என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
    • இப்படத்தின் ரிலீஸ் ம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    விக்ரம் - கவுதம் மேனன்

    விக்ரம் - கவுதம் மேனன்

    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது. மேலும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருவதாக பதிவிட்டிருந்தார்.


    துருவ நட்சத்திரம்

    துருவ நட்சத்திரம்


    இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்தி. அதன்பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி, சுல்தான், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.


    ஜப்பான்

    தற்போது கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    ஜப்பான்

    கார்த்தி பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஜப்பான் பட டீசரை படக்குழு வெளியிட்டது. இதனை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 'ஜப்பான்' மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    ஜப்பான்

    இந்நிலையில், ஜப்பான் டீசரை பார்த்த நடிகர் சூர்யா படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "'ஜப்பான்' மேட் இன் இந்தியா.. டீசர் அருமையாக உள்ளது.. முற்றிலும் வித்தியாசமான முயற்சி தம்பி.. படக்குழுவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

    'ஜப்பான்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    தளபதி 68

    தளபதி 68

    இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளது.


    விஜய்
    விஜய்

    இந்நிலையில் இப்படத்தின் பூஜை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி தளபதி 68 படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதே நாளில் இந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக வெளியிடவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கோர்ட்டு உத்தரவுப்படி கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது.
    • இப்படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது, என்றாலும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தை தவிர்த்து ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களை மையப்படுத்தி வெளியான முதல் திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.
    • இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் அதி நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட உள்ளது. பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டிடக்கலை திறன் ஆகியவற்றால் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.

    இந்த விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளது. ஜெய் சுக்தேவ் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். அதில் அவர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டின் குடியரசு தலைவரால் திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என கூறி உள்ளார்.


    பா.இரஞ்சித்

    இந்நிலையில், பா.ஜ.க.விற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் பா.இரஞ்சித் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரான திரவுபதி முர்மு பாராளுமன்ற கட்டிட திறப்பிற்கு அழைக்கப்படவில்லை. கட்சி பேதமின்றி, தேசத்தின் முதல் குடிமகள் மற்றும் சாமானிய மக்கள் சாதியால் நிறைந்த இந்திய சமூகமாகவே நீடித்திருப்பது அவலம். ஏனெனில், அவர்கள் அனைவரும் சடங்குகள் மற்றும் கலாசாரம் மூலம் இந்து சமூக ஒழுங்கை நிலைநிறுத்துகிறார்கள்.

    கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை கருத்தில் கொள்ளாமல் பல கட்சிகளும், அரசாங்கங்களும் வந்து சென்றுள்ளன, அவை அனைத்தும் கலாச்சார தூய்மையைப் பாதுகாக்கவே பாடுபட்டன. மேலும் ஏற்கெனவே இருக்கும் சடங்குகளின் வடிவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்காமல், தொடர்ந்து தீண்டாமை, சாதிப் பாகுபாடு மற்றும் சாதியின் பெயரால் புதிய வடிவங்களைத் தொடர்ந்து உருவாக்குகின்றன.

    பா.ஜ.க.வின் தொடர் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் ஆட்சிக்கு எதிராக கடும் கண்டனங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
    • இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 




    இந்நிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஆண்டி பிகிலி கிட்டை வழங்கினார். பின்னர் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது.
    • இவரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம், ஈசன் படங்களை இயக்கிய சசிகுமார், தற்போது படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டி புலி, தாரை தப்பட்டை, பேட்ட உள்ளிட்ட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது.



    இந்நிலையில் சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்டிஎம் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் நடிக்கிறார். இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நவீன் சந்திரா இணைந்து நடிக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளரும் இயக்குனருமான ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

    • நடிகர் செல்வராகவன், விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இவர் அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

    துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.


    இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் பீஸ்ட், சாணிக் காயிதம், , பகாசூரன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் செல்வராகவன் தற்போது பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தி ஈர்த்து வருகிறது. அதில், "அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது. கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் விஜய் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் தன் தொண்டர்கள் மூலம் சமூக சேவை பல செய்து வருகிறார்.

    நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இவர் தன் தொண்டர்கள் மூலம் சமூக சேவை பல செய்து வருகிறார்.

    இதையடுத்து பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.


    விஜய்

    மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், நடிகர் விஜய் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சுமார் 1500 மாணவர்களை ஜூன் இரண்டாவது வாரத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெற்றோரை இழந்த சூழ்நிலையிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர்களின் அடுத்தகட்ட படிப்பிற்கு தேவையான ஊக்கத்தொகையை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கியுள்ளார்.
    • பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

    இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார்.


    கருமேகங்கள் கலைகின்றன

    கருமேகங்கள் கலைகின்றன

    இந்நிலையில் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இரண்டாம் பாடலான சுத்தமுள்ள நெஞ்சம் பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜப்பான்’.
    • அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

    பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்தி. அதன்பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி, சுல்தான், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.


    கார்த்தி - ஜப்பான்

    கார்த்தி - ஜப்பான்

    தற்போது கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    கார்த்தி - ஜப்பான்

    கார்த்தி - ஜப்பான்

    இந்நிலையில் கார்த்தி பிறந்தநாளான இன்று ரசிக்ரகளுக்காக ஜப்பான் படத்தின் டீசரை நடிகர் சிம்பு இணையத்தில் வெளியிட்டுள்ளார். 'ஜப்பான்' மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    'ஜப்பான்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜப்பான்'.
    • அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

    'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.


    ஜப்பான்

    ஜப்பான்

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மேலும் ரவுடி கெட்டப்பில் கார்த்தி கோபமாக நிற்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    ஜப்பான்

    ஜப்பான்


    இந்நிலையில் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    ×