விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
விஜய்
விஜய்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி 68
தளபதி 68

தளபதி 68

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளது.

விஜய்
விஜய்

இந்நிலையில் இப்படத்தின் பூஜை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி தளபதி 68 படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதே நாளில் இந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக வெளியிடவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com