என் மலர்tooltip icon

    OTT

    DNA முதல் குபேரா வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்
    X

    DNA முதல் குபேரா வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்

    • மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மனிதர்கள்
    • இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

    வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களுக்கு பிடித்த மொழியில் கண்டு கழித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடரை இச்செய்தியில் காண்போம்.

    DNA

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த மாதம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது. திரைப்படம் வரும் 19 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    குபேரா

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    மனிதர்கள்

    ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மனிதர்கள்.ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் ராம் இந்திரா. இத்திரைப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    பைரவம்

    சூரி நடித்த கருடன் படத்தை தெலுங்கு மொழியில் பைரவம் என்ற தலைப்பில் ரீமேக் செய்து இருந்தனர். இப்படத்தை விஜய் கனகமெடலா இயக்கியுள்ளார். சாய் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா , ரோகித், அதிதி ஷங்கர், திவ்யா பிள்ளை மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    சட்டமும் நீதியும்

    சரவணன், நம்ரிதா, அருள் மற்றும் ஷன்முகம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உருவாகிறது சட்டமும் நீதியும் வெப் தொடராகும். இது ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகி இருக்கிறது. ஒரு சாதாரண வக்கீல் ஒரு நீதிக்காக எந்த எல்லை வரை சென்றான் என்பதை மையமாக வைத்து இத்தொடர் உருவாகியுள்ளது. இத்தொடர் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    Next Story
    ×