என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கியுள்ளார்.
    • பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

    இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார்.


    கருமேகங்கள் கலைகின்றன

    கருமேகங்கள் கலைகின்றன

    இந்நிலையில் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இரண்டாம் பாடலான சுத்தமுள்ள நெஞ்சம் பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜப்பான்’.
    • அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

    பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்தி. அதன்பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி, சுல்தான், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.


    கார்த்தி - ஜப்பான்

    கார்த்தி - ஜப்பான்

    தற்போது கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    கார்த்தி - ஜப்பான்

    கார்த்தி - ஜப்பான்

    இந்நிலையில் கார்த்தி பிறந்தநாளான இன்று ரசிக்ரகளுக்காக ஜப்பான் படத்தின் டீசரை நடிகர் சிம்பு இணையத்தில் வெளியிட்டுள்ளார். 'ஜப்பான்' மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    'ஜப்பான்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜப்பான்'.
    • அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

    'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.


    ஜப்பான்

    ஜப்பான்

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மேலும் ரவுடி கெட்டப்பில் கார்த்தி கோபமாக நிற்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    ஜப்பான்

    ஜப்பான்


    இந்நிலையில் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அடியே.
    • இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.


    அடியே

    அடியே

    சமீபத்தில் அடியே படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அடியே படத்தில் இடம்பெற்றுள்ள வா செந்தாழினி பாடல் நாளை (மே 26ம் தேதி) வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. 

    • விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

    விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.


    விஜய் - எஸ்.ஜே.சூர்யா

    விஜய் - எஸ்.ஜே.சூர்யா


    இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தில் வில்லனாகவும், வாரிசு படத்தில் கவுரவ தோற்றத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    குஷி
    குஷி


    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வித்தியாசமான வில்லத்தனம் காட்டி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதற்குமுன்பு எஸ்.ஜே.சூர்யா, விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சமரன்’.
    • இப்படத்தில் சரத்குமார் -விதார்த் இணைந்து நடித்து வருகின்றனர்.

    தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்களில் நிரூபித்துள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது அறிமுக இயக்குனர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் 'சமரன்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.


    சமரன்

    மேலும், இந்த படத்தில் மலையாள நடிகர் ஆர். நந்தா, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எம் 360 (M360°) ஸ்டுடியோஸ் சார்பில் ரோஷ் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு வேத் சங்கர் சுகவனம் இசையமைக்க குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    ஒரு இராணுவ அதிகாரி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி-சஸ்பென்ஸ் கதையே 'சமரன்' திரைப்படம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வந்தது.


    சமரன்

    இந்நிலையில், 'சமரன்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபு.
    • இவர் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பிரபு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரபு போன்ற திரைப்பிரபலங்கள் பலர் நடித்த 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.


    குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த பிரபு

    இந்நிலையில், நடிகர் பிரபு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனது குல தெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். சிறப்பு பூஜைகளை செய்த பிரபு கோவில் பிரகாரத்தை சுற்றிவந்து சாமியை வழிபட்டார். இதைத்தொடர்ந்து, கோவிலில் இருந்த பக்தர்கள் பிரபுவிடம் சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்தவர் டிம்பிள் ஹயாதி.
    • இவர் ஐதராபாத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    பிரபல நடிகையான டிம்பிள் ஹயாதி  'தேவி 2', 'வீரமே வாகை சூடும்', அட்ரங்கிரே, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஐதராபாத்தில் உள்ள ஜானர்லிஸ்ட் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் மாநகர போக்குவரத்து ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவரும் வசித்து வருகிறார்.


    இங்கு கார் பார்க்கிங்கில் கார்களை நிறுத்துவது தொடர்பாக இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது டிம்பிள் ஹயாதியின் வருங்கால காதல் கணவர் டேவிட், ராகுல் ஹெக்டேவின் கார் மீது டிம்பிள் ஹயாதியின் காரை மோதவிட்டுள்ளார். மேலும், ராகுல் ஹெக்டேவின் காரை நடிகை டிம்பிள் ஹயாதி காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.


    இது தொடர்பாக டிம்பிள் ஹயாதி மீது ராகுல் ஹெக்டே போலீசில் புகாரளித்துள்ளார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நடிகை டிம்பிள் ஹயாதியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதிகாரத்தை பயன்படுத்தி தவறுகளை மறைக்க முடியாது என்று டிம்பிள் கூறியுள்ளார். 

    • 'சாராபாய் vs சாராயாபாய்' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் வைபவி உபத்யா.
    • இவர் தனது வருங்கால கணவருடன் இமாச்சலப்பிரதேசத்திற்கு சென்றார்.

    இந்தி திரையுலகில் 'சாராபாய் vs சாராயாபாய்' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் வைபவி உபத்யா (வயது 30). இவர் தீபிகா படுகோனுடன் இணைந்து 'சபக்' என்ற திரைபடத்திலும் நடித்துள்ளார். இவர் திங்கட்கிழமை தனது வருங்கால கணவர் ஜெய் காந்தியுடன் காரில் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள குலுமணாலிக்கு சென்றுள்ளார்.


    வைபவி உபத்யா

    அப்போது பஞ்சர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகை வைபவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வைபவியுடன் காரில் சென்ற அவரது வருங்கால கணவர் ஜெய் காந்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வைபவியின் மறைவு செய்தி பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகை வைபவி உபத்யா உடல் நாளை மும்பைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்கு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    • தமிழ் திரையுலகின் மூத்த நடிகையாக இருப்பவர் லதா.
    • இவர் தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.


    கோல்டன் விசா பெற்ற நடிகை லதா

    இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார், கமல்ஹாசன், விக்ரம், யுவன் ஷங்கர் ராஜா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.


    கோல்டன் விசா பெற்ற நடிகை லதா

    இந்நிலையில், தமிழ் திரையுலகின் மூத்த நடிகையான லதா தற்போது கோல்டன் விசா பெற்றுள்ளார். திரையுலகில் ஐம்பது ஆண்டு சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விசாவை வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ’மார்கழி திங்கள்’.
    • இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மகால்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, 'சமுத்திரம்','வருஷமெல்லாம் வசந்தம்', 'அல்லி அர்ஜுனா', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


    பாரதிராஜா -மனோஜ் பாரதிராஜா

    இவர் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.


    படப்பிடிப்பை தொடங்கிய மார்கழி திங்கள் படக்குழு

    'மார்கழி திங்கள்' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    • ஐபிஎல் தொடரில் குஜராத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் முதன் முறையாக வீழ்த்தியது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் குவாலிபயர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது.


    டோனி

    அதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோல்வியடைந்தது. இதன் மூலம் குஜராத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் முதன் முறையாக வீழ்த்தியது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த போட்டியில் டோனி மைதானத்திற்குள் நுழைந்தபோது "கொல காண்டுல இருக்கேன்.. கொல்லாம விட மாட்டேன்" என்ற டயலாக்குடன் 'கபாலி' திரைப்படத்தில் அருண்ராஜா காமராஜ் பாடிய "நெருப்புடா நெருங்குடா" என்ற பாடல் ஒலித்து மைதானம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்திலும் ட்ரெண்டானது.


    அருண்ராஜா காமராஜ்

    இந்நிலையில், இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அருண்ராஜா காமராஜ், "நேர்ல பாக்கலயேங்கற ஒரு சிறு குறை உள்ளுக்குள்ள இருந்தது, ஆனா அது இப்ப இல்ல.. ஒட்டு மொத்த அரங்கும் அதிரும் போது பின்னனி இசையில நம்ம குரல் வரும் போது … ப்பபா… நேர்ல போய் கத்தியிருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது .. நன்றி இந்த காட்சிய காண வைத்த அனைவருக்கும்…" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


    ×