இந்த படம் மிகவும் முக்கியமான பிரச்சினையை பற்றி டிஸ்கஸ் பண்ணுது.. இயக்குனர் பா.இரஞ்சித்

இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.இப்படம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்
Published on

இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இதில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கழுவேத்தி மூர்க்கன்
கழுவேத்தி மூர்க்கன்

கழுவேத்தி மூர்க்கன்

'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர், பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கழுவேத்தி மூர்க்கன் படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒரு ஆழமான படம்னு நான் நினைக்கிறேன். இயக்குனர் ரொம்ப நேர்மையா இந்த படத்தை முயற்சி செய்திருக்கிறார்.

பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

பா.இரஞ்சித்

மிகவும் முக்கியமான பிரச்சினையை பற்றி டிஸ்கஸ் பண்ணுது. ரொம்ப நேர்மையா டிஸ்கஸ் பண்ணி இருக்கிறதா நினைக்கிறேன். இயக்குனரோட சேர்ந்து இதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அவர்களுடைய உழைப்பை மிகவும் நேர்மையா செய்திருக்கிறார்கள். ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு பார்வையாளர்களுக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com