும், அந்த உயிர்களிடத்தில் சிவபெருமானின் எட்டு குணங்களும் தோன்றும். அதன் பயனாக, நம்மை தொடர்ந்து வரும் பிறவிக் கணக்கு முடியும். ஈசனின் பெருநெறியில் செல்வதற்குரிய அருள்பேரொளி கிடைக்கும்.

கோவில் முன்புறம் உள்ள ஒரு பெயர் பலகையில் முன்னூற்றி நங்கை அம்மன் கோவில் என்றும், மற்றொரு பெயர் பலகையில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் என்றும் எழுதப்பட்டுள்ளது.
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலுக்கு முன்னூற்றுவர் நங்கை அம்மன் என்ற பெயர் இருந்துள்ளது. அதற்கு ஆதாரமாக கோவில் முன்புறம் உள்ள ஒரு பெயர் பலகையில் முன்னூற்றி நங்கை அம்மன் கோவில் என்றும், மற்றொரு பெயர் பலகையில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் என்றும் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் அ.கா. பெருமாள் கூறியதாவது:-
முன்னூற்றுவர் என்ற 300 பேர் கொண்ட குழுவினர் இணைந்து கார்ப்பரேட் நிறுவனம் போன்ற வணிகத் தொழிலை அக்காலத்தில் நடத்தி வந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக கல்வெட்டுக்கள் உள்ளன. அவர்கள் கட்டிய கோவில்தான் முன்னூற்றுவர் நங்கை அம்மன் கோவிலாகும். அதனால்தான் இந்த கோவிலுக்கு முன்னூற்றுவர் நங்கை அம்மன் என்ற பெயர் வந்துள்ளது. இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள சாமி பழங்கால காளி அம்மன் என்று சொல்லக்கூடிய துர்க்கை அம்மனாகும். இந்த முன்னூற்றுவர் நங்கை அம்மன் என்ற பெயர்தான் பிற்காலத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் என்று மருவி அழைக்கப்படுகிறது.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு பக்தர்கள் நாளை தர்ப்பணம் கொடுக்க வரவேண்டாம் என்றும் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். தை, ஆடி, புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.
தற்போது கொரோனா தொற்று காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், தொற்று பரவாமல் இருக்கவும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தளங்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை (புதன் கிழமை) மகாளய அமாவாசை தினம் வருகிறது. இதையொட்டி பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை (புதன்கிழமை) முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் நாளை தர்ப்பணம் கொடுக்க வரவேண்டாம் என்றும் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாளை சாமி தரிசனம் கிடையாது என்பதால் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வீர ராகவர் கோவிலில் குவிந்தனர். அவர்களை ஒழுங்குபடுத்தி கோவில் ஊழியர்கள் சாமி தரிசனத்திற்கு அனுப்பினர்.
வழக்கமாக அமாவாசையை முன்னிட்டு முன்னதாகவே நள்ளிரவில் பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி தங்குவது வழக்கம். இதையடுத்து பக்தர்கள் தங்குவதை தடுக்கும் வகையில் திருவள்ளூர் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவசரகதியான உலகில் பொருள்பற்று மிகுதியானதாலும் பொருளாதாரமே வாழ்வாதாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் பலர் ஆன்மாவை வலிமைப்படுத்தும் பித்ருக்கள் பூஜையை மறந்து வாழ்கிறார்கள்.
பூமியில் உள்ள பிறவிகளிலேயே உயர்ந்த பிறவியாக கருதப்படுவது மனிதப் பிறவி. மனித வாழ்க்கையை நெறிப்படுத்த வழிபாடு மிகவும் அவசியம்.
அதிலும் பித்ருக்கள் வழிபாடு மிக மிக அத்தியாவசியமான ஒன்றாகும். பிறப்பு முதல் மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9ம் பாவகம் என்னும் பாக்கியஸ்தானத்தாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்றவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். பாக்கிய ஸ்தானத்தை வலிமைப்படுத்த பிரபஞ்சம் வழங்கிய மாபெரும் கொடையே பித்ருக்கள் பூஜை.
நம் கண்ணுக்கு புலப்படும் மற்றும் புலப்படாத அனைத்து நற்சக்திகளும் வழிபாட்டிற்கு உகந்தவை தானே? அவ்வாறு இருக்க பித்ருக்கள் வழிபாட்டை ஏன் பிரதானப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் பல ருக்கும் இருக்கலாம். உடலை இயக்குவது உயிர். உயிரை இயக்குவது ஆன்மா. ஆன்மாவின் பலமே உயிரை இயக்கும். உயிரின் பலமே உடலை இயக்கும். ஆக ஒரு ஆன்மா இயங்க உடலும், உயிரும் தேவை. உயிர் பிரிந்தவுடன் உடல் அழிக்கப்படுகிறது. ஆனால் ஆன்மா தன் அடுத்தகட்ட பயணத்திற்குத் தயாராகிறது.
ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாகம் என்பது ஆன்மா.ஜென்ம லக்னம் என்பது உயிர். ஜென்ம ராசி என்பது உடல். சுருக்கமாக ஐந்தாமிடம் இல்லை எனில் லக்னம், ராசிக்கு வேலை இல்லை. ஒரு ஆன்மாவிற்கு உயிர் கொடுக்க தந்தையே மூல காரணம். லக்னத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக் குறிக்கும் இடமாகும். ஒரு ஆன்மாவிற்கு உயிர் கொடுத்த தந்தையும் உடல் கொடுத்த தாயும் கடவுளுக்கு சமமானவர்கள்.
ஒன்பதுக்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடம் என்பது தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக் குறிக்கும். ஐந்தாமிடம் என்பது ஒருவரின் தெய்வ அனுக்கிரகத்தைப் பற்றிக் கூறும் இடம் என்பதாலும், பாட்டனாரைக் குறிக்கும் இடமாக ஐந்தாமிடம் வருவதாலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாமிடம் பித்ரு வழிபாட்டைக் குறிக்குமிடமாகவும் அமைகிறது. ஐந்தாமிடம் என்பது ஒருவரின் ஆன்மாவைக் குறிக்கும். ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களின் விளைவே மனிதப் பிறவி. மனிதன் தன் வாழ்நாளில் அனைத்து சுபப் பலன்களையும் அனுபவிக்க ஜாதகத்தில் ஐந்தாமிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம் (பிராப்தம்), ஒன்பதாமிடம் எனும் பாக்கிய ஸ்தானம் (கொடுப்பினை), லக்னம் (விதி) நன்றாக இருக்க வேண்டும்.
ஆக வினைகளால் வரும் பிரச்சினைகளில் இருந்தும், இடையூறுகளில் இருந்தும் ஒருவர் விடுபட பித்ருக்கள் வழிபாடு மிக முக்கியம். அதாவது தன் குலத்தில் தோன்றிய வாரிசுகளைக் காப்பாற்றும் சக்தி படைத்தவர்கள் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. தந்தை வழி மரபணுவைப் பெற்று இயங்கும் ஒரு மனிதன் தனது முன்னோர்களின் ஆன்மா நற்கதி அடைந்து முக்தி அடையவோ அல்லது மறு பிறப்பெடுக்கவோ உரிய வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு ஆன்மசாந்திக்கு உதவும் தனது வாரிசுகளை இறந்த முன்னோர்கள் வாழ்த்தும் போது ஜனன கால ஜாதகத்தில் உள்ள ஐந்து மற்றும் ஒன்பதாமிடக் குற்றம் நீங்கி ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானம் வலிமை பெறும் என்பதால் பித்ருக்கள் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்யும் மனிதர்கள் தாம் செய்ய வேண்டிய பித்ரு கடமையை தவறவிடுகிறார்கள் அல்லது அதில் ஈடுபாடு காட்டுவதில்லை.
முறையாக பித்ருக்கள் வழிபாட்டு பூஜை செய்தால், ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் அகன்று விடும். அவசரகதியான உலகில் பொருள்பற்று மிகுதியானதாலும் பொருளாதாரமே வாழ்வாதாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் பலர் ஆன்மாவை வலிமைப்படுத்தும் பித்ருக்கள் பூஜையை மறந்து வாழ்கிறார்கள்.
ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி அறிவது?
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 9 ஆகிய இடங்களில் ராகு/கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகமாகும்.
ஜனன ஜாதகத்தில் சூரியன், சந்திரன் கிரகண தோஷத்தை தரும் ராகுகேதுவுடன் இணைந்து நிற்பது, சூரியனும், சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது, ராகுகேதுக்கள் சூரியன், சந்திரன் சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.
லக்னத்திற்கு ஒன்பதாமிடத்து அதிபதியும் ஐந்தாமிடத்து அதிபதியும் சேர்ந்து 1,5,9ல் ஒன்றாக நின்றாலும் பித்ரு தோஷத் தாக்கம் இருக்கும். ஒருவருக்கு பித்ருக்கள் சாபம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதன்படி திதி மற்றும் முன்னோர் வழிபாட்டை மனதால் ஒன்றாமல் கடமைக்காகச் செய்வது. அல்லது முன்னோர் வழிபாடே செய்யாமல் இருப்பது.
தந்தை, பாட்டன் எதுவும் சேர்த்து வைக்கவில்லை என இறந்தவர்களை பழித்துப் பேசுவது...
வாழும் காலத்தில் வயதான பெற்றோருக்குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் அவர்களை உதாசீனம் செய்வது...
ஒருவர் தன் உயிரைத் தானே முடித்துக் கொள்ளும் வகையில் அவரது ஆன்மாவைத் துன்புறுத்துவது...
இறந்தவர்களின் உடலை முறையாக அடக்கம் செய்யாத குற்றம்...
இறந்தவரின் உடலுக்குரிய மரியாதையைச் செய்யத்தவறுவது...
இறந்தவரின் உடலை வைத்துக் கொண்டு அவரின் தீய குணங்களை விமர்சிப்பது ...
இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் முன்பு பங்காளிகள் சண்டையிடுவது...
இறந்த ரத்த பந்த உறவுகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் இருப்பது அல்லது இறுதிச் சடங்கிற்கு உதவாமல் இருப்பது அல்லது உரிய காரியங்களை செய்யத் தவறுவது... (மொட்டை யடித்தல் போன்றவை) பித்ருக்களின் சாபத்தைப் பெற்றுத்தரும்.
இந்த ஜென்மத்தில் ஒருவர் செய்யக்கூடிய பாவ, புண்ணியங்களுக்கு தகுந்த வகையில் தான் மறுபிறவி அமையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கர்ம பலன்களை குறைத்து சுப பலன்களை மிகைப்படுத்தும் சக்தி திதிகளுக்கு உண்டு. அதனால் தான் நமது ஜோதிட முன்னோடிகள் திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்று கூறியுள்ளார்கள்.பிறவிப் பிணியில் இருந்து விடுபட்டு நற்கதியடைய சாஸ்திரங்களில் கூறப்பட்ட உபாயங்களில் ஒன்றே அமாவாசை திதி நாட்களில் கடைபிடிக்கப்படும் பித்ருக்கள் பூஜையாகும். பிரதமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது.
சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள். அமாவாசை திதியன்று சூரியனும்,சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் என்பதால் அமாவாசை வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துன்பங்களில் இருந்து விடுபட இறந்த முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பதுடன், ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கால சூழல் காரணமாக திதி கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
எந்திரத்தனமான வாழ்க்கையில் பிரபஞ்ச சக்தியை உணராமல் சக மனிதர்களை மதிக்காமல் சுய நலத்துடன் இறை நம்பிக்கையைத் துறந்து, பொருள் பற்றுடன் வாழ ஆரம்பித்த காரணத்தால் இயற்கை கொரோனா ரூபத்தில் மக்களைத் துன்புறுத்தி வருகிறது. மக்கள் அடிப்படைத் தேவையை நிறைவு செய்ய கடுமையான போராட்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகி விட்டது. உலக இயக்கமே ஸ்தம்பித்துள்ளது.
அதனால் தான் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கின்றன. நெருங்கிய ரத்த பந்த உறவுகளுக்குரிய கர்ம காரியங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. பித்ருக்களின் சாந்தி வழிபாட்டைச் செய்ய முடியவில்லை என்பது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை அனுபவிக்கும் சூழல் உருவாகி விட்டது. உலகின் பல்வேறு இடங்களில் இயற்கையை சாந்தப் படுத்தும் பல்வேறு யாகங்கள் செய்தும் நோய்த் தாக்கம் குறைந்தபாடில்லை. மக்களுக்கு ஆயுள் பயம் அதிகரித்து விட்டது. இதிலிருந்தே உலகில் பாவ காரியங்கள் மிகையாக உள்ளதை நம்மால் அறிய முடியும்.
இதற்குத் தீர்வு தான் என்ன என்று யோசித்தால், பாவச் சுமைகளைக் குறைத்து புண்ணிய பலன்களை அதிகரிக்கும் சக்தி மகாளய அமாவாசை வழிபாட்டிற்கு இருப்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மனித உயிர்களுக்கு மாபெரும் புண்ணியம் பெற்றுத் தரும் மகாளய பட்ச அமாவாசை ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி 19ந் தேதி 5.10.2021 (செவ்வாய் கிழமை) இரவு 7.05 முதல் புரட்டாசி 20ந் தேதி 6.10.2021 (புதன் கிழமை) மாலை 4.35 வரை இருக்கிறது.
கொரோனா தாக்கத்தை குறைக்க அரசின் சட்ட திட்டங்களை மதித்து வீட்டிலேயே முன்னோர் களுக்குரிய பித்ருக்கள் பூஜை செய்வதுடன், பிரபஞ்ச சக்திகளை வணங்கி, உற்றார் உறவினர்களுடன் நட்பு பாராட்டி, துறவிகள், தவசிகள், ஞானிகளை வழிபட்டு, சக உயிர்களுக்கு இயன்ற தான, தர்மம் செய்து பாக்கிய பலன்களைப் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

மாநிலம் முழுவதும் மகாளய அமாவாசை தரிசனம் மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை கூட செய்ய முடியாமல் போனதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை :
மகாளய அமாவாசை தினத்தில் புண்ணியதலங்களுக்கு சென்று தீர்த்தங்களில் நீராடி எள், தண்ணீர் ஆகியவற்றை இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்கள் வழிபாட்டில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மகாளய அமாவாசை தினத்தில் தமிழகம் முழுவதும் பிரபலமான கோவில்கள் மட்டுமின்றி சின்ன கோவில்கள் மற்றும் நீர்நிலைகளிலும் தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. வாரத்தில் மற்ற நாட்கள் கோவில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகாளய அமாவாசை புதன்கிழமை வருவதால் கட்டுப்பாடு இருக்காது. எனவே தர்ப்பணம் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று பொது மக்கள் கருதினர்.
இந்த நிலையில் நாளை கோவில்களுக்கு தரிசனத்துக்கு செல்லவும், புண்ணிய தீர்த்தங்களில் தர்ப்பணம் செய்யவும் அரசு தடை விதித்துள்ளது.
சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம், மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளம் உள்பட அனைத்து கோவில்களின் திருக்குளங்களிலும் பொதுமக்கள் திரண்டு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் நாளை தர்ப்பணம் கொடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம்.
நாளை (புதன் கிழமை) மகாளய அமாவாசை தினம் வருகிறது. இதையொட்டி பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை (புதன் கிழமை) முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்கூட்டியே பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி தங்குவது வழக்கம். அந்த வகையில் பக்தர்கள் தங்கு வதை தடுக்க திருவள்ளூர் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட இடங்களில் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள சாந்தாரம்மன் கோவிலில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோடியக்கரை கடற்கரையிலும் பக்தர்கள் புனித நீராட தடைவிதித்து கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். தடையை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு பாயும் வாங்கல், நொய்யல், வேலாயுதம்பாளையம், நெரூர் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவில் அருகே திறந்தவெளி மைதானத்தில் ஏராளமானவர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நாளை முதல் 2 நாட்கள் அந்த மைதானத்தில் பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள சுருளி ஆற்றங்கரை, கோபால சமுத்திர கரை, பழனி சண்முகா நதி ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை.
கோபாலசமுத்திரம் 108 விநாயகர் கோவிலிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளிலும் தர்ப்பணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மாசாணியம்மன், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன், பேரூர் பட்டீஸ்வரர், மருதமலை முருகன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு கோவை மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி அருகே உள்ள திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இந்த 4 கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பொதுமக்கள் விதிமுறைகளை கடை பிடிக்கிறார்களா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் சமீரன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி தாமிரபரணி படித்துறைகளில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 10-ந்தேதி வரை 6 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும், படித்துறைகளில் திதி, தர்ப்பணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் சொரிமுத்து அய்யனார் கோவிலிலும், பாபநாசம் கோவில்களிலும் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தரங்கம்பாடி, பூம்புகார் கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் பொதுமக்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில், கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு இன்று முதல் 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் கடற்கரையிலும் தர்ப்பணம் கொடுக்க தடை விதித்துள்ளனர்.
திருவையாறு அய்யாரப்பர் கோவில், காவிரி படித்துறை, கும்பகோணம் பகவத் படித்துறை ஆகிய இடங்களில் தர்ப்பணம் கொடுக்க தடைவிதித்துள்ளனர்.
மிக முக்கியமான தீர்த்த தலமான ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், சேதுக்கரை தீர்த்தம், தேவிப்பட்டினம் தீர்த்தம், சாயல்குடி மாரியூர் கடற்கரை ஆகிய இடங்களில் நீராடவும், தர்ப்பணங்கள் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவில்களிலும் இன்று முதல் 2 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் ஏராளமானவர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுப்பார்கள். அங்கு இன்றுமுதல் பொது மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் தர்ப்பணம் செய்ய தடைவிதித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் மகாளய அமாவாசை தரிசனம் மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டுப்பாடுகளுடன் மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யவுமில்லை.

இதனால் பொதுமக்கள் முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை கூட செய்ய முடியாமல் போனதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்... குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி கோவில் சுத்தப்படுத்தும் பணி இன்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவம் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோவில் சுத்தப்படுத்தும் பணி இன்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
சிறப்பு பூஜைகள் மேற்கொண்ட பின்னர் மதியம் 12 மணி முதல் பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பிரமோற்சவத்தையொட்டி நாளை (புதன்கிழமை) அங்குரார்ப்பணம் நடக்கிறது. தொடர்ந்து பிரமோற்சவத்தின் முதல் நாளான 7-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க திருச்சு உற்சவம் நடைபெற உள்ளது.
மாலை 5.10 மணி முதல் 5.30 மணி வரை பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
தொடர்ந்து வரும் 8-ந்தேதி காலை சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 9-ந்தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், 10-ந்தேதி காலை கற்பக விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 11-ந்தேதி காலை மோகினி அவதாரம், இரவு கருட சேவை, 12-ந்தேதி காலை அனுமந்த வாகனம், மாலை தங்க ரதத்திற்கு மாற்றாக சர்வ பூபால வாகனம், இரவு கஜ வாகனம், 13-ந்தேதி காலை சூரிய பிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம், 14-ந்தேதி காலை 8 மணிக்கு தேருக்கு மாற்றாக சர்வ பூபால வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்தில் சாமி எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.
பிரமோற்சவத்தின் கடைசி நாளான 15-ந்தேதி காலை 6 மணி முதல் 8 வரை பல்லக்கு உற்சவம், காலை 8 மணி முதல் காலை 11 மணிக்கு இடையே திருமஞ்சனம் மற்றும் அயன மண்டபத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.
இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் பிரமோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்று திருச்சு உற்சவம் நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே திருப்பதிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக 2 தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களிலும் தினமும் 1,000 பக்தர்கள் வீதம் 9,000 பக்தர்கள் இலவச சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். ஆந்திராவின் 13 மாவட்டங்களில் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி வழங்கப்படும்.
மலைவாழ் மக்கள் மற்றும் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மத மாற்றத்தை தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக இந்த நடவடிக்கையில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.
பின்தங்கிய பகுதிகளில் மதமாற்றத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு ரூ.25 கோடி செலவில் ஆந்திராவின் 13 மாவட்டங்களிலும் 502 கோவில்களை தேவஸ்தானம் இலவசமாக கட்டிக்கொடுத்தது. இங்கு தினசரி பூஜை செலவையும் தேவஸ்தானம் ஏற்றுள்ளது.
திருப்பதியில் நேற்று 28,601 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,652 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 10-ந்தேதி வரை 6 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும், படித்துறைகளில் திதி, தர்ப்பணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாளய அமாவாசையொட்டி பொதுமக்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில், பாபநாசம் பாபநாச சுவாமி கோவில் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள படித்துறைகளில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
அப்போது அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் செய்வார்கள்.
இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே வழிபாட்டு தலங்களில் வாரம் தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து நாளை மகாளய அமாவாசையையொட்டி கொரோனா சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தாமிரபரணி படித் துறைகளில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 10-ந்தேதி வரை 6 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும், படித்துறைகளில் திதி, தர்ப்பணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் சொரிமுத்து அய்யனார் கோவிலிலும், பாபநாச கோவில்களிலும் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், பக்தர்களும் முழு ஒத்துழைப்பு அளித்து கோவில்கள் மற்றும் படித்துறைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த உலகில் பல பயணங்களை நாம் மேற்கொண்டாலும், நமக்கென்று ஒரு முக்கியமான பயணம் உள்ளது. அது விண்ணுலகை நோக்கி நாம் செல்ல வேண்டிய பயணம்.
மனிதர்கள் தங்களுடைய தேவைக்காகவும், மன நிம்மதிக்காகவும், வாழ்நாள் முழுவதும் பல இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்கிறார்கள். அத்தகைய பயணங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களையும், அனுபவங்களையும் பெற உதவுகிறது. இன்னும் சிலருக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கிறது. ‘மீண்டும் இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியுமா?’ என்ற வியப்பை ஏற்படுத்துகிறது. அப்படிபட்ட சில பயணங்கள் விவிலியத்தில் தொடக்க நூல் முதல் வெளிப்பாடு வரை காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை குறித்து பார்ப்போம்.
விண்ணுலக பயணம்
விவிலியத்தில் வித்தியாசமான பயணம் மேற்கொண்டவர்களில் இருவர் ஏனோக்கும், எலியாவும். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்த போது அவரை காணவில்லை. ஏனெனில் கடவுள் அவரை எடுத்துக் கொண்டார். எலியாவையோ ஆண்டவர் சுழற்காற்றின் வழியாக விண்ணுலகுக்கு அழைத்துக்கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு காலங் களில் வாழ்ந்தாலும், தேவன் தாமே அவர்களை உயிருடன் விண்ணகத்திற்கு அழைத்துக் கொண்டார் என்று விவிலியம் கூறுகிறது.
நோவாவின் பேழை பயணம்
மனிதர்களால் மண்ணுலகில் பாவம் பெருகியபோது, அதை கண்ட தேவன், மனிதரை உருவாக்கியதற்காக மனம் வருந்தினார். அதனால்தான் படைத்த மனிதர் முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள் வரை அனைத்தையும் அழிக்க அவர் திருவுளமானார். அதேவேளையில் நோவாவோ தம் காலத்தவருள் நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார். அதனால் தேவன், அவரை ஒரு பேழை செய்யச் சொன்னார். அந்த பேழையில் நோவாவையும் அவரது குடும்பத்தினரையும் மற்றும் அனைத்து உயிரினங்களிலும் ஒரு ஜோடியை ஏற்றி கதவினை அடைத்தார். மண்ணுலகில் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. உயர்ந்த மலைகள் கூட நீரில் மூழ்கிப்போயின. ஆனால் நோவா இருந்த பேழையோ, பெரு வெள்ளம் வற்றும் வரை நீரின் மீது பயணம் செய்தது.
செங்கடல் பயணம்
எகிப்தில் அடிமையாக இருந்த இஸ்ரவேல் மக்கள், மோசே தலைமையில் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் செங்கடல் அருகே வந்தபோது, எகிப்து அரசன் பார்வோன், தன்னுடைய படைகளுடன் அவர்களை பிடிக்க பின்தொடர்ந்து வந்தான். இறைவன் மோசேயை கொண்டு செங்கடலை இரண்டாக பிரித்து, வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரளை அவர்களுக்குச் சுவராக நிற்க வைத்து, அதன் நடுவே உலர்ந்த தரையில் அவர்களை நடக்கச் செய்தார். அவர்களுக்கு பின்னால் பார்வோனின் படைகளும் பின் வந்தது. நடுக்கடலில் வந்தபோது அந்த படைகளின் தேர் சக்கரங்களை தேவன் மண்ணில் புதைந்து போக செய்தார். மேலும் பிரிந்த நீர் திரள் ஒன்றாய் சேர்ந்ததில், பார்வோன் படையினர் நீரீல் மூழ்கி இறந்தனர். இஸ்ரவேல் மக்களோ தங்கள் கால்கள் நனையாதபடி செங்கடலை கடந்து பயணம் செய்தனர்.
யோனாவின் பயணம்
இறைவன், தன்னுடைய பணியை செய்யும்படி யோனாவை நினிவே மாநகருக்கு போகச் சொன்னார். அவரோ அதைக் கேட்காமல் ஆண்டவரிடம் இருந்து தப்பியோட நினைத்து, கப்பலில் ஏறி தர்சீசுக்குப் புறப்பட்டார். ஆனால் இறைவன் கடலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, மாலுமிகள் மூலம் அவரை கடலில் தூக்கி எறியும் படிச் செய்தார். கடலில் விழுந்த யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்கும்படி செய்த தேவன், அந்த மீனின் வயிற்றில் இருந்தபடியே யோனாவை, நினிவே மாநகரை அடையும்படி செய்தார்.
இவ்வாறு விவிலியத்தில் பல பயணங்கள் யாரும் கற்பனை செய்திராத வகையில் அமைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இயேசு, தனது தந்தையின் கட்டளைப்படி பயணப்பட்டு நம்மை மீட்க விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்தார். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றியவுடன், மீண்டும் விண்ணுலகிற்கு ஏறிச் சென்றார்.
இந்த உலகில் பல பயணங்களை நாம் மேற்கொண்டாலும், நமக்கென்று ஒரு முக்கியமான பயணம் உள்ளது. அது விண்ணுலகை நோக்கி நாம் செல்ல வேண்டிய பயணம். எனோக்கு, நோவா மற்றும் எலியாவை போன்று நாமும் இறைவனின் சித்தத்தை உணர்ந்து அதன்படி செய்யும் போது, செங்கடலில் கால் நனையாமலும், நீரில் சிக்கிக்கொள்ளாமலும் அதனை கடந்து சென்ற இஸ்ரவேல் மக்களைப் போல, இந்த உலகின் பொல்லாப்புகளில் இருந்து நம்மை தப்பிவித்து, நாம் விண்ணகத்தை நோக்கி பயணம் செய்ய இறைவன் நமக்கு அருள் செய்வார்.

கேரள போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் இருமாநில எல்லையில் சாமி சிலைகள் ஊர்வலத்துக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு வருடமும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகள் பங்கேற்பது வழக்கம். இந்த வருட நவராத்திரி விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதனையொட்டி கடந்த 2-ந் தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை ஊர்வலமாக புறப்பட்டு பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை சென்றடைந்தது. நேற்று முன்தினம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமிசிலைகளும் சங்கமித்து பல்லக்குகளில் ஊர்வலமாக புறப்பட்டது. அன்றைய தினம் இரவு சாமி சிலைகள் குழித்துறை மகாதேவர் கோவிலை சென்றடைந்தது. முன்னதாக இருமாநில அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் முன்னிலையில் அரண்மனையில் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று காலையில் மீண்டும் சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. குமரி-கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் சாமி சிலைகளுக்கு கேரள அறநிலைய துறை சார்பில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாமி சிலைகள் கேரள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக சாமிசிலை ஊர்வலம் குழித்துறையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, களியக்காவிளைக்கு 7.30 மணிக்கு சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர். கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர்.
கேரளாவுக்கு சென்ற சாமி சிலைகள் நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் இரவில் தங்க வைக்கப்பட்டன. இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் சாமி சிலைகள் அங்கிருந்து புறப்பட்டு பத்மநாபசாமி கோவிலை சென்றடைகிறது.
இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், கேரள தேவசம்போர்டு தலைவர் ராசு, நெய்யாற்றின் கரை துணை சூப்பிரண்டு அனில்குமார், பாறசாலை எம்.எல்.ஏ. ஆன்சலாம், கோவளம் எம்.எல்.ஏ. வின்சென்ட், குமரி மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பு தலைவர் சசிகுமார், விசுவ இந்து பரிஷத் மாவட்ட துணை தலைவர் சுபாஷ் குமார், பா. ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன், குழித்துறை நகரமன்ற முன்னாள் கவுன்சிலர்கள் ரத்தினமணி, விஜூ மற்றும் பலர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தற்போது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோவையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மாசாணியம்மன், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன், பேரூர் பட்டீஸ்வரர், மருதமலை முருகன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு கோவை மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி அருகே உள்ள திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
அதுவும் விசேஷ தினங்களில் இந்த 4 கோவில்களிலும் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தற்போது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோவையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினங்களில் கோவில்களுக்கு சென்று சாமியை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாளை மகாளய அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக கோவில்கள், நீர்நிலைகளுக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், பக்தர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, கோவையில் உள்ள 4 கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பரவமால் இருக்கவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் நாளை(புதன்கிழமை) மகாளய அமாவாசையன்று கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை முருகன் கோவில், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதியில்லை.
ஆனால் இந்த கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பொதுமக்கள் விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்....குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
செப்டம்பர் மாதம் 5-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 11-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
5-ம் தேதி செவ்வாய் கிழமை :
* வள்ளலார் பிறந்த நாள்
* கீழ் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம் - சதயம்
6-ம் தேதி புதன் கிழமை :
* சர்வ மஹாளய அமாவாசை
* சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் மஹா அபிஷேகம்
* சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
7-ம் தேதி வியாழக்கிழமை :
* நவராத்திரி ஆரம்பம்
* சந்திர தரிசனம்
* திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் உற்சவாரம்பம்
* சந்திராஷ்டமம்- பூரட்டாதி, உத்திரட்டாதி
8-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சித்தயோகம்
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் பவனி
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
9-ம் தேதி சனிக்கிழமை :
* சதுர்த்தி விரதம்
* குலசேகரப்பட்டிணம் ஸ்ரீமுத்தலாம்மன் சிறப்பு அலங்கார காட்சி.
* சந்திராஷ்டமம் - ரேவதி, அசுபதி
10-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* துர்க்கா ஸ்நானம்
* நடராஜர் அபிஷேகம்
* சிருங்கேரி சாரதாம்பாள் வைஷ்ணவி அலங்காரம்
* சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி
11-ம் தேதி திங்கள் கிழமை :
* சஷ்டி விரதம்
* அமிர்த யோகம்
* உபாங்க கௌரி விரதம்
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்து கடற்கரையில் குலவையிட்டு புனித நீர் எடுத்துச் சென்றனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை(புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவையொட்டி கொடியேற்றம், சூரசம்ஹாரம், மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பக்தர்கள், சிறப்பு அபிஷேக உபயதாரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தசரா திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முந்தின நாளே பக்தர்கள் அதிகளவில் கடற்கரை, குலசேகரன்பட்டினத்தில் இடம் கிடைக்கும் பகுதிகளில் எல்லாம் தங்கி சாமி தரிசனம் செய்ய காத்து கிடப்பர். இதன் காரணமாக பக்தர்களுக்கு இன்றும்(செவ்வாய்க்கிழமை), நாளையும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கார், வேன், மோட்டார் சைக்கிள்களில் குவிந்தனர். தசரா குழுக்கள் அமைப்பவர்கள் தங்கள் பறைகளில் வைத்து சாமி கும்பிட குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீர் எடுக்க தாரை, தப்பட்டையுடன் குவிந்தனர். அப்போது கடற்கரையிலேயே மணலால் பீடங்கள் அமைத்து கும்பம் வைத்து புனித நீரை வைத்து பெண்கள் கூடி குலவையிட்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சிதம்பரேஸ்வரர் கோவில் வழியாக முத்தாரம்மன் கோவில் வந்து சாமி தரிசனத்திற்குப் பின் தங்கள் பகுதிகளுக்கு சென்றனர்.
குலசேகரன்பட்டினத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் கடற்கரை, மெயின் பஜார், பஸ் நிலையம் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.