என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குச் ஜோதிட ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுள் ஸ்தானம் மற்றும் தாம்பத்திய உறவு பற்றியும் கூறும் இடமாகும்.
2-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 8-ம் இடத்தைப் பார்க்கும். 8-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 2-ம் இடத்தைப் பார்க்கும். 2-ம் இடத்திற்கும் 8-ம் இடத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. பெண்ணின் ஜனன கால ஜாதகத்தில் 2, 8-க்கு தொடர்புடைய பாவ கிரகங்கள் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்துகிறது.
அதன் படி 2,8-ம் இடத்தில் ஆட்சி, உச்சம், நீச கிரகம் நின்றாலும் செவ்வாய், சனி சம்பந்தமாக இருந்தாலும் சனி, செவ்வாயுடன் ராகு,கேது இணைந்து இருந்தாலும் அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சேர்ந்து இருப்பது சூரியன்,ராகு,கேது, சனி, செவ்வாய் போன்ற அசுப கிரகங்கள் நிற்பதும், நீச, அஸ்தங்கம்,வக்ரம் பெற்ற கிரகம் அமர்வதும் மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்கும். இதில் 8- ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி உண்டாகும். 8--ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி ஏற்படும்.

சபரிமலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடை உத்தரவு வருகிற 21-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் :
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று கேரள வருவாய் துறை மந்திரி ராஜன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவில் நாளை (புதன்கிழமை) முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடை உத்தரவு வருகிற 21-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே பம்பை, நிலக்கல் பகுதிகளில் முகாமிட்டு உள்ள பக்தர்கள் திரும்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...நாளை வறுமையை விலக்கும் அன்னாபிஷேகம்.. விரதம் இருந்து வழிபடுங்க....
பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள வடக்கு வாசல் அடைக்கப்பட்டதால் வடக்கு வாசல் எதிரே உள்ள சன்னதி தெரு பகுதியில் பல்வேறு கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் வந்து செல்ல கோவில் நிர்வாகத்தினர் அனுமதித்தனர். பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள வடக்கு வாசல் அடைக்கப்பட்டதால் வடக்கு வாசல் எதிரே உள்ள சன்னதி தெரு பகுதியில் பல்வேறு கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டனர்.
இதனால் கோவிலின் வடக்கு வாசலை திறந்து அந்த வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வியாபாரிகள் மற்றும் இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் குருமூர்த்தி, பொதுமக்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் அறநிலையத்துறை அதிகாரிகள் தேனுபுரீஸ்வரர் கோவில் வடக்கு வாசலை திறந்து அந்த வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். இதனால் தேனுபுரீஸ்வரர் கோவில் வடக்கு வாசல் பகுதி பக்தர்கள் நடமாட்டத்தால் இயல்பு நிலைக்கு திரும்பியது.

வழக்கமாக பிரதோஷத்தன்று சாமி தங்க ரிஷப வாகனத்தில் வைத்து 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனாலும் நேற்று ராமேசுவரம் கோவிலில் மரத்திலேயே சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடை பெற்றது.
ராமேசுவரம் கோவிலில் பிரதோஷ பூஜையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா குறைந்து வருவதன் எதிரொலியாக கடந்த 15-ந் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை 5 மணி அளவில் சாமி மரக்கேடயத்தில் வைக்கப்பட்டு 3-ம் பிரகாரத்தை சுற்றி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப் போது பிரகாரத்தின் நான்குவாசல் பகுதியிலும் வைத்து சாமிக்கு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. சாமி பிரகாரத்தை சுற்றி வந்த பின்னர் சாமி சன்னதி எதிரே உள்ள பெரிய நந்திக்கும் மற்றும் கருவறையில் உள்ள சாமிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 6 மாதத்திற்கு மேலாக ராமேசுவரம் கோவிலில் பிரதோஷ நாளன்று சாமியுடன் பக்தர்கள் உலாவரும் நிகழ்ச்சியில் பங்கேற்க தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அரசின் உத்தரவை தொடர்ந்து 6 மாதத்திற்கு பிறகு பிரதோஷ தினமான நேற்று ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சாமியுடன் உலா வரும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
வழக்கமாக பிரதோஷத்தன்று சாமி தங்க ரிஷப வாகனத்தில் வைத்து 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனாலும் நேற்று ராமேசுவரம் கோவிலில் மரத்திலேயே சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடை பெற்றது. பக்தர்கள் மத்தியில் மிகுந்த ஒரு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே இனிவரும் மாத பிரதோஷ நாட்களில் வழக்கம்போல் சாமி தங்க ரிஷப வாகனத்தில் வைத்து உலா வரும் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று பக்தர்கள் திருக் கோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.
ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினம் அன்று, சிவாலயம் தோறும் அன்னாபிஷேக விழா சிறப்பான முறையில் நடைபெறும். இந்த அன்னாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டு, இறைவனை வழிபடுபவா்களுக்கு வாழ்வில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.
27 நட்சத்திரங்களின் தந்தையாக இருப்பவா் தட்சன். அவா் தன்னுடைய 27 பெண்களையும், அழகு நிறைந்த சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். அவா்கள் அனைவரிடமும் சரிசமமான அன்பு செலுத்துவதில் இருந்து சந்திரன் தவறிப் போனான். அவனுக்கு ரோகிணியின் மீதே அதிக அன்பு இருந்தது. இதனால் மனம் வருந்திய மற்ற பெண்கள், தனது தந்தையிடம் இதுபற்றி தெரிவித்தனா். இதையடுத்து சந்திரனுக்கு சாபம் அளித்தார், தட்சன். இதனால் சந்திரன் ஒவ்வொரு நாளும் தேய்ந்து, அழகு குறைந்தவனாக மாறினான்.
இந்த சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும். சந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதாக சொல்லப்படுகிறது.
சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.
பலர் செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள்.
இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.
அன்னம் என்பதற்கு ‘உட்கொள்வது', ‘உட்கொள்ளப்படுவது' என்று பொருள் உண்டு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும்.
அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்று வேதங்கள் கற்பிக்கின்றன.
அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களுக்கும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.

எரிகோவிற்கு செல்லும் வழியோரமாய் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பார்வை இழந்த ஒருவர், மக்கள் கூட்டம் தன்னைக் கடந்து போவதை உணர்ந்தார்.
‘ஜெபம்’ என்பது, நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நாம் நம்மை படைத்த இறைவனுடன் உறவாடவும், அவருடன் பேசவும் ‘ஜெபம்’ நமக்கு உறுதுணையாக இருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு தேவையின் போதும், வேதனை மற்றும் சோதனையின் போதும் நம்முடைய குரல் இறைவனை எட்ட வேண்டும் என்றால், அதற்கு அவரை நோக்கி ஜெபிப்பது ஒன்றுதான் வழி. ஏனெனில் இறைவன் என்றுமே, தன்னை நாடுபவா்களின் குரலைக் கடந்து செல்பவர் அல்ல. நம்முடைய குரலைக்கேட்டு, நின்று நமக்கு பதில் தரக்கூடியவர் அவர் ஒருவரே.
“அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்” என்று திருப்பாடல் 90:15-ல் நமக்கு அவர் உறுதியளித்திருக்கிறார். தேவன் என்றுமே நம்முடைய வேண்டுதல்களையோ, ஜெபத்தையோ புறக்கணிப்பவர் அல்ல. நிச்சயமாய் முடிவினை தருபவர். எனவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், எந்த ஒரு காரணத்திற்காகவும் நம்முடைய ஜெபத்தினை நிறுத்தாமல், தொடர்ந்து ஜெபிப்பதன் மூலம் இறைவனின் ஆசிர்வாதத்தை நாம் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.
எரிகோவிற்கு செல்லும் வழியோரமாய் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பார்வை இழந்த ஒருவர், மக்கள் கூட்டம் தன்னைக் கடந்து போவதை உணர்ந்தார். உடனே அதற்கான காரணத்தை அங்கிருந்தவர்களிடம் அவர் கேட்ட போது, ‘நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார்' என்று தெரிவித்தார்கள்.
அதை கேட்டவுடன் அவர் ‘‘இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்’’ என்று கூக்குரலிட்டார். உடனே அருகிலிருந்த மக்கள் அவரை அமைதியாய் இருக்குமாறு அதட்டினார்கள். ஆனால் அவர், ‘‘தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்’’ என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
அவருடைய குரலை கேட்ட இயேசு உடனே நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும், ‘‘நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்’’ என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், ‘‘ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்’’ என்றார். இயேசு அவரிடம், ‘‘பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று’’ என்றார். அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.
சூழ்ந்திருந்த மக்கள் தன்னை அமைதியாய் இருக்கும்படி அறிவுறுத்தியபோதும், இயேசுவால் மட்டுமே தனக்கு விடுதலை தர முடியும் என்று முழுமையாய் விசுவாசித்தார் அந்த பார்வை இழந்தவர். அந்த உறுதியான விசுவாசத்தின் காரணமாகதான், அவர் முன்பை விட இன்னும் அதிக சத்தத்துடன் இயேசுவை நோக்கி குரல் கொடுத்தார்.
‘துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள். உங்களை காத்திடுவேன். அப்போது நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள்’ என்ற திருப்பாடல் 50:15 வார்த்தையின்படி, இயேசு தன்னை நோக்கி அழைத்த அந்த பார்வையற்றவரின் குரலைக் கேட்டு அதற்கான பதிலையும் கொடுத்தார். அதனால் பார்வை பெற்றவர் மட்டுமல்ல, அவரை அமைதியாய் இருக்கும்படி அதட்டிய மக்களும் அவருடன் சேர்ந்து கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.
பழைய ஏற்பாட்டில் யோசுவா தன்னுடைய வேண்டுதலால், சூரியனை கிபியோன் மீதும், சந்திரனை அய்யலோன் பள்ளத்தாக்கிலும் நிற்கும்படி கூறினார். அவருடைய குரலைக் கேட்டு சூரியன் அஸ்தமிக்க நினைக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றதாக விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது.
அன்று யோசுவாவின் குரல் படைப்பைத்தான் நிறுத்தியது. ஆனால் இங்கு பார்வையற்றவரின் குரலோ அனைத்தையும் படைத்தவரையே நிற்க வைத்தது. அவர் கூக்குரலிட்டபோது இயேசு அதனை கடந்து செல்லாமல், அவருடைய குரலை கேட்டு நின்று அவருக்கு விடுதலையை கொடுத்தார். அதே இயேசு கிறிஸ்து இன்றும் நம் மத்தியில் உலாவி கொண்டுதான் இருக்கிறார். இப்போதும் அவர், ‘அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்’ என்ற வாக்குத் தத்தத்தின் படி நம்முடைய குரலை கடந்து செல்பவராய் அல்ல, அதற்கு பதில் அளிப்பவராகவே இருக்கிறார். அந்த உறுதியுடனும், நம்பிக்கையுடனும் நாமும் ஜெபிப்போம், இறை ஆசிர்வாதத்தை பெற்றவர்களாய் அவரை மகிமைப்படுத்துவோம்.

நெல்லையப்பர் கோவிலில் வருகிற 22-ந்தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஐப்பசி திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெற உள்ளது.இதற்கான கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. அம்பாள் சன்னதி முன்பு உள்ள ஊஞ்சல் மண்டப பகுதியில் கால்நாட்டப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக வருகிற 22-ந்தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) டவுன் காட்சி மண்டபத்தில் நடைபெறுகிறது.
2-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சாமிகள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காயாரோகணசாமி மற்றும் நந்திகேஸ்வரருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நந்திக்கு வில்வ இலை மற்றும் அருகம்புல் மாலை சாற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகியநாதர் கோவில், வீரபத்திரசாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சாமிகள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது. இதேபோல் தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மச்சாரியாகவே கருதப்படும் விநாயகருக்கு, இந்த ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது மற்றொரு சிறப்பாகும். ஏனெனில் இங்கு விநாயகா், சித்தி- புத்தி என்ற இரண்டு மனைவி யருடன் காட்சியளிக்கிறார்.
விநாயகரின் சிறப்புமிக்க ஆலயங்களில் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகருக்கு தனி இடம் உண்டு. இந்தியாவிலேயே தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இங்குதான் இருக்கிறது. இந்த ஆலயத்தில் காணப்படும் மேலும் பல சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.
8 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இத்தல மூலவா் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின் இடதுபக்கம் மூல வருக்கு அருகிலேயே ஒரு சிறிய குழி காணப்படும். இதன் ஆழம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும் இதில் எப்போதும் நீர் இருந்துகொண்டே இருக்கும்.
புதுச்சேரியில் மகாகவி பாரதியார் தங்கியிருந்த 10 ஆண்டுகளில், இந்த விநாயகப் பெருமானைப் போன்றி 40 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவை `நான்மணிமாலை' என்று வழங்கப்படுகிறது.
பிரம்மச்சாரியாகவே கருதப்படும் விநாயகருக்கு, இந்த ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது மற்றொரு சிறப்பாகும். ஏனெனில் இங்கு விநாயகா், சித்தி- புத்தி என்ற இரண்டு மனைவி யருடன் காட்சியளிக்கிறார்.
டச்சுக்காரா்கள், போர்ச்சுகீசியா்கள், டேனீஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரா்கள், ஆங்கிலேயா்கள் என 5 வெளிநாட்டவா்களின் ஆட்சிகளிலும் சிறப்புற்று விளங்கியவா், இந்த மணக்குள விநாயகா்.
மணக்குள விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது, அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்தவா்களும், சுவாமி வாகனத்திற்கான ஏற்பாடுகளைச் செய் கிறார்கள்.
கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருளாசி வழங்கும் இந்த விநாயகா், இடம்புரி விநாயகராக அருள்கிறார்.
இத்தலத்தில் மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று 4 கால அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று பூஜையில் பங்கேற்றால் மிகுந்த பலன் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உப வாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தி யடைந்து திருமணம் நடைபெறும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.
தங்கத்தகடு போர்த்தப்பட்ட கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடி. இந்த ஆலயத்தில் காணாபத்திய ஆகம விதிப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன.
விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களாக எண்ணெய், பஞ்சாமிர்தம், பழ வகைகள், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிேஷகம் செய்கிறார்கள். மேலும் சொர்ணாபிஷேகம், 108 கலசாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.
வருடத்தின் மிக முக்கிய விசேஷ நாட்களான தமிழ் புத்தாண்டு தினம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங் களிலும் கோவிலில் மூலவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட அனைத்துவிதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர், வாகன வழிபாட்டுக்காக இங்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏராளம்.

மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துக்கு பின்னர் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு மஞ்சள் தூள், திருமஞ்சனம், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், எலுமிச்சை, பன்னீர், குங்குமம், சந்தனம், விபூதி உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.
பின்னர் மாலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை அர்ச்சகர் துரைசாமி, உதவி அர்ச்சகர்கள் மனோஜ்குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கலந்துகொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அக்டோபர் மாதம் 19-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
19-ம் தேதி செவ்வாய் கிழமை :
* மீலாது நபி
* தேவக்கோட்டை ரெங்கநாதர் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - மகம், பூரம்
20-ம் தேதி புதன் கிழமை :
* பௌர்ணமி
* கோமதி பூஜை
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சனம்
* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
21-ம் தேதி வியாழக்கிழமை :
* கரூர் ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி
* ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
* சந்திராஷ்டமம்- உத்திரம், ஹஸ்தம்
22-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சித்தயோகம்
* நெல்லை காந்திமதி அம்மன் உற்சவாரம்பம்
* சந்திராஷ்டமம் - ஹஸ்தம், சித்திரை
23-ம் தேதி சனிக்கிழமை :
* கார்த்திகை விரதம்
* கரிநாள்
* ஸ்ரீஉமா விரதம்
* சந்திரோதய கௌரி விரதம்
* ஸ்ரீரங்கம், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தலங்களில் திருமஞ்சனம்
* சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி
24-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சுபமுகூர்த்தம்
* சங்கடஹர சதுர்த்தி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்
25-ம் தேதி திங்கள் கிழமை :
* தேய்பிறை பஞ்சமி
* சித்தயோகம்
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - அனுஷம்

துலா மாதம் பிறந்ததையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. முன்னதாக தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து யானை மீது வைத்து எடுத்து வரப்பட்டது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. துலா (ஐப்பசி) மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.
இந்த மாதம் முழுவதும் காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனிதநீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனித நீர் கொண்டு செல்லப்படும்.
துலா மாதபிறப்பையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 5.30 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
துலா மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும்.
மேலும், மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார் தங்க ஆபரணங்கள் மற்றும் சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கோவில் யானை ஆண்டாள் கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 16-ல் சேவை செய்ய வந்தது.
ஆண்டாள் தனது முதல் சேவையாக துலா மாதம் காவிரி ஆற்றில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து வந்தது. அன்று முதல் நேற்று வரை துலா மாத பிறப்பு வரை காவிரி ஆற்றிலிருந்து தங்க குடத்தில் புனிதநீரை ஆண்டாள் யானை 35-வது ஆண்டாக கொண்டு வந்து தனது சேவையை தொடர்ந்து செய்து வருகிறது.