என் மலர்tooltip icon

    OTT

    • திலீஷ் போதன் மற்றும் ரோஷன் மாத்யூ முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ஷாஹி கபிர் இயக்கிய திரைப்படம் ரோந்த்.
    • இப்படத்தை ஜங்கிள் பிக்சர்ஸ் மற்றும் ஃபெஸ்டிவல் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது.

    திலீஷ் போதன் மற்றும் ரோஷன் மாத்யூ முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ஷாஹி கபிர் இயக்கிய திரைப்படம் ரோந்த். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படம் ஓர் இரவில் இரண்டு காவல் அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுப்படும் போது சந்திக்கும் பிரச்சனையை மையப்படுத்தி இயக்கப்பட்ட படமாகும்.

    இப்படத்தை ஜங்கிள் பிக்சர்ஸ் மற்றும் ஃபெஸ்டிவல் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை அனில் ஜான்சன் மேற்கொண்டார். இந்நிலையில் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம்,இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மனிதர்கள்
    • இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

    வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களுக்கு பிடித்த மொழியில் கண்டு கழித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடரை இச்செய்தியில் காண்போம்.

    DNA

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த மாதம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது. திரைப்படம் வரும் 19 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    குபேரா

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    மனிதர்கள்

    ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மனிதர்கள்.ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் ராம் இந்திரா. இத்திரைப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    பைரவம்

    சூரி நடித்த கருடன் படத்தை தெலுங்கு மொழியில் பைரவம் என்ற தலைப்பில் ரீமேக் செய்து இருந்தனர். இப்படத்தை விஜய் கனகமெடலா இயக்கியுள்ளார். சாய் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா , ரோகித், அதிதி ஷங்கர், திவ்யா பிள்ளை மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    சட்டமும் நீதியும்

    சரவணன், நம்ரிதா, அருள் மற்றும் ஷன்முகம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உருவாகிறது சட்டமும் நீதியும் வெப் தொடராகும். இது ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகி இருக்கிறது. ஒரு சாதாரண வக்கீல் ஒரு நீதிக்காக எந்த எல்லை வரை சென்றான் என்பதை மையமாக வைத்து இத்தொடர் உருவாகியுள்ளது. இத்தொடர் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • பெருசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.

    பெருசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் தற்பொழுது சன் நெக்ஸ்ட், பிரைம் வீடியோ மற்றும் டெண்ட் கொட்டா ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

    • சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியானது 'குபேரா' திரைப்படம்
    • குபேரா திரைப்படம் இதுவரை 134 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

    குபேரா திரைப்படம் இதுவரை 134 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது அதன்படி திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • ஷ்ரத்தா ஶ்ரீனாத் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது கலியுகம் திரைப்படம்.
    • கேரளாவில் பிரேக் டான்ஸ் கற்றுக்கொள்ளும் இளைஞர்களை மையமாக வைத்து மூன்வாக் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களுக்கு பிடித்த மொழியில் பார்த்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகிறது என்பதை இச்செய்தியில் பார்க்கலாம்.

    கலியுகம்

    ஷ்ரத்தா ஶ்ரீனாத் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது கலியுகம் திரைப்படம்.இப்படம் ஒரு டிஸ்டோபியன் உலகத்தில் நடக்கும் கதைக்களமாக உருவாகியுள்ளது.இவர்களுடன் இனியன், அஸ்மல், ஹரி மற்றும் மிதுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கலியுகம் படத்தை அறிமுக இயக்குநரான ப்ரமோத் சுந்தர் இயக்கியுள்ளார்.

    டான் வின்சண்ட் இசையை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    நரிவேட்டை

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் நரிவேட்டை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இப்படமே சேரன் நடித்த முதல் மலையாள திரைப்படமாகும். இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    மூன்வாக்

    கேரளாவில் பிரேக் டான்ஸ் கற்றுக்கொள்ளும் இளைஞர்களை மையமாக வைத்து மூன்வாக் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வினோத் ஏ.கே இயக்கியுள்ளார்.இப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அருநாத், சிபி குட்டப்பன் மற்றும் சுஜித் பிரபஞ்சன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    Mr & Mrs Bachelor

    மலையாள இளம் நடிகையான அனஸ்வர ராஜன் மற்றும் இந்திரஜித் சுகுமாரன்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது Mr & Mrs Bachelor திரைப்படம். ஒரு பணக்கார வீட்டு பெண் அவளது திருமணத்திற்கு முன் வீட்டை விட்டு ஓடி விடுகிறாள். அப்போது எதிர்பாராத விதமாக இவர் இந்திரஜித் சுகுமாரனை சந்திக்கிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

    திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி லயன்கேட்ஸ் பிளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    Mr Rani

    ராஜா என்பவர் கதாநாயகனாக ஆக ஆசைப்படுகிறார். ஆனால் அவர் நாயகியாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    இப்படத்தில் தீபக் சுபிரமன்யா மற்றும் பார்வதி நாயர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த கன்னட மொழி திரைப்படம் லயன்கேட்ஸ் பிளே ஓடிடி தளத்தில் ஜூலை 11 ஆம் தேதி வெளியாகிறது.

    8 Vasantalu

    அனந்திகா சனில்குமார் , ரவி டுக்கிர்லா மற்றும் ஹனு ரெட்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது 8 Vasantalu என்ற தெலுங்கு திரைப்படம். இப்படத்தை பனின்ற நர்செட்டி இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • டொவினோ தாமஸ் நடிப்பில் நரிவேட்டை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படமே சேரன் நடித்த முதல் மலையாள திரைப்படமாகும்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் நரிவேட்டை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இப்படமே சேரன் நடித்த முதல் மலையாள திரைப்படமாகும். இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
    • அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.

    வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

    தக் லைஃப்

    மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தக் லைஃப் திரைப்படம். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    மெட்ராஸ் மேட்னி

    அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டினர். திரைப்படம் நாளை அமேசான் பிரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    பரமசிவன் பாத்திமா

    விமலின் 34- வது திரைப்படமாக பரமசிவன் பாத்திமா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இசக்கி கர்வண்ணன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் குடிமகன், பெட்டிக்கடை மற்றும் பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார். இப்படம் ஒரு மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது. திரைப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    ராஜபுத்திரன்

    நடிகர் பிரபு மற்றும் வெற்றி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் ராஜபுத்திரன். இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் பிரபுவுடன் வெற்றி , தங்கதுரை, மன்சூர் அலிகான் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை சிம்ப்லி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    குட் வைஃப்

    பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள வெப்தொடர் குட் வைஃப். இத்தொடரை நடிகை மற்றும் இயக்குநரான ரேவதி இயக்கியுள்ளார். இத்தொடர் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

    உப்பு கப்புரம்பு

    கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக உப்பு கப்புரம்பு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் சுகாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'தக் லைஃப்'.
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது.

    இந்நிலையில் தக் லைஃப் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.
    • படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது

    அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டினர்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே, இசை கே.சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.

    • வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
    • நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மிகவும் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக ஸ்குவிட் கேம் உருவானது

    வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

    ஸ்குவிட் கேம்

    நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மிகவும் பிரபலம் மற்றும் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக ஸ்குவிட் கேம் உருவாகியது. இத்தொடரின் கடைசி சீசன் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மொத்த 6 எபிசோடுகள் இத்தொடரில் இடம் பெற்றுள்ளன.

    ? Azadi - ஆசாதி

    ஆசாதி திரைப்படத்தை ஜோ ஜார்ஜ் இயக்கியுள்ளார். படத்தில் ஸ்ரீநாத் பாஸி, வாணி விஷ்வநாத், ரவீனா ரவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். குற்றமே செய்யாமல் ஜெயிலில் இருக்கும் தன் மனைவியை காப்பாற்ற போராடும் கணவனின் கதையாக அமைந்துள்ளது. திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    ? Raid 2

    ரெய்ட் 2 படத்தை ராஜ் குமார் குப்தா இயக்கினார். படத்தில் அஜய் தேவ்கன், ரித்தீஷ் மற்றும் வாணி கபூர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தில் ஒரு மிடுக்கான காவல் அதிகாரியாக நடித்துள்ளார். திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    ? The Verdict

    வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தி வெர்டிக்ட். இப்படத்தை கிருஷ்ண ஷங்கர் இயக்கினார். திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.

    ? The Brutalist 

    சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதை பெற்றது தி ப்ரூடலிஸ்ட் திரைப்படம். இப்படத்தை ப்ரேடி கார்பெட் இயக்கினார். திரைப்படம் வரும் ஜூன் 28 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

    ? Panchayat Season 4 

    பிரபலமான இந்தி வெப் தொடரில் பஞ்சாயத் தொடர் மிகவும் பிரபலமானது. இதில் ஜிதேண்ட்ர குமார், நீனா குப்தா, ரகுபிர் யாதவ, ஃபைசல் மாலிக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தொடரின் சீசன் 4 கடந்த ஜூன் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

    • ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர்.
    • இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

    வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

    "ஜின் தி பெட்"

    டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன் ராவ் நடித்துள்ள படம் 'ஜின் தி பெட்'. இதில் பவ்யா திரிகா, இமான் அண்ணாச்சி, பால சரவணன், வடிவுக்கரிசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில், ஆக்சன், நகைச்சுவை கலந்த இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    "பிரின்ஸ் அண்ட் பேமிலி"

    பிண்டோ ஸ்டீபன் இயக்கத்தில் திலீப், ராணியா ராணா, தியான் ஸ்ரீனிவாசன், சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'பிரின்ஸ் அண்ட் பேமிலி'. மலையாள நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த மே 9ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில், தமிழ் டப்பிங்குடன் நாளை ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

    "கேரளா கிரைம் பைல்ஸ் சீசன் 2"

    அகமது கபீர் இயக்கியுள்ள மலையாள கிரைம் திரில்லர் வெப் தொடர் 'கேரளா கிரைம் பைல்ஸ்'. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் இந்திரன்ஸ், ஹரிஸ்ரீ அசோகன், நூரின் ஷெரீஃப், சஞ்சு சானிசென் மற்றும் ஜியோ பேபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

    "டிடெக்டிவ் ஷெர்டில்"

    பாலிவுட்டில் ரவி சாப்ரியா இயக்கத்தில் தில்ஜித் தோசன்ஜ், சங்கி பாண்டே, டயானா பென்டி ஆகியோர் நடித்துள்ள படம் 'டிடெக்டிவ் ஷெர்டில்'. டிடெக்டிவ் ஷெர்டில் ஒரு மர்மமான கொலை வழக்கை மையமாகக் கொண்டது. இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    "கிரவுண்ட் ஜீரோ"

    கிரவுண்ட் ஜீரோ (Ground Zero) திரைப்படம் கடந்த ஏப்ரலம் மாதம் 25ம் தேதி வெளியான ஒரு இந்தி ஆக்ஷன்-த்ரில்லர் படமாகும். இது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தேஜஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கிய இப்படம், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    "சிஸ்டர் மிட்நைட்"


    இயக்குனர் கரண் கந்தாரி இயக்கத்தில் ராதிகா ஆப்தே, அசோக் பதக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படம் சிஸ்டர் மிட்நைட் (Sister Midnight). சிஸ்டர் மிட்நைட் ஒரு வினோதமான நகைச்சுவையுடன் கூடிய திகில் படமாகும். இப்படம், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    "பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்"


    பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படம் பைனல் டெஸ்டினேஷன். கடந்த மாதம் வெளியான இப்படம் நல்லவரவேற்பை பெற்றது. இதில் , பிரெக் பாசிங்கர், தியோ பிரியோன்ஸ், ரிச்சர்ட் ஹார்மன், குயின்டெசா ஸ்விண்டெல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 17-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியானது.

    • கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக உப்பு கப்புரம்பு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளியாக இருக்கிறது.

    நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக பாலிவுட்டில் வருண் தவானுடன் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து இருந்தார் மேலும் தமிழில் ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் அடுத்ததாக உப்பு கப்புரம்பு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளியாக இருக்கிறது.

    இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் சுகாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் வாரம் வெளியாக இருந்த நிலையில் படக்குழு கடைசி நிமிடத்தில் நேரடி ஓடிடி வெளியீடாக மாற்றிவிட்டனர். படத்தை அமேசான் பிரைம் வீடியோ மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனர். திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் , தெலுங்கு, மலையாளம்,இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    இப்படத்தை சசி இயக்க வசந்த் மரிங்கண்டி கதை எழுதியுள்ளார். இப்படம் 90 களில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது.

    ×