என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இரவில் பவுர்ணமி தொடங்கியதால் மாலையில் போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.56 மணிக்கு தொடங்கி இன்று (புதன்கிழமை) இரவு 8.45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டது.

    இருப்பினும் சிலர் நேற்று பகலில் தனித்தனியாக கிரிவலம் சென்றனர். இரவில் பவுர்ணமி தொடங்கியதால் மாலையில் போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிலர் மாற்று பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர். மேலும் கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய சாமி சிலைகளுக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரத்தில் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், மன்னர்கள் தங்களது தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றினர். அதன்பிறகு நவராத்திரி விழாவும் அங்கு மாற்றப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    அதன்படி கடந்த 3-ந் தேதி அன்று பத்மநாபபுரம் அரண்மனையில் 3 சாமிகளும் ஒன்று கூடி நவராத்திரி விழாவுக்கு புறப்பட்டு சென்று பங்கேற்றது.

    அங்கு சரஸ்வதி அம்மன் கோட்டை பகுதியில் உள்ள நவராத்திரி மண்டபத்திலும், வேளிமனை முருகன் ஆரியசாலை தேவி கோவிலிலும், முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை பகவதி கோவிலிலும் பூஜைக்காக வைக்கப்பட்டது. அங்கு நவராத்திரி பூஜைகள் முடிந்த பிறகு கடந்த 17-ந் தேதி சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு ஊர்வலமாக புறப்பட்டது.

    அதன்படி அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வேளிமலை முருகன், முன்னுதித்த நங்கை அம்மன், சரஸ்வதி அம்மன் சிலைகள் நேற்றுமுன்தினம் மாலை தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை வந்தடைந்தது. அங்கு சாமி சிலைகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அன்றைய தினம் குழித்துறையில் தங்கியது. நேற்று காலை மீண்டும் சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடைந்தது. அங்கு பக்தர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் சரஸ்வதி அம்மன் தேவாரக்கட்டு கோவிலுக்குள் சென்று அங்குள்ள தெப்பக்குளத்தில் ஆராட்டு நடந்தது. சந்தனம், களபம், பன்னீர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, நல்லெண்ணெய், பால், தயிர் குங்குமம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் கருவறைக்குள் சாமி கொண்டு செல்லப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் வேளிமலை முருகன் குமாரகோவிலுக்கு சென்றது. சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் நேற்று தங்கியது. இன்று (புதன்கிழமை) அதிகாலை அம்மன் புறப்பட்டு சுசீந்திரம் கோவிலை சென்றடைகிறது.
    கோனார்க் சூரிய கோவிலுக்கு அருகிலேயே பாழடைந்த நிலையில் இரண்டு கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதிலொரு கோவில் சூரிய பகவானின் மனைவியான மாயாதேவியுடையது.
    யுனஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்று கோனார்க் கோவில். சூரிய பகவானை மூலவராக கொண்டிருக்கும் ‘கோனார்க்’ கோவில் ஆன்மிகத்தையும், அறிவியலையும் ஒன்றாக கலந்த ‘கால கடிகாரம்’ போல செயல்படுகிறது..! அதன் சுவாரசியத்தை விளக்கும் தகவல் தொகுப்பு இது...!

    யார் கட்டியது ?

    கீழை கங்கா் வம்சத்தைச் சோ்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால், 13-ம் நூற்றாண்டில் (கி.பி. 1236-1264) கட்டப்பட்டது. இதனைக் கட்டி முடிக்க பேரரசின் 12 ஆண்டு கால வருமானமும் செலவிடப்பட்டது. இயற்கை பேரிடர்களை சந்தித்து, இப்போது சிதலமடைந்து நிற்கிறது.

    எங்கு இருக்கிறது..?

    இந்தியாவின் ஒடிசா மாநிலம், பூரி ரெயில் நிலையத்தில் இருந்து 31 கிலோமீட்டா் தொலைவில் இருக்கிறது.

    கால ஓட்டத்திற்கு ஏற்பவும், சூரியனின் நகர்வுக்கு ஏற்பவும், சூரிய ஒளி மூலவர் சிலை மீது படும் வகையில் கோவிலை கட்டியிருக்கிறார்கள்.

    கோவிலின் விமானம் சரியும் நிலையில் இருப்பதால், இங்குள்ள மூலவரான சூரியன் சிலை, பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே இங்கு உருவ வழிபாடு எதுவும் இல்லை.

    ஈர்ப்பு விசை தூண்

    இந்த ஆலயத்தில் தூண்களே கிடையாது. இருப்பினும் ஒவ்வொரு கற்களுக்கும் நடுவே நிறைய இரும்புத் துண்டுகள் உள்ளது. ஒரு முறை கோவில் மேற்பகுதி சேதமடைந்து விழுந்தபோது, கோபுர உச்சியில் சுமார் 50 டன் எடையிலான பிரம்மாண்ட காந்தக்கல் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த காந்தக்கல்தான், இரும்பு துண்டுகளை வலுவாக ஈர்த்து, தூண்களுக்கான வேலையை செய்திருக்கிறது.

    சிறப்பு..!

    ஏழு குதிரைகள் பூட்டி, 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரிய பகவான் எழுந்தருள்வது போல் இந்த கோவிலை உருவாக்கி உள்ளனர். ஏழு குதிரைகள் என்பது ஏழு நாட்களையும், 24 சக்கரங்கள் என்பது 24 மணி நேரத்தையும் குறிக்கும் விதத்தில் இந்த கோவிலின் அமைப்பு உள்ளது.

    மைதுன சிற்பங்கள்

    கஜுராஹோவில் இருப்பது போன்றே ஏராளமான மைதுன சிற்பங்கள் இங்கு இருக்கின்றன. இச்சிற்பங்கள் காலப்போக்கில் சற்றே சிதைந்து போயிருக்கின்றன.

    மாயாதேவி

    கோனார்க் சூரிய கோவிலுக்கு அருகிலேயே பாழடைந்த நிலையில் இரண்டு கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதிலொரு கோவில் சூரிய பகவானின் மனைவியான மாயாதேவியுடையது.
    திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு, ஐப்பசி மாத பவுர்ணமி நட்சத்திர பிரகாரப்படி, நாளை (வியாழக்கிழமை) மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது.
    உயிர்களை இயக்கும் சக்தி படைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம். அத்தனை சிவன் கோவில்களிலும் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்பட்டுள்ளது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது.

    ஐப்பசியில் வரும் பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் 16 கலைகளுடன் பூரண சோபையுடன் பிரகாசிக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சிவாலயங்களில் சாயரட்சையின்போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

    அதன்படி, இன்று (புதன்கிழமை) ஐப்பசி பவுர்ணமி தினமாகும். அதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது. சிவன் காலடியில் படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டால் நோய் நொடிகள் வராது. குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகம். மேலும் பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியமும் கிட்டும் என்பதாகும். தற்போது அனைத்து நாட்களிலும் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலின் தெற்கு மூலையில் உள்ள குபேர லிங்கத்திற்கு இன்று (புதன்கிழமை) மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது. இதுபோல நந்தி கோவில் தெருவில் உள்ள நாகநாதர் கோவிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.

    திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் இன்று மாலை 6 மணி அளவில் சுமார் 100 கிலோவுக்கு மேல் சாதம் வடித்து மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதே போன்று திருச்சி உறையூரில் உள்ள தாந்தோன்றீஸ்வரர் கோவில், முசிறியில் சந்திரமவுலீஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் நடக்கிறது.

    இதேபோல் லால்குடி சப்தரிஷ்வரர், பூவாளூர் திருமூலநாதர், மாந்துரை சாமவேதீஸ்வரர், புள்ளம்பாடி சிதம்பரவேதீஸ்வரர், கல்லக்குடி பசுபதீஸ்வரர் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது.

    தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 4 மணிக்கும், பாலசமுத்திரம் கல்யாண பாலாம்பிகை சமேத கல்யாணசோமேஸ்வரர் கோவில், திருஈங்கோய்மலை மரகதாம்பிகை சமேத மரகதாசலேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் மாலை 5 மணிக்கும், மாராச்சிப்பட்டி அபிராம்பிகை சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மாலை 6 மணிக்கும், அரசலூர் சுகந்தகுஜலாம்பிகை சமேத தாயுமானசுவாமி கோவிலில் மாலை 5 மணிக்கும் அன்னாபிஷேகம் நடக்கிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டிலுள்ள போஜீஸ்வரர்கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாத சுவாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் இன்று மாலை 5 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதேபோல் துறையூர், மணப்பாறை, உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களிலும் இன்று (புதன்கிழமை) அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் திருக்காமேஸ்வரர், தா.பேட்டையில் காசி விசுவநாதர், மங்கலம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர், காருகுடி கைலாசநாதர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம் நடக்கிறது.

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு, பவுர்ணமி நட்சத்திர பிரகாரப்படி, நாளை (வியாழக்கிழமை) மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை தொடங்கி, பின்னர் தாயுமானவர் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் நூற்றுக்கால் மண்டபத்தில் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் கோவில் நிர்வாகம் சார்பில் மகா அன்னாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
    சூரசம்ஹாரத்தையொட்டி 3 நாட்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் கொடியிறக்கம் மற்றும் திருக்காப்பு அவிழ்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
    மைசூருக்கு அடுத்தபடியாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடந்த 15-ந்தேதி நள்ளிரவு கோவில் முன் பிரகார மண்டபத்தில் நடந்தது. திருவிழாவையொட்டி நாள்தோறும் இரவு பல்வேறு திருக்கோலங்களில் அம்மன் உள் திருவீதி உலா நடந்தது.

    மத்திய, மாநில அரசுகள் வகுத்த கொரோனா தொற்று விதிமுறைகளைப் பின்பற்றி திருவிழாவில் 5 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சூரசம்ஹாரத்தையொட்டி 3 நாட்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் கொடியிறக்கம் மற்றும் திருக்காப்பு அவிழ்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. வேடமணிந்த பக்தர்கள் அந்தந்த ஊர்களிலேயே அமைக்கப்பட்டிருந்த தசரா குடில்களிலும், கோவில்களிலும் காப்புகளை அவிழ்த்தனர்.

    இந்தநிலையில் பக்தர்களுக்கு நேற்று முன்தினம் காலை முதல் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதையடுத்து பல்வேறு பகுதிகளிலிருந்து கார், வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வந்து குவிந்தனர்.

    15 நாட்களுக்கும் மேலாக சிதம்பரேஸ்வரர் கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படாமல் இருந்தது. நேற்று முன்தினம் முதல் தளர்வு அளிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் அந்த பகுதியில் புனித நீராடினர். சாமி தரிசனமும் செய்தனர்.

    நேற்று 2-வது நாளாக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும்.
    ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும்.

    அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.

    தட்சன் என்பவனுக்கு 27 பெண்கள். அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான். ஆனால் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அவன் அதிக காதலுடன் இருந்தான். இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். திருமணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக கருதிய தட்சன், சந்திரனுக்கு சாபம் கொடுத்தான்.

    இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்கினான். அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும்.

    சந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறோம்.

    சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

    சந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். அது மட்டுமே காரணம் அல்ல.. இந்த நிகழ்வுக்கு ஆன்மிக ரீதியான அறிவார்ந்த தத்துவம் ஒன்று குறிப்பிடப்படுகிறது.

    சிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.

    இந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. இதுபற்றி கந்தபுராணத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

    அன்றைய தினம் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன தோஷம் விலகும்.

    ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது. 
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சோமவார பிரதோ‌ஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வாரத்தில் 3 நாட்கள் தரிசன தடை நீக்கப்பட்ட பின்பு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    இருந்தபோதிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சோமவார பிரதோ‌ஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கிரிவல தடை தெரியவந்ததால் நேற்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்றனர்.

    மேலும் இன்று அரசு விடுமுறை தினம் என்பதால் வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலையில் வசிக்கும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, அன்னலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் 20-ந்தேதி (நாளை) அன்னாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

    மதியம் 12 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை அபிஷேகம், சஹஸ்ர நாமார்ச்சனை, தீபாராதனை, மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, அன்னலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மாலை 6 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை அன்னாபிஷேகம் செய்த சாதம் அகற்றப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இதையடுத்து சிவலிங்கத்தை சுத்தம் செய்து, மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    இந்த அஷ்டகத்தை பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம்.
    சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

    பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9-வது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.

    தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின்
    தளர்வுகள் தீர்ந்து விடும்
    மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
    மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
    சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)

    வாழ்வினில் வளந்தர வையகம்
    நடந்தான் வாரியே வழங்கிடுவான்
    தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
    தானெனவந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான்
    கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)

    முழுநில வதனில் முறையொடு
    பூஜைகள் முடித்திட அருளிடுவான்
    உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான்
    உயர்வுறச்செய்திடுவான் முழுமலர்த்
    தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
    தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (3)

    நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்
    நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச்
    சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
    நிறைத்திடுவான் வான்மழை எனவே
    வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)

    பூதங்கள் யாவும் தனக்குள்ளே
    வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்
    ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்
    பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்
    மாயம் யாவையும் போக்கிடுவான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (5)

    பொழில்களில் மணப்பான் பூசைகள்ஏற்பான்
    பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
    தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
    நிழல்தரும் கற்பகம் நினைத்திட
    பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (6)

    சதுர்முகன் ஆணவத் தலையினைக்
    கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
    பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
    செய்யென்றான் பதரினைக் குவித்து
    செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)

    ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள்
    செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம்
    ஜெயங்களைத் தந்திடுவாய்
    ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
    செல்வங்கள் தந்திடுவாய்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (8) 
    நவராத்திரி பூஜைக்காக திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு வந்தன. களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் ேதவாரகட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் பங்கேற்பது வழக்கம். அதன்படி குமரி மாவட்டத்தில் இருந்து அந்த சாமி சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், அங்கு கடந்த 6-ந் ேததி முதல் நடந்த நவராத்திரி பூஜையில் சாமி சிலைகள் வைக்கப்பட்டன.

    விழா முடிந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் திருவனந்தபுரத்தில் இருந்து குமரிக்கு சாமி சிலைகள் புறப்பட்டன. இந்த சாமி சிலைகள் நேற்று முன்தினம் நெய்யாற்றின்கரையில் தங்கின. நேற்று காலையில் அங்கிருந்து புறப்பட்டு குமரி- கேரள எல்லையான களியக்காவிளைக்கு வந்தன.

    அங்கு தமிழக போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், சாமி சிலைகளை கேரள அதிகாரிகள், தமிழக அறநிலையத் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், வழிநெடுக பக்தர்கள் சாலை ஓரங்களில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் சாமி சிலைகள் இரவில் குழித்துறை மகாதேவர் கோவிலில் தங்கின. இன்று (செவ்வாய்க்கிழமை) குழித்துறையில் இருந்து புறப்பட்டு பத்மநாபபுரம் செல்கின்றன.
    மயிலாடுதுறையில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் தொடக்கத்தையொட்டி நடந்த தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.
    மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த அபயாம்பிகை உடனான மயூரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அபயாம்பிகை காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாளும் புனித நீராடி ஈசனை வழிபட்டு மயில் உரு நீங்கி சாபவிமோசனம் பெற்று இறைவனுடன் சேர்ந்ததாக பக்தர்களின் நம்பிக்கை. மேலும் கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் தங்கள் பாவங்களை போக்கி கொள்ள துலா மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கி கொண்டதாக ஆன்மிக புராணங்கள் கூறுகின்றன.

    எனவே ஐப்பசி மாதம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் சாமி புறப்பாடு இன்றி அஸ்திரதேவர் மட்டும் காவிரி துலா கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு துலா உற்சவம் நடந்தது.

    இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகளால் சாமி வீதியுலா செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக நேற்று தொடங்கியது.

    துலா உற்சவத்தின் முதல் தீர்த்தவாரியான நேற்று அபயாம்பிகை உடனான மாயூரநாதர், அறம்வளர்த்த நாயகி உடனான அய்யாறப்பர், ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர், விசாலாட்சி உடனான காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் துலாக்கட்ட காவிரியின் 2 கரைகளிலும் எழுந்தருளினர். அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். இந்த துலா உற்சவத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவமாக சிவாலயங்களில் திருக்கல்யாணம், தேர் திருவிழா, அமாவாசை தீர்த்தவாரி, புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரி என்றழைக்கப்படும் கடைமுழுக்கு, முடவன் முழுக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
    உயிர்களை படைக்க கூடிய சிவ பெருமான் அனைத்து உயிர்களுக்கும் அன்னமிடக் கூடிய நாளாக ஜப்பர்மாத பவுணர்மி போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சி நாளை(புதன்கிழமை) அனைத்து சிவன் கோவில்களில் நடக்கிறது.
    சிவன் கோவில்களில் ஒவ்வொரு பவுணர்மி நாளிலும் விசேஷ பூஜை நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாத பவுணர்மி நாளில் நடக்கக்கூடிய அன்னாபிஷேகமானது தனித்துவம் வாய்ந்ததாகும். உயிர்களை படைக்க கூடிய சிவ பெருமான் அனைத்து உயிர்களுக்கும் அன்னமிடக் கூடிய நாளாக ஜப்பர்மாத பவுணர்மி போற்றப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு பெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சி நாளை(புதன்கிழமை) அனைத்து சிவன் கோவில்களில் நடக்கிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வழக்கம்போல சத்தியகீரிஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐப்பசி மாத பவுணர்மி (புதன்கிழமை) கிரிவலம் ரத்து செய்யப்படுகிறது. ஆகவே பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்த்திட வேண்டும் என்று கோவில்துணை ஆணையர் (பொறுப்பு) ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ×