பசுபதியின் தண்டட்டி பட ரிலீஸ் மற்றும் இசை வெளியிட்டு தேதி அறிவிப்பு

பசுபதி நடிப்பில் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தண்டட்டி.இதில் ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
பசுபதியின் தண்டட்டி பட ரிலீஸ் மற்றும் இசை வெளியிட்டு தேதி அறிவிப்பு
Published on

அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டட்டி'. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'தண்டட்டி' படத்தின் ரிலீஸ் மற்றும் இசை வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வருகிற ஜூன் 6ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com