என் மலர்tooltip icon

    OTT

    வைபவ் நடித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ஓடிடி வெளியீடு
    X

    வைபவ் நடித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ஓடிடி வெளியீடு

    • பெருசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.

    பெருசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் தற்பொழுது சன் நெக்ஸ்ட், பிரைம் வீடியோ மற்றும் டெண்ட் கொட்டா ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×