என் மலர்
நீங்கள் தேடியது "ஆயிரத்தில் ஒருவன் 2"
- ஆயிரத்தில் ஒருவன்-2 பண்ண வேண்டும் என்றால் அது கார்த்தி இல்லாமல் முடியாது.
- ரசிகர்கள் என்னிடம் கேட்கும் முதல் கேள்வி ஆயிரத்தில் ஒருவர் 2ம் பாகம் எப்போது எடுப்பீர்கள் என்றுதான்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2ம் பாகம் எடுப்பது தொடர்பாக இயக்குனர் செல்வராகன் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
காலம் கடந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடும்போது எனது மனநிலை வெறுமையாக தான் இருக்கிறது.
திரையரங்குகளில் பார்வையாளர்கள் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார்கள். அப்படி ஒரு சூழலில் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இன்றைக்கும் நான் வெளியில் செல்லும்போது ரசிகர்கள் என்னிடம் கேட்கும் முதல் கேள்வி ஆயிரத்தில் ஒருவர் 2ம் பாகம் எப்போது எடுப்பீர்கள் என்றுதான்.
ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தில் தனுஷூம் நானும் ஒரு வாரமாக ஆலோசித்து முடிவு செய்தோம். ஆனால் இதில் நாங்கள் செய்த தவறு படம் குறித்து முன்கூட்டியே அறிவித்தது தான்.
ஆயிரத்தில் ஒருவன்-2 பண்ண வேண்டும் என்றால் அது கார்த்தி இல்லாமல் முடியாது. அந்த உலகத்தை நான் திருப்பிக் கொண்டு வரவேண்டும். அந்த சமூகம் அதிகளவில் இருக்கும். அது ஒரு கடினமான கதையாக இருக்கும். அதற்கு தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். நடிகர்கள் ஒரு ஆண்டுக்கு கால் ஷீட் ஒதுக்க வேண்டும் போன்ற நிறைய விஷயங்கள் உள்ளது.
ஆயிரத்தில் ஒருவன்-2ம் பாகம் எடுக்க வெறித்தனமான ஆசை இருக்கு. ஆனால் அதற்கு எல்லாம் கைக்கூட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
- இப்படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

ஆயிரத்தில் ஒருவன்
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷிடம் செய்தியாளர்கள் ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து கேள்வி எழுப்பினர்.

ஆயிரத்தில் ஒருவன்
இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ் குமார், 'ஆயிரத்தில் ஒருவன்-2 படம் பற்றி பேசியிருக்கிறார்கள். தனுஷ் சார் பண்ற மாதிரி சொல்லியிருக்காங்க. படம் பெரிய பட்ஜெட், பெரிய புரொஜக்ட், நடந்துச்சுனா எனக்கு சந்தோஷம் தான். நானும் உங்கள மாதிரி தான் ரொம்ப எதிர்பார்ப்போட வெயிட் பண்ணிட்டு இருக்கேன்' என்றார்.






