என் மலர்
சினிமா செய்திகள்
- நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடிக்கிறார்.
- இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.

இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெறவுள்ளது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஹ்மான் மற்றும் பாவனா முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு நடிக்க வந்த பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார்.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஏ பி கே சினிமாஸ் (APK) சார்பாக ஆதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு 'துருவங்கள் 16' படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கமல் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
- இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

வேட்டையாடு விளையாடு
இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
- பசுபதி நடிப்பில் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தண்டட்டி.
- இதில் ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டட்டி'. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'தண்டட்டி' படத்தின் ரிலீஸ் மற்றும் இசை வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வருகிற ஜூன் 6ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'.
- இப்படத்தின் முதல் பாடலான ’வா செந்தாழினி’ நாளை வெளியாகவுள்ளது.
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.

அடியே போஸ்டர்
சமீபத்தில் 'அடியே' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'வா செந்தாழினி' பாடல் நாளை (மே 26-ம் தேதி) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'வா செந்தாழினி' பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி.
- இவர் 1995-ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றுள்ளார்.
பிரபல நடிகராக வலம் வரும் ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர், பாபா, கில்லி, தில், தமிழன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 1995-ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றுள்ளார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஆஷிஷ் வித்யார்த்தி
இவர் முதலாவதாக நடிகர், பாடகர் மற்றும் நாடக கலைஞரான ராஜோஷி பருவாவை திருமணம் செய்திருந்தார். இவர் முன்னாள் நடிகையான சகுந்தலா பருவாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60-வது வயதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரூபாலி பருவா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஆஷிஷ் வித்யார்த்தி
இந்த தம்பதியினர் இன்று குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் ஆஷிஷ் வித்யார்த்தியின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’.
- இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ.24 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிச்சைக்காரன் 2 போஸ்டர்
இந்நிலையில், 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் வெற்றியைக் படக்குழு கொண்டாட தயாராகி வருகிறது. அதன்படி, வருகிற 27-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
— vijayantony (@vijayantony) May 25, 2023
- உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 'உலக பட்டினி தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
- பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினமானது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 'உலக பட்டினி தினம்' அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நீண்ட நாள் பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த தினமானது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

விஜய்
நடிகர் விஜய்யின் உத்தரவுபடி இந்த ஆண்டு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 28) மதியம் 11 மணி அளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதியில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை
இந்த திட்டமானது தமிழகம் , புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டினியால் வாடும் மக்களுக்கு இயன்ற வரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் செயல்படுத்துகிறது என்று விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக விலையில்லா உணவகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- அருள்நிதி தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இதில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை (மே 26) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கழுவேத்தி மூர்க்கன்
'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர், பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில், கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் குறித்து நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறியதாவது, 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் எனக்கு முக்கியமான திரைப்படம். ஆனால், ரசிகர்களை பொறுத்த வரை படத்தை எப்படி வரவேற்பார்கள் என்று தெரியாது.

கழுவேத்தி மூர்க்கன்
'பத்து தல' படத்தில் ஏன் நடித்தோம் என்ற சின்ன பயம் இருந்தது. ஆனால், மக்கள் அதை பாராட்டினார்கள். நான் வீட்டில் கூட சொல்லவில்லை அப்படி ஒரு படம் நடித்தேன் என்று. 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் பார்த்து விட்டு தயாரிப்பாளர்கள் பலர் என் கதாபாத்திரம் நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள் என்று கூறினார்.
- இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'.
- இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மாமன்னன்
'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கினர்.

மாமன்னன் போஸ்டர்
இந்நிலையில் 'மாமன்னன்' படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Up next is @arrahman's Reggae?
— Red Giant Movies (@RedGiantMovies_) May 25, 2023
Second single from #MAAMANNAN drops on 27th May.@mari_selvaraj @Udhaystalin #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @SonyMusicSouth @NetflixIndia… pic.twitter.com/KRzLILUHP0
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'.
- இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் -மாரி செல்வராஜ்
'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கினர்.

மாமன்னன்
இந்நிலையில் 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாகவும் இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
- இப்படத்தின் ரிலீஸ் ம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விக்ரம் - கவுதம் மேனன்
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது. மேலும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருவதாக பதிவிட்டிருந்தார்.

துருவ நட்சத்திரம்
இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.






