என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிகளுக்கு பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
பெருமாளை வழிபட உகந்த நாட்களில் ஒன்று, ஏகாதசி. இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்தால் பலன்கள் இரு மடங்காகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாதம் இரண்டு ஏகாதசிகள் என்று, வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில வருடம் 25 ஏகாதசிகள் கூட வருவதுண்டு. இந்த ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிகளுக்கு பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
இந்திர ஏகாதசி
ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, ‘இந்திர ஏகாதசி’ என்பார்கள். இந்த ஆண்டுக்கான இந்திர ஏகாதசி, 31.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 10 மணி வரை உள்ளது. இந்த ஏகாதசிவிரதம், நாரதர் மூலமாக வெளிப்பட்டது.
புராண காலத்தில் இந்திரசேனன் என்ற மன்னன், மாஹிஷ்மதி என்ற நகரை ஆட்சி செய்தான். ஒருநாள் அவனது அரசவைக்கு நாரத முனிவர் வருகை தந்தார். அவரை வரவேற்று அமரச் செய்த மன்னன், நாரதர் வந்ததற்கான காரணத்தைக் கேட்டறிந்தான்.
அதற்கு நாரதர், “நான் எமலோகம் சென்றிருந்தபோது, உன்னுடைய தந்தையை சந்தித்தேன். அங்கு நரகத்தில் அவர் கடும் துன்பத்தை அனுபவிக்கிறார். அவர் என்னிடம், ‘என் மகனிடம் கூறி, இந்திர ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளச் செய்யுங்கள். அப்படிச் செய்தால், நான் இந்த நரகத்தில் இருந்து விடுபடுவேன். என்னை கரையேற்றும்படி அவனிடம் கூறுங்கள்’ என்று சொல்லியனுப்பினார். அதற்காகவே நான் வந்தேன்” என்றார்.
அதைக் கேட்ட மன்னன், தந்தையின் நிலை அறிந்து வருந்தினான். தொடர்ந்து தன் தந்தையின் ஆன்மா துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காக, இந்திர ஏகாதசி விரதம் மேற்கொள்ள முடிவு செய்தான். அதற்கான வழிமுறைகளை நாரத முனிவரிடம் இருந்துகேட்டு, அதன்படியே செய்தான். இதனால் அவனது தந்தை நரக வேதனையில் இருந்து விடுபட்டு சொர்க்கம் சென்றார்.
இந்த இந்திர ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும். மேலும் முன்னோர்களின் ஆன்மா, நரகத்தில் துன்பம் அனுபவித்து வந்தால், அவர்களின் சந்ததியினர் செய்யும் இந்திர ஏகாதசி விரதத்தின் காரணமாக, அந்த துன்பத்தில் இருந்து விடுபடுவார்கள்.
பாபாங்குசா ஏகாதசி
ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்று பெயர். ஒருவருடைய பாவத்தை அகற்றும் அங்குசம் போன்றது என்பதால், இந்தப் பெயர் வந்தது. இந்த ஆண்டு பாபாங்குசா ஏகாதசி, 14.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.41 மணி முதல் மறுநாள் காலை 9.41 மணி வரை உள்ளது.

இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, கங்கை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் கைவரப்பெறும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், நரக வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. ஐப்பசி ஏகாதசி நாளில், ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறை தெரியாமலோ, அல்லது மற்றவர்கள் வியந்து பார்க்க வேண்டும் என்றோ, எப்படிச் செய்தாலும், இந்த விரதத்திற்கான பலன் கிடைக்கப்பெறும் என்பதே, பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மேன்மையாகும்.
இதையும் படிக்கலாம்...விநாயகர் அருளைப் பெற உதவும் 11 வகையான விரதங்கள்
ஆக்கம் கொண்ட சிந்தனைக்கு ஊக்கத்தை அளித்து, எந்தத் தொந்தரவும் இன்றி அந்தச் செயல் தொடரவும் வளரவும், வளர்வதைக் காக்கவும் செய்யும் திறன் இந்த விநாயகன் அருளால் கிடைக்கிறது.
‘உ’ என்பது யஜுர் வேதத்தின் சாரம். ஒரு செயல் தொடங்குவதிலிருந்து, முறையாக நடந்து, சரியாக முடிந்து, நிறைவான பலன் கிட்டும் வழியை விரிவாகச் சொல்கிறது இந்த வேதம்.
முன்வினை, பின்வினை, செய்வினை என்ற எல்லா வினைகளுக்கும் நாயகன் விநாயகன். ஆக்கம் கொண்ட சிந்தனைக்கு ஊக்கத்தை அளித்து, எந்தத் தொந்தரவும் இன்றி அந்தச் செயல் தொடரவும் வளரவும், வளர்வதைக் காக்கவும் செய்யும் திறன் இந்த விநாயகன் அருளால் கிடைக்கிறது.
ஆகவேதான், எந்தச் செயலையும் தொடங்கும் முன்பாக பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணைய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.
புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும்.
இதனைத் தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக சொல்கிறார்கள்.

விநாயகர் முன் பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டானதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரும்போது குடகுமலையில் சிவபூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது இந்திரன் சீர்காழியில் பூஜை செய்து கொண்டிருந்தான். மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனை பார்த்து, அகத்தியருடைய கமண்டலத்தில் உள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார்.
இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான். விநாயகர் காக்கை வடிவம் எடுத்து சென்று காவிரி அடங்கிய கமண்டலத்தின் மீது அமர்ந்தார். அகத்தியர் காகத்தைக் கரத்தால் ஓட்டினார். காகம் காலால் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து காவிரி பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியர் காகத்தின் மீது சீறிப்பாய்ந்தார். அது சிறுவனாகி நின்றது. அச்சிறுவனை இரு கரங்களாலும் குட்டும் பொருட்டுக் குறுமுனி ஓடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்குமாக ஓடினார்.
அகத்தியர் அச்சிறுவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஓங்கினார். ஐங்கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார். அகத்தியர் திகைத்து போனார். விநாயகப் பெருமானே உம்மைக் குட்டுவதற்கா கையை ஓங்கினேனே? என்று தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி இன்று முதல் என் முன் பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள் என்று அருளினார்.
இதனால் விநாயகர் முன் பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.

நாகராஜா கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ச்சியாக 10 நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் சேக்தாவூது, முன்னாள் கவுன்சிலர் சாகுல்ஹமீது மற்றும் அனந்தகிராம பிராமண சமுதாய நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேற்று மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா கோவில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்று ஆகும். இந்த கோவிலின் முக்கிய விழாவான கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் மிகசிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ச்சியாக 10 நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 9-ந் தேதி நடத்தப்படும். எனவே பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நந்தீசனின் திருமணத்திற்காக இத்தலத்திலிருந்து உணவு வகைகள் சென்றதால் அன்றிலிருந்து இன்றுவரை சப்தஸ்தான விழாவின்போது இத்தலநாயகரும் திருமழபாடிக்கு எழுந்தருள்வார்.
சோழநாடு சோறுடைத்து என்பது இத்தலத்தை மையமாக கொண்டு சொல்லப்பட்டதுதான் எனில் மிகையில்லை. இத்தலம் திருவையாறு சப்த ஸ்தானத்தில் ஒன்றாகத் திகழ்கிறது. நந்தீசனின் திருமணத்திற்காக இத்தலத்திலிருந்து உணவு வகைகள் சென்றதால் அன்றிலிருந்து இன்றுவரை சப்தஸ்தான விழாவின்போது இத்தலநாயகரும் திருமழபாடிக்கு எழுந்தருள்வார். அதுபோல கௌதம மகரிஷிக்காக வயலில் நெல்லுக்கு பதிலாக அரிசியாக விளைந்த அந்த இடம் இன்றும் சோறுடையான் வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் அந்த வாய்க்காலில் ஒரு கதிர் மட்டும் அரிசியாகவே விளைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.
கோயிலின் வாயிலிலிருந்து நேரே உள்ளே நகர கருவறைக்கு அருகே கருணை கொப்பளிக்கும் முகத்தோடு அருளாள தம்பதியினர் அமர்ந்திருக்கிறார்கள். அடியார்களுக்கும், தம்மை நாடியவர்களுக்கும் அன்னமிட்ட அந்தக் கைகளை ஆதரவாகப் பிடித்து தம் பக்கத்தில் அமர்வித்துள்ளார் ஓதனவனேஸ்வரர். அன்னத்தோடு அரனின் அருளையும் பிசைந்திட்டு பெரும்பேறளித்த அவர்கள் முகம் இன்னும் மலர்ச்சியாக அருகே வருவோரைக் கண்டு அமுது செய்தீரா என உதடு பிரித்துக் கேட்பதுபோல் உள்ளது.
அதற்கு அருகேயே கௌதம மகரிஷி நின்றகோலத்தில் கைகூப்பி ஈசனை வணங்கும் காட்சி பார்ப்போரை நெக்குருகச் செய்கிறது. இத்தலத்திலேயே தன் ஆசிரமம் அமைத்து ஓதனவனின் மேன்மையை ஓயாது சொன்னவர் இவர். முப்பெருஞ்சுடருக்கு மத்தியில் பெருஞ்ஜோதியாகத் திகழுகிறார் ஓதனவனேஸ்வர் (ஓதனம் என்றால் அன்னம் என்பது பொருள்) எனும் தொலையாச் செல்வர்.
சமயக்குரவர் மூவர் பாடி பரவசித்திருந்த தலம் இது. கௌதமர் ஓதனவனேஸ்வரர் முன்பு திருமடம் அமைத்தார். அருளாள தம்பதி பற்றி ஊர் மக்கள் நெகிழ்ச்சியாகக் கூற உளம் குளிர்ந்தார். அன்னமிடுதலை விட வேறு தர்மம் உண்டோ என அதை வழிமொழிந்தார். அவ்வழியையே எனைத் தொடரச் சொல்லி ஈசன் என்னை இங்கு இயக்கினான் என்று கூற சோற்றுத்துறையே சிலிர்த்துக் குதூகளித்தது.
ஈசன் இன்னும் ஒருபடி மேலேபோய் அவ்வூரையே சோற்றுக்கடலில் ஆழ்த்திவிடத் துணிந்தார். அதை அறிந்த கௌதமர் வயல்வெளிகளை மெல்ல தமது அருட்கண்களால் துழாவினார். செந்நெற்கதிர்கள் சட்டென்று வெடித்தது. நெல் மணிகள் வெண்முத்துச்சரமாக, பொங்கிய சோறு அன்றலர்ந்த மல்லிகையாக மாறியிருப்பது பார்த்த அடியார்களும், பக்தர்களும் நமசிவாய...நமசிவாய...என விண்பிளக்க கோஷமிட்டனர். பச்சைவயலுக்கு பொன்காப்பிட்ட செந்நெற்கதிர்களுக்கு மத்தியில் வெண்முத்துக்கள் கோர்த்த மாலைபோல் அவ் விடம் ஒளிர்ந்தது.
ஊரார் வயலில் இறங்கி கூடைக்குள் சூடாக அன்னப் பருப்பை நீவியெடுக்க அழகாக கூடையில் சென்று அமர்ந்தது. அன்னமலர்கள் மலையாகக் குவிந்தது. ஈசனின் பேரணையாலும், கௌதமர் எனும் மகாகுருவின் அண்மையாலும் அவ்வூர் வளமாகத் திகழ்ந்தது. இன்றும் ஐப்பசி அன்னாபிஷேக பெருவிழா இங்கு சிறப்பாக நடக்கின்றது.
தில்லைக்கூத்தன் ஜடாபாரம் அலையப் பெருநாட்டியமாட சிரசில் பொங்கிய கங்கையின் துளிகள் பாரெங்கும் சிதறின. அவை பூமியில் பூவாக பூத்து லிங்கமாக மாறியது. இவற்றையே சுயம்புலிங்கங்கள் என்பார் ஆன்றோர்கள். அப்படித் தெறித்து வீழ்ந்து பொங்கிய சுயம்புலிங்கத்தில் திருச்சோற்றுத்துறையும் ஒன்று. சுயம்புப் பிழம்பின் ஈர்ப்பு காந்தமாக அருகே வருவோரை தமக்குள் ஏற்றுக்கொள்கிறது.
சோறு என்பது உண்ணும் சோறு என்று பொதுப் பொருள் உண்டு. அதேநேரம் சோறு என்பது வெண்மையின் அடையாளம். பேரின்பப் பெருக்கெடுக்கும் ஊற்று என இருவேறு பொருளுண்டு. அடியாற் மனதிற்கிணங்க பேரின்பத்தையும், உயிர்காக்கும் சோறும் இட்டு இன்பம் பெருக்குவான் இப்பெருமான். அப்பரடிகள் ‘‘சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கித் தூநெறிக்கட் சேரலாமே’’ என ஆனந்தம் பொங்கப் பேசுகிறார்.
முக்திக்கு செல்ல ஓதனவனேஸ்வரனின் பெயர் போதுமே என எளிய பாதையை அழகு வார்த்தைகளில் கோடிட்டுக் காட்டுகிறார். சோற்றுத்துறைநாதர் சோர்வை நீக்கி புத்தொளி பரப்புவதில் சமர்த்தர். தொலையாச் செல்வரின் அருகே செல்லச் செல்ல நம் துன்பங்கள் வெகு தொலைவில் சென்று மறையும். வறுமை அழித்து, பசிப்பிணி தகர்ப்பதில் இத்தல நாயகன் முதன்மையானவன்.
இத்தலம் தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாறுக்கு அருகேயுள்ள கண்டியூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

வடபழனி முருகன் கோவிலில் ஆகமவிதிகளை பின்பற்றி கோவில் வளாகத்தில் உள்ள 28 சாமிகள் (மூர்த்திகள்), 3 பலி பீடத்துக்கு கும்பாபிஷேகத்துக்கு முன்பு நடத்தப்படும் பாலாலயம் சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் நடந்தது.
சென்னை :
சென்னை வடபழனி முருகன் கோவிலில் 34 திருப்பணி வேலைகள் ரூ.2.56 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதன்படி வடபழனி முருகன் கோவிலில் நேற்று கோவிலின் ஆகமவிதிகள் மற்றும் சட்டவிதிகளை பின்பற்றி கோவில் வளாகத்தில் உள்ள துவார பாலகர், துவார கணபதி, முத்துகுமார சாமி, இடும்பன், கடம்பன், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்தி, துர்கை, காசிவிஸ்வநாதர், காசிவிசாலாட்சி உட்பட 28 சாமிகள் (மூர்த்திகள்), 3 பலி பீடத்துக்கு கும்பாபிஷேகத்துக்கு முன்பு நடத்தப்படும் பாலாலயம் சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் நடந்தது.
நிகழ்ச்சியில் வடபழனி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணை-கமிஷனர்கள் லட்சுமணன், ஹரிபிரியா, உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியன், நகை மதிப்பீட்டாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள். அந்த விரதங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
1.வெள்ளி விரதம்: வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.
2.செவ்வாய் விரதம்- ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.
3.சதுர்த்தி விரதம்-பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.
4.குமாரசஷ்டி விரதம்-கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரைபிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இலைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.
5. தூர்வா கணபதி விரதம்- கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.
6. சித்தி விநாயக விரதம்- புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.
7. தூர்வாஷ்டமி விரதம்- புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.
8. விநாயக நவராத்திரி- ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.
9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்- ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும்.எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.
10. செவ்வாய் பிள்ளையார் விரதம்- ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொதுஇடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் இப்பூஜை செய்வர். குமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியில் அமைந்துள்ள ஔவையார் கோவிலில் விசேஷமாகக் செய்யப்படுகிறது. செல்வச்செழிப்புடன் வாழ இந்த பூஜை வழிசெய்வதாக பெண்களின் நம்பிக்கை.
11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை- பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்கமகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம்பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.

இதையும் படிக்கலாம்...சாய்பாபா விரதம் அனுஷ்டிப்பவர்கள் மறக்கக்கூடாத விதிமுறைகள்...
தற்போது ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதன் சார்புக்கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் நேற்று முதல் தீர்த்தம் மற்றும் சடாரி ஆகியவை வழங்கப்படுகின்றன.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி ஆகியவை வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் அதனைச் சார்ந்த கோவில்களில் மீண்டும் தீர்த்தம், சடாரி ஆகியவை வழங்கலாம் என சம்பந்தப்பட்ட சன்னதி அர்ச்சகர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதையடுத்து தற்போது ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதன் சார்புக்கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் நேற்று முதல் தீர்த்தம் மற்றும் சடாரி ஆகியவை வழங்கப்படுகின்றன.

விநாயகரை செவ்வாய்க்கிழமைகளிலும் துர்க்கையை வெள்ளிக்கிழமையிலும் வழிபட்டால் ராகு, கேது ஆகிய கிரகத்தின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.
வெள்ளிக்கிழமை அருகம்புல், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு கணபதி ஹோமம் செய்தால் பெருஞ்செல்வமும், நீண்ட ஆயுளும் வாய்க்கும். நாயுருவி கொண்டு கணபதி ஹோமம் செய்ய, கிரகங்களின் தீய தாக்கங்கள் விலகும். செந்தாமரையால் ஹோமம் செய்ய, பெரும் பொருள் சேரும்.
வெண்ணிற நீர்நொச்சி கொண்டு ஹோமம் செய்ய, உயர்வை பெறலாம். தயிரால் ஹோமம் செய்ய, வளம் பெருகும். நீலோற்பவ மலரால் ஹோமம் செய்ய, அனைத்து மக்களும் வசியமாவர். வெல்லம், வாழைப்பழம், பாயாசம், நெய் கலந்த தேங்காய் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் எண்ணியவை திண்ணமாக நிறைவேறும்.

விநாயகரை செவ்வாய்க்கிழமைகளிலும் துர்க்கையை வெள்ளிக்கிழமைகளிலும் வழிபட்டால் ராகு, கேது ஆகிய கிரகத்தின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.
இதையும் படிக்கலாம்...அஷ்டமச் சனி மிதுன ராசிக்காரர்களை அதிகமாக பாதிக்குமா?
சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும் நாட்களை தவிர மற்ற நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதை முன்னிட்டு விழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா வருகிற 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 6-ம் நாளான வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 7-ம் நாளாள 10-ந் தேதி (புதன்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த 2 நாட்களில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மேலும் இந்த ஆண்டு பக்தர்கள் கோவில் மற்றும் வளாக பகுதிகளில் தங்க அனுமதி கிடையாது. திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள் மற்றும் மண்டபங்களில் பேக்கேஜ் முறையில் முன்பதிவு செய்து தங்குவதற்கும் அனுமதி இல்லை.
சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும் நாட்களை தவிர மற்ற நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதில் 50 சதவீதம் ஆன்லைன் பதிவு செய்தவர்களும், 50 சதவீதம் நேரில் வருபவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.
பக்தர்கள் கோவில் பிரகார பகுதியில் விரதம் இருக்கவோ, அங்கபிரதட்சணம் செய்யவோ அனுமதி இல்லை. தனியார் அமைப்புகள் அன்னதானம் வழங்கவும் அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...கேட்ட வரத்தை அருளும் ஸ்ரீ சாய்பாபா பாமாலை
ஞானத்தைத் தேடுவோர் சீரிய வழியில் நடக்கவே செய்வார்கள். வாழ்வில் சரி எது, பிழை எது, தவிர்க்க வேண்டியது எது, சேர்க்க வேண்டியத என்பதை ஞானமே நமக்குக் கற்றுத் தருகின்றது.
“ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்| தன்னைத் தேடுவோருக்குத் துணை நிற்கும்.
ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்| அதனை வைகறையிலே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர். அதனைப் பற்றிக் கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக் கொள்வர்| அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார். அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்| ஞானத்திற்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர்”.
ஞானத்தைத் தேடுவோர் சீரிய வழியில் நடக்கவே செய்வார்கள். இதனால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு மதிப்பும், சிறப்பும் வந்து சேரும். ஞானத்தோடு வாழ்பவராகக் காட்டிக் கொள்வொர் நிச்சயம் சிறுமைப்படுவார்கள். வாழ்வில் சரி எது, பிழை எது, தவிர்க்க வேண்டியது எது, சேர்க்க வேண்டியத என்பதை ஞானமே நமக்குக் கற்றுத் தருகின்றது.
ஐந்தாம்; நிலை
துணைக்கு வந்த சீமோன்
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம். அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர். கூடவே வாழ்ந்த சீடர்கள், ... .. நன்மைகள் அனுபவித்த மனிதர்கள், .. .. யாரும் இல்லை அங்கே அந்த இக்கட்டில் உதவி செய்ய.! வாழும் வரை உறிஞ்சி வாழ்ந்து, .. ..வாழவைத்த மரத்தையே காய்ந்து போகப்பண்ணும் ஒட்டுண்ணிகளாக மனிதங்கள் .. ..
வாழ்ந்து நிற்கும் மனிதர்களைக் கண்டு மனம் காய்ந்து போகும் மனிதங்கள். .. பிறர் துன்பத்தில் உழலும் நிலை கண்டும் நெஞ்சில் ஈரம் பிறக்காத மனிதங்கள்.. ..
ஆறுதல் மொழிக்கே பஞ்சம் அந்த நாவுகளில்.. .. கருத்துள்ள உதவிக்கு வழியா இருக்கப்போகிறது? வேடிக்கை பார்த்தவன்தான் சீமோன்...! இயேசுவின் நன்மை தீமை அதிகம் அறியான் .. .. கேள்விப்பட்டதுண்டு .. .. ஆனால் அதிகம் நம்பிக்கை கொண்டதில்லை.. ..அவனுக்குச் சிரிப்பு.!.. .. இந்தக் கோலத்தில் அப்படிப்பட்ட வல்லமையா? .. .. நம்பிச் சென்றவர்க்கு இதுவும் வேண்டும்.. .. இதற்கு மேலேயும் வேண்டும்.
அவரை அருகில் காணும் வரையுந்தான் இந்தச் சிந்தனையோட்டம்.. .. ! கண்ட பிறகு அவன் சிந்தையில் மாற்றம்!!.. .. கேள்விப்பட்டதற்கும் மேலான ஒருவரல்லவா இங்கே தள்ளாடித் துவளுவது?
தன்னை உந்தித்தள்ளி உதவச் செய்த போர் வீரனுக்கு அவன் நன்றி கூறவேண்டும். தக்க சமயத்தில் துன்புற்ற மனிதத்திற்கு கை கொடுக்க முடிந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி!இவர்களில் ஒருவனுக்குச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவிடம் சொல்லுவோம்:
“வாழ்வில் துன்புற்ற வேளையில் நான் உதவி தேடி அலைந்ததுண்டு.. ..வாழும் மனிதர்களோடே உறவு வைத்ததும் உண்டு .. .. தேவையில் மனிதம் வாடியபோது .. தேடி நான் பார்த்ததில்லை. .. வாழவேண்டி துடித்தவர் தமக்கு நான் கைகொடுக்க மறுத்ததும் உண்டு.. .. இயேசுவே மனிதம் யாராக இருப்பினும் அது நீரே என நான் நினைத்தல் வேண்டும்.. .. அல்லல்படும் உயிர்களுக்கு நான் ஆறுதலாக அமைதல் வேண்டும்.”
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. ஆமென்.