என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமானவர் இர்பான்.
    • இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.


    பத்மாவதி -இர்பான்

    இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே நேற்றிரவு யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று மோதி 55 வயதான பத்மாவதி என்ற மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரை கைது செய்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த போது யூடியூபர் இர்பான் காரில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    • நடிகர் ஜெபர்சன் மச்சாடோ டா கோஸ்டா என்பவர் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி காணாமல் போனார்.
    • இவர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள‌ ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

    கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி காணாமல் போன பிரேசில் நாட்டைச் சேர்ந்த நடிகர் ஒருவர் மரப்பெட்டிக்குள் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

    "ஜெஃப்" என்று அழைக்கப்படுகிற ஜெபர்சன் மச்சாடோ டா கோஸ்டா (44). இவர் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி காணாமல் போனார். இந்நிலையில், இவர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் இரண்டு மீட்டர் ஆழத்தில் மரப்பெட்டியில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போனது நடிகர் ஜெபர்சன் என்பது தடயவியல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவரது கழுத்தில் இரும்பு கம்பி சுற்றப்பட்டிருந்தது கைகளும் கட்டப்பட்டிருந்தன. அவரது உடலில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக ரசாயன திரவம் ஊற்றப்பட்டிருந்தது. எனவே அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே காவல் துறை தரப்பில் உறுதி செய்யப்படும்.

    • வாணி ராணி, பிரியமான தோழி போன்ற தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் ஒ.என் ரத்தினம்.
    • இவர் பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி போன்ற தொலைக்காட்சி தொடரை எடுத்து முன்னணி சீரியல் இயக்குனர் பட்டியலில் இருப்பவர் இயக்குனர் ஒ.என் ரத்தினம். இவர் தற்போது செவ்வந்தி என்ற தொடரை இயக்கி வருகிறார். இவர் சென்னை, வளசரவாக்கம், அன்பு நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

    பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் இருவரையும் தாத்தா வீட்டுக்கு பொள்ளாச்சிக்கு அனுப்பியிருக்கின்றனர். ரத்னமும் அவரது மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்த நிலையில் கணவன் மனைவி இடையில் வாக்குவாதம் நடந்ததாகத் கூறப்படுகிறது. தாத்தா வீட்டில் இருந்து சென்னைக்கு திரும்பிய மகன்களை அழைத்து வர ரத்னம் பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து பிரியாவின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஒ.என் ரத்தினம் மற்றும் பிரியா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத் டைட்டன்சும், மும்பை இந்தியன்சும் மோதுகின்றனர்.
    • இதில் வெற்றி பெறும் அணி 28-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கும்.

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.

    முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை தோற்கடித்து 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. தோல்வி அடைந்தாலும் புள்ளிபட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த வகையில் குஜராத்துக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.



    இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி 2-வது தகுதி சுற்றை அடைந்தது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத் டைட்டன்சும், மும்பை இந்தியன்சும் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறும் அணி 28-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கும்.

    இந்நிலையில், ஐ.பி.எல். நிறைவு விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில், பாடகி ஜோனிடா காந்தி பாடல் பாடவுள்ளார். இதனை ஐ.பி.எல். குழு தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.


    • இயக்குனர் டானிபாயல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிலம் டாக் மில்லியனர்.
    • இப்படம் 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை பெற்று சாதனை படைத்தது.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உதட்டில் பிளவுடன் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன.அப்படி ஒரு குறையுடன் பிறந்தவர் தான் பிங்கி சோன்கர். மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்த இவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு ஒரு பொற்காலமாக மாறியது. ஏனென்றால் பிங்கி 6 வயதாக இருக்கும் போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


    சிலம் டாக் மில்லியனர்

    அந்த ஆண்டு வெளியான சிலம் டாக் மில்லியனர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார். இங்கிலாந்து திரைப்பட இயக்குனர் டானிபாயல் இயக்கிய இந்த படம் மும்பை குடிசை பகுதி சிறுவர்கள் பற்றிய கதை ஆகும். மும்பை சிறுவர் காப்பகத்தில் இருந்த 18 வயது இளைஞர் கேம் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்காக சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.

    இந்த படம் சிறந்த திரைக்கதை,சிறந்த ஒளிப்பதிவு,சிறந்த இசை உள்ளிட்ட 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை பெற்று சாதனை படைத்தது. இந்த படத்தின் சிறந்த இசை அமைப்பாளர் என்ற விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது. லாஸ் ஏஞ்செல்சில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில் குழந்தை நட்சத்திரம் பிங்கி சோன்கர் தனது தந்தை ராஜேந்திர சோன்கருடன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் சிலம் டாக் மில்லியனர் பட குழுவினருடன் தானும் கலந்து கொண்டது பெருமையாக இருக்கிறது என பிங்கி சோன்கர் தெரிவித்தார்.


    சிலம் டாக் மில்லியனர்

    இதன் மூலம் அவர் நீண்டகாலமாக அனுபவித்து வந்த உதடு பிளவு பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்தது. வாரணாசியை சேர்ந்த சுபோத் குமார் சிங் என்ற டாக்டர் பிங்கி சோன்கருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் அவரது உதடை சரி செய்தார். இதனால் மற்ற குழந்தைகளை போல் பிங்கியும் மாறினார்.

    ஒரே படத்தின் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமான பிங்கியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது கிராமமக்கள் நினைத்து இருந்தனர். ஆனால் அதன் பிறகும் பிங்கியின் வாழ்க்கை தரம் மாறவே இல்லை. தற்போது அவருக்கு 20 வயதாகிறது. 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சொந்த கிராமத்தில் தான் அவர் தனது குடும்பதினருடன் வசிக்கிறார். இவரது தந்தை இன்னும் காய்கறி மற்றும் பழம் வியாபாரம் தான் செய்து வருகிறார். முன்பு எப்படி அவரது குடும்பத்தில் வறுமை நிலவியதோ அப்படி தான் இப்போதும் நீடிக்கிறது.


    பிங்கி சோன்கர்

    தினமும் பிங்கி படிப்பதற்காக 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு சென்று வருகிறார். அவரது கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தினமும் நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்.

    தனது வறுமை குறித்து பிங்கி கூறியதாவது, எனது தந்தை குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக உழைத்து வருகிறார். சீசனுக்கு தகுந்தாற்போல காய்கறி மற்றும் பழம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த வருமானத்தை வைத்து தான் நாங்கள் வாழ்கிறோம். எனது வீடு மிகவும் சிறியது. 2 அறைகள் கொண்ட வீட்டில் ஒரு அறையில் கதவே கிடையாது. எங்களுக்கு வேறு யாரும் உதவி செய்வது இல்லை. தினமும் நாங்கள் வறுமையோடு போராடி வருகிறோம். எனது ஆசையெல்லாம் வருங்காலத்தில் ஒரு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும். அதன் மூலம் என்னை போல கிராமத்தில் வாழும் பெண்களின் நலனுக்காக உதவி செய்ய வேண்டும் என்பது தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’.
    • இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம் பெற்ற (சின்னஞ்சிறு மறுமுறை) பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் பாடியுள்ள இந்த பாடலின் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    • இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்தி. அதன்பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி, சுல்தான், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.


    தற்போது கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    கார்த்தி பிறந்த நாளான நேற்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஜப்பான் பட டீசரை படக்குழு வெளியிட்டது. இதனை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 'ஜப்பான்' மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    இந்நிலையில், ஜப்பான் டீசர் வெளியான ஒரே நாளில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.
    • சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருவின் குரல் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன்பின்னர் கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆத்மிகா சமீபத்தில் வெளியான திருவின் குரல் திரைப்படத்தில் அருள்நிதியுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார்.


    ஆத்மிகா

    ஆத்மிகா

    இந்நிலையில் ஆத்மிகா திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    • நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடிக்கிறார்.
    • இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.



    இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெறவுள்ளது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஹ்மான் மற்றும் பாவனா முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு நடிக்க வந்த பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார்.

    ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஏ பி கே சினிமாஸ் (APK) சார்பாக ஆதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு 'துருவங்கள் 16' படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கமல் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
    • இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.


    வேட்டையாடு விளையாடு

    வேட்டையாடு விளையாடு

    இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    • பசுபதி நடிப்பில் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தண்டட்டி.
    • இதில் ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

    அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டட்டி'. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.



    இந்நிலையில் 'தண்டட்டி' படத்தின் ரிலீஸ் மற்றும் இசை வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வருகிற ஜூன் 6ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×