என் மலர்
சினிமா செய்திகள்
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
- இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் 'லியோ' வசூல் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "திரைப்படத்தின் கலெக்ஷனுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்பே சொல்லியிருந்தேன். அதை தயாரிப்பாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். திரையரங்கில் மக்கள் ரெஸ்பான்ஸ் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாருக்கும் ரொம்ப பிடித்திருப்பதாக கூறுகிறார்கள். இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு இருந்ததாக கலவையான விமர்சனங்களும் இருந்தது அதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறினார்.
- 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சிறுத்தை சிவா, "எல்லோரும் சிறுத்தை சிவானு சொல்லும் அளவிற்கு 'சிறுத்தை' படம் அமைந்தது. 'கங்குவா' ரொம்ப சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. வித்தியாசமாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். சூர்யா சார் கடின உழைப்பை கொடுத்து நடித்து வருகிறார். விரைவில் நிறைய அப்டேட்கள் கொடுக்கிறேன்" என்று கூறினார்.
- ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’
- இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்தியன் 2 போஸ்டர்
இந்நிலையில், 'இந்தியன் 2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் அறிமுக வீடியோ நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Celebration begins early ? Get ready for "INDIAN-2 AN INTRO" a glimpse of #Indian2 ?? releasing on NOV 3 ?️#HBDUlaganayagan
— Lyca Productions (@LycaProductions) October 29, 2023
? Ulaganayagan @ikamalhaasan ? @shankarshanmugh ? @anirudhofficial ?️ @dop_ravivarman ? @LycaProductions #Subaskaran @RedGiantMovies_ ??… pic.twitter.com/awLd8I0zra
- நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் ரோபோ சங்கர்.
- இவர் பல முயற்சிகளுக்கு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.
தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

இவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு மிஸ்டர் மதுரை, மிஸ்டர் தமிழ்நாடு போன்ற பட்டங்களை பெற்றுள்ளார். இவர் ரோபோ போல் உடலை அசைத்து ரசிகர்களை கவர்ந்ததால் தான் இவருக்கு ரோபோ சங்கர் என பெயர் வந்தது. நல்ல உடல் வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து காணப்பட்டார். இதையடுத்து இவர் பல முயற்சிகளுக்கு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.

ரோபோ சங்கர்
இந்நிலையில், ரோபோ சங்கர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதாவது, மதுரையில் நடைபெற்ற 37 -வது ஆண்டு ஆணழகன் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் ரோபா சங்கர் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினருக்கான பிரிவில் தனது கட்டுமஸ்தான உடல் பாவனைகளை செய்துகாட்டி அசத்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
- நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "எனக்கு கைதி திரைப்படம் மிகப்பெரிய 'game changing' திரைப்படமாக அமைந்தது. அதற்கு முக்கியமான ஒரு நபர் கார்த்தி சார்தான். அவருடைய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. 'கைதி' திரைப்படம் 5 வருடத்திற்கு முன்பு எழுதியதால் அதில் எதுவும் திணிக்க விரும்பவில்லை. 'கைதி 2' strong-ஆ இருக்கும்" என்று பேசினார்.
- கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
- இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கலக்கலாக உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.
- விக்ரம் 62 படத்தை அருண் குமார் இயக்குகிறார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் 62 படத்தின் அறிவிப்பை படக்குழு வீடியோ மூலம் வெளியிட்டு உள்ளது.
இந்த வீடியோவில் வரும் காவல் நிலைய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. வீடியோவின் படி விக்ரம் 62 படத்தினை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.
விக்ரம் 62 படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார்.
- விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
- இப்படம் ஏழு நாட்களில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏழு நாட்களில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விஜய் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார்.
- கங்கனா சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து இருந்தார்.
- இவருக்கு சிறந்த நடிகைக்கான சினிமா விருது வழங்கப்பட்டது.
ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கங்கனா ரணாவத். அடுத்ததாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தன்மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து இருந்தார். கேங்ஸ்டர் என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான சினிமா விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து இந்தி சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் கங்கனா ரணாவத் சர்ச்சையாக பேசிய கருத்துக்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு ஓய் பிரிவு பாதுகாப்புடன் வெளியில் வருகிறார். நவராத்திரி திருவிழாவை ஒட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராவணன் உருவ பொம்மையை அம்பு எய்து எரித்தார் 50 வருடத்திற்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி கங்கனா என்ற பெயரை பெற்றார்.
இந்நிலையில் இவர் நடித்த தேஜஸ் படம் இப்போது வெளியாகியுள்ளது. இதையொட்டி அவர் கூறும்போது, "தேஜஸ் படத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க இருக்கிறேன். விஜய் சேதுபதியுடன் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளேன். அதற்கு அடுத்ததாக தனு வெட்ஸ் மூன்றாம் பாகத்திலும் நோட்டிபினோதினி என்ற படத்திலும் நடிக்க இருக்கிறேன்" என்றார்.
- இயக்குனர் விக்ரமன் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் கடைசியாக நினைத்தது யாரோ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
1990-ம் ஆண்டு வெளியான 'புது வசந்தம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்ரமன். அதன்பின்னர், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல, பிரியமான தோழி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார். இவர் கடைசியாக கடந்த 2014- ஆம் ஆண்டு வெளியான 'நினைத்தது யாரோ' திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதன்பின் இயக்கத்தில் இவர் பெரிதாக நாட்டம் காட்டவில்லை. சமீபத்திய ,தன்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், திரைப்படங்கள் இயக்கவில்லை என விக்ரமன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா கடந்த ஐந்து வருடங்களாக படுத்த படுக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, குச்சுப்புடி கலைஞரான ஜெயப்பிரியா மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் தன் கால்களை கூட அசைக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், இவரை கவனித்துக் கொள்ளவே விக்ரமன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டதாகவும் தன் சொத்துக்களை விற்றுதான் மருத்துவ செலவை பார்ப்பதாக விக்ரமன் மனைவி ஜெயப்பிரியா மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஏ.ஆர்.முருகதாஸ் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.
அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் உள்ள பெருமாள் கோவிலில் தன் மனைவியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.
- சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தன் தேர்ந்த நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும். இந்த படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு சுதா கொங்கரா- சூர்யா கூட்டணியில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.






