search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முன்னுதித்த நங்கை அம்மன் பெயர் வந்தது எப்படி?
    X
    முன்னுதித்த நங்கை அம்மன் பெயர் வந்தது எப்படி?

    முன்னுதித்த நங்கை அம்மன் பெயர் வந்தது எப்படி?

    கோவில் முன்புறம் உள்ள ஒரு பெயர் பலகையில் முன்னூற்றி நங்கை அம்மன் கோவில் என்றும், மற்றொரு பெயர் பலகையில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் என்றும் எழுதப்பட்டுள்ளது.
    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலுக்கு முன்னூற்றுவர் நங்கை அம்மன் என்ற பெயர் இருந்துள்ளது. அதற்கு ஆதாரமாக கோவில் முன்புறம் உள்ள ஒரு பெயர் பலகையில் முன்னூற்றி நங்கை அம்மன் கோவில் என்றும், மற்றொரு பெயர் பலகையில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் என்றும் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் அ.கா. பெருமாள் கூறியதாவது:-

    முன்னூற்றுவர் என்ற 300 பேர் கொண்ட குழுவினர் இணைந்து கார்ப்பரேட் நிறுவனம் போன்ற வணிகத் தொழிலை அக்காலத்தில் நடத்தி வந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக கல்வெட்டுக்கள் உள்ளன. அவர்கள் கட்டிய கோவில்தான் முன்னூற்றுவர் நங்கை அம்மன் கோவிலாகும். அதனால்தான் இந்த கோவிலுக்கு முன்னூற்றுவர் நங்கை அம்மன் என்ற பெயர் வந்துள்ளது. இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள சாமி பழங்கால காளி அம்மன் என்று சொல்லக்கூடிய துர்க்கை அம்மனாகும். இந்த முன்னூற்றுவர் நங்கை அம்மன் என்ற பெயர்தான் பிற்காலத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் என்று மருவி அழைக்கப்படுகிறது.
    Next Story
    ×