என் மலர்
சினிமா செய்திகள்
- ஐபிஎல் தொடரில் குஜராத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் முதன் முறையாக வீழ்த்தியது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் குவாலிபயர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது.

டோனி
அதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோல்வியடைந்தது. இதன் மூலம் குஜராத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் முதன் முறையாக வீழ்த்தியது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் டோனி மைதானத்திற்குள் நுழைந்தபோது "கொல காண்டுல இருக்கேன்.. கொல்லாம விட மாட்டேன்" என்ற டயலாக்குடன் 'கபாலி' திரைப்படத்தில் அருண்ராஜா காமராஜ் பாடிய "நெருப்புடா நெருங்குடா" என்ற பாடல் ஒலித்து மைதானம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்திலும் ட்ரெண்டானது.

அருண்ராஜா காமராஜ்
இந்நிலையில், இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அருண்ராஜா காமராஜ், "நேர்ல பாக்கலயேங்கற ஒரு சிறு குறை உள்ளுக்குள்ள இருந்தது, ஆனா அது இப்ப இல்ல.. ஒட்டு மொத்த அரங்கும் அதிரும் போது பின்னனி இசையில நம்ம குரல் வரும் போது … ப்பபா… நேர்ல போய் கத்தியிருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது .. நன்றி இந்த காட்சிய காண வைத்த அனைவருக்கும்…" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
- இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்.
- இவர் தற்போது முன்னணி கதாநாயகர்களின் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், கள்வன், டியர், அடியே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக இந்தியாவின் பிரபல இயக்குனருடன் இணையவுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "ஒரு பெரிய இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளேன் அதை அவர் தான் அறிவிக்க வேண்டும். அவர் சர்வதேச இயக்குனர். இந்தியாவின் டாப் இயக்குனர் அவர் படத்தில் நான் நடிக்கும் அறிவிப்பை அவரே கொடுப்பார்" என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் எந்த இயக்குனருடன் இணையவுள்ளார் என ரசிகர்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.
- இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘போர் தொழில்’.
- இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றதைத்தொடந்து இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மர்மமான முறையில் பெண்களை கொலை செய்யும் நபரை போலீஸ் தேடுவது போன்று உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

'போர் தொழில்' திரைப்படம் வருகிற ஜுன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன்.
- இவர் தற்போது அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கும் கென்னடி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சன்னி லியோன் நடிந்த அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கும் கென்னடி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக சன்னி லியோன் கேன்ஸ் நகருக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் நீலப் படங்களில் நடித்துக் கொண்டிருந்து விட்டு தொலைக்காட்சி மற்றும் திரையுலகிற்கு வந்தபோது எதிர்கொண்ட எதிர்ப்பை பற்றி பேசினார்.

கென்னடி படக்குழு
என்னுடைய அந்நாள் காதலர் தற்போதைய என்னுடைய கணவர் டேனியலிடம் நான் இந்தியா வரவில்லை என்னை எல்லோரும் வெறுப்பார்கள் என்று கூறியிருந்தேன். ஆனால் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் என்னை பங்கெடுக்க வைத்தார். இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பெண்கள் சமையலறை வரை என்னை கொண்டுபோய் சேர்த்தது. இதனால் என்னுடைய முந்தைய முகம் முழுவதுமாக மாறியது.
அதில் இருக்கும்போதே நான் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். அதன் பிறகு நான் சினிமாவுக்குள் வருவதற்கு பெரிய தடை இருந்தது. என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வந்தன. பெண்கள் அதிகம் பேர் என்னிடம் பேசினார்கள் என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
- ஜூனியர் என்.டி.ஆர். பிறந்தநாளை ஒட்டி சிம்ஹாத்ரி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
- இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடினர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை ஒட்டி அவர் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான சிம்ஹாத்ரி படத்தை ரசிகர்களுக்காக திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை ரசிகர்கள் திரையரங்குகளில் பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் கொண்டாடினர்.

அப்போது விஜயவாடாவில் உள்ள திரையரங்கிற்குள் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அச்சமயம் திரையரங்கின் இருக்கைகள் தீப்பற்றியதால் பரப்பரப்பு ஏற்பட்டது. அவசர அவசரமாக ரசிகர்கள் திரையரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. அதன்பின் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
- அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

அஜித் - திரிஷா
இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விடாமுயற்சி படத்தில் நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் - திரிஷா
இதற்குமுன்பு திரிஷா, அஜித்துடன் ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஐந்தாவது முறையாக அஜித் படத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
- இப்படத்திற்கு தளபதி -68 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெங்கட் பிரபு -விஜய்
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளது.

விஜய் -எஸ்.ஜே.சூர்யா
இந்நிலையில், இப்படத்தின் வில்லன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படத்திலும் விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
- அவரது உடலுக்கு இன்று நடிகர் ரஜினிகாந்த் சூர்யா, கார்த்தி, சரத்குமார் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததையடுத்து நேற்று காலமானார். இதையடுத்து இவரது உடல் சென்னை, தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு இன்று நடிகர் ரஜினிகாந்த் சூர்யா, கார்த்தி, பாக்யராஜ், பார்த்திபன், சுஹாசினி, சரத்குமார் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதிச் சடங்குகளுக்குப் பின் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
- தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
- இப்படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

ஆயிரத்தில் ஒருவன்
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷிடம் செய்தியாளர்கள் ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து கேள்வி எழுப்பினர்.

ஆயிரத்தில் ஒருவன்
இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ் குமார், 'ஆயிரத்தில் ஒருவன்-2 படம் பற்றி பேசியிருக்கிறார்கள். தனுஷ் சார் பண்ற மாதிரி சொல்லியிருக்காங்க. படம் பெரிய பட்ஜெட், பெரிய புரொஜக்ட், நடந்துச்சுனா எனக்கு சந்தோஷம் தான். நானும் உங்கள மாதிரி தான் ரொம்ப எதிர்பார்ப்போட வெயிட் பண்ணிட்டு இருக்கேன்' என்றார்.
- இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
- இப்படம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இதில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கழுவேத்தி மூர்க்கன்
'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர், பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கழுவேத்தி மூர்க்கன் படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒரு ஆழமான படம்னு நான் நினைக்கிறேன். இயக்குனர் ரொம்ப நேர்மையா இந்த படத்தை முயற்சி செய்திருக்கிறார்.

பா.இரஞ்சித்
மிகவும் முக்கியமான பிரச்சினையை பற்றி டிஸ்கஸ் பண்ணுது. ரொம்ப நேர்மையா டிஸ்கஸ் பண்ணி இருக்கிறதா நினைக்கிறேன். இயக்குனரோட சேர்ந்து இதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அவர்களுடைய உழைப்பை மிகவும் நேர்மையா செய்திருக்கிறார்கள். ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு பார்வையாளர்களுக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்றார்.
- இயக்குனர் கவிதா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதாரம்’.
- இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கு திரைப்படம் 'ஆதாரம்'. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா நடித்திருக்கிறார். மேலும், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேட்டினி ஃபோல்க்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப்குமார் மற்றும் ஆப்ஷா மைதீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர். என்.எஸ்.ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'ஆதாரம்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- நெல்சன் திலிப்குமார் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை இயக்கியிருந்தார்.
அதன்பின்னர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ரஜினி இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ் - கமல் - நெல்சன்
இந்நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நெல்சன்-தனுஷ்-கமல் கூட்டணி இணையவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.






